(Reading time: 17 - 33 minutes)

" ஜீவா குட்டி ... மாமாவை பாருங்க ..... நீங்க கூடமாமாவை விட்டுட்டு போகலாம்னு பார்த்திங்களா ?" என்றவன் சொடுக்கு போட்டு பேச அவன் கை அசைவிற்கேற்ப ஆர்பரித்து சிரித்தான் அந்த குட்டிக்கண்ணன் .. கோபத்தை தணிக்க இரண்டுவித ஆயுதங்கள் உண்டு ... ஒன்று கோபம், அடுத்தது அன்பு ! அவன் இரண்டு அஸ்திரங்களையும் சரியான நேரத்தில் பயன்படுத்தினான் .. வருணுக்கு உண்மையிலே ரேகா என்ற ஓர் தங்கை பிறந்து சில வருடங்களில் மறைந்ததும் உண்மைதான் .. அதனால் எந்த விதத்திலும் தான் பொய் சொல்லிவிட்டதாய் அவன் உணரவில்லை .. நண்பனின் மனைவியை தங்கையாய்  பாவிக்கும் அன்பான மனது , இறைவன் ஆண்களுக்கு தந்த ஒரு சீதனம் தான் .. அதனால் கிரிதரனின் சரி பாதியை தனது தங்கை இடத்தில் வைத்து பார்த்த்தது  அவனை பொருத்தவரை மிக இயல்பான செயல் ..

" எப்படி பட்ட மனிதன் இவன் ?" அவனையே ஆச்சர்யமாய் பார்த்தாள்  கவிமதுரா .. இப்படித்தான் அவளுக்காக ஒருவன் தவமிருந்தான் ..ஆனால் அவள் சில காரணங்களினால் அவனது அன்பை புறக்கணித்தாள் ..விளைவென்ன ? யாருக்குமே அமைதியில்லா நிலை .. இதே புறக்கணிப்பை இன்று வருணின்  அன்பிற்கும் காட்ட வேண்டுமா ? ஒருவரின் அன்பிற்கு நான் தகுதியானவளா என்று நினைப்பதை விட, கிடைக்கும் அன்பிற்கு இரண்டுமடங்காய் அன்பை திருப்பி  தருவதே உத்தமம் என்று தோன்றியது அவளுக்கு .. சட்டென எழுந்து தனதறைக்கு  நடந்தாள்  கவிமதுரா ..

" எங்க போற கவி ?"

" நேரம் ஆச்சு அண்ணா , வேலையை பார்க்க வேணாமா ? நீங்க உங்க மருமகன் கூட விளையாடுங்க , நான் வேலையை பார்க்கிறேன் " என்று புன்னகைத்தாள் .. அவள் முகத்தில் இருந்த தெளிவே அவனுக்கு போதுமானதாய் இருந்தது ..

" அப்போ தேனீக்கு  டேக்சி டிரைவரை மட்டும் அனுப்பி வெச்சிடவா ?" என்றான் அவன் துள்ளலுடன் ..

" அண்ணா பேச்சை தங்கச்சி எப்படி மறுக்குறது ? தாராளமா அனுப்பி வைங்க " என்று மலர்ந்து சிரித்தாள் அவள் .. ஜீவாவை தூக்கி கொண்டு அவள் நகரவும் கிரி போன்  செய்யவும் சரியாய் இருந்தது ..

" டேய் என்னடா ஆச்சு  " என்று கேட்டவனின் குரலில் படபடப்பு .. அதற்கு எதிர்மாறாய் சிரித்த வருண்,

" மச்சான் , மீரா அம்மா கையால பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாகுது .. உனக்கு நல்லது செய்த நண்பனுக்காக  பிரியாணி ரெடி பண்ண சொல்லு மிச்சத்தை நேரில் வந்து சொல்லுறேன் " என்றான் .. அவனது துள்ளலில் செய்தியை புரிந்து கொண்டவனும், நிம்மதியடைந்தான் .. !

போட்டோக்ராபி வேலையில்  மூழ்கி இருந்தான் அருள்.. சில நாட்களுக்கு முன்பு , புகைப்படங்களாய் எடுத்து வைத்துருந்த இயற்கை காட்சிகளை ஒன்றொன்றாய் பார்த்து கொண்டிருந்தவன், அப்போதுதான் மடிகணினியில் நேரத்தை பார்த்தான் .. இரவு மணி 11.30.. வானதியிடம் பேசவேண்டும் போல இருந்தது அவனுக்கு ...

" தூங்கியிருப்பாளோ ??" என்றெண்ணியவன்  போன்  பண்ணலாம் என்ற எண்ணத்தை  கைவிட்டுவிட்டு ஜன்னல் வழியாய் இயற்கை காற்றை ரசிக்கும்படி நின்றான் .. எதிர்வீட்டில் சத்யாவின் அறையில் விளக்கொளி தெரியவும் சட்டென அவளை போனில் அழைத்தான் அவன் ..

" ம்ம்ம்ம் சொல்லு டா "

" ஹே குட்டிச்சாத்தான் , இன்னும் தூங்கலையா நீ ?"

" பரவாயில்லையே கண்டுபிடிச்சிட்டியே ! நீ மட்டும் பேய் மாதிரி இந்த நேரத்தில் என்ன பண்ணுற ?"

" ம்ம்ம் .. நான் போட்டோஸ் பார்த்துட்டு இருந்தேன் "

"ம்ம்ம் .. நான் பழைய பாட்டு கேட்டுட்டு இருந்தேன் "

" அதைதான் டெய்லி  பண்ணுறியே நீ ! ஆமா ஏன் இன்னை மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி சுத்துற நீ ?? " என்று நேராய் விஷயத்திற்கு வந்தான் அருள் ..

" அ ... அதெல்லாம் ஒன்னும் இல்லை ... ஏன் அப்படி கேட்குற ?"

" ஹான் ... போயி உன் முகத்தை கண்ணாடியில பாரு ... ஏதோ ஒரு விஷயத்திற்கு முடிவெடுக்க முடியாமல் நீ தினருரன்னு  நினைக்கிறேன் ..அண்ட் என்கிட்டயும் சொல்ல முடியாத விஷயமா இருக்கலாம் அப்படி தானே ?"

" கொஞ்சம் சரி ... கொஞ்சம் தப்பு ..."

" எது சரி ? எது தப்பு "

" முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறது சரி , ஆனா உன்கிட்ட சொல்ல முடியாத விஷயம்னு ஒன்னும் இல்லை .. சொன்னா நீ என்ன ரியாக்ட் பண்ணுவன்னு எனக்கு நல்லாவே தெரியும் .. அதனால்தான் சொல்லாம இருக்கேன் "

" பாருடா .... உனக்கும் எனக்கும் வெவ்வேறு கருத்து இருக்குற விஷயம் எக்கச்சக்கம் இருந்தாலும், நீ இவ்வளவு இல்லாத மூளையை யூஸ் பண்ணி  யோசிக்கிறன்னா  அது எதுவா இருக்கும்னு என்னால கேஸ் பண்ண முடியுது "என்றவனின் குரலில் ஆராயும் தொனி  இருந்தது ...

" உன் கெஸ்ஸிங்  எல்லாம் உன்கிட்டே இருக்கட்டும் கழுதை .. நான் இப்போ தூங்க போறேன் .. குட் நைட் " என்று போனை வைத்தவள் அரை மணி நேரமாய் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்த அந்தே ஒரே பாடலை மீண்டும் இயக்கினாள் ..

அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா

அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா ?

அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா

அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா ?

சந்தோஷே மனகண்ணில் வந்து அவளை பார்த்து பாட்டினான் .. அன்பு மனம் கனிந்து விட்டதா ? என்றால் என் மனம் அவன்பால் ஈர்க்கபடுகிறதா ?

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா ?

அன்புமனம் கனிந்ததில் புரியாமல் போகுமா ?

புரிந்துதான் போனது அவளுக்கு .. இதுவரை யாரிடம் சாயாத தன்மானம் அவன் வசம் சாய்வதை  புரிந்துதான் கொண்டாள்  அவள் .. சரியாய் பன்னிரண்டு மணியானது .. இன்னமும் தூக்கம் வராமல் அமர்ந்திருந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாய்  சந்தோஷிடம் இருந்து போன்.. காலையில் அவன் போனிலிருந்து தனக்கு " ஹாய் " என்று மெசேஜ் அனுப்பி அவனது நம்பரை பதிவு செய்துகொண்டாள்  அவள் . (ஹாய்  தானா ? நாங்க கூட என்னென்னமோ எதிர்பார்த்தேனே அப்படின்னு பீல் பண்றவங்க கவலையை விடுங்க .. சந்தோஷ் இருக்க பயமேன் ?) சற்றுமுன்பு தான்

" மக்கு , அந்த சிவா முன்னாடி என் நம்பர் இதுதான்னு சொல்ல முடியாமல் தானே மெசேஜ் பண்ணினேன் .. என் நம்பருக்கு ஒரு கால் பண்ணனும்னு தோணிச்சா டா உனக்கு ? " என்று திட்டி கொண்டிருந்தாள் .. அதை அருகில்  இருந்து கேட்டவன் , போல இதோ சந்தோஷிடம் இருந்து போன் .. ஹெலோ என்று கூட சொல்லாமல்

" சந்தோஷ் " என்று ஆர்வமாய் அழைத்தாள்  சாஹித்யா ..

" ஹே .. சத்யூ, நான் கூப்பிடுவேன்னு எதிர்பார்த்தியா " என்றவனின் குரல் அவள் செவிகளுக்கு மிகவும் ரசியமாய் கேட்டது .. ஆண்மை ததும்பிட, கம்பீரமாய் இருப்பவன் தன் குரலை மிக மென்மையாய் மாற்றி அழைக்கவும், அவன் வெகு அருகில் இருந்து அழைப்பதுபோல அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.