(Reading time: 8 - 16 minutes)

"யார் உனக்கா??ரவி இப்பவும் நிறைய பொண்ணுங்க உன்னை சைட் அடிக்கிறாங்க ரவி!சத்தியமா உன்னை பார்த்தா எவனும் 25+ அப்படின்னு தான் சொல்லுவான்!"அது என்னமோ உண்மை தான்.ரவிக்குமாருக்கு 50+ வயதாகிறது.ஆனால் பார்ப்பதற்கு முப்பது வயதுக்குள் தான் இருப்பார்.உறுதியான தேகம்.இக்கால வாலிபனை போல 

தோற்றம்.

அவர் அசடு வழிந்தார்.

"ஐயே! போதும் வா!"தந்தையை நடைப்பயிற்சிக்கு கிளப்பினாள்.

அவர்கள் கீழே வர வாசலில் கோலம் போட்டு  கொண்டிருந்தாள் சம்யுக்தா.ரவிக்குமாரின் தங்கை மகள்.சிறு வயதிலே பெற்றோர் காலமானதால் இவர்களுடனே வசிக்கிறாள்.

"சம்யுக்தா!இதெல்லாம் துர்காம்மா பார்த்துக்க மாட்டாங்களா?நீ ஏன் இதெல்லாம் பண்ற?"

"இல்லை மாமா...அது..."

"ரவி...இதெல்லாம் சம்யுக்தா தான் பண்ணணும்!அப்போ தான் வீட்ல மஹாலட்சுமி குடியிருப்பாங்க!"

'புரியலையே!"

"அவளுக்கு புரிந்திருக்கும்!ஆமா...என் அண்ணன் எப்போ கல்கத்தாவுல இருந்து வரான்?"

"நாளைக்கு!!! ஏன்?"

"சும்மா!"சம்யுக்தாவின் முகம் பிரதிபலித்த ஒவ்வொரு பிம்பத்தையும் தீக்ஷா கவனிக்க தவறவில்லை.

இருவரும் நடைப்பயிற்சி கிளம்ப அவர்களோடு இணைந்தார் பக்கத்து வீட்டுக்காரரான சங்கர்.

ரவிக்குமாரின் நெருங்கிய நண்பன்.

"என்ன அங்கிள்!!ஆன்ட்டி அனுப்பிட்டாங்களா?"கிண்டலாக கேட்டாள்.

"ஆமாம்மா!காலையில 5 மணிக்கு மேல தூங்கவே விடுறதில்லை!"

"அதனால் தான் ஆரோக்கியமா இருக்கீங்க!"

"அடப்போம்மா!சரி...சித்து எப்போ வரான்?"

"நாளைக்கு!ஏன் அங்கிள்?"

"கவுதமை கேட்டு போன் மேல போன் வருது அதான்!"

"ஓ...சார் வி.ஐ.பி.ஆயிட்டாரா?"

"தெரியலையே!"-இப்போது சித்தார்த் குறித்தும்,கவுதம் குறித்தும் காண்போம்!!

சித்தார்த் தீக்ஷாவின் அண்ணன்.பிரபல இசையமைப்பாளன்.

ஏதோ ஒரு இசை ஆல்பம் செய்ய கல்கத்தா சென்றுள்ளான்.கவுதம் தீக்ஷாவின் நண்பன்.எழுத்தாளன்.அவனது எழுத்து மிகவும் பிரபலமானவை!!!

ஓய்விற்கும் நேரம் இல்லாமல் ஓடுபவன்.

ஒரு ஓய்விற்காக சித்தார்த்துடன் சென்றுள்ளான்.

நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் சரியாக ஏழு மணிக்கு திரும்பினர்.

நண்பர்கள் இருவரும்   முன் நடக்க,அவர்கள் பின் வந்தாள் தீக்ஷா.

"எக்ஸ்யூஸ்மீ!"ஒரு ஆணின் குரல் தடுத்தது.

"எஸ்.."

"நான்...அசோக்!இந்த தெருவுல தான் ரொம்ப நாளா இருக்கேன்!"

"சரி"

"நான்...அது...நான்...உங்களை!"

"என்ன?"

"நான் உங்களை லவ் பண்றேங்க!"தீக்ஷாவின் விழிகள் விரிந்தன.

"ஸாரி சார்...எனக்கு அந்த ஐடியா இல்லை!"

"இல்லைங்க...கொஞ்சம் யோசித்து சொல்லுங்க!"

"இல்லை சார்.... ஸாரி!"சிரித்தப்படி நகர்ந்தாள் தீக்ஷா.

வீட்டிற்குள் நுழைந்ததும்,

"என்ன ராஜகுமாரி!லவ் பெட்டிஷனா?"சிரித்தப்படி கேட்டார் கமிஷ்னர்.

"ஆமா!"

"நோ ஐடியான்னு சொன்னியா?"

"ஆமா!"

"ஏன்?"-தீக்ஷா மேலும் கீழும் அவரை பார்த்தாள்.

"ஒரு அப்பா மாதிரி பேசு ரவி!"

"ஏ...நான் சில விஷயத்துல நண்பனாவே இருக்கேன்!சரி...யாரையும் லவ் பண்ண மாட்றீயே!எந்த மாதிரி ராஜகுமாரன் வேணுமாம்?"

"ம்...குதிரையில வந்து என்னை தூக்கிட்டு போற ராஜகுமாரன் வேணும்!"-கிண்டலாக கூறிவிட்டு நகர்ந்தாள்.

"வீட்டு பக்கம் தலை வைத்துக் கூட படுக்கறதில்லை.ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒருமுறை வந்துட்டு போயிடுறான்."-தன் மகனை திட்டி தீர்த்து கொண்டிருந்தார் மதுபாலா.(யாரென்று தெரிகிறதா?)

"இப்போ எதுக்கு அவனை திட்டிட்டு இருக்க?"-மகனுக்கு உதவிக்கரம் நீட்டினார் சி.பி.ஐ.அதிகாரி.

"ஏன் திட்டுறேனா...அவன் பண்ணுற வேலைக்கு அவனை கொஞ்ச சொல்றீங்களா??ஒரு வாரமா வீட்டுக்கே வரலை.அப்படி என்ன முக்கியமான வேலையாம்?"

"அம்மூ!விடு!அவன் விருப்பம் எதுவோ அப்படியே பண்ணட்டும்!"

"ஆமா...பெரிய விருப்பம்!"-முகம் வாடி போனது மதுவிற்கு!!!!

"இப்போ என்ன ஆச்சு?எதுக்கு டேம்( dam) திறந்து விடுற?"

"உங்களுக்கு கிண்டலா இருக்கா?என் கஷ்டம் எனக்கு தான் புரியும்!"-ஆதித்யா எழுந்து வந்து அவளருகே நின்றான். 

"இங்கே பார்!அவன் எங்கே இருந்தாலும் உன்னைப் பற்றி தான் யோசிப்பான்! நீ இப்படி கவலைப்படுறன்னு தெரிந்தால் அவன் வீட்டை விட்டு வெளியே கூட காலடி வைக்க மாட்டான்.புரியுதா?"

"ம்..."

"சிரிடி!அப்போ தான் கொஞ்சமாவது அழகா தெரிவ!"

"என்ன?"

"இல்லை...கிராமர் மிஸ்டேக்!ஆ...ரொம்ப அழகா தெரிவ!"-தப்பித்தான்.மதுபாலா சிரித்தாள்.

அதையே பார்த்தவன்,அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"போதும்!இன்னும் மனசுல பழைய ஆதித்யான்னு நினைப்பா???உங்களுக்கு மூணு பசங்க இருக்காங்கன்னு ஞாபகம் இருக்கட்டும்!"

"ஏ...நான் இன்னும் அதே ஆதித்யா தான்!மூணு பசங்க இருந்தா என்ன???நான் இன்னும் ஹீரோ தான்!"

"அது மட்டுமில்லாம!நீ வேற இன்னும் அப்படியே இருக்கியா.!!அதான்,உணர்ச்சி வசப்பட்டுட்டேன்."-அவனது பேச்சு மதுவின் முகத்தில் நாணத்தை வரவழைக்க தான் செய்தது.

காலம் மாறினாலும் காதல் மாறாது என்பர்.ஒரு மனிதன் காடு செல்லுவரை மட்டுமல்ல ! உணர்வோடு பின்னி அவன் மரணம் தாண்டியும் வாழும் பந்தம் காதல்!!!!ஆண் பெண் இருவருக்கும் இடையே உள்ள அந்நியோன்னியம்

ஆத்மாவின் சாட்சியாக அண்டத்தை ஆளுகிறது.இன்னும் இவர்கள் கதாநாயகர்கள் தான்.அதில் சந்தேகம் இல்லை.அதனால் தான் என்னாலும் அவர்களுக்கு பிறருக்கு வழங்கும் மரியாதையை வழங்க முடியவில்லை.மன்னித்து  கொள்ளுங்கள்!!!!!

அடுத்த அத்தியாயம் ரகு மைந்தனின் அறிமுகம்!!!!!

தொடரும்

Episode # 02

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.