(Reading time: 7 - 14 minutes)

றுநாள் ஊரில், அனைவருடனும், மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக்கொண்டாடினாள்…

இங்கே அவனும், முகிலனும் சேர்ந்து பர்வதத்திற்கு உதவுகிறேன் என்ற பெயரில், ஒரு வழி ஆக்கிக்கொண்டிருந்தனர் பர்வதத்தை….

டேய்…. அந்த கல்லை… இப்படி வைடா… என்று பாட்டி சொல்ல,

முகிலனோ அந்த கல்லை பொங்கல் பானைக்கு இடப்புறம் வைத்தான்….

டேய்… லூசு… அதை பானையோட வலதுப்பக்கத்துல வைக்கணும்டா… பாரு வலதுபக்கம் தான் சாஞ்சிருக்கு… என்று ஆதி சொல்ல,

ஆமால்ல…. என்று அசடு வழிந்தவாறு முகிலன் நிற்க,

ஏழு கழுதை வயாசாகுது… இன்னும், பானைக்கு கல் வைக்க தெரியலை…. நீயெல்லாம்… என்று பர்வதம் அவனை திட்ட வாயெடுக்க,

முகிலன், வேகமாக, எதுக்கு கத்தி உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணுற? பர்வதம்… ரிலாக்ஸ்… பொறுமையா பொங்கல் வை…. என்று சொல்ல,

பாட்டி, அப்படியா என்ற தோரணையில் அவனைப் பார்த்துவிட்டு, ஆதியிடன் கண்ஜாடை காட்ட

அவன் மெதுவாக சென்று பாட்டி சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டு வர,

என்ன பர்வதம் என்னையே பார்த்துட்டிருக்கிற?... நான் அழகா இருக்கேன்ல… இன்னைக்கு… ஹ்ம்ம்… சரி சரி… போதும் ரசிச்சது… எனக்கு வெட்கம் வருது… சீக்கிரம் பொங்கல் வைச்சு எனக்குத்தா…. என்றான் முகிலன்…

அதுக்கும் முன்னாடி பாட்டி உனக்கு வேற ஒன்னு தரணும்னு ஆசைப்படுறாங்கடா முகிலா… என்றான் ஆதி…

அது என்னது என்று சிரித்தபடியே கேட்ட முகிலன், ஆதி தூக்கி காண்பித்த உலக்கையைப் பார்த்ததும், அய்யய்யோ………….. நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு என்றவாறு ஓடிவிட்டான்…

அவன் ஓடியதை பார்த்த இருவரும் வயிறு குலுங்க சிரித்தனர்…

அதன் பிறகு அவளிடம் சொன்ன மாதிரி, அவளுக்கு போன் செய்து பேசினான் ஆதர்ஷ்… ஆனால், அவள் தான், சிறிது நேரமே பேசினாள் போதும் என்று வைத்துவிட்டாள்… அவளிடம் எவ்வளவோ சொன்னான் தான், நான் இன்னைக்கு முழுநேரமும் வீட்டில் தான் இருக்கிறேன் என்று.. எங்கே அவள் கேட்டால் தானே….

அவன் வீட்டில் இருந்தது உண்மைதான்… ஆனால்,. இன்னும் இரண்டு நாட்களில் ப்ரெசண்ட் செய்ய வேண்டிய ப்ரெசென்டேஷன் ஒன்று தயார் பண்ண வேண்டி இருந்தது… அதை அவன் வீட்டிலிருந்து தான் செய்து கொண்டிருந்தான் அவளிடம் பேசியவாறு..… ஆனால், அவளிடம் சொல்லாமல்…

பிறகு, இரவு, அவளிடம் பேசியவன், போன் வைக்கப் போன போது, நான் நாளைக்கு இரவு அங்கே வந்துடுவேங்க… என்றாள் குரலில் சந்தோஷத்தைக் காட்டி…

ஏண்டா… கூட ஒரு நாள் இருந்துட்டு வர வேண்டியதுதானே என்றான் அவனும்…

தினேஷ் அண்ணாக்கு எதோ முக்கியமான வேலை இருக்காம்… அதான்… என்றாள் அவள் சிரித்துக்கொண்டே…

ஏண்டா சிரிக்குற?..

பின்னே… அண்ணனால தான நான் அங்கே சீக்கிரம் வர முடிவானது… அதுக்குத்தான்… என்றாள் அவள்…

அவளின் அதீத காதலில் அவன் கரைந்து தான் போனான்….

அப்படி அவனுக்காக அவனுடன் இருக்கும் நாட்களுக்காக ஏங்கியவள் தான், அதன் பின் அவனை விட்டு பிரிந்து, இன்று இப்படி உளறலுடன் படுத்திருக்கிறாள்…. நினைவே இல்லாது….

அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

மீண்டும் சீதை-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்…

தொடரும்

Go to episode # 22

Go to episode # 24

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.