(Reading time: 7 - 14 minutes)

08. வானவில் - அமுதவள்ளி

ம்ம  ஹீரோஸ் நால்வரும் சனிக்கிழமை காலை ஹாசினி வீட்டிற்கு சென்றனர்.

"யார் நீங்க? யாரை பார்க்கணும்?" என்றது ஒரு வாண்டு.

"நான் அத்வைத். ஹாசினியை பார்க்கணும்."

Vanavil

"உங்களுக்கு எங்க சித்தியை எப்படி தெரியும்?" என்றது அவனுடன் இருந்த மற்றொரு வாண்டு.

"நாங்க ஒரே காலேஜ்" என்றான் நவீன்.

"இப்போ நாங்க உங்க சித்தியை பார்கலாமா?" என்றான் சர்வேஷ்.

"ஹ்ம்ம். இங்க உட்காருங்க. நாங்க சித்தியை கூப்பிடறோம்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றனர்.

"சித்தி உன்னை பார்க்க நாலு பேர் வந்திருக்காங்க"

"வந்துட்டேன்" என்றாள் ஹாசி.

"ஹாய் உள்ள வாங்க"

"நாங்க உள்ளே வரலாமா மேடம்" என்று குழந்தையை கேட்டான் அத்வைத்.

"ஹ்ம்ம். உங்களை எப்படி நாங்க கூப்பிடறது?" என்றாள் குழந்தை.

"அண்ணா சொல்லு" என்றான் சர்வேஷ்.

அவனை முறைத்துவிட்டு "அங்கள் சொல்லு குட்டி" என்றாள் ஹாசி.

"உள்ள வாங்க. ஏன் இங்கயே பேசிட்டு இருக்கீங்க? என்ன ஹாசி அவங்களை உள்ளே கூப்பிடலையா?" என்றாள் ஹாசி சித்தி அமலா.

"ஐயோ. இவளோட நானும் கதை பேச ஆரம்பிச்சுட்டேன் சித்தி"

"நீங்க உட்காருங்க. நான் குடிக்க எடுத்துட்டு வருகிறேன்" என்றார் அமலா.

"ஹாய் குட்டி. உங்க பேர் என்ன?" என்றான் ஹர்ஷா.

"ஐ அம் மிதுலா."

"ஐ அம் மிதுன் "

"இவங்க என் அக்கா குழந்தைங்க. ட்வின்ஸ்"

"உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா?" என்றான் நவீன்

"ஹ்ம்ம்ம்ம்ம்" என்றனர் கோரசாக.

அவர்களிடம் சர்வேஷ் வாங்கிவந்ததை கொடுத்தான்.

அனைவரும் பேசி கொண்டிருந்தனர்.

"சித்தி உங்களுக்கு கால்" என்று மொபைலை கொடுத்தான் மிதுன்.

"சொல்லுங்கடி" என்றாள் ஹாசி.

"அடிப்பாவி. இப்படி அலுதுக்கற" என்றாள் சாது.

"சே சே. இல்லடி" என்றாள் ஹாசி.

"சரியில்லையே" என்றாள் அஞ். அனைவரும் கான்பெரன்ஸ் காலில் இருந்தனர்.

"என்னடி. உன் ஆள் அங்க இருக்காறா?" என்றாள் நிஷ்.

"ஹே. எப்படி கரெக்டா சொன்ன" என்றாள் ஹாசி.

அவள் குரல் கேட்டு நால்வரும் திரும்பினர்.

"இப்ப மட்டும் எப்படி குரல் வெளியில் வருது பார்" என்றாள் சாது.

"ஏண்டி உனக்கு பொறாமை" என்றாள் அஞ்.

"நீயும் இங்கே வர வேண்டியது தானே" என்றாள் ஹாசி.

"அது முடியாதே" என்றாள் சாது ஏக்கமாக.

"சித்தி கொடு. நான் ஆண்டி கூட பேசணும்" என்றாள் மிதுலா.

"நிஷ் உன் விசிறி வந்துட்டாள்" என்றாள் ஹாசி.

அவள் பேச வசதியாக ஸ்பீக்கரில் போட்டாள்.

"நிஷ் ஆண்டி என்ன பண்றீங்க"

"பாட்டிகூட பேசிட்டிருக்கேன் குட்டிமா" என்றாள் நிஷ்.

"அஞ், சாது ஆண்டி நீங்க"

"டிவி பார்க்கறோம்" என்றாள் அஞ்.

"நீங்க என்ன செய்யறீங்க" என்றாள் சாது.

"நாங்க புது அங்கள் கூட விளையாடறோம்." என்றாள் மிதுலா.

"உங்களக்கு அவங்களை தெரியுமா" என்றான் மிதுன்.

"தெரியும் குட்டி" என்றாள் சாது.

(சாது வாய்ஸ் கேட்டதும் சர்வேஷ் நிலைமையை உங்களுக்கு சொல்லனுமா)

"என்ன ஸ்பெஷல் இன்னிக்கு" என்றாள் அஞ்.

"நீங்களே சொல்லுங்க"  என்றான் மிதுன்.

"ம். கேசரி" என்றாள் அஞ்.

"தப்பு" என்றாள் மிதுலா.

"அல்வா" என்றாள் சாது.

"இல்லையே" என்றான் மிதுன்.

"இன்னும் ஒரே சான்ஸ்தான். அதுவும் நிஷ் ஆண்டிக்கு தான்" என்றாள் மிதுலா.

"கண்டிப்பா பாயசம் தான்" என்றாள் நிஷ்.

"ஹே கரெக்ட்"  என்றான் மிதுன்.

"எப்படி கரெக்டா சொன்னீங்க" என்றாள் மிதுலா.

"பாயசம் பாட்டி செய்தால்தான் எல்லோருக்கும் கிடைக்கும். இல்லைனால் உங்க சித்தியே காலி பண்ணிடுவாள்" என்றாள் நிஷ்.

அவள் பதிலில் எல்லோரும் சிரிக்க

"நிஷ் உன்னை. நான் எப்போ உங்களுக்கு இல்லாமல் காலி பண்ணேன். " என்றாள் ஹாசி.

"அடிப்பாவி. அதுக்குள்ள மறந்துட்டியே" என்றாள் அஞ்.

அஞ் தொடர்வதற்குள் அவள் அம்மா அவளை அழைத்தார்.

"அஞ்சு கமல் தம்பி வந்திருக்கார்" என்றார் ஜானகி.

"இந்த கொசு தொல்ல தாங்க முடியலை" என்று அஞ்சனா முனங்குவது கேட்டது.

நிஷா யாரிடமோ பேசுவதும் கேட்டது. "நிஷ்" என்று அழுத்தமாக அழைத்தாள் ஹாசி.

"என்னடி என்ன ஆ" என்று சொல்லும்போதே அஞ்சனா வாய்ஸ் கேட்டது.

"ஹாய்" என்றாள் அஞ்.

"ஹாய் அஞ்சு. ஹொவ் ஆர் யு" என்றான் கமல்.

"பைன்"

"உன்னை பார்க்கதான் கோயம்பத்தூர் வந்தேன். ஹாஸ்பிடலில் மீட் பண்ணது. ஹாஸ்டல் வரலாமென்றால் உன் பிரிண்ட்ஸ் கூட இருக்காங்க"

"என் பிரிண்ட்ஸ் என் கூட தானே இருபாங்க"

"ஹ்ம்ம். ஆமாம். பட் நான் வரும்போது நம்ம பிரைவசிக்கு இடைஞ்சலாய் இருக்கே"

ஹாசி முகம் கோபத்தால் சிவந்தது. (நிஷ்,சாது ரீயாக்ஷன் இதுவே)

"நமக்கு எதுக்கு  பிரைவசி கமல்"

ஒரு நிமிட தாமததின் பின் "ஹி ஹி. அதுவும் கரெக்ட் தான்"

தொடர்ந்து  "நாளைக்கு இவனிங் நான் சென்னை கிளம்பறேன். என்கூட நீயும் வா. நான் ட்ரோப் பண்றேன்"

"இல்லை கமல். நிஷா என்கூட வருவாள். அவள் தாத்தாவிற்கு பிடிக்காது"

"ஓகே" அவன் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

"ஓகே கமல். என் பிரிண்ட்ஸ் வெயிட் பண்றாங்க."

"பை அஞ்சு"

"ஊப்ஸ். தப்பிச்சேன்" என்றாள் அஞ்.

"இவனோட பெரிய தொல்லையா போச்சு" என்றாள் சாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.