(Reading time: 6 - 11 minutes)

04. யாதுமாகி நின்றாய் காளி - சத்யா

 

Yathumagi nindraai kaali

விக்டர் மீராவை தாங்கி கொண்டு அந்த இடத்தில இருந்த சற்று தள்ளி இருந்த அவளுடைய காரின் முன்பக்க இருக்கையில் அவளை சாய்வாக அமர செய்து சிறிது தண்ணீர் தெளித்தான். மீரா கலக்கத்துடன் மெதுவாக அவன் கையை இறுக பற்றி கொண்டாள். மீரா ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாகு, நான் இருக்கிறேன்,ப்ளீஸ் ரிலாக்ஸ் என்று விக்டர் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்த மீரா கண்ணை மூடி தன்னை நிதான படுத்தி கொண்டாள். கண் திறக்கமாலையே விக்டர் அம்மா அம்மா என்று அரற்றினாள். அவளை மெதுவாக அணைத்து கொண்டு ஒன்னும் இல்லை மீரா , அம்மா உன்னை விட ரொம்ப நிலைகுலஞ்சுட்டாங்க அதுனால பக்கத்துல இருக்குற hospitalla அட்மிட் பண்ணிருக்காங்க.,கவலை பட வேண்டாம்,கல்யாணிக்கு ஏற்கனவே மெசேஜ் செஞ்சு hospital  போக சொல்லிருக்கேன், அவ இருப்பா அம்மா கூட, நீ இப்போ சொல்லு அப்பா ஏன் இந்த routela  வந்தாரு இன்னிக்கு, ஏதும் கோயில் அர்ச்சனையா??

இந்த கேள்விக்கு மீரா பதில் சொல்லும் முன் விக்டரை பற்றி சில வரிகள் , விக்டர் மிக மிக முரட்டுதனம் நிறைந்தவன், செல்வ செழிப்பில் ,சின்ன வயதில் தாய் தந்தை இழந்து பணம் மட்டுமே குறியாக இருந்த சித்தியிடம் வளர்ந்தவன்.யார் செய்த புண்ணியமோ அவனுக்கு தீய பழக்கங்கள் எதுவும் மூலையில் ஏறவில்லை.ஆனால் அன்பிற்காக ஏங்கி ஏங்கி அது கிடைக்காத இடத்தில தான் இருக்கிறோம் என்று புரிந்த பொது அவனே தன்னை சுருக்கி கொண்டான். நெறைய கோவத்தை தன்னுடைய தனிமை தெரியாமல் இருக்க கவசம் ஆக்கி கொண்டான்.விக்டருக்கு மீரா அவர்கள் அலுவலக வாசலில் அறிமுகம்.அது ஒரு ஆழமான நட்புக்கான சந்திப்பு என்று இன்று வரை விக்டர் தீர்கமாக நம்பிகிறான். தன்னுடைய பைக்கில் வேகமாக வந்து தன்னுடைய வழக்கமான பார்கிங்gil நிறுத்த போனவன் சுர்ர்ர் என்ற கோவத்திற்கு உள்ளானான். அங்கே ஒரு கருப்பு நிற கார் இருக்கவும் ஷன்மு அண்ணா ஷன்மு அண்ணா என்று கத்தி கொண்டே வாசல் சென்றான்.,வாட்ச்மேன் சண்முகம் விக்டரின் கோவம் தெரிந்தவன், குணமும் தெரிந்தவன்.அவர் மகள் இன்று திருமணம் ஆகி ஒரு நல்ல குடும்பத்தில் இருப்பது விக்டர் சமயம் அறிந்து உடனே உதவியதால்.என்பதால் கூடுதல் பிரியம் அதிகம் அவருக்கு, இந்த முரட்டு குழந்தை இன்று யார் இம்சித்தார்கள் என்று யோசித்தவர் என்ன தம்பி என்ன ஆச்சு என்றார். ஷன்மு அண்ணா யார் கார் அது ஏன் inga பார்க் பண்ண அலோவ் பண்ணீங்க? எதுக்கு அண்ணா என்ன இப்பிடி காலங்கார்த்தால டென்ஷன் பண்றீங்க? தம்பி அந்த கார் அங்க நிருதிடிச்சா அந்த பொண்ணு , நீங்க இப்டி கொடுங்க தம்பி சாவிய நான் இத சரி பண்றேன், நீங்க போங்க அப்போவே சுவாமி அய்யா உங்களை தேடினார் என்று விக்டரை திசைதிருப்பினார். விக்டருக்கு ஷன்மு அண்ணா பார்த்து கொள்வார் என்று தெரியும் அதனால் அதற்க்கு மேல் பேசாமல் அங்கு இருந்து அகன்று அலுவலகம் உள்ளே செல்ல போனவன் அங்கே வாசலில் ஒரு பெண் இவனையே பார்த்து கொண்டு நிற்பதை பார்த்து முறைப்புடன் அவளை நெருங்கினான். அவள் பார்வை ஒரு நொடிகுட தழைக்காமல் இவனையே பார்த்தபடி இருக்க .சந்திரமூகியா இருப்ப போல என்று அவள் அருகில் வந்தவன் அலட்சியமாக அவளை கடக்க முற்பட , அவள் கொஞ்சமும் தயங்காமல் ,என்ன சார் இந்த பார்கிங் லாட்ல உங்க பைக்கான இடம் அதுதான் எழுதி வெச்சுட்டு போன மாதிரி அவர போய் அப்டி கத்தறீங்க, பாவம்தானே நாள் முழுக்க வேகாத வெயிலுல போறவங்க வரவங்க எல்லாரையும் என்ன எதுனு கேட்டு அனுப்பி கிடைச்ச நேரத்துல சாப்ட்டு இருகரவர்கிட்ட இப்டி பேச உங்களுக்கு கஷ்டமா இல்லியா.??

 விக்டற்கு இது புதுசு அவனை பெரும்பாலும் யாரும் கேள்வி கேட்பதில்லை , கேட்கும் அளவிற்கு அவன் நடக்கவும் மாட்டான்.அந்த அலுவலகத்தில் அனைவரக்கும் விக்டர் என்றால் தனி பயம் மரியாதை உண்டு. இவள் அனைத்தையும் தகர்ப்பால் போலே என்று யோசித்தவன் வெளியே தன் சிந்தனை தெரியாமல் இருக்க ,முறைப்புடன் பாறை போல் முகத்தை இருக்கி கொண்டு அவளையும் சண்முகத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சின்ன நமுட்டு சிரிப்புடன் லிப்ட் அருகில் சென்றான்., மீராவிற்கு தாங்க முடியவில்லை என்ன ஒரு அகம்பாவம் ச்சே இவனும் இவன் மூஞ்சியும் என்று நினைத்து கொண்டு ,அண்ணா நீங்க போங்கன்ன அந்த சார்க்கு அவளோதான் மரியாதை தெரியும் போல என்று சொல்லி லிப்டை புறக்கணித்து படிகளில் ஏறி சென்றாள்.

சண்முகம் விக்டரை பார்க்க விக்டர் சின்ன சிரிப்புடன் ஷன்மு அண்ணா போங்க போங்க குஷிதான் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும் போலே என்று கண்ணடித்து லிப்டில் மேல்தளம் சென்றான்., சண்முகம் மழை வருமோ என்று வெளியில் வந்து மேகத்தை பார்த்தார், ஆம் அவர்க்கு தெரிந்து இது வரை இந்த சின்ன சிரிப்பு விக்டரை பார்த்ததில்லை.தன்னை சீண்டுபவர்களை எதிர் பேச்சு கூட பேசாமல் சென்ற விக்டரை பார்த்ததில்லை.,

மேலே வந்தவன் நேராக தன் அறை நோக்கி சென்றான். அங்கே அறை வாசலில் வசந்தியுடன் பெசிகொண்டுருந்த சந்திரமூகியை பார்த்தான்., இவள் இங்கு வந்து சண்டை போட காத்து இருக்கிறாளோ என்று யோசித்து கொண்டே வசந்தியின் ஆர்ப்பாட்டமான வழிசலான காலை வணக்கத்தை கவனிக்காதவன் போல தன் அறையின் உள்ளே சென்றான்.உள்ளே வந்த அடுத்த அறை நொடியில் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியளிட்டவன் வசந்தியை அழைத்து ஒரு சில குறிப்புகள் மற்றும் அன்று அவனுடைய meeting schedule தெரிந்து கொண்டான். ஓகே வசந்தி முதல்ல அந்த us  கால் கனெக்ட் பண்ணிடுங்க என்றான். விக்டர் சார் சுவாமி சார் நம்ம டீம்க்கு புதுசா ஒரு மார்க்கெட்டிங் கேர்ள் appoint  செஞ்சுருக்கார் சார், உங்க assistantnu  சொல்ல சொன்னாரு .அவர் மதியம் 2pmkku உங்ககிட்ட பேசுவாராம்.ஓகே வசந்தி தேங்க்ஸ் என்று அவுனுடைய கணினியில் மூழ்கினான்.வசந்திக்கு ஏமாற்றமாக இருந்தது வேலை சேர்ந்த நாளில் இருந்து இன்று வரை மறைமுகமாக சில சமயங்களை நேரிடயவாகும் அவன் மேல் உள்ள மையலை வெளிப்படுத்தி உள்ளாள். ஆனால் இது வரை ஒரு தடவை கூட அவனிடம் ஒரு சிறிய சலனம் கூட கண்டது இல்லை, அதுவே அவளை மேலும் மேலும் உசுப்பியது.. ஏக்க பெருமூச்சுடன் வெளியில் வந்தவள் மீராவிடம் செம லக்கி மா நீ, எடுத்த உடனே விக்டர் சார் டீம்ல,கலக்கு போ என்று சொல்ல மீராவிற்கு கடுப்பாக இருந்தது ஐயோ போயும் போயும் இந்த கடுவன் பூனை கூடவா வேலை செய்ய வேண்டும் என்று நொந்து கொண்டாள். அவளுக்கு அப்போது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை மீராவின் இந்த நிலையில் இருந்தாள் இந்த முடிவு எடுப்பாள் என்று விக்டர் சொல்வான் என்றோ , விக்டர் மூச்சு காற்று கூட மீரா மீரா என்று சுவாசிக்கும் என்றோ அவனுக்கும் தெரியவில்லை.அதுதானே வாழ்கை அடுத்த நொடி தெரிந்தால் ஏது சுவாரஸ்யம்.!!!

தொடரும்

Episode # 03

Episode # 05

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.