அரணின் இறுகிய அணைப்புக்குள் அவள். நடுங்கிய அவள் உடல் இரும்பான அவன் ஸ்பரிசத்திற்குள்….
க்ரீஈஈஈஈச்…..
“லூசா நீ ….அறிவில்ல….இப்டித்தான் பின்னால பார்துகிட்டே...” யாரோ கத்த
வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் என்று வீலிடுகிறாள்…தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் இருந்த குழந்தை….
“சுத்தம்….இதுல கைல குழந்தை வேற….….”
அரண் கத்திக் கொண்டிருந்த அந்த நபரை திரும்பிப் பார்த்தான்.
‘அரண் சார்….நீங்களா சார்….ஐயோ நான் உங்க க்ரேட் ஃபான் சார்….” அவசரமாக அவர் காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்குவது தெரிந்தது. அரணைவிட்டு விலகி சுற்றிலுமாக பார்த்தாள் சுகவிதா. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் ஆராயும் பார்வை. அடையாளம் புரிந்து அவர்கள் வந்தால்…?
தங்கள் காரை நோக்கி திரும்பி நடந்தாள். அவள் ஏறியதும் அவள் புறக் கதவை அடைத்து விட்டு, அரணும் வேகமாக வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். கார் கிளம்பி சாலையின் போக்குவரத்தில் கலந்தது.
“அரண் சார்….”
இவள் அழைப்பில் ஒருமுறை குலுங்கி சீரானது இவர்களது கார்.
“தயவு செய்து அப்டி கூப்டாத சுகவிமா…”
“அப்ப ஹயாவோட அப்பான்னு கூப்டுறேன்…”
“அரண்ணு கூப்டேன் ப்ளீஸ்…”
“சரி…எதோ ஒன்னு…..நீங்க என்ன தான் என்னை இழுத்து பிடிச்சு கொண்டு போனாலும்…..நான் திரும்பி எங்கப்பாட்டதான் போவேன்….இழுத்து கொண்டு போய் அடைக்கிறதுக்கு நான் ஒன்னும் ஆடு மாடு கிடையாது…ஐ’ல் கால் த போலீஸ்….”
“ஓகே….உனக்கு அப்பா கூட தான் இருக்கனும்னு தோணிச்சுன்னா இட்ஸ் ஓகே…”காரை யூ டர்ன் செய்தான்…..
”பட் நானும் கூட அங்க தான் இருப்பேன்…..என் சுகவியோட அப்பாட்ட நான் சண்டை போட கூடாதேன்னு தான் உன்னை இப்டி கூட்டிட்டு வந்தேன்….”
ஹான்..? ”அங்க எதுக்கு நீங்க..?”
“நீ எங்க இருக்கியோ அங்க தான் நானும் இருப்பேன்….யு ஆர் மை வைஃப்…..ஹயா நம்ம குழந்தை…”
“…………”
“சொல்லு இப்போ எங்க போகனும்…..? நம்ம வீட்டுக்கா? உங்க அப்பா வீட்டுக்கா? சிக்னல்ல நிக்றோம்…சீக்ரம் சொல்லு டர்ன் செய்ய வசதியா இருக்கும்…”
விக்கித்துப் போய் விழித்தாள் சுகவிதா. இவன் சொல்வது போல் அப்பா வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றிற்கும் சண்டையிட்டான் என்றால்?
அல்லது குழந்தை என்னுடையது….மன நிலை சரி இல்லாத மனைவியால் பார்த்துக் கொள்ள முடியாது என வழக்கு தொடர்ந்தானானால்?
பதறிப் போனாள்.
யோசித்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தவளுக்கு எதிரில் இருந்த விளம்பர ஹோர்டிங் கண்ணில் பட்டது.
ஒரு கையில் கரண்டியுடன் நின்ற புடவை கட்டிய இல்லத்தரசி மறுகையால் டிப் டாப் உடை அணிந்து டை கட்டி இருந்த கணவனின் டையை பிடித்து இழுப்பது போலவும் அவன் இவள் பின் வருவது போலவும்…
மசலா பொடிக்கான விளம்பரம்….அந்த பொடி பயன்படுத்தி செய்யும் சமையல் மூலம் வீட்டிலிருந்தே கணவனை ஆளலாம் என்றது அவ்விளம்பரம்.
முடிவு செய்துவிட்டாள் சுகவிதா என்ன செய்ய வேண்டும் என. வெளியே போய் ஒதுங்கி இருக்கிறேன் என்று சொன்னாலும் விட மாட்டேன் என மிரட்டும் இவ்வில்லனை வீட்டுக்குள்லிருந்து வெளுத்து வாங்க வேண்டும்…
இரு வாரேன்….உன்னை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுகிடுறேன்…
“உங்க வீட்டுக்கு போங்க…”
“நம்ம வீட்டுக்கு..” சிக்னலில் யூ டர்ன் எடுத்து திரும்பவுமாக அவன் வீட்டை நோக்கி பயணம்….
வெறித்துப் பார்த்தாள் சுகவிதா.
“ரொம்ப குழப்பிக்காத சுகவிமா….மெல்ல மெல்ல அதா எல்லாமே தெரிஞ்சுடுமாம்…கொஞ்சம் பொறுமையா இருடா….நம்ம வீட்டுக்கு வரவும் பாரேன்…உனக்கு இன்னும் நிறைய ஞாபகம் வரும்…”
ம்…இருக்கலாம்…அப்படி ஞாபகம் வரும் விஷயம் இன்னும் மனசுக்கு எவ்ளவு வேதனையா இருக்கப்போகுதோ….இவள் நினத்துக் கொண்டு இருக்கும்போதே இவர்களது கார் நின்றது.
இவர்கள் ஹம்மர் அருகில் வந்து நின்றது அந்த கறுப்பு நிற கார்.
அரண் அவசரமாக இவளுக்கு அருகில் இடம் மாற இவர்களது காரின் ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்தான் அந்த அவன். ப்ரபாத்.
சற்றுமுன் அவளுக்கு நினைவுக்கு வந்த அந்த கடத்தல் நிகழ்வில் இப்படி அரண் இவள் அருகில் வந்து அமர்ந்தது ஞாபகம் வர பக்கென்றது மனம். ஆனால் அரணின் கவனமோ அவள் மடியில் இருந்த மகள் புறம்
எடுத்த எடுப்பில் சீறியது இவர்கள் வாகனம்.
இவள் மடியில் இருந்த குழந்தையை தன் கைக்கு மாற்றிக் கொண்டான் அவன்.கொடுக்க மனமே இல்லாமல் குழந்தையைக் கொடுத்தாள் “ புஜ்ஜுமா…6 மந்த்ஸ்ல எவ்ளவு பெரியாளா ஆகிடீங்க நீங்க…” அரணின் கொஞ்சலுக்கு ஆ என வாய் திறந்து சிரித்தாள் ஹயா.
எப்படி உணர வேண்டும் என புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகவிதா.
“ஹாய் அரை டிக்கட் இப்போ எப்டி இருக்குது உனக்கு…?” இவளைப் பார்த்துக் கேட்டான் ப்ரபாத். ஓட்டுனர் இருக்கையில் இருந்தவன்.
“இப்ப வரைக்கும் நல்லாதான் இருந்தேன் பால் பாக்கெட்….”
ஃப்லோவில் வந்ததை சொல்லிவிட்டு விழித்தது இவள் என்றால் கார் ஒரு முறை கன்னா பின்னாவென்றாகி சீரானது கேட்டிருந்தவன் கையில்.
டேய்ய்ய்ய்ய்ய்ய்…..அதட்டினான் அரண்.
“ஏய் அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துட்டா….?”
“இல்ல இது எப்டியோ வாய்ல வந்துட்டு “
பதில் வந்தது அவளிடமிருந்து.
மெல்ல அவள் கையை எடுத்து தனக்குள் வைத்தான் அரண்.
சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்…”
வெடுக்கென கையை உருவிக் கொண்டாள் சுகவிதா.
அதை கவனித்திருந்த மூன்றாமவன் சொன்னான் “மாப்ள…எனக்கென்னமோ நீ பாதி கிணத்துல மாட்டி இருக்கியோன்னு தோணுது….’
“ம்…முன்னால தாண்டுன கிணறுதான, திரும்பவும் தாண்டினா போச்சு…” சின்னதாய் சிரித்துக் கொண்டான் அரண்.
எரிச்சல் ஏறியது இவளுள்.
“உன் பொண்னு தேடுற கதை எப்படிடா இருக்குது..?” அரண் கேட்டான்.
“ம்…நம்மளல்லாம் கிணறு தேடி வந்து தாண்டுனாத்தான் உண்டு போல….ஒரு ப்ரபோசலும் மனசுக்கு பச்சுனு பதிய மாட்டேங்குது…”
இப்போது ஒரு பெரிய கோட்டைச்சுவர் போன்ற சுவரின் முன் இவர்கள் கார் செல்ல….அதுவாக திறந்தது அங்கிருந்த ராட்ஷச கேட்…….உள்ளே நுழையவும் கேட் திரும்பவுமாய் மூடிக் கொள்ள தூரத்தில் தெரிந்த அந்த மாடர்ன் மாளிகையை நோக்கி பயணித்தது வாகனம்.
சிறைக்குள் சிக்குவதாய் இவளுக்கு உணர்வு.
தொடரும்
{kunena_discuss:879}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.