(Reading time: 4 - 8 minutes)

05. வானவில் - அமுதவள்ளி

ம்ம ஹீரோயின் மாநாடு நடக்குது. என்ன பேசிக்கராங்கன்னு பார்க்கலாம்.

"நிஷ்  எனக்கு ஒண்ணுமே புரியலை" என்றாள் சாது.

"காலையில் இருந்து ஏன் சர்வேஷ் முகம் அடிக்கடி நமக்கு கண் முன் வருதுன்னு புரியலையா?" என்றாள் நிஷ்.

Vanavil

"ஹ்ம்ம். உனக்கு எப்படி?"

"உன்னை பத்தி தெரியாதா. நீ முழிக்கரதிளிருந்தே தெரியுதே" என்றாள் அஞ்.

"இது தப்பு தானே" என்றாள் சாது.

"உன்னையும் மீறி அது நடக்குது. அதனால் உன்மேல் தப்பு இல்லை" என்றாள் ஹாசி.

சாது முகம் குழப்பம்,வருத்தம் என கலவையாக இருந்தது.

"சாது லீவ் இட் அஸ் இட் இஸ். ஜஸ்ட் எ ஸ்பார்க். சர்வேஷ் பேசினது, உதவி செஞ்சது எல்லாம் சேர்த்து உனக்குள் ஒரு தாக்கம். இதை நினைத்து குழம்பாதே. அதை அப்படியே ஏதுக்கோ. நமக்கு பார்க்கிற எல்லோர் மேலையும் இது தோனாது. அப்படி தோன்றினால் அது உடனே காதலா மாறாது. எப்பவும் போல இரு. அவர் நல்லவரா இருந்து உனக்கும் நேசம் வந்தால் பார்த்துக்கலாம். இப்போ ஜாலியா இரு" என்றாள் நிஷ்.

"நிஷ் சொல்றது சரி. வொர்ரி பண்ணாத" என்றாள் அஞ்.

"ஹ்ம்ம்" என்றாள் சாது.

"சாது நீ இப்படி இருக்கறது நல்லாவே இல்லை. சும்மாவே உன்னை பார்க்க முடியாது இதுல நீ சோகமா இருந்தா எப்படி" என்றாள் அஞ்.

"என் முகத்துக்கு என்ன குறைச்சல். உன்னையே எல்லோரும் பார்க்கும் போது என்னை பார்க்க மாட்டாங்களா" என்றாள் சாது .

"ஹாசி, ஏன் அமைதியா இருக்க?" என்றாள் அஞ்.

ஹாசி முழிக்கவும்

நிஷ் "ஹர்ஷா ஞாபகம் வந்துடுச்சா?"

"ஹ்ம்ம். நீ பேசினதை கேட்டதும் ஹர்ஷா முகம் எனக்கு தோன்றியது. அதான் ஏன்னு யோசிக்கறேன்" என்றாள் ஹாசி.

"சாதுக்கு சொன்னதுதான் உனக்கும். இப்போ எதையும் நினைக்காமல் எப்பவும் போல் இருங்க" என்றாள் அஞ்.

"ஏன் அஞ் நமக்கு மட்டும்  எதுவும் தோணலை.. டூ பேட்" என்றாள் நிஷ்.

"உங்க ரெண்டு பேருக்கும் ஹொர்மோன் ப்ரோப்ளம் இருக்கும்" என்றாள் ஹாசி.

"அதை நீ சொல்லாத.. நிஷ் சாதுக்கு சொன்னதை கேட்ட பிறகுதான் உனக்கு ஹர்ஷா பற்றியே நினைப்பு வந்தது. இப்ப எங்களை கிண்டல் பண்றியா?" என்றாள் அஞ்.

"விடுடி. இப்போவாது தெரியுதே. ஆனால் உங்க ஆளுங்க எங்க இருக்காங்களோ?" என்றாள் சாது.

"நம்மகிட்ட மாட்டிகிட்டு எப்படியும் கஷ்ட படபோறாங்க இப்போ எங்கயோ நிம்மதியா இருக்கட்டும்" என்றாள் நிஷ்.

(உங்க ஆள் பக்கத்தில்தான் இருக்கார். நீங்க பார்த்துடீங்க நிஷ்)

"நீ சொல்றது கரெக்ட்" என்றாள் அஞ்.

"பேசினது போதும். இப்போ அசைன்மெண்ட் எழுதலாம்." என்றாள் நிஷ்.

இவங்க நாலு பேரை பார்த்துட்டோம். வாங்க நம்ம ஹீரோஸ் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்.

"டேய் மச்சி...இங்க பாருடா.." என்றான் ஹர்ஷா.

"அவன் இந்த உலகத்தில் இருந்தாதானே" என்றான் அத்வைத்.

நவீன் அவனை உலுக்கவும்

"என்னடா மச்சி" என்றான் சர்வேஷ்.

"என்னடா ஏதோ தீவிரமா யோசிக்கறாமாதிரி இருக்கு" என்றான் நவீன்.

"சாதனா" என்றான் ஒரு வார்தையில்.

"இதில் யோசிக்க என்ன இருக்கு? டூ யூ லவ் ஹெர் ஆர் நாட்? இதில் ஒன்னுதான் உன்னோட பதில். உன் மனசு என்ன சொல்லுதோ அதை செய்" என்றான் அத்வைத்.

"ஐ லைக் ஹெர். பட் லவ் எனக்கு தெரியலை" என்றான் சர்வேஷ்.

"இப்போ இதை யோசிக்காதே. அவளுடன் எப்பவும் போல் பேசு. கன்பார்ம் இட் லேட்டர்" என்றான் நவீன்.

"எப்பவும் போலா. நான் அவளுடன் ஒரு தரவைதான் பேசி இருக்கேன்" என்றான் சர்வேஷ்.

"ஹேய் பொய் சொல்லாதே. மொபைலில் பேசி இருக்க" என்றான் ஹர்ஷா.

"ரெண்டு நிமிஷம் பேசினோம். அதை ஒரு கணக்குன்னு சொல்றான்" என்றான் சர்வேஷ்.

"சரி டா. இனிமேல் பேசு" என்றான் நவீன்.

அந்த வார இறுதியில் ஹீரோயின்  நால்வரும் ஷாப்பிங் சென்றனர். அவர்கள் வீட்டுக்கும் சந்தோஷுக்கும் வாங்கினர். சந்தோஷுக்கு டிரஸ், அவனுக்கு பயனுள்ள ஒரு புத்தகம், பழங்கள் என வாங்கி குவித்தனர். அஞ்சனாவின் அக்கா மகன் ஹரிஷிற்கும் வாங்கினர்.

ஹீரோ நால்வரும் படத்திற்கு சென்றனர். (எந்த இடம்னு உங்களால் கெஸ் பண்ணமுடியுதா. நம்ம ஹர்ஷா ஹாசினி மீட் பண்ண மால்)

படம் முடிந்து புட் கோர்ட் சென்றனர். அத்வைத், சர்வேஷ் முதலில் செல்ல மற்ற இருவரும் அவர்களை தொடர்ந்தனர். சர்வேஷ் ஒரு டேபிளில் அமர அது அன்று ஹாசினி அமர்ந்த டேபிள். ஹர்ஷவிற்கு ஹாசினியின் நினைவாக இருந்தது.

"ஹர்ஷா என்ன வேண்டும்னு சொல்லுடா" என்றான் நவீன்.

அவன் பதில் சொல்லாது கனவு லோகத்தில் இருக்கவே அவனை கலையாது மற்றவர்கள் அவனக்கும் சேர்த்து ஆர்டர் செய்தனர்.

"டேய் ட்ரீம்ஸ் போதும் டா" என்றான் அத்வைத்.

"நானே பரவாயில்லை மச்சி. நீ ரொம்ப மோசம் டா" என்றான் சர்வேஷ்.

"அதை நாங்க சொல்லணும்" என்றான் நவீன்.

"இப்போ அது முக்கியமா? என்ன ட்ரீம்ஸ்னு சொல்லுடா" என்றான் சர்வேஷ்.

"ஹே. எனக்கு தெரியும். நீ இங்கதான ஹாசினியை பார்த்தேன்னு சொன்ன" என்றான் அத்வைத்.

"ஒ. சார்க்கு அவர் ஹீரோயின் ஞாபகமா?" என்றான் நவீன்.

"பச். நானே குழப்பத்தில் இருக்கேன். நீங்கவேற ஏன்டா" என்றான் ஹர்ஷா.

"எனக்கு சொன்னதுதான் உனக்கும்" என்றான் சர்வேஷ்.

ஹர்ஷவிர்க்கும் அது சரியென்று பட்டது.

அடுத்தநாள் அனைவரும் மருத்துவமனையில் சந்தித்தனர்.

அங்க என்ன நடந்ததுன்னு அடுத்த அப்டேட்ல சொல்றேன்

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.