(Reading time: 12 - 23 minutes)

"ன்னங்க!"

"ம்..."

"ராகுல் போன் பண்ணானா?"

"ராகுலா?"-என்று நிமிர்ந்தவனின் விழிகளில் மதுவின் பின்பக்கமாக ராகுலும்,அவனது நண்பர்களும் அவன் அறைக்கு மெதுவாக தப்பிப்பது தெரிந்தது.அவன் சொல்ல வேண்டாம் என்று செய்கை செய்தான்.

"அது...வந்தும்மா...இல்லை..பண்ணலை!"

"நீங்களாவது பண்ணீங்களா?"

"அது...இல்லை!"

"ஏன்?"

"மறந்துட்டேன்!வேலை முடிச்சிட்டு பண்றேன்!"-அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்த அவன் தம்பி ஆர்யா,

"ஐ...அண்ணா!எப்போடா வந்த?"-என்று கத்த,மாட்டிக் கொண்டான்.

"அந்த திருச்செந்தூர் முருகன் இப்போ காப்பாற்ற மாட்டாரா?"-ராகுல்.

மது பார்த்துவிட்டாள்.

"ராகுல்!"-அவன் நெளிந்தப்படி,

"அம்மா!"என்றான்.ஒருநொடி அவள் மனம் கோபம் அனைத்தையும் தொலைத்தது.அவளுக்கு முதன்முதலில் தாய் ஸ்தானம் வழங்கியவன் அவனல்லவா??

"இது தான் உன் வீடுன்னு இப்போ தான் ஞாபகம் வந்ததா?"-அவன் மௌனமாய் நின்றான்.

"போ!உனக்கு அந்த ஆபிஸ் தானே முக்கியம் அங்கேயே இருக்க வேண்டியது தானே!!"

"அம்மா?"

"பேசாதேடா!"

"அம்மூ!அமைதியா இரு!"-சமாதானப்படுத்தும் ஆதித்யாவின் குரலுக்கு கட்டுப்பட்ட வகையில் அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

"வாடா! வேலை எல்லாம் முடிந்ததா?"-ஆதித்யாவின் குரலை காதில் வாங்காமல் மதுவின் பின்னால் சென்றான்.

"அம்மா!"-அவள் அறைக்கு சென்றான்.அவன் வருகையை உணர்ந்தவள் கண்களை துடைத்து கொண்டாள்.

ராகுல் அவள் மடி மீது சாய்ந்தான்.தன்னிச்சையாக அவள் கரம் அவன் தலையை கோதியது.

"இனி,வெளியே தங்க மாட்டேன்!"

"சாப்பிட்டியா?"

"ம்..."

"நிஜமாவா?"

"ம்..மாயா தந்தா!"

"சரி போய் குளிச்சிட்டு வா!"

"ம்...வேணாம்!"

"அடி!போடா!போய் குளி!"

"சரி...நீ ஏன் இப்போ எல்லாம் ரொம்ப டென்ஷன் ஆகுற?நல்ல டாக்டர்கிட்ட போய் பார்!பிரசர் இருக்க போகுது!"

"நான்...டாக்டர்கிட்ட!!!போடா!"-ராகுல் சிரித்தப்படி ஓடிவிட்டான்.

அதைப் பார்த்து கொண்டிருந்த ஆதித்யா அவளருகே வந்தான்.

"என்னங்க?"

"அம்மா அடிக்கடி ஒண்ணு சொல்லுவாங்க!அம்மூ உன் வாழ்க்கையில வந்தது நீ செய்த பாக்கியம்னு!அப்போ அம்மாவை கிண்டல் பண்ணுவேன்! இப்போ புரியுது!அவங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!"

"................."

"எந்த பொண்ணும் செய்ய தயங்குற தியாகத்தை நீ பண்ணி இருக்க அம்மூ?"

"தியாகமா?எதை தியாகம்னு சொல்றீங்க நீங்க?ராகுல் என்னோட மகன்.அவன் தான் எனக்கு முதன் முதலா தாய் ஸ்தானத்தை வழங்கினான்.பத்து மாசம் சுமந்தால் தான் அம்மாவா?எனக்கு ராகுல்,ஆர்யா,அனு எல்லாம் ஒண்ணு தான்!"

"உண்மை ஒண்ணு சொல்லட்டா!நீ என்னோட பாக்கியம் அம்மூ!"

"போதும்!"

"இன்னும் கொஞ்சம்!"

"வேணாம் போங்க!"

தீக்ஷா எதையோ மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன மேடம் பண்றீங்க?"-கேட்டப்படி அங்கே வந்தாள் அவள் தோழி ஸ்வேதா.

"படிச்சிட்டு இருக்கேன்?"

"என்ன?"

"பேப்பர்!"

"பேப்பர்ல என்ன?"

"நியூஸ்!"

"உன்கிட்ட போய் கேட்டேன் பாரு!"

"சரி கோபப்படாதே!இங்கே பார்!"-என்று ஒரு நாளிதழை காண்பித்தாள்.அதில்,

அரசாங்கத்திற்கு தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 டன் யுரேனியம் கையகப்படுத்தப்பட்டது.பத்திரிக்கை நிருபர் உதவியோடு!!!என்று ராகுலின் புகைப்படமும்,அவனது புகழும் போற்றப்பட்டு இருந்தது.

"ஐயோ! என் ஹீரோடி இவன்!"

"எவன்?"

"ராகுல்...அவன் பார்க்கிற பார்வையை பார்!அப்படியே பார்வையாலே மயக்கிடுவான்!"

"ச்சீ,...இப்படியா ஒருத்தரை வர்ணிப்ப?"

"நீ என்ன?அவன் பொண்டாட்டி மாதிரி ஃப்பீல் பண்ணுற?"

"ஸ்டாப் இட் ஸ்வேதா!"

"ஏ...ஸாரியா!விளையாட்டுக்கு  தான் சொன்னேன்!"

"விளையாட்டுக்கு சொன்னாலும் சொல்ற வார்த்தையோட அர்த்தம் தெரிஞ்சிட்டு பேசு!"

"ஸாரி!ரியலி ஸாரி!"-அந்நேரம் அங்கிருந்த தொலைப்பேசி ஒலித்தது.

ஸ்வேதா எடுத்தாள்.

"ஹலோ!"

"ஹலோ!என் பெயர் ராகுல்.நான் உங்க எம்.டி.கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"சார் நீங்களா?என்னால நம்பவே முடியலை!சார் காலையில உங்களைப் பற்றி வந்த ஆர்ட்டிக்கல் படித்தேன்.ஜெஸ்ட் ஆஸ்ஸம்!"

"இல்லைங்க நான் சொல்றதை கொஞ்சம்..."

"சார் உங்க வாய்ஸ் கூட ஸ்வீட்டா இருக்கு சார்!"-பேசிக் கொண்டே போனவளின் கையிலிருந்து ரிசிவரை வாங்கினாள் தீக்ஷா.

"ஹலோ!யாருங்க?"-அவளின் குரலில் தொனித்த இனிமை அவனுள் கலக்காமல் இல்லை.விவரத்தை கூறினான்.

"ஸாரி சார்!எம்.டி.வர 1 மணி நேரம் ஆகும்!"

"சரி...வந்தவுடனே நான் போன் பண்ணேன்னு சொல்லுங்க!"

"ஓ.கே.சார்!"

"தேங்க் யூ மேம்!"-இணைப்பை துண்டித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.