(Reading time: 16 - 32 minutes)

ல்ல…..வேண்டாம்….சாரி…..என்னால…..என்னால தாங்க முடியலை…”

“ஏன்மா….என்ன விஷயம்…எதோ ப்ரச்சனைனு புரியுது….என்ட்ட சொல்லேன்…என்னால முடிஞ்ச ஹெல்ப் செய்வேன்மா…ப்ளீஸ்”

மலர்விழிக்கோ இவனிடம் இதை எப்படிச் சொல்ல, சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வான் ஒன்றும் புரியவில்லை.

இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டி விட்டு மெத்தையில் சுருண்டாள்.

“உனக்கு சொல்ல வேண்டாம்னு தோணிச்சுன்னா சொல்ல வேண்டாம் மய்யூமா….ஆனா சாப்டாம மட்டும் தூங்க விடமாட்டேன்…”

அவனது மய்யூமா வில் தீ தொடுகை கண்டவள் துடித்துப் போனாள்.

மலர்விழிக்கு தெளிவாக ஒன்று புரிந்தது என்ன ஆனாலும் இவளால் வேறு ஒருவனை கணவனாக காணமுடியாது.

அதோடு தேவையில்லாமல் இந்த வசீகரன் இதயத்தில் ஆசை வளர்ப்பதும் பாவம். இவள் கதைக்கு முடிவென்ன? தெரியவில்லை. ஆனால் அவன் வாழ்வையாவது அழிவிலிருந்து காப்பாற்றலாமே…

கடகட வென அனைத்தையும் சொல்லி முடித்தாள். வசீகரன் என்ற பெயரில் ஹாஸ்டலுக்கு வந்த புகைப்படம் அது அவள் கனவுகளை மாற்றி அமைத்தவிதம் அவள் காதல் எல்லாம் சொன்னாள்.

“அந்த போட்டோ பார்த்த நிமிஷத்திலிருந்து இப்ப வரை அவனை நினைக்காத நொடி இன்னும் வரலை…இனிமேலும் வராது….ஒவ்வொரு நொடியும் மனசளவில அவன் என் பக்கத்தில தான் இருந்தான். எதை செய்தாலும் எதை நினச்சாலும் அதை அவன்ட்ட சொல்லாம நான் செய்றதே இல்லை…ஹாஸ்டல்ல இருந்து நான் வீட்டுக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் அவனோட பார்வைக்குள்ள தான் நான் கழிச்சேன்னு எனக்கு நல்லா தெரியும்….இன்னைக்கும் நான் என் மனசளவில கல்யாணம் செய்தது அவனைத்தான்….நான் அவனோட வைஃப்…..அப்டி இருக்க என்னால எப்டி இன்னொருத்தரோட….என் வாழ்க்கை முடிஞ்சே போச்சு…..உங்க வாழ்க்கையாவது நீங்க காப்பாத்திக்கோங்க….அவன் இல்லாம என்னால இனி உயிரோட இருக்கமுடியாது….”

இவள் புலம்பிக் கொண்டு போக அனைத்தையும் அமைதியாக கேட்டிருந்தவன் இவளின் கடைசி வார்த்தையில் சற்று அதட்டினான்….

“என்ன பேச்சு  இது……ஒன்னும் முடிஞ்சு போகலை….இது ஒரு பிகினிங்….மனசுங்கிறது எப்பவும் மாறுகிற விஷயம் தான்….அதனால இந்த வலி ஏமாற்றம் எல்லாம் மாறும்….அவன் ஜஸ்ட் ஒரு கற்பனை…உன்னோட கற்பனை அவ்வளவே….ஹாஸ்டல்ல இருந்து வந்த பிறகு உன்னை தினமும் கண்ணுக்குள்ள வச்சிருந்தது நான்…. சரி அதவிடு….இப்போ நீ ஷாக்ல இருக்க….இப்டி கொஞ்சம் யோசிச்சு பாரேன்….அவனை பார்க்கமுன்னால நீ சந்தோஷமாதானே இருந்த…அவன் இல்லாமலும் உன்னால சந்தோஷமா இருக்க முடியும்கிறதுதான் நிஜம்…பட் கொஞ்சம் டைம் தேவைப்படும்… உனக்கு இப்ப பொறுமை வேணும்…”

அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி.

“உன் வாழ்க்கை உனக்கு முக்கியம் இல்லாம இருக்கலாம்….ஆனால் எனக்கு அது ரொம்ப முக்கியம்….காதலிச்சது நீ மட்டுமில்ல நானும் தான்….அதிலயும் உன் காதல் கற்பனை…பட் என்னோடது நூறு சதவீதம் உண்மை…” அழுத்தமாய் பேசிக் கொண்டு போனவன் பின் ஒருவித இயலாமையுடன் சொன்னான் “புரிஞ்சுகோடா….யூ நீட் டு லிவ்…”

“ஆனால்…”

“ஆனால்லாம் ஒன்னும் இல்லை….இதை யார் செய்ததுன்னு கண்டுபிடிச்சு இந்த ப்ரச்சனையை சால்வ் செய்றோம்…”

“அதுல என்ன சொலுஷன் இருக்குது…?”

“பிறகு நீ சாகுறதுல மட்டும் என்ன சொலூஷன் இருக்குது…? நம்ம இப்டி இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கவனை சும்மாவிட்டுட்டு சாகுறதுல என்ன சொலூஷன் இருக்குது..?”

அந்த கேள்வி அவள் மனதில் ஊஞ்சலாட ஆரம்பித்தது.

இரவு உணவை உண்டுவிட்டே படுத்தாள் மலர்விழி. அவள் மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.

இவள் ஏன் இறக்க வேண்டும் ? இவள் செய்த குற்றம் என்ன?

ஒன்னும் முடிஞ்சு போகலை….இந்த வசீகரனின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டன. ஆம் ஒன்னும் முடியலை…விவாகரத்து வாங்கிக் கொண்டு, அவனை தேடப் போகிறாள். கண்டிப்பாக அவன் கிடைப்பான்.

அவன் கிடைக்காவிட்டால்…..? கிடைக்காவிட்டால் கூட விவாகரத்து என்றாகிவிட்டபின் இந்த வசீகரனுக்கு தீங்கு இழைப்பதாக இவள் குற்றமனப்பான்மையில் உழல வேண்டி இருக்காது….அவனும் வேறு மணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ்வானே….

மறுநாள் காலை வசீகரன் கண்விழித்த போது அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி இவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.

“குட்மார்னிங்…”

“குட்மார்னிங்……உங்களுக்காகதான் காத்துகிட்டு இருக்கேன்….நைட் யோசிச்சதுல ஒரு முடிவுக்கு வந்துருக்க்கேன்…..”

“ம்?”

“ நமக்கு நடந்தது கல்யாணமே இல்லை….ஆனாலும் லீகலி……லீகலி டைவர்ஸ் செய்துடலாம்…உங்க லைஃபாவது நல்லா இருக்கும்….”

அமைதியாக ஒரு பார்வை பார்த்தான் வசீகரன். “உன் இஷ்டம்” என்றான்.

ந்த வெள்ளிக்கிழமை விடிவதே மிக அழகாய்பட்டது. ஏதோ ஒருவகையில் ஒருவித பரபரப்பு உள்ளுக்குள். பேக்கிங் செய்து கொண்டிருக்கும்போது அவள் முகத்தில் புன்னகை இருப்பது அவளுக்கே புரிந்தது.

ஹப்பா……வீக் எண்ட் வாரதே எவ்ளவு சந்தோஷமா இருக்குது…. நினைத்துக் கொண்டே காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

5 நிமிடம்….10 நிமிடம்….15 நிமிடம்….20 நிமிடம்…..வாட்ச்சில் டைம் தான் கழிகிறதே தவிர அவளை அழைத்துப் போக யாரும் வரவில்லை.

முகம் சுருங்க அவள் நொந்து கொண்டிருந்த நேரம் அவள் பார்வையில் விழுந்தது அந்த கார். இது சித்தப்பாவின் கார் அல்ல. ஆனால் இவளுக்காகத்தான் வருகிறது என்பது தெரியும்.

“சரன் வந்து உன்னை பிக் அப் பண்றேன்னு சொல்லிருக்கான்மா…அவன் ஆஃபீஸில் இருந்து வர்ற வழிதானே உங்க கேம்பஸ்….” சித்தப்பா சொல்லி இருந்தார்.

வேகமாக வந்து இவள் முன் சட்டென காரை நிறுத்தியவன் அவசரமாக கதவை திறந்துவிட்டபடியே சொன்னான்

“சாரி எஸ்எஸ் டெரிபிளி சாரி…. ஆஃபீஸ்ல ஒரு இம்பார்டன்ட் மீட்டிங்…..நினைச்சதைவிட டிலே ஆகிட்டு….இன்னும் நடந்துகிட்டு தான் இருக்குது…பாதில பிச்சுகிட்டு வந்துருக்கேன்…..ஜஸ்ட் எனக்காக இன்னைக்கு கொஞ்ச நேரம் பெரிய மனசு பண்ணி வெயிட் செய்…..ப்ளீஸ்…தென் வீட்டுக்கு போகலாம்…ப்ளீஸ் ப்ளீஸ்” அவன் சொல்லி முடிக்கும் போது அவனது அடையாறில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் முன் நின்றிருந்தது அவனது கார்.

ஓட்டமும் நடையுமாக அவளை இழுக்காத குறையாக கூட்டிச் சென்றவன் லிஃப்டில் 4 வது மாடியில் இருந்த ஒரு பெரிய ஹாலுக்குள் நுழைந்தவன் அதன் ஒரு ஓரத்தில் இருந்த காபினை திறந்து கொடுத்து….”இந்த சிஸ்டத்தை கொஞ்ச நேரம் குடஞ்சுகிட்டு இரு அதுக்குள்ள வந்துடுறேன்….” காணாமல் போயிருந்தான்.

இவளிடம் அவன் ஒவ்வொன்றிற்கும் கெஞ்சி இருந்தாலும் அத்தனை விஷயத்திலும் அவன் மட்டுமே முடிவு எடுத்திருப்பது புரியவே சற்று நேரமானது ஷாலுவுக்கு.

கொஞ்ச நேரம் அமைதியாக தன்னை அடக்கிக் கொண்டு அங்கு அமர்ந்திருந்தவள் நேரம் வழிய வழிய பொறுமை இழந்து கேபினைவிட்டு வெளியே வந்தாள்.

அந்த பெரிய ஹால் முழுவதும் பலர் வேலை செய்வதற்கு அடையாளமாக பல கம்பியூட்டர்கள். ஆனால் யாரும் இல்லை.

உள் அறையில் இருப்பார்களோ….?

மெல்ல அங்கிருந்த  கதவை சிறிது திறந்து பார்த்தாள்.

தெரிந்த இடைவெளியில் ஏராளமாய் பூக்கள்.

ஏன்?

இன்னுமாய் தள்ளினாள் தரை முழுவதும் மெழுகுவர்த்திகள்…

இன்னுமாய் தள்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

சரித்ரன் நின்றிருந்தான். அருகில் ஒரு அலங்கரிக்கப்பட்ட கேக்….

“ஹாப்பி பர்த் டே டூ யூ….”.

அவன் பாடத் தொடங்க இனம் புரியாத உணர்வில் இவள். மெல்ல கண்களில் இருந்து நீர் வரத் தொடங்கியது….

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.