" சந்த் .......தோஷ் ....... "
"ம்ம்ம்ம் ?"
" ஏன் இப்படி ரகசிய குரலில் பேசுறிங்க ?"
" ஹா ஹா .. பயந்துட்டியா ? எல்லாம் காரணமாகத்தான் ..! 10.....9......8...."
" ஹே என்ன கவுண்ட்டவுன் எல்லாம் "
" 3....2....1.... டக்குனு ஒரு ஹேப்பி பர்த்டே சொல்லு "
" என்ன ?"
" சொல்லுடா "
" ஹேப்பி பர்த்டே!"
" தேங்க்ஸ் சத்யூ பேபி .. இந்த வருஷம் என் பிறந்தநாள் உன்னோடுதான் ஆரம்பிக்கணும்னு ஆசைபட்டேன் .. எப்பவும் சுபாஷ் அண்ணாதான் விஷ் பண்ணுவார் ..அதான் அவர்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி மொட்டைமாடியில் நின்னு ரகசிய குரலில் பேசறேன் "
" ஹே ...... நிஜம்மாவே வா சந்தோஷ் ? என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. இன்னைக்கு மாதிரி நீங்க எப்பவும் சந்தோஷமா ஆரோக்யமா இருக்கணும்னு வேண்டிகிறேன் .." என்றவளின் குரலில் அத்தனை உற்சாகம் .. அவன் தனக்கு முன்னுரிமை கொடுப்பது அவனது மனதை கோடிட்டு காட்டினாலும் அதற்கு எப்படி எதிரொலிப்பது என்று தெரியாமல் குழம்பியது பெண்ணுள்ளம் !
" ஹே என்னதிது , ஔவையார் மாதிரி ? உன்னடைய விஷ் மட்டும் எதிர்பார்த்து தான் நான் போன் பண்ணினேனா ?" என்றான் கிறக்கமாய் .. அவனது நேரடி தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை .. " வேறென்ன வேணும் " என்றவள் கேட்க " நீ போதுமே " என்றவன் கூறிவிட்டால்...? கன்னங்கள் சூடேற நாணமும் பரிதவிப்பும் இணைய,
" அது வந்து .. வேறென்ன " என்று தயங்கியபடி கேட்டாள் சாஹித்யா
" கேட்டா கிடைக்குமா ?"
" கொடுக்க முடிந்ததை கேட்கணும் நீங்க "
" உன்னை அவஸ்தை படுத்தி பார்க்க எனக்கு எப்படி மனசு வரும் சத்யூ "
" சரி கேளுங்க "
" உன் "
" என் "
" உன் "
" என் ??"
" செவ்விதழால் "
" எ ..... என்னது ?" என்று அலறினாள் அவள் ..
" ஹா ஹா நீ நல்லா பாடுவன்னு சிவா சொன்னான் ... உங்க செவ்விதழால் ஓர் பாடல் பாடினால் நான் தன்னியனாவேன் தேவி " என்றான் சந்தோஷ் குறும்புடன் ..
" கேடி .. கொஞ்ச நேரத்தில் என்னை எப்படி படுத்திட்டான் " என்றெண்ணியபடியே
" என்ன பாடுறது ?" என்றாள் ..
" ஏதாச்சும் .. உன் மனசுல இப்போ தோணுறதை பாடு "
"....."
" என்ன சத்யூ ரொம்ப சைலண்ட் ஆகிட்ட ... "
" அது வந்து.... "
" மலரே மௌனமா ?
மௌனமே வேதமா ? " என்றவன் பாட ,
தன்னையும் மறந்து தொடர்ந்து பாடினாள் சத்யா
" மலர்கள் பேசுமா ?
பேசினால் ஓயுமா ? அன்பே ?"...
" சத்யூ ... "
" ம்ம்ம்ம்ம் "
" நாளைக்கு ரெடியா இரு .."
"எதுக்கு ?"
" அது நாளைக்கு உன் வீட்டுக்கு வந்து சொல்லுறேன் "
" வீட்டுக்கா ??? என்ன சொல்றிங்க சந்தோஷ் ?" என்று பதட்டமானாள் அவள் ..
" முட்டை கண்ணை ரொம்ப விரிக்காமல் போயி தூங்கு சத்யூ .. மிச்சத்தை நாளை நேரில் பேசுறேன் .. " என்று போனை வைத்தே விட்டான் சந்தோஷ் ..
அவன் வார்த்தையின் அர்த்தம் விளங்கி கொண்டவளுக்கு கலவை உணர்வுகளாய் இருந்தது ..அதற்குள் அவனிடமிருந்து மெசேஜ்
" பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததே
மீதி ஜீவன் உன்னை பார்த்தபோது வந்ததே
குட் நைட் ஸ்வீட் ஹார்ட் :* "
அவனது மெசேஜ் ஐ படித்தவளுக்கு முகமெங்கும் முத்துமுத்தாய் வியர்த்தது ... அதே நேரம் அவன் தனது மனதை காட்டிய விதத்திலும் மயங்கித்தான் போனாள் சாஹித்யா ..ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாய் புரிந்தது !
"விடிந்தால் தெரிந்துவிடும் அவள் மனதில் காதல் ஆடும் கண்ணாமூச்சி !"
அடுத்து என்ன நடக்குமோ என்ற யோசனையிலே அவள் தூங்க , நாமும் அடுத்த அத்யாயத்தில் நம்ம அதிரடி சந்தோஷை சந்திப்போம் ..
தவம் தொடரும்
{kunena_discuss:838}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.