(Reading time: 16 - 32 minutes)

04. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

புனிதாவின் பார்வையை சந்திக்கும் முன்பே நிலை தடுமாறிப் போய் இருந்த ரேயாவுக்கு அவளது குறுகுறுப் பார்வை இன்னுமாய் பக்கென்றது. நிச்சயமாக ஆதிக் பேசிய வார்த்தைகள் புனிதாவின் காதில் விழுந்திருக்காது…மயிலிறகு உரசும் சத்தம் பிறர் காதுக்கு கேட்கவா செய்யும்…?

ஆனால் அவன் உடல் மொழியும், சத்தமற்ற சம்பாஷணையும் இவளின் ஜிவ்வென்ற சிறையற்ற வெட்கமும்…. அது பார்த்திருந்த புனிதாவுக்கு புரியாதா?

பார்த்தது வேறு ஆசிரியையாய் இருந்திருந்தால் செத்து சுண்ணாம்பாகி இருப்பாள் ரேயா. ஆனால் இது அவனது…..அட புனிதா இன்னும் அவனுக்கு யார் என்று கூட இவளுக்கு தெரியாது….ஆனால் அவனின் உறவு மற்றும் நிச்சயமாய் நட்பும் கூட….இல்லையெனில் அவன் புனிதா முன்பு இப்படி நடந்து கொள்ளமாட்டான் தானே….?

Eppadi solven vennilave

இதற்குள் சிவந்த சிலையாகி இருந்த இவள் முன்பு வந்திருந்தாள் புனிதா. “அவன் உனக்கு யார்?” புனிதாவின் இந்த கேள்வியை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை ரேயா.

என்னதான் அவனின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் மயிலிறகு தீண்டலும், சில்லென்ற சாரலும், பவித்ர அக்னியும், பால் நிலா காலமும் அவள் உணர்வில் அரங்கேறினாலும் இப்படி ஒரு வினா அவள் நினைவில் அதுவரை தோன்றவே இல்லை….ஆனால் புனிதாவின் இந்த கேள்வி இவள் செவியில் விழுந்து உரை கண்ட நொடி துள்ளி வருகிறது பதில் உயிரிடமிருந்து “அவன் என்னவன்”

இந்த பதிலில் மிரண்டு போனாள் ரேயா.

காதல் என்பது ஒரு பெருங்குற்றம், காதல் ஒரு பாவச்செயல், காதல் கடும் தண்டணைக்குறியது என்று எப்பொழுதும் சொல்லி வளர்க்கப்பட்டவள் அதுவும் 17 வயதில் காதல் வரவே வராது என நம்பி இருப்பவள் மிரண்டு போகாமல் என்ன செய்வாள்?

அவசர அவசரமாக தன் உள்மன உணர்வை ஆராய்ந்தாள். அவளுக்கு அவனிடமிருந்து என்ன வேண்டும்? இவள் எதிர்பார்ப்பில் என்ன பாவமும் குற்றமும் இருக்கிறது?

அவளுக்கு அவனின் அருகாமை பிடித்திருக்கிறது. மற்றபடி எதுவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை….இதில் எது பாவம்?

ஆனால் அப்பா இதை புரிந்துகொள்ள வேண்டுமே….

இல்ல கண்டிப்பா ஒத்துப்பாங்க…அப்பாவுக்கு ஆதிக்கை பிடிச்சிருக்கு….மத்தவங்கட்ட சிடுசிடுக்ற மாதிரி மத்தவங்களை தூர நிறுத்ற மாதிரி இவனை விலக்கலை….

நொடியில் நூறையும் ஆராய்ந்து அனைத்திலும் ஆம் என பதில் பெற்று ஆனந்தப் படுகிறது பெண் மனது.

எதிரிலிருந்த புனிதா இதற்குள் அருகில் வந்து தன் கையை பற்றுவதை உணர்ந்து நடப்பிற்கு வந்ததோடு அசடும் வழிந்தாள்.

“அவன் உனக்கு யார் அதானே என்ட்ட கேட்க நினைச்சே….?” புனிதா கேட்க, இப்பொழுதுதான் புனிதா கேட்க வந்த விஷயமே புரிகின்றது… என்ன மனது கண்டதையும் நினைத்து …..தன்னைத் தானே நொந்து கொண்டவள்

“நீங்களே சொல்லுங்க மேம்..” என புனிதாவைப் பார்த்தாள்.

“ஆதிக் என் பெரியப்பா மகன்….அவன் யு எஸ்ல மாஸ்டர்ஸ் செய்துட்டு இருக்கான்…அவனோட ரிசர்ச் க்கு எதோ ஃஸ்பெசிமன் இங்க குற்றாலம் மலைல இருந்து கலெக்ட் செய்றதுக்காக வந்துருக்கான்…எங்கம்மாவுக்கு குற்றாலத்தில் மூலிகை ட்ரீட்மென்ட் எடுக்கனும்னு ரொம்ப நாளா ஆசை…சோ அப்டியே என் பி எட் ட்ரெய்னிங்கை இங்க முடிச்சிடலாம்னு நானும் சேர்ந்து வந்துட்டேன்….ஆதிக்குக்கு எந்த ஊரையும், பீப்புள், லைஃப்ஸ்டைல் எல்லாத்தையும்  எக்ஸ்ப்ளோர் செய்றது ரொம்ப இஷ்டம்…அதுக்கு பெஸ்ட் வே பப்ளிக் ட்ரன்ஸ்போர்ட்டஷன்னு சொல்லுவான்…அப்படி சும்மா சுத்த வந்தவன் முதல் நாள் அந்த குமார்ட்ட நீ முழிக்கிறதை பார்த்திருக்கான்….நீயே அதை ஹேண்டில் செய்துப்பன்னு அப்ப அவன் அதை சீரியஸா யோசிக்கலை…..

பட் அன்னைக்கு நைட் இவன் வெளிய போயிருக்கப்ப அந்த குமார்ட்ட யாரோ பேசுறது இவன் காதில் விழுந்துது போல...வசதியான வீட்டு பொண்னு……அவ உன்னை கண்டுகிடாட்டால் கூட பிரவாயில்லை….உன் பேர் கூட சேர்ந்து அவ பேரும் பரவிட்டுனா போதும்…..இந்த ஊர்லதான இருக்காங்க….நம்மள மீறி வேற எங்க கல்யாணம் செய்துட முடியும்…முடிய கட்டி இழுப்போம் வந்தா மலை…போனா முடி தான…..பார்த்துகிடலாம்ங்கிற மாதிரி எதோ உளறிருப்பான் போல…..

இது பெருசா ப்ரச்சனையாகிட கூடாதுன்னு தான் மறுநாள் அவன் ஹெல்ப்க்கு வந்தது….பை த வே எல்லா கேள்விக்கும் பதில் கிடச்சாச்சா? இல்ல இன்னும் எதாவது….?”

“அது…அவங்க பஸ்ல வந்தது ஓகே…எதோ ரீசன் சொல்றீங்க…..பட் நீங்க ஏன் மேம்  பஸ்ல வரனும்னு சொல்லிட்டு இருக்கீங்க…?”

“ஆதிக் டே டைம்ல மலைக்கு போய்டுவான்….இருக்கிற ட்ரைவர் புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கார் அவரும் ட்ரீட்மென்டுக்கு அம்மாவை கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வரனும்….என் டைமிங் செட் ஆகலை….லோக்கல்ல வேற ட்ரைவர் ஹயர் செய்யனும்…..நம்புற மாதிரி ஆள் அமையனும்…அதுவரை இது பெட்டரா பட்டுது…...”

“அப்டியாமா? ஒன்னும் ப்ரச்சனை இல்லை, சட்டர்டேஸ் எங்க கார்ல நீங்க ரெண்டு பேரும் வந்துடுங்க…எங்க ட்ரைவர் வருவார்….ரொம்ப வருஷம் நம்மட்ட வேலை செய்றவர்மா…..நம்பலாம்….” சொன்னபடி வந்து நின்றார் ராஜ்குமார். ரேயாவின் அப்பா.

புனிதா ஒரு கணம் ஆதிக்கை பார்த்துவிட்டு அந்த ஏற்பாட்டை ஆமோதித்தாள்.

“ஸ்கூல்ல பேசிடேன் அங்கிள், சட்டர் டேஸ் ஸ்பெஷல் க்ளாஸ் முடிஞ்சு போறவங்களுக்காக ஒரு கேப் அரெஞ்ச் செய்ய சொல்லிருக்கேன்…பஸ் ட்ரிப் அளவுக்கு அந்த நேரத்தில் ஸ்டூடண்ட்ஸ் இல்லைனு இதுவரை பஸ் ட்ரிப் இல்லை போல…இந்த சட்டர்டே மட்டும் புனிதா உங்க கார்ல வரட்டும்….நெக்ஸ்‌ட் வீக்ல இருந்து கேப் வந்துடும்….” ஆதிக் விளக்க “குட் “ என அவன் தோளைத் தட்டினார் ராஜ்குமார். தன்னைப் அப்பா அங்கீகரிப்பது போல் உற்சவ நடனம்  மகள் உள்ளத்துள்.

“புனிதா யாரு…நம்ம வீட்டு பொண்னு…இங்க இருக்கிற வரைக்கும் எங்க கார்லயே வரட்டும்…இவளும் தனியா தான இருக்கா…” ரேயாவை பார்வையால் சுட்டி அப்பா பேசிக் கொண்டு போனார்.

ஆங்க்….இது என் அப்பாதானா….ஆள் மாறாட்டம் எதுவும் ஆகிப் போச்சா என்றிருந்தது ரேயாவிற்கு.

ஆனால் மறுகணமே அவளுக்கு ஒன்று புரிந்தது. இவள் துணைக்கு யாருமின்றி தவிப்பதை அப்பா புரிந்து வைத்திருக்கிறார்…..அதனால் தான் புனிதா இருக்கும் வரை இவளுடன் இருக்கட்டுமே என நினைக்கிறார் போலும்…

இதுவரை அப்பா என்னை நம்பவில்லை என்ற டெம்ப்ளேட்டை பயன்படுத்தியே அவரது செயல்களை காரணபடுத்தி மனம் வலித்தவளுக்கு இந்த கோணம் சுகமாய் பட்டது.

அதே நேரம் இந்த ஏற்பாட்டிற்கு ஆதிக் சம்மதிக்க வேண்டுமே என ஞாபகம் வர கெஞ்சும்  விழிகளுடன் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

இவள் கண்களை ஒரு நொடி பார்த்தவன் திரும்பி புனிதாவைப் பார்த்தான். புனிதாவிற்கு இதில் விருப்பம் இருக்குமா…? ரேயா அவசரமாக அவளைப் பார்த்தாள். புனிதாவோ ஆதிக்கின் பார்வையை சற்று கிண்டலாக பார்த்துக் கொண்டே “ சரி அங்கிள்….நான் சட்டர்டேஸ் உங்க கார்லயே வந்துகிறேன்…எனக்கும் ரேயா கூட வர்றது நல்லா இருக்கும் “ என்றாள்.

புனிதாவிற்கும் ஆதிக்கிற்கும் நடந்த முழு பார்வை பரிமாறல்களின் பாஷை ரேயாவுக்கு புரிந்தும் புரியாமலுமாய்……

அன்று இரவு தன் வீட்டில் படுத்திருந்தவளுக்கு தூக்கம் வருமென்று தோன்றவில்லை.

மனமெங்கும் அவன் அவன் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.