(Reading time: 7 - 13 minutes)

07. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

"ரிதா நீ இன்னும் எழுந்திரிக்கலையா, சீக்கிரம் போய் குளிச்சு ரெடியாகு" என்று கூறி கொண்டே அறைக்குள் நுழைந்தார் மரகதம்.

"என்னமா நீங்க!! இப்போ மணி 7 தானே ஆச்சு அவங்க 10 மணிக்கு தான வர்றாங்க, இப்போ ஏன் என்ன தொல்லை பண்றிக" என்று புரண்டு படுத்தபடியே பதில் கூறினாள்.

"நல்லா இருக்கு போ!! நான் போய் மத்த வேலைய பாக்க வேணாமா, உன்ன எழுப்பி ரெடி பண்லைன அப்புறம் உன் அப்பா என்ன தொலைச்சு கட்டிருவாரு ஒழுங்கா  எழுந்து  ரெடி ஆகு ரிதா" என்று கோவமாக கூறவும்,

Katre en vasal vanthai

"சரி சரி!! காலையிலையே  நீங்க திட்டாதீங்க. நீங்க பொய் உங்க வேலைய பாருங்க நான் போய் குளிச்சுட்டு வரேன்!!" என்று குளியல் அறைக்குள் புகுந்தாள். அவளின் மனமோ நேற்று நடந்ததை அசை போட்டு கொண்டு இருந்தது.

தன் பெற்றோரிடம் சம்மதத்தை தெரிவித்த அடுத்த நாள் காலை "ரிதா!! உன்னை வர வெள்ளி கிழமை பொண்ணு பாக்க வராங்க. உனக்கு சம்மதம் தான!! என்று கேட்கவும் தன் வருத்தத்தை மறைத்து கொண்டு "ம்ம்ம் சரிமா" என்று தலை ஆட்டினாள்.

தன்னை நிலை படுத்தி கொண்டு நிகழ்காலத்துக்கு வந்தவள், குளித்து முடித்து வெளியே வந்தாள்.

"ஹாய் ஆன்ட்டி!!! எப்படி இருக்கீங்க" என்று ஒரே குரலில் கேட்ட படியே உள்ளே நுழைந்தனர் கவியும், ரஞ்சனும்..

"ஹேய் வாங்க!! வாங்க!! என்னடா உங்க ப்ரெண்ட் நிச்சயததார்தத்துக்கு இப்படி தான் லேட்டா வராதா??? சீக்கிரம் வர மாட்டிகளா!!!

"இன்னும் சீகிரமாவா!!!!! ஆன்ட்டி இது டூ மச்!!!!! மார்னிங் எழுந்ததும் நாங்க ரெண்டு பேரும் நேரா இங்க தான் வரோம்!!!!

"சரிப்பா!!! ரொம்ப சந்தோஷம். உட்காருங்க!! நான் போய் குடிக்க காபி கொண்டு வரேன்"

"சரிங்க ஆன்ட்டி!!!! ஆமா ரிதா எங்க எழுந்துடாலா இல்லையா" என்று கவி கேட்கவும்,

"அவ குளிச்சுட்டு இருக்கா!!! இப்போ வந்துருவா" என்றபடியே சமையல் அறைக்குள்  நுழைந்தார்.

"வெளிய எதாவது வேலை இருக்கா ஆன்ட்டி!!!!! ஆமா அங்கிள் எங்க!! நாங்க வந்ததுல இருந்து ஆளையே காணோம்!!!!"

"அவரு கொஞ்சம் மார்க்கெட் வரைக்கும் போய் இருக்காரு,இப்போ வந்துருவாரு".

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே ரிதா தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

"ஹேய்!! எப்போடா வந்தீங்க!! வாங்க!!" என்ற படியே அமர்ந்தாள்.

அதற்குள் மரகதம் "ரிதா இந்தா காபி எடுத்துக்கோ!!!! அவங்களுக்கும் எடுத்து கொடு"

அவர்கள் மூவரும் அமர்ந்து  பேசி கொண்டு இருக்கும் போதே வெளியில் பேச்சு சத்தம் கேட்டது.

"ஹேய்!!!!! மதன் அண்ணா!!! வாங்க அண்ணி!! வாங்க வாங்க!!!! குட்டிபாப்பா என்ன சொல்லுது" என்று கேட்கவும்,

"ரிது முதல்ல அவங்களை வீட்டுக்குள்ள வர சொல்லி உட்காரவை. அதுக்கு அப்புறம் என்ன கேள்வி வேணாலும் கேளு!!! என்று பூமிநாதன் கூறவும்,

"வாங்க!!!" என்று உள்ளே அழைத்தாள்.

"ஹேய் அண்ணா!!! எப்படி இருக்கீங்க! என்று கவியும், ரஞ்சனும் கேட்கவும்

"ஒ நீங்களும் இங்க தான்  இருக்கீங்கலா! சூப்பர்!!!! சூப்பர்!!! என்று மதன் கூறவும்,

"ம்ம்ம் ஆமா!!! நீங்க தான் லேட் அண்ணா!!!

நான் சீக்கிரம் கிளம்பிட்டேன்!! உங்க அண்ணி தான் கிளம்ப லேட் பண்ணிட்டா" என்று கண் சிமிட்டிய படியே கூறவும், ரேவதி முறிக்கவும், அனைவரும் அங்கே நகைத்தனர்.

"அண்ணி!!! ரொம்ப சந்தோஷம் ரொம்ப நாள் கழிச்சு உங்கள நான் பாக்கறேன்" என்று கவி கூறினாள்.

"ம்ம்ம் நீங்க தான் எங்க வீட்டுக்கு வரதே இல்லையே" என்று ரேவதி சொல்லவும்,

"அச்சோ!!! சரி விடுங்க இனிமே தினமும் வந்துட்டா போச்சு" என்று ரஞ்சன் கூறினான்.

"அப்படியாவது வந்திகனா சரி தான்"- மதன்

அதற்குள் மரகதம்,"மதன் எங்கடா உங்க அம்மாவ இன்னும் காணோம்"

"சித்தி கவலை படாதிங்க!! அம்மா கோவிலுக்கு போய் ரிது பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வரன்னு சொன்னாங்க!! இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க"

"சரி சரி ரேவதி நீ போய் ரிது ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுமா"

"சரிங்க அத்தை!! ரிது வா நாம போகலாம், ஹேய் கவி நீயும் வா போகலாம்"

"ஆஹா!! ஒன்னு கூடிட்டாங்கய்யா!!  ஒன்னு கூடிட்டாங்க!! என்று மதன் கிண்டல் அடிக்கவும்,

சரியா சொன்னிங்க அண்ணா!!! என்று ரஞ்சன் ஐ-பை கொடுக்கவும் மூவரும் முறைத்து கொண்டே நகர்ந்தனர்.

அதற்குள் சாரதாவும் வரவே, அவர்கள் இருவரும்  சமையல் வேலையில் மூழ்கினர்.

"டேய் ஆதி!!! இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா!! என்று ரமேஷ் கோவமாக கத்தினான்.

"போடா!!! நானே எப்போடா என்னோட செல்லத்த பாப்பேன்னு இருக்கேன்!! இவன் வேற நேரம் காலம் தெரியாம கத்திட்டு இருக்கான்"

"டேய்!! நீ பொண்ணு பாக்க போற சரி... அதுக்கு என்ன ஏன்டா காலைல 5 மணிக்கு கால் பண்ணி எழுப்பி விட்டு என் தூக்கத கெடுக்கற"

"தூக்கம் வரலை மச்சி!!!! எனக்கு இருக்கறது ஒரே ஒரு பிரெண்ட், அது நீ மட்டும் தனடா!!! உனக்கு பண்ணாம வேற யாருக்குடா  பண்ணுவேன்.. நீயே சொல்ற மச்சி!!!" என்று ஆதி கேட்கவும்,

"போடா லூசு!!! உன்னால நான் அனிதா கிட்ட நான் திட்டு வாங்கினேன். சின்ன பையன் மாதிரி நடந்துக்காதடா கொஞ்சம் பாத்து நடந்துக்கோடா"

"ஹா ஹா!!!! எங்களுக்கும்  அதெல்லாம் தெரியும்!!! ஆமா சிஸ்டர் ரொம்ப திட்டினாங்களா!!! ஹா ஹா ஹா!!!!" என்று சிரிப்பை அடக்கியவாறே கேட்டான் ஆதி.

"டேய்!!! ஒழுங்கா கிளம்புடா ஆதி!!! உயிரை வாங்காதடா!! சீக்கிரம்டா கீழ அம்மா அப்பா வெயிட் பண்றாங்க!!!

 "அப்பா!! உங்க பையன ரெடி பண்ணி கூட்டிட்டு வந்துட்டேன்!! இனிமே நீங்களாச்சு அவனாச்சு!! இவனால நான் என் பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கினது தான் மிச்சம்" என்று கூறவும்,

"ஹா ஹா!!!! விடுடா அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்" சொக்கநாதன் கூறவும்,

"அப்பா!!! நீங்களும் அம்மாவை பொண்ணு பாக்க போனப்போ இப்படி தான் போனீங்களா???" என்று மது கேட்கவும்,

"ஆமா இப்போ அதுதான் ரொம்ப முக்கியம் பாரு பேசாம எல்லாரும் கிளம்புங்க லேட் ஆய்டுச்சு" என்று மீனாக்ஷி கூறவும் அனைவரும் ரிதுவின் வீட்டை நோக்கி பயணித்தனர்.

"மரகதம் எல்லாம் ரெடி பண்ணி வெச்சுடல??? ரிது ரெடி  ஆய்ட்டாளா?? இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்கலாம் வந்துருவாங்க"

"எல்லாம் ரெடியா தான் இருக்குங்க. ரிதுவ கவியும் ரேவதியும் ரெடி பண்ணிட்டு இருக்காங்க. நீங்க கவலை படாதிங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.