(Reading time: 18 - 35 minutes)

03. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

தன் பின் ரேயா ஆதிக்கைப் பார்க்கவில்லை. காரணம் மறுநாள் முதல் மாலையிலும் பள்ளிப் பேருந்தில் பயணிக்க தொடங்கினாள். அதோடு சில நாட்களில் ஸ்பெஷல் க்ளாஸ் தொடங்கப்பட, அதன் நேரத்திற்கு ஏற்றமாறு இவள் தந்தையே இவளை காலை மாலையில் அழைத்துவர தொடங்கினார். ஒருவகையில் பெரும் நிம்மதி.

ஆனால் இரவுகளில் தூங்கப்போகும் சமயம் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் அந்த ஆதிக்கின் முகம் ஏனோ அவள் மனதில் ஊஞ்சலாடும். அவனைப் பற்றிய கேள்விகள் போர்தொடுக்கும்.

தினமும் மாலை நேரம் அப்பா வர சற்று தாமதம் ஆகும் என்பதால் அந்நேரம் வரை பள்ளி வரவேற்பறையில் காத்திருப்பதொன்றும் அவளுக்கு கடினமாக இல்லை. ஆனால் சனிக்கிழமை மட்டும் இவள் வகுப்பு முடியும் 3.30 மணி அவளது தந்தையின் அலுவலக நேரத்திற்கு ஒத்து வராததாலும், பள்ளிப் பேருந்தும் 1.30க்கே சென்றுவிடுவதாலும் அன்று மட்டும் மாலை மற்ற ஃப்ரெண்ட்ஸுடன் அரசு பேருந்தில் பயணம்.

Eppadi solven vennilave

அந்த வியாழக்கிழமையும் தன் தந்தைக்காக மாலை காத்திருந்தவள், அவர் வர இன்னும் நேரம் ஆகும் என்பதால் தன் வகுப்பறையில் போர்டில் கெமிஸ்ட்ரி ஈக்வேஷன்களை எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரேயா…என்ன செய்துட்டு இருக்க…? இப்டி க்ளாஸ் ரூம்ல தனியா….இந்நேரம்…?” எதிர்பரா நேர்த்தில் வந்த கேள்வியில் திடுக்கிடலுடன் திரும்பிப் பார்த்தாள்.

9ம் வகுப்பிற்கு புதிதாக வகுப்பெடுக்க வரும் புனிதா நின்றிருந்தாள். பி எட் பயிற்சிக்காக வந்திருக்கும் ஆசிரியை.

11,12 மாணவியருக்கு 10 வரை உள்ள மாணவியரோடோ, ஆசிரியைகளோடோ எந்தவித தொடர்பும் இவர்கள் பள்ளியில் இருப்பதில்லை என்பதால் புனிதாவும் இவளும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அந்த புனிதா சந்தன நிறமும், இடுப்புக்கு கீழாக இறங்கும் பின்னலும், நிலா முகமுமாக இருந்ததால் இவள் வரை புனிதா பற்றி செய்தி வந்திருந்தது.

ரேயா ஸ்கூல் பிபூள் லீடர் என்பதால் புனிதாவிற்கு இவளைத் தெரிந்திருக்குமாயிருக்கும்.

“குட் ஈவ்னிங் மேம்…அப்பாக்காக வெயிட்டிங்….ஃப்ரெண்ட்ல இருக்ற ரிஷ்ப்ஷன் ஹால்ல வெயிட் பண்ணா செக்யூரிட்டி ஸ்மோக் பண்ற ஸ்மெல் தாங்கலை….அதோட அப்டி செக்யூரிட்டிய மட்டும் நம்பி அப்டி தனியா எங்கயும் வெயிட் பண்ணகூடாதுன்னு என் அப்பாவோட ரூல்…”

தன் பேக்கை எடுத்துக் கொண்டு புனிதாவுடன் வெளி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் ரேயா.

“ஓ…குட்…பட் அப்பா வந்துட்டாகன்னா உனக்கு எப்டி தெரியும்..?”

“பெரும்பாலும் இந்த் டைம் தான் வருவாங்க…ஸ்டில் என் மொபைலை இப்போ ஆன் செய்துருவேன்….ஸ்கூல் டைம்லதான் மொபைல் யூஸ் செய்ய கூடாதுன்னு ரூல்…இந்த ஸ்பெஷல் க்ளாஸ்காக அப்பா வாங்கி கொடுத்தாங்க…இல்லைனா எங்கப்பாவாவது மொபைல் தரதாவது…”

“உங்கப்பாவுக்கு மொபைல் வாங்குறது ஒரு விஷயமா…?”

“ஆனா அதை எனக்கு தர்றது ரொம்ம்ம்ம்ம்ம்ப பெரிய விஷயம் மேம்…அப்பா ஒரு மிஸ்டர் ரூல்ஸ்...”

“ஆஹா..அப்பாவுக்கே நிக் நேமா…? அப்போ எல்லோருக்கும் எதாவது இன்ட்ரெஸ்டிங்கா பேர் இருக்கும் போல…”

“சே…அந்த அளவு பாசம்லாம் அப்பா மேல மட்டும் தான்….” கண்சிமிட்டி சிரித்தாள் ரேயா.

ரேயாவிற்கே புரியவில்லை ஏனோ…ஏதோ புனிதா மிக பரிச்சயமானவள் போல் தொன்றினாள். அதோடு புனிதாவின் அரட்டல் விலக்கல் இல்லா அப்ரோச்சும் பிடித்திருந்தது. அதனால் வெகு இயல்பாக எந்த வில்லக்கமும் இல்லாமல் அவளுடன் எடுத்த எடுப்பிலேயே பேசமுடிந்தது.

“தினமும் அப்பா கூடத்தான போற…? சட்டர்டே எனக்கு க்ளாஃஸ் முடிஞ்சு கிளம்ப 3.30 ஆகுது….அன்னைக்கு மட்டும் ஈவ்னிங் என் கூட வர்றியா ரேயா…? நாம சேர்ந்து போகலாம்…”

“புனிதாவின் இந்த யோசனை ரேயாவிற்கு பிடித்திருந்தது. ஆனால் அப்பா இதற்கு சம்மதிப்பாரா?” யோசித்தாள்.

“குமார் விஷயத்தில ஏன் இவ்ளவு பயம் ரேயா…பேசுறது பிடிக்கலைனா முகத்துக்கு நேர சொல்ல வேண்டியதான…?” எதிர்பாராத நேரத்தில் புனிதா இப்படி கேட்க அரண்டு போனாள் மாணவி.

ஃஸ்கூல் வரைகும் குமார் விஷயம் வந்தாச்சா..? பேசவே நா எழவில்லை இவளுக்கு.

“அ…து… உ..உங்களுக்கு…..ஸ்…ஸ்கூல் ஸ்டாஃப்ரூம் வரைக்கும் இது…..அ..அப்பாவுக்கு தெரிஞ்சா….” கண்களில் நீர் கட்ட முகம் வெளிற….நொடியில் ரேயாவின் உலகம் பயத்தால் நிறைந்து வழிந்தது…திக்கியது வாய்…

“ஹேய்…..கூல் டவுண்…இது என்னை தவிர என் வழியா யாருக்கும் இங்க தெரியாது…பை த வே நீ ஏன் உங்கப்பாவுக்கு இவ்ளவு பயப்படுற…அவங்கட்ட சொன்னா புரிஞ்சுக்க போறாங்க…”

“ந்…நோ…உ…உங்களுக்கு தெ…தெரியாது மேம்….அ..அப்பா பத்தி…எ..எதுவுமே அ..அவங்களுக்கு த…தப்பு…தப்பாத் தான் தெரியும்…ஹி கேன் மேக் மை லைஃப் ஹெல்…அ..அவங்க அதுல பி…பி.எச்.டி…”

நடுங்கிக் கொண்டிருந்த இவள் கைகளை ஆறுதலாக பற்றினாள் புனிதா… “என் வழியா இந்த விஷயம் ஒரு நாளும் வெளிய போகாது…அதோட என்னால முடிஞ்ச எல்லா சப்போர்ட்டும் உனக்கு எப்பவும் இருக்கும்…நாம ஃப்ரெண்ட்ஸ்…”

“தேங்ஸ் மேம்….வெரி கைண்ட் ஆஃப் யூ…” அழுகை தன்னை அடையாளப் படுத்தியது அவள் குரலில்.  சின்னவள் தோளோடு சேர்த்து தாய்மையுடன் அணைத்தாள் புனிதா.

மெல்ல தன்னிலைக்கு வந்தாள் ரேயா.

“சோ  சட்டர் டேஸ்….நாம சேர்ந்து போகலா….”

“அப்பாட்ட கேட்டு பார்க்கிறேன் மேம்…ஆனா..இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்….? நீங்களும் பஸ்ல இருந்தீங்களா…? பட்…குமார்னு நேம் வரைக்கும் தெரியனும்னா…?”

இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே  ஹார்ன் சத்தம். பழக்க தோஷத்தில் திரும்பிப் பார்த்தவளுக்கு பதில் கிடைத்துவிட்டது.

அங்கே நின்றிருந்த காரின் ஜன்னல் வழியாக சிரித்த வண்ணம் ஹாய் என்றபடி கை அசைத்தான் ஆதிக்.

மின்னல் ஒன்று கண்ணில் விழுந்தது அதை கண்டவளுக்கு. அதே நேரம் அவளது தந்தையின் காரும் வந்து நிற்க பயத்தில் நடுநடுங்கிப் போனாள்.

அவன் இவளுக்கு ஹாய் சொன்னதாக அப்பாவுக்கு தோன்றுமே….

மான் மீது பாயப் போகும் சிங்க முகபாவம் வந்தது இவளது தந்தைக்கு.

தெய்வமே….

ஆனால் அடுத்த நொடி இயல் நிலைக்கு மாறியது அவர் முகம். “சீக்ரம் வா” என்றார் இவளை சாதரணமாக பார்த்து.

அதே நேரம் “ஹாய் ஆதிக்..” என்றபடி புனிதா இவளைக் கடந்து சென்று அவன் காரில் ஏறினாள்.

அவனது ஹாய் புனிதாவிற்கு என உணர்ந்ததால் தந்தை முகத்தில் வந்திருந்த வானிலை மாற்றம் வந்த வழியே திரும்பி இருந்தது.

இவள் தந்தையுடன் கிளம்பினாள்.

மறுநாள் வெள்ளிக்கிழமை. இன்றே புனிதாவிடம் சொல்லிவிட வேண்டும். முடிவு செய்து கொண்டாள் ரேயா. வகுப்பறையில் காத்திராமல் ரிஷப்ஷனுக்கு புனிதாவை தேடிச் சென்றாள்.

“குட் ஈவ்னிங் மேம்…” என்ற இவள் குரல் சுரத்தின்றி இருந்தது.

“ஹாய்…ரேயு…நானே உன்னை பார்க்கதான் வந்துட்டு இருந்தேன்….நாளைக்கு நீ இங்கயே வந்துடு…3.40 க்கு நாம கிளம்பிடலாம்…”

“சாரி மேம்…நான் உங்க கூட வரலை….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.