(Reading time: 8 - 15 minutes)

ட் ஷுட் பி ஓகே…..

ஸ்டேடியத்தைவிட்டு அவன் வெளியே வரவும் “பாஸ்…இங்க” என்றபடி ஒரு ஆண் குரல் அழைக்க

அவன் தந்த கறுப்பு நிற குர்தவை வாங்கி அவசரமாக அணிகிறான். அதன்  இடது பக்க பாக்கெட்டிற்குள் கைவிட்டுப் பார்க்கிறான். கையில் தட்டுகிறது அந்த திடப்பொருள்.

“ஃபுல்லி லோடட் பாஸ்…”

“ ம்..ஓகே….எல்லாம் கரெக்ட்டாதான போய்ட்டு இருக்குது….?”

“எஸ் பாஸ்…இப்ப இருக்ற ட்ராஃபிக்ல இன்னும் 4 மினிட்ஸ்ல கார் இங்க ரீச்சாகும்…அங்க பாருங்க கார் தெரியுது…”

அரண் கண்ணில் அந்த கார் தெரிகிறது.

ஏன்டி உயிர எடுக்ற….? ஒழுங்கா கல்யாணம்  செய்துருக்கலாம் ஹேட் அரணாம்ஹேட்….”

 “ பாஸ்…சுத்தி இருக்க கார் பைக்  எல்லாம் நம்ம பீபுள் தான்…சொன்ன மாதிரி கார சரவ்ண்ட் செய்தே வாராங்க….சோ….டோண்ட் வொர்ரி….”

“பை…” அரண் அந்த வெள்ளை ஆடியைப் பார்த்து இருந்த ட்ராஃபிக் ஜன நெரிசலுக்குள் ஓடத் தொடங்கினான்.

இவன் கரை நெருங்கவும்….இவனது கூட்டத்தினர் அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்த நடுவில் வந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆடியும் நகர வழியின்றி அந்த செயற்கை ட்ராஃபிக் ஜாமினால் நின்றது.

தன் பக்க கண்ணாடியை இறக்கி வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்  டிரைவர் .”என்னாச்சு.. எதுக்கு ட்ராஃபிக்…?”

அவர் நெற்றியின் விளிம்பில் அமர்கிறது அரண் தன் பாக்கெட்டிலிருந்து இப்பொழுதுதான் எடுத்திருந்த திடப் பொருள். கறுப்பு துணியால் சுத்தப்பட்டிருந்தாலும் அதன் துளை மூக்கு டிரைவரின் கண்பார்வையில் பட்ட பிறகே அவர் நெற்றியை ஸ்பரிசிக்கிறது. பிஸ்டல்.

அலறி அடித்து கதவை திறந்து வெளியே இறங்கினார் டிரைவர்.

பின்னிருந்த பயணிகள் மூவரில் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னாக அவள். சுகவிதா.அவள் நெற்றியில் வைக்கிறான் தன் பிஸ்டலை.

“நீங்க போகலாம்…” சுகவிதா அருகில் இருந்த பெண்களைப் பார்த்து இவன் சொல்ல பதறி அடித்து இறங்கினர் அந்த இருவரும். “நீயா….? என்னை விடுடா…” அலறினாள் சுகவிதா.

நொடியில் அரண் சுகவிதா அருகில். ஓட்டுனர் இருக்கையில் இவன் ஆள். பறக்கிறது ஆடி. அதன் பின்……அதன் பின் என்ன? ஞாபகம் வர மறுக்கிறது சுகவிதாவிற்கு…..

ஃப்ரெண்ட்ஸ்இதைப்படிச்சிட்டுஎன்னையோஅரணையோஅவசரப்பட்டுதிட்டாதீங்க….ப்ளீஸ்…..அப்புறம்முக்கியமானவிஷயம்….எனக்குகிரிகெட்தெரியாது…. என்னைதந்தேன்வேரோடுமிர்னாகிரிகெட்டராஇல்லாமஹைஜம்ப்போகஒரேகாரணம்எனக்குகிரிகெட்தெரியாதுங்கிறதுதான். இருந்தாலும்நம்மதேன்மொழிமேம்கிரிகெட்ப்ளேயர்வைத்துயாராவதுகதைஎழுதுங்களேன்எனகேட்டதும்  உள்ளுக்குள்லிருந்த  ஆசைஓவரானதின்  விளைவுஅரணின்கிரிகெட்விளையாட்டுகள்நான்கிரிகெட்சீன்ஸ்எதாவதுதப்பாகஎழுதிஇருந்தால்மன்னியுங்கள், அதோடுஅதைஅன்புடன்சுட்டிகாட்டுங்கள். திருத்திக்கொள்ளஎனக்குஉதவியாகஇருக்கும்.  On behalf of all Chillzee readers and authors I dedicate this series to our Thenmozhi mam.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.