(Reading time: 12 - 23 minutes)

02. சதி என்று சரணடைந்தேன் - சகி

பிறப்பானது மனிதனின் உருவ அமைப்பையும்,சில குணங்களையும் தீர்மானிக்கிறது.வளர்ப்பானது வாழ்வின் நடத்தையை தீர்மானிக்கிறது.இரண்டும் சீராக இருக்கும் மனிதன்,யோகியவானாக திகழ்கிறான்.மனிதனின் உயர்வுக்கு நடவடிக்கை எவ்வளவு முக்கியமோ!அதைவிட சரியான பாதையை தீர்மானிப்பது மிக முக்கியம்.பாதையை தீர்மானிக்க நிச்சயம் வழிக்காட்டி தேவை.

கலங்கரை விளக்கமானது இரவில் ஒளியை மட்டுமல்ல ஆழியில் செல்லும் படகுகளுக்கு வழிக்காட்டியாகவும் உள்ளது.

"என்னடா உள்ளே போனவனை இன்னும் காணும்?"-நண்பனின் வருகைக்காக கவலையோடு கேட்டான் ஹரி.

Sathi endru saranadainthen

"தெரியலையேடா!முருகா...என் நண்பனை பத்திரமா கூட்டிட்டு வந்துடுப்பா!"-இவன் பெயர் கார்த்திகேய முருகன்.

நீண்ட நேரம் அந்த மூடப்பட்ட தொழிற்சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது.

அதை தொடர்ந்து ஒருவன் ஓடி வந்தான்.

சற்று உற்று பார்த்தால் அது ரகு???ரகுவா அது???அப்படி தான் நானும் நினைத்தேன்!!!ஆனால்,அது ராகுல்.

"டேய் மச்சான் ராகுல் வந்துட்டான்டா!"-என்ற ஹரியின் குரல் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

எதிரில் நின்ற சுவரை தாண்டி குதித்து ஓடி வந்தான்.இவர்கள் காரை கிளப்பி தயாராய் வைத்தனர்.

அதற்குள் ஒரு பத்து பேர் அவனை சூழ்ந்துக் கொண்டனர்.

ஒருமுறை நின்ற இடத்தைவிட்டு நகராமல் அனைவரையும் சுற்றி பார்த்தான்.

"கேமரா கொடுடா!"-ஒருவன் மிரட்டினான்.

ராகுல் கேமராவை கீழே வைத்தான்.

அதை எடுத்தவன்,

"இவனை முடிச்சிடுங்க"-என்றதும் ஒருவன் தாக்க வந்தான்.போராட்டம் தொடங்கியது.(ஆரம்பததுல இப்படியா?)

ஒருவன் கத்தியை கொண்டு தாக்க வர அவனிடமிருந்து விலகி அக்கத்தியை கொண்டே அவனை தாக்கினான் ராகுல்.மற்றொருவனின் கை முறுக்கப்பட்டது.அடுத்து ஒருவன் கத்தியை கொண்டு ராகுலின் கையை கீறினான்.

கோபம் வந்தவன் அவன் கரத்தை உடைத்தே விட்டான்.சில விஷயம் ராகுலிடமிருந்து ஆதித்யாவை பிரதிபலித்தது.ரகு சிறிது பொறுமை சாதித்து இருப்பான்.அதுசரி,வளர்ப்பு நம்மவர் தானே!!!

அனைவரையும் தாக்கியவன் இறுதியாக இருந்த ஒருவனை சாதாரணமாய் தான் பார்த்தான்.அவன் என்ன நினைத்தானோ கேமராவை பக்கத்தில் இருந்த நெருப்பில் போட்டுவிட்டு ஓடிவிட்டான்.

நண்பர்கள் இருவரும் பதற்றத்தோடு ஓடி வந்தனர்.

"மச்சான் எதுவும் ஆகலையேடா?"-ஹரி.

"அந்த  திருசெந்தூர் முருகன் தான் உன்னை காப்பாற்றினார்!"-கார்த்திகேயன்.

"கஷ்டப்பட்டு சண்டை போட்டவன் நானாம்!பெருமை திருச்செந்தூர் முருகனுக்காம்!"-மூவரும் சிரித்தனர்.

"இவ்வளவு கஷ்டப்பட்டும் வீடியோ போயிடுச்சே!"

"மெமரி கார்டு என்கிட்ட தான் இருக்கு!"

"என்னடா சொல்ற?"

"ஓடிவரும் போதே கழற்றிவிட்டேன்!"-மெமரி கார்ட்டை காண்பித்தான்..

"அப்பா..தப்பிச்சோம்!"-தனது பையில்( bag) எதையோ தேடியவன்,

"இல்லடா மாட்டினோம் !"

"என்னடா சொல்ற?"

"அது அந்த ராட்ஸஸி கேமரா!மாத்தி எடுத்துட்டு போயிட்டேன்!"-என்று தனது கேரமாவை காண்பித்தான்.

"ஐயோயோ!"

"அந்த திருச்செந்தூர் முருகன் தான் உன்னை காப்பாற்றணும்!"-

இப்போது ராகுலை பற்றி காண்போம்.

ராகுல் ஒரு பத்திரிக்கையாளன் தான்.கரம் கோர்ப்போம் அறம் செய்ய பத்திரிக்கையின் உரிமையாளன்.

அவன் நண்பர்கள் அவனோடு பணிபுரிபவர்கள்.

அவன் குறிப்பிட்ட அந்த ராட்ஸஸி அவனது சக தோழி மாயா.

பயங்கர கோபக்காரியாக இருப்பாள் போல!!!

"ஏன்டா எத்தனை முறை சொன்னேன்.இப்படி உடைத்துவிட்டு வந்து நிற்கிறீயே!"-கத்தினாள் மாயா.

ராகுல் அமைதியாக நின்றான்.

"ஏ...அவன் எவ்வளவு பெரிய காரியம் பண்ணி இருக்கான்??அதைப் பாராட்டாம திட்டி தீர்த்துட்டு இருக்க?"-நண்பனுக்காக பேசினான் ஹரி.

"அவனுக்கு எதுவும் ஆகாதுன்னு தெரியும்!என் கேமரா!" -சண்டை மூண்டது.

"ஏ...வேணாம் சண்டை போடாதீங்க!"-ராகுல் அவர்களை விலக்கினான்.

"மாயா டார்லிங்!மாமா உனக்கு வேற கேமரா வாங்கி தரேன்.கோபப்படாதே  செல்லம்!"-அவளை அணைத்துக் கொண்டான்.

"போடா!கேமரா வாங்க முடியாமயா நான் சண்டை போடுறேன்??அது என் அப்பா கடைசியா எனக்கு பிரசன்ட் பண்ணது."-அவள் கண்கள் கசிந்தன.

ராகுல் அவளருகே அமர்ந்தான்.

"எனக்கு பசிக்குதுடி!"-மாயா அவனை உற்று பார்த்தாள்.

"நீ சாப்பிடலையா?"

"ம்ஹீம்!"

"பைத்தியக்காரா...வா!முதல்ல சாப்பிடு!"-தான் கொண்டு வந்த உணவை அவனிடம் தந்தாள்.

"உங்களுக்கு என்ன பத்திரிக்கை வைக்கணுமா?"

"இல்லைம்மா இதோ வந்துட்டோம்!!!"-அழகிய இந்த நட்பானது ஆண் பெண் பேதமற்றது.

அன்று,வாசுதேவரின் சகியாய் திரௌபதி,

இன்று கௌதமின் சகியாய் தீக்ஷாவும்,ராகுலின் சகியாய் மாயாவும்!!!

புனிதத்துவம் என்னும் வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துள்ளது நட்பு!!!

இலக்கியங்கள் மட்டுமல்ல இதிகாசங்களும் தலைவணங்குகின்றன...சான்றோர்கள் ஒன்று கூறுவர்.நீ உன் நண்பனை குறித்து கூறு!நான் உன்னை குறித்து உரைக்கின்றேன் என்று!!!காரணம்,நதியின் ஓட்டம் எப்படியோ!அப்படியே கடலின் வேகமும் இருக்கும்!!ஒரு மனிதன் தவறிழைப்பவனால் அவனை கடிந்து திருத்தும் உரிமை உள்ளவர்கள் பெற்றோர்களைவிட நண்பர்களே!!!!

அதனால் தான் மாதா,பிதா,குரு,தெய்வம் என்று கூறியவர்கள் இணை இல்லாமல் திகழ்வதால் நட்பினை இதில் சேர்க்கவில்லை,!!!!!பெருமை கொள்ளுங்கள்...நீங்கள் ஒரு நண்பர்.உங்களுக்கும் உள்ளனர் நண்பர் பலர்.

சமையலுக்காக காய்கறி வெட்டிக் கொண்டிருந்தாள் மதுபாலா.

ஆதித்யாவோ மடிக்கணினியில் வேலையாய் இருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.