(Reading time: 12 - 23 minutes)

"ராகுல்?"

"அப்பா?"

"யார்டா அந்த பொண்ணு?"

"தெரியலை...அவங்க எம்.டி.இல்லையாம்!அதான் அவங்க எடுத்தாங்க!"

"அதுக்கு ஏன்டா அப்படி ரியாக்ஷன் கொடுத்த?நான் என்னமோ நினைத்தேன்!"

"என்ன நினைத்த?"

"ஒருவேளை அந்தப் பொண்ணு இந்த வீட்டோட வருங்கால மருமகளோன்னு...!"

"நல்லா நினைத்த!!!ஏன்பா என் வாழ்க்கையோட விளையாடுவதிலே குறியா இருக்க?"

"நீ வேற!!!அம்மூ உனக்கு பொண்ணு பார்க்கவே ஆரம்பிச்சிட்டா!"என்றான் சிரித்தப்படி!!!

"என்னப்பா சொல்ற?"

"ஆமாடா!நிஜமா தான்!இந்த லவ் எல்லாம் எதாவது இருந்தா சொல்லிடு!இல்லை வாழ்க்கையே க்ளோஸ்!!!"

"அப்பா!எனக்கு கல்யாணம் வேணாம்பா!"

"பின்ன?பிரம்மச்சாரியா இருக்க போறீயா?"

"இருக்க கூடாதா?"

"உண்மையில உனக்கு தைரியம் இருந்தா உன் அம்மாக்கிட்ட சொல்லு இதெல்லாம்!"

"அன்னிக்கு அப்பாவும் இந்த காதலால் தானே அம்மாக்கு துரோகம் பண்ணார்?"-ஆதித்யா முகம் இறுகியது.கேள்வியாய் பார்த்தார்.

"ராகுல்?"

"என்னால அவர் பண்ண தப்பை நிச்சயம் மன்னிக்க முடியாது!"

"ராகுல் அது அவன் நினைவு தெரிந்து பண்ணலை!"

"என்ன பண்ணாலும் அது தப்பு தான்.அதுக்கு காரணம் அம்மா மேல இருந்த அன்பு தான்!சரியா?இதை எல்லாம் தெரிந்த பிறகு நான் எப்படி என் வாழ்க்கையில ஒரு பொண்ணுக்கு இடம் தருவேன்?"

"ராகுல் முடிந்ததை நினைத்து வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை!"

"இன்னும் என்னால அதை மறக்க முடியலை!நான் ஒருவகையில முறை தவறி பிறந்தவன் தான்!"

"ராகுல்!"-மதுபாலாவின் குரல் கேட்டது.

கோபமாக வந்தவள் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

"என்னடா பேசுற நீ?என்ன வார்த்தை இதெல்லாம்?உனக்கு இப்படி பேச எப்படி தைரியம் வந்தது?"

"அம்மா?"

"என்னை தானே அம்மான்னு கூப்பிடுற?அப்பறம் எப்படி நீ கலங்கமானவன் ஆவாய்?"

"................."

"நீ என்னோட மகன்டா!எப்படி உனக்கு இதுமாதிரி பேச தோணுச்சு?"-அங்கிருந்த மூவரின் நேத்திரங்களும் கண்ணீீர் சிந்தின.

"ம்மா...ஸாரிம்மா!"-மதுபாலா அவனை அணைத்துக் கொண்டாள்.

"பிறப்பால நீ எனக்கு சொந்தம் இல்லை தான்!ஆனா,வளர்ப்பால நீ என் பையன் ஞாபகம் வைத்துக் கொள்!புரியுதா?"அவன் தலையசைத்தான்.

"வலிக்குதா?"

"இல்லை..."

"சரி சாப்பிட வா!"

"நீ ஊட்டி விடுறீயா?"

"ம்..வா!"-நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யாவை பார்த்து,

"உங்களுக்கு என்ன?பத்திரிக்கை வைக்கணுமா?வாங்க..."-என்று தன் மகனை அழைத்து கொண்டு நடந்தாள்.

எல்லாம் நேரம் என்றப்படி நகர்ந்தான் ஆதித்யா.

"ரவி!"

"ம்..!"

"இந்த யுரேனியம் கடத்தல் விஷயம்..."-அவள் முடிக்கவும் இல்லை அதற்குள்,

"அதுல ஒரு ரிப்போட்டர் ஹெல்ப் பண்ணார் பார்!சரியான தைரியம் அவனுக்கு!எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா இது?காலையில கூட பார்த்தேன்.சிக்னல்ல ரெண்டு பேர் சண்டை போட்டுட்டு இருந்தாங்க!யார் சொல்லியும் கேட்கலை.நான் இறங்கி போக அதுக்குள்ள அவன் ரெண்டு பேர் கன்னத்துல ஒரே அறை வைச்சான்.வண்டி கிளம்பிடுச்சு!"-விசித்ரமாக பார்த்தாள் தீக்ஷா.

"நான் அரெஸ்ட் பண்ணவங்களை என்ன பண்ணீங்கன்னு கேட்க வந்தேன்.நீ ராகுல் புராணம் பாடுற?"

"ஏ...அவன் பேர் உனக்கு எப்படி தெரியும்?"

"பேப்பர்ல பார்த்தேன்!"

"ஓ..."

"காலையில இருந்து இவன் புராணம் தான் கேட்கிறேன்!கடவுளே...."

"நீ ஏன் இப்படி கோபப்படுற?"

"அது...காலையில ஸ்வேதா..."-என்று நடந்தவற்றை கூறினாள்.ரவி பயங்கரமாக சிரித்தார்.

"நீ கவலைப்படாதே!இவன் பொண்ணுங்க விஷயத்துல அப்படியே அவன் அப்பா மாதிரி!திரும்பி கூட பார்க்க மாட்டான்!"

"உனக்கு எப்படி தெரியும்?"

"அவன் அப்பா ஆதித்யா ஒரு சி.பி.ஐ.ஆபிஸர்.கேஸ் விஷயமா அடிக்கடி மீட் பண்ணுவோம்!அப்போ க்ளோஸ்!"

"ஓ..."

"ஆனா,இந்த முகத்தை வேற எங்கேயோ பார்த்து இருக்கேன்!"

"எங்கே?"

"அதான் ஞாபகம் வர மாட்டிங்குது!"

அச்சமயம்,

"என்ன இங்க டிஸ்கஷன்?"-என்று அங்கே வந்தான் சித்தார்த்

"அதுவா!உன் கல்யாண விஷயமா பேசிட்டு இருக்கோம்!"-தீக்ஷா கூற சிரித்தே விட்டான் சித்தார்த்.ஏதோ அழைப்பு வந்தது என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார் ரவிக்குமார்.

"ஏன்டா சிரிக்கிற?"

"கல்யாணம் விஷயம்னு சொன்னல்ல அதான் சிரிப்பு வந்துடுச்சு!"

"ஓ..சம்யுக்தா...!"

"ஏ...இப்போ எதுக்கு அவளை கூப்பிடுற?"

"சம்யுக்தா சித்துக்கு டீ வேணுமாம்!"-மீண்டும் குரல் கொடுத்தாள்.

"ஆ...எடுத்துட்டு வரேன்!"-பதில் குரல் வந்தது.

"நான் எப்போ டீ கேட்டேன்?"

"அதானே எப்போ கேட்டே?"-சிறிது நேரத்தில் டீ வருவதை பார்த்து எழுந்து சோபாவின் பின் ஒளிந்தாள் தீக்ஷா!

"என்னடி பண்ற?"

"உன் வேலையை பாருடா!"-அமைதியானான்.

"மாமா!"-இனிமையான இசை போல ஒலித்தது அவள் குரல்.

திரும்பினான்.

"டீ கேட்டீங்களாம்!"-தயக்கத்தோடு கூறினாள்.

"வைத்துவிட்டு போ!"-வைத்துவிட்டு நகர்ந்தாள்.

சோபாவின் பின்னால் இருந்து தீக்ஷா எட்டிப் பார்த்தாள்.

"ஏன்டா!அவக்கிட்ட மட்டும் டெரர்ரா இருக்க!"

"................."

"உனக்கும் அவளை பிடிக்கும்ல!"-நீண்ட நேரம் மௌனம் காத்தப்பின்,

"பிடிக்கும்!"என்றான்.

"அப்பறம் ஏன்?"

"அவ அப்பா அம்மா இல்லாத பொண்ணு!அவ வாழ்க்கையில நான் அவ இழந்த எல்லாத்தையும் தரணும்னு தோணுது!ஆனா,அதில் அவளுக்கு விருப்பம் இருக்குமா?அவ கட்டுப்பாடோடு வளர்ந்தவள்,அவ என் மனசை புரிஞ்சிப்பாளா?"

"சித்து...எப்படி வளர்ந்தா என்ன?எல்லாருக்கும் மனசு கடவுள் தந்திருக்கிறார்.நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க தப்பு பண்ணா நாமும் தப்பு பண்ணுவோம்னு இல்லை!அதே மாதிரி தான்,இந்த குடும்பத்துல யாரும் காதலிக்கலைன்னா முதல் காதல் உன்னுடையதாக இருக்கட்டும்!"-பிரமாதம் போங்க இது ராகுலின் கூற்றுக்கு கூறிய மறுமொழி போல தெரிகிறதே...!!!!!

நம் மனம் தேடும் பதில்கள் சிலவற்றை வாழ்வின் முக்கிய பங்கை வகிப்பவர் மட்டுமே தர இயலும் போல!!!!!!

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.