Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கனவுகள் மட்டும் எனதே எனது... - 03 [Summer special series] - 5.0 out of 5 based on 1 vote

03. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

03. கனவுகள் மட்டும்...

"னக்கு கொஞ்சம் பயமா இருக்கு நந்தினி. நீ எப்படி இப்படி கூலா இருக்க?"

"பயப்படுறதினால என்ன ஆக போகுது ஸ்வேதா? எதுவா இருந்தாலும் ஃபேஸ் செய்து தானே ஆகனும்? அதுவும் இல்லாமல் நம்ம விசா பிராப்பரா இருந்தா வேற யூனிவர்சிட்டிக்கு நம்மள ட்ரான்ஸ்ஃபர் செய்றேன்னு சொல்லி இருக்காங்க, அப்புறம் என்ன?"

"தட்ஸ் ட்ரூ... இருந்தாலும் எனக்கு கொஞ்சம் நெர்வஸா இருக்கு. நாளைக்கு மார்னிங் எனக்கு ஷெரிஃப் ஆபிஸ்ல (போலிஸ் ஸ்டேஷன்) அப்பாயின்ட்மென்ட் இருக்கு..."

Kanavugal mattum enathe enathu"எனக்கும் நாளைக்கு தான் அப்பாயின்ட்மென்ட். நான் மட்டும் என்ன ஸ்டேஷன் டெய்லி போயிட்டு வரேனா என்ன? ரிலாக்ஸ்ட்டா இரு ஸ்வே! எல்லாம் நல்ல படியா தான் நடக்கும்"

"எனக்கு டென் ஓ க்ளாக் அப்பாயின்ட்மென்ட், உனக்கு?"

"லெவன்!"

"நீயும் என் கூடவே வரீயா நந்தினி? அதென்னவோ நீ பக்கத்துல இருந்தா ஐ ஃபீல் வெரி கம்ஃபார்ட்டபில். ரொம்ப தைரியமா ஃபீல் செய்றேன்"

"ஷுயர்! அடுத்து என்ன யூனிவர்சிட்டி செலக்ட் செய்றதுன்னு முடிவு செய்துட்டீயா?"

"டெக்ஸாஸ் செலக்ட் செய்திருக்கேன்... நீ?"

"இன்னும் செலக்ட் செய்யலை, அதை பத்தி யோசிச்சு தலையை பிச்சுட்டு இருக்கேன்?"

"ரொம்ப படிச்சா இப்படி தான் ஆகும்!" என்றாள் ஸ்வேதா புன்னகையுடன்.

"அப்படி இல்லை ஸ்வே..." என்ற நந்தினி சிறிது தயங்கி விட்டு,

"நான் யூனிவர்சிட்டி மட்டும் இல்லாமல், அந்த ஊர் காஸ்ட் ஆப் லிவிங் பத்தியும் யோசிச்சு தான் முடிவு செய்யனும்." என்று சேர்த்து சொன்னாள்.

"நியூஜெர்சி விட பாதி ஊர்ல காஸ்ட் எல்லாம் கம்மி தான். நீ தேவையே இல்லாமல் ரொம்ப யோசிக்குற..."

"இல்லை ஸ்வே, நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் என்னை மட்டுமில்லாமல் என் மொத்த குடும்பத்தையே பாத்திக்குற மாதிரியான நிலமையில இருக்கேன். ஸோ பொறுமையா யோசிச்சு தான் முடிவு எடுக்கனும்"

ஸ்வேதாவிற்கு நந்தினியின் குடும்பம் பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால், அவள் அதற்கு மேல் நந்தினியிடம் விளக்கம் கேட்கவில்லை.

"கவலைபடாதே நந்தினி. நீ போற புது யூனிவர்சிட்டியிலும் உனக்கு இங்கே மாதிரியே ரிசர்ச் அசிஸ்டனட் வேலை கிடைக்க நிறைய சான்ஸ் இருக்கு..."

"அந்த நம்பிக்கையோட தான் இருக்கேன். ஆனால் நாம லேட்டா போய் ஜாயின் செய்ய போறோம், அதுக்குள்ளே எல்லா ஓபனிங்கும் க்ளோஸ் ஆகி இருந்தா என்ன செய்றது?"

"அது ஒரு பிரச்சனை தான்..."

"என்னோட சீனியர்க்கு நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்க... அவங்க ரெகமன்ட் செய்றேன்னு சொல்லி இருக்காங்க... புரஃபசர் கிட்ட இருந்தும் ரெகமென்டேஷன் லெட்டர் வாங்கி தரேன்னு சொல்லி இருக்காங்க... பார்ப்போம், ஏதாவது க்ளிக் ஆகும்..."

"சீனியர்னா யாரு சாந்தி மேம்மா?"

"யெஸ்..."

"அவங்களை மாதிரி ஒருத்தங்க அறிமுகம் கிடைச்சது உனக்கு லக் தான்..."

"அப்படி எல்லாம் சொல்ல முடியாது ஸ்வே! அவங்க பார்க்க தான் அப்படி அமைதியா தெரியுறாங்க, பட் அவங்க கிட்ட வேலை செய்வது ரொம்ப கஷ்டம். ஷி இஸ் வெரி டிமான்டிங்"

"உண்மையாவா?"

"ஐயோ, அதை ஏன் கேட்குற! என் லைப்ல நான் அவங்க கிட்ட வாங்கின மாதிரி கேவலமா ரெவியூ கமன்ட்ஸ் வாங்கினதே இல்லை. அவங்க கிட்ட ஒரு விஷயத்தை கன்வின்ஸ் செய்து முடிக்குறதுக்குள்ள அவ்வளவு தான்"

"ரியலி? அவங்களை பார்த்து நான் தப்பா நினைச்சுட்டேன் போலிருக்கு!"

"நீ மட்டுமில்லை எல்லோருமே அப்படி தான். ஏன் எங்க புரஃபசரே அவங்க கிட்ட சில சமயம், கோ ஈசி வித் ஜூனியர்ஸ்ன்னு சொல்ற அளவுக்கு டெரர் பார்ட்டி அவங்க. அவங்களுக்கு எல்லாமே பர்பக்ட்டா இருக்கனும்... ஆனால் அவங்க கிட்ட இருந்து நிறைய விஷயம் கத்துக்கலாம்... எந்த பந்தாவும் இல்லாமல் நல்லா ஹெல்ப் செய்வாங்க, அதே போல வேலையும் வாங்குவாங்க..."

"எல்லாத்துலேயும் நமக்குன்னு ஏதாவது பிரச்சனை வருது பார்த்தீயா? இந்த லொள்ஸ் எதுவும் இல்லாமல் நாம மல்டி மில்லியனரா பிறந்திருந்தா எப்படி இருக்கும்?"

"அவங்களுக்கு என்ன எல்லாம் பிரச்சனை இருக்கோ, மில்லியனரா இருக்குறவங்களுக்கு தான் தெரியும்"

"ஆனாலும் லைப் கொஞ்சம் ஈசியா தானே இருக்கும்? பிறக்குறதை விடு, ஒரு மல்டி மில்லியனரை கல்யாணம் செய்து கிட்டா கூட போதும்"

"ப்ச்..."

"சும்மா பந்தாக்கு அலுத்துக்காதே நந்தினி, நான் சொல்றது நிஜமா இல்லையா?"

"எனக்கு இப்போ அதை பத்தி எல்லாம் நினைக்க நேரமில்லை ஸ்வே"

"இதோ பார், இப்படி எப்போ பாரு தலை மேல பாரத்தை சுமந்துட்டு சுத்தாதே. அப்பப்போ கொஞ்சம் ப்ரீயா இரு... நீ என்ன கிழவியா? இப்போ எனக்காக மத்ததை எல்லாம் மறந்துட்டு ஒரு நல்ல பொண்ணா என் கேள்விக்கு பதில் சொல்லு... உண்மையான பதில் சொல்லு..."

நந்தினி கண்களை மூடிக் கொண்டாள்...

ஸ்வேதாவின் கேள்வியை மனதினுள் அசை போட்டாள்...

அவளின் மனதினுள் மூடி வைத்திருந்த ஆசைகள், கனவுகள் மெல்ல உயிர் பெற்று வந்தன...

ஸ்வேதா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நந்தினியை ஆர்வத்துடன் பார்த்தாள்.

"வாவ்! இதை நான் எதிர்பார்க்கலை! உன்னோட ஆக்ஷன் அண்ட் ரியாக்ஷன் பார்த்தால், பயங்கரமா எதோ இருக்கும் போல இருக்கே? என்ன லவ்வா? என்கிட்டே சொல்லவே இல்லை?"

"ப்ச்... அப்படியெல்லாம் எதுவுமில்லை" என்றாள் நந்தினி சின்ன வெட்க புன்னகையுடன்.

"வாய் தான் சொல்லுது... வெட்க படுற, சிரிக்குற... சொல்லு சொல்லு அப்படி என்ன கண்ணை மூடி ட்ரீம்ஸ்????"

"பெரிசா எதுவுமில்லை ஸ்வே... என் மனசில இருக்கிறது எல்லாம் ஒரே ஒரு ஆசை தான்..."

"என்ன ஆசை?"

"அவர் என்னை ரொம்ப நேசிக்கனும்... ரொம்ப ரொம்ப நேசிக்கனும்... இப்படி யாருமே அன்பு காட்ட முடியாதுன்னு நினைக்குற அளவுக்கு நேசிக்கனும்... மத்தபடி பணம், அழகு, தோற்றம் இது எதுவுமே எனக்கு முக்கியமில்லை... எனக்கு வேண்டியது எல்லாம் அவருடைய அன்பு, காதல், பரிவு... அவ்வளவு தான்!"

"அவ்வளவு தானா? அது சரி!!!!"

பாதி கனவிலும், பாதி நிகழ்காலத்திலுமாக சஞ்சரித்துக் கொண்டிருந்த நந்தினி ஸ்வேதாவின் கேலி தொனியில் முழுவதுமாக நிகழ் காலத்திற்கு வந்து சேர்ந்தாள்.

"என்ன பார்க்குற நந்தினி. நான் சொன்ன மல்டி மில்லியனர் கனவு கூட ஈசி, நீ சொல்றது ரொம்ப கஷ்டம்."

"ம்ம்ம்..."

"நீ எதிர்பார்க்குற அன்பு கடல் எல்லாம் கிடைக்குறது கிட்டத்தட்ட நடக்க முடியாத விஷயம்"

"தெரியும் ஸ்வே! அதனால் தான் நான் இதை எல்லாம் யோசிக்குறது இல்லை... என் ரேன்ஜ் எல்லாம் கொஞ்சம் அப்படி தான்! சாமி என் ரெக்வெஸ்ட் கேட்டு ஸ்பெஷல் ஆர்டர் ஏதாவது செஞ்சா தான் உண்டு..." என்றாள் நந்தினி புன்னகையுடன்.

"ஆசை பட்டா பரவாயில்லை, பேராசை பட்டுட்டு இதுக்கு இப்படி சாமி பேரெல்லாம் சொல்லி பில்ட்-அப் வேறயா?"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top