(Reading time: 17 - 33 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 09 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" வாழவைக்கும் காதலுக்கு ஜே !

வாலிபத்தின் பாடலுக்கு ஜே !

தூதுவிட்ட கண்கள் தேடுதே

Enna thavam seithu vitten

ன்னா    னா  னான  ஜே ! " கையில் சீப்பை பிடித்து கொண்டு  எஸ் பி பிக்கே சவால் விடுவதை போல பாடிக் கொண்டு நின்றான் வருண் ...

" கல்யாணம் காட்சி எதுவும் பண்ணிகிறது இல்லை .. நாங்க பொண்ணு பார்க்கிறோம்னு சொன்னாலும் சண்டைக்கு வர்றது, சரி லவ்வு கிவ்வுன்னு பண்ணி வாழ்க்கையில் முன்னேருவன்னு பார்த்தா அதுவும் கிடையாது .. ஆனா பாட்டை மட்டும் பாரு ... வாழவைக்கும் காதலுக்கு ஜேயாம் " என்று அலுத்துக்  கொண்ட அவன் தாய் நிரோஷாவின்  குரல் அந்த அறைகதவை தாண்டியும் அவனுக்கு கனீர்ரென  கேட்டது .. அம்மாவுக்கு பதில் சொல்லாமல் நேராய் தந்தையின் அறைக்குள் பிரவேசித்தான் அவன் ..

" குட் மோர்னிங் வருண் டார்லிங் "

" அப்பா , இந்த செல்லம் கொஞ்சுற வேலை எல்லாம் வேணாம் .. நான் உங்க கிட்ட என்ன சொல்லி வெச்சேன் ..? நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க "

" பேப்பர் படிக்கிறேன் பா ..அது ஒரு தப்பா ? நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா ?"

" அப்பா இதையெல்லாம் படிச்சு நீங்க என்ன ஒரு நாள் முதல்வராய் மாறபோறிங்களா ? எத்தனை தடவை சொல்லி இருக்கேன், நான் ஆபீஸ் போகுற வரை அம்மாகூட சண்டை போட்டு அவங்களை டைவர்ட் பண்ணுங்க , இல்லன்னா அவங்க என் கல்யாண பேச்சை எடுப்பாங்கன்னு !"

" ஹீ ஹீ இப்போ என்னாச்சு ?"

தந்தைக்கு பதில் சொல்லாமல் அவரது அறை கதவை பார்த்தான் அவன் .. அடுத்த அவன் என்ன சொல்ல போகிறான் என்று உணர்ந்தவர் வேண்டுமென்றே  அதிமுக்கியமான செய்தியை படிப்பதுபோல நாளிதழில் முகத்தை புதைத்து கொண்டார் ..

 " நான் உள்ள வரும்போதே உங்க ரூம் கதவு திறந்துதான் இருந்துச்சு டேடி .. கதவு சாத்தி வைச்ச எனக்கே அம்மாவின் குரல் கேட்கும்போது உங்களுக்கு கேட்காதா ?" என்றான் வருண்..

"  தம்பி கல்யாணம் ஆனதுமே கணவனுக்கு சில ரூல்ஸ் இருக்கு ..அதுல முதல் ரூலே , பொண்டாட்டி 'என்னங்க இதை கேளுங்கன்னு ' சொன்னதான் நம்ம காதுக்கு கேட்குற திறனையே கொடுக்கணும் ..அப்படி இல்லாத நேரத்துல எங்கிருந்து சத்தம் வந்தாலும் கப்புசிப்புன்னு இருக்கணும் " என்றார் கருணாகரன்.. தந்தையின் சொற்பொழிவில் இருகரம் கூப்பி வணங்கியே விட்டான் வருண் ..

" அப்பா, என் அன்னை நிரோஷாவின்  துணைவரே, மனிதருள் மாணிக்கமே, நாளிதழின் நாயகனே, மன்னாதி மன்னா அவசரபட்டு வாய் கொடுத்துவிட்டேன் .. பெரியமனசு பண்ணி உங்க மகனை மன்னிச்சிருங்க .. நான் வேலைக்கு கிளம்புறேன் " என்றவன் வழக்கம்போல தந்தை கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான் .. தந்தை மகன் இருவரின் உரையாடலை நேரில் கேட்கவில்லை எனினும் ஓரளவு  என்ன நடந்திருக்கும் என்று யூகித்திருந்த  நிரொஷாவின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது ... சமைத்த உணவுகள் அவர் டைனிங் டேபளில் வைக்க " வரேன் அம்மா " என்றபடி அவரை கடந்து செல்ல எத்தனித்தவனை தடுத்தார் அவர் ..

" டேய் குட்டி எஸ் பி பி .. காலையில் பண்ணின பாட்டுக் கச்சேரிக்கு பசி எடுத்திருக்கும்ல ?வா ரெண்டு இட்லி சாப்பிட்டுடு போடா "

" டைம் இல்லை மம்மி "

" அப்படியா ... சரிப்பா " என்றவர் பலமாய் இரும்பினார் .. அடுத்த நொடி சூட்கேசை சோபாவில் போட்டுவிட்டு அவரிடம் ஓடி வந்தான் வருண் ..

" அம்மா என்ன ஆச்சு ? தண்ணி கொண்டு வரவா ?" என்று பதரியவனை பார்த்து கண் சிமிட்டினார் அவர் ..

" ம்ம்ம் தொண்டையில் கிச்சு கிச்சு .. டேய் நான் உனக்கு அம்மா டா ..  என் பிள்ளையை எனக்கு தெரியாதா ? வேலா வேலைக்கு சாப்பிட மாட்ட, அப்பறம் தலைவலி அது இதுன்னு சொல்லுவ.. அம்மா ஊட்டி விடுறேன் .. ரெண்டு வாய் சாப்பிடு" என்றார் .. தாயை செல்லமாய்  முறைத்து கொண்டே அவர் ஊட்டியதை சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு போன் வடிவில் புயல் ஒன்று காத்திருந்தது ..

" சாப்பிடும்போது என்ன கண்ணா போன் ?"

" கவி கூப்பிடுறா அம்மா ..ரெண்டு நிமிஷம் " என்றவன் போனை எடுத்தான் ..

" கவி சொல்லுடா "

" எங்க இருக்கீங்க "

" வீட்டுல ..இதோ கிளம்பிட்டேன் "

" பொறுமையாகவே வாங்க , எனக்கு தேனீ போகறதுக்கு 7 மணிக்குதான் கால் டேக்சி வருது " என்றவளின் குரலில் அப்போதுதான்  வித்தியாசத்தை உணர்ந்தான் வருண் ..

" தேனீயா ?? அங்க எதுக்கு ??? என்னாச்சு கவி ? ஆர் யூ ஆல்ரைட் ??"

" எஸ் எம் டீ சார் " என்று அழுத்தமாய் " எம் டீ " என அவனை அழைத்து தூக்கி வாரி போட வைத்தாள்  கவிமதுரா ..

" ஓ  உண்மை தெரிஞ்சிடுச்சா " என்று கேட்டவனின் மூளை அடுத்து என்ன சொல்லலாம் என வேகமாய் சிந்தித்தது ..

" யார் நீங்க? எதுக்கு உங்க பதவியில் என்னை நிறுத்தி வெச்சு இருக்கீங்க ? இதுக்கு பின்னாடி யார் காரணம் ? இதெல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை மிஸ்டர் வருண் ..அடுத்து என்ன சொல்லலாம்னு  யோசிக்காதிங்க .. ஏதோ எனக்குள் தைரியமாய் இருந்த பழைய கவிமதுரா, இப்போதான் திரும்பி வந்திருக்கா, அதுக்கு இந்த ஊரும் நீங்க எல்லாரும் ஒரு காரணம் ..அதுக்கு தேங்க்ஸ் .. இது போதும் .. இதுக்கு மேலயும் என்னை ஏமாத்துறவங்களோடு  என்னால இருக்க முடியாது ... நீங்க சீக்கிரமா வந்திங்கன்னா உங்க கம்பனி பொறுப்பை உங்க கையிலேயே ஒப்படைச்சிட்டு போயிருவேன் " என்றாள்  ..

" கவி, லெட்  மீ எக்ஸ்ப்ளைன் " என்று வருண் ஆரம்பிக்கும்போதே அவள் போனை வைத்திருந்தாள்..

" அம்மா , போதும்மா .. நான் கிளம்பறேன் " என்று பரபரத்தவன் காரை எடுத்துவிட்டு கிரிதரனை அழைத்தான் ..

 "சொல்லு டா "

" எல்லாம் போச்சு மச்சான் "

" என்னாச்சுன்னு ஒழுங்கா சொல்லுடா "

" கவிக்கு நான்தான் எம் டின்னு  தெரிஞ்சு போச்சு "

" வாட் ? யார் சொன்னது அவளுக்கு ? அவ என்ன சொன்னா ? நீ எங்க இருக்க இப்போ "

சுருக்கமாய் கவிமதுரா பேசியதை கூறினான் வருண் ..

" நான் உடனே அங்க வரேன் வருண் "

" இல்ல வேணாம்  டா"

 "இல்ல நான் இப்போவே கிளம்புறேன்"

" கிரி சொல்லுறதை கேளு !"

" நோ !!!!"

" என்னடா ஆச்சு உனக்கு ?"

" வருண், தேனியில் அவளுடைய அம்மா அப்பா இருக்காங்க .. ஆனா எனக்கென்னமோ இவ அவங்ககிட்ட போவான்னு  தோனல .. அவ வேற எங்காயாச்சும் போயிட்டா ? என்னால மறுபடி அவளை பிரிய முடியாது டா " என்றவனின் குரல் தழுதழுத்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.