03. யாதுமாகி நின்றாய் காளி - சத்யா

மாலை 6 மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்து லக்ஷ்மி அம்மாளின் வழக்கமான மாலை நேர தியானத்தை கலைத்தது.கண்டிப்பாக அவரோ மீராவோ இல்லை என்பது லக்ஷ்மி அம்மாளுக்கு தெரியும்.ஏனெனில் இந்த நேரம் தான் தியானத்தில் இருப்பது அவர்களுக்கு தெரிந்த ஒன்று. ஹலோ, இது புருஷோத்தமன் சார் வீடுங்களா??, அம்மா நாங்க திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் இருந்து பேசறோம், நீங்க கொஞ்சம் திருவான்மியூர் மருண்டீச்வர் கோயில் வரை வர முடியுங்களா என்றது ஒரு குரல், லக்ஷ்மி அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை , யாருக்கு என்ன சார் , அவர் பேர் சொல்லி கேட்கறீங்களே எதுவும் சாலை விபத்தா அவருக்கு ஏதுமா ??pls கொஞ்சம் சொல்லுங்களேன் என்று லக்ஷ்மி அம்மாள் விசும்ப , அந்த முனையில் அம்மா தயவு செஞ்சு நீங்க spot வாங்க என்று போன் வெய்க்கபட்டது. லக்ஷ்மி அம்மாள் துடித்துதான் போனார்.உடனே மீராவை தொடர்பு கொண்டு நடந்ததை சொல்லவும் மீரா பயந்து போனாள் அவளால் இன்னும் கண்ணனுக்கு நடந்ததையே மறக்க இயலவில்லை. இது என்ன அப்பாவிற்கு என்ன எது என்று புரியாமல் குழம்பி போனாள். ஆனால் அம்மாவை இன்னும் பதட்டபடுத்த கூடாது என்று கஷ்டப்பட்டு தன் சோகத்தை அடக்கி கொண்டு வீட்டுக்கு சென்று அம்மாவை அழைத்து கொண்டு திருவான்மியூர் சென்றாள்.லக்ஷ்மி அம்மாள் வழி முழுதும் மெல்லிய குரலில் சஹாஸ்ரனமம் சொல்லி கொண்டு வர , கண்கள் முடிய நிலையில் இருந்தாலும் முகம் சிவந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. மீராவிற்கு அம்மாவை அப்டி பார்க்க புடிக்கவில்லை.மனம் எல்லாம் ரணம் ஆகி போனது.,கடவுளே யாருக்கும் எதுவும் ஆகி இருக்க கூடாது, pls pls என்று உதட்டுக்குள் முனுமுனுத்து கொண்டு திருவான்மியூர் வந்து அடைந்தார்கள். ஒரு பெரிய போலீஸ் படையே அங்கு குழுமிருக்க, ஒரு பெரிய ராக்ஷச லோர்ரி ஒன்று இருக்க அதன் அடியில் தங்கள் கார் அப்பளத்தை விட மோசமாக நொருங்கிருக்க நொடியில் மீராவிற்கு எல்லாம் புரிந்தது., அயோ அப்பா என்று அலறி கொண்டு மீரா காரினில் இருந்து ஓட ,லக்ஷ்மி அம்மாள் கண்ணே திறக்காமல் அப்டியே சிலையாக அமர்ந்திருந்தார்.
ஒரு உயர் அதிகரி போல் இருந்தவர் மீராவின் கூச்சல் கேட்டு அவள் ஓடுவதை கண்டவர் உடனே மீராவை தடுத்து அமைதி படுத்தினார். மேடம் கொஞ்சம் உங்களை கட்டுபடுதிக்கொங்க, சீன் of crime கலைஞ்சுட கூடாது , pls புரிஞ்சுகோங்க என்று அவளை வலுகட்டாயமாக கொஞ்சம் தள்ளி அழைத்து வந்தார். மேடம் இதுதான் எங்களுக்கு கிடைச்ச ஒரே identification , லோர்ரி டிரைவர் accident செஞ்சுட்டு கூட்டம் கூடின உடனே ஓடிட்டான் போல . கார்குள்ள ரெண்டு பேர் இருக்லாம்னு சந்தேக படறோம் , ஸ்பெஷல் டீம் அண்ட் fire station டீம் வந்து பாடிய எடுக்க ட்ரை பண்றோம். ஒரு பக்கமா சிதறி இருந்த கைல இருந்து இந்த வாட்ச் , ரிங் எடுத்தோம் அண்ட் வண்டி நம்பர் traceout செஞ்சு உங்க வீட்டுக்கு இன்போர்ம் பண்ணோம். இன்னும் confirmeda யாரு உள்ள இருக்காங்கன்னு தெரில. so pls co-operate with us என்றார். மீராவிற்கு அவர் சொன்னதில் பாதிக்கு மேல் புரியவில்லை. அவர் காட்டின கை தனக்கு தினமும் குங்கமம் இட்ட கையா, தன்னை அரவணைத்த கையா, தந்தை போல் இல்லாமல் தோழனாக தன் தோளில் அணைத்த கையா, தான் சாப்பிடாமல் கலைத்து போய் உறங்கும்போது தனக்கு சாதம் ஊட்டிவிட்ட கையா என்று அலைக்கழிந்து அதிர்ந்து தோய்ந்து போனாள். ஐயோ ஆண்டவா ஏன் இப்படி என்னை தண்டித்தாய் , நான் எப்படி அம்மாவை பார்ப்பேன் என்று உருக்குலைந்து போனாள். அந்த போலீஸ் ஆபீசெரால் அவள் நிலை புரிந்து கொள்ள முடிந்தது.,மீராவிற்கு சிறிது தண்ணீர் கொடுத்து , மேடம் i need somebody to help me trace out the identities இந்த நிலைமைல உங்கள என்னால தொந்தரவு பண்ண முடியல, உங்கள் சொந்தம் அல்லது நண்பர்கள் யாரையாவது கொஞ்சம் இங்க வர சொல்றீங்களா. guess உங்களுக்கும் ஒரு சப்போர்ட் இப்போ தேவை என்றார். மீராவிற்கு அது புரிந்தது, யோசிக்காமல் விக்டரை அழைத்தாள். ஒரு ரிங்க்தான் போன் உடனே எடுக்கபட்டது , விக்டர் என்று அவள் அலறிய அலறல் அந்த இடத்தையே உலுக்கியது ,அதில் இருந்த வேதனை கூடி இருந்த வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை ஏதோ செய்தது, விக்டற்கு ஒன்றும் புரியவில்லை , மீ மா என்னடா மா, என்னடா ஆச்சு , மீ மா என்னடி ஆச்சு , எங்கடாமா இருக்க, ஐயோ மீ சொல்லு மா என்ன ஆச்சு மா என்று கேட்க மீரவால் பேச முடியவில்லை அம்மாவின் குரல் கேட்ட கன்று போல் கதறி தீர்த்தாள்.விக்டர் விக்டர் விக்டர் அவ்ளோதான் அவள் பேசியதே , மெதுவாக அவளிடம் இருந்து போன் வாங்கி அந்த officer பேசினார். சார் am raghu ,ACP நீங்க கொஞ்சம் திருவான்மியூர் மருந்தீச்வர் கோயில் வர முடியுமா என்று மத்த விவரங்களை கூறினார், போன் பேசி முடித்தவர் மீரா இருந்த காரின் அருகே சென்று உள்ளே பார்க்க லக்ஷ்மி அம்மாள் மூர்ச்சை ஆகி இருந்தார். உடனே தன்னுடைய உதவியாளரான சக்தியை அழைத்து இந்த அம்மாள் mrs. purushothaman ன்னு நினைக்கறேன், அதிர்ச்சில மயக்கம் ஆகிருக்கணும் , பக்கத்துலதான் மலர் hospital take her there and update me என்றார்., அவர் சொல்லி முடிக்கவும் bullet வண்டி ஒன்று அங்கே வரவும் சரியாக இருந்தது, மீரா என்று ஒரே பாய்ச்சலில் அந்த முரட்டு வாலிபன் அவள் அருகே செல்லவும் மீரா விக்டர் என்று அவன் மேல் மயங்கி சரிந்தாள்…
தொடரும்
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.