(Reading time: 18 - 35 minutes)

ன் ஹேண்ட் பேக்கிற்குள் எதையோ குடைந்து கொண்டிருந்த புனிதா சட்டென தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

“நான் என் கூட கார்ல உன்னை கூப்டலை…ரெண்டு பேருமா பஸ்ல தான் போகப் போறோம்…”

“தெரியும் மேம்…ஸ்டில் நான் வரலை…”

“ஏன்..? என்ன பயம்..?” சற்று கோபமிருந்தது புனிதாவின் குரலில்.

“எங்க அப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது…”

ரேயா சொன்ன விதத்தில் புனிதாவின் முகத்தில் புன்னகையோடு சில பாச இழைகளும் இடம் பிடித்தன.

“சொல்லு… தெரிஞ்சுகிறேன்…”

“இங்கே ஷாலோம் ஃஸ்கூல் கேள்விபட்டிருக்கீங்களா மேம்…அது என் அம்மாவோட அப்பா ஸ்கூல்…இன் ஃபாக்ட் 9 இயர்ஸ் ஒன்ஸ் ஒரு 3 வருஷம் அந்த ஸ்கூல் மேனெஜ்மென்டை என் அம்மா சார்பா எங்கப்பாவே பார்க்க வேண்டி இருக்கும்….”

“அதவது அந்த ஸ்கூல்ல உங்களுக்கும் ஷேர் இருக்குன்னு சொல்ற….”

“அதுக்கில்ல மேம்…எங்க ஃபேமிலில எல்லோரும் அங்கதான் படிக்காங்க…நான் மட்டும் 6த்ல இருந்து  இங்க….ஏன்னா என் மாமா பசங்க அங்க படிக்காங்களாம்…..அவங்க கூட நான் சேர கூடாதாம்….ஊர்ல எதாவது பேசுவாங்களாம்...இங்கயும் என் ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை மேம்..வினிதா, அமலா, சாய்ரா, ப்ரபானு..ஃஸ்கூல்ல யாருமே அவங்களை குறை சொல்ல மாட்டாங்க….நல்ல பொண்ணுங்க…பட் எங்க அப்பாவுக்கு நான் அவங்க யார் கூட சேர்றதும் பிடிக்காது….வயசுப் பொண்ணை நான் அவங்க வீட்டுக்கெல்லாம் அனுப்ப மாட்டேன்…அது மாதிரிதானே அவங்க வீட்லயும் நினைப்பாங்க..அதுனால அவங்க யாரும் இங்க வர கூடாதுன்னு முதல்லயே அவங்களை எங்க வீட்டுக்கு வரகூடாதுன்னு சொல்லிட்டாங்க….அடுத்தும் அவங்க வீட்டைப் பத்தி அக்குவேர் ஆணிவேரா விசாரிச்சு வந்து ஒரே குறை…..ப்ரபா அப்பா லஞ்சம் வாங்குறான்….அமலா தாத்தாக்கு உன் மாமா கூட சண்டைனு….சம்பந்தம் சம்பந்தம் இல்லாத காரணம்லாம் சொல்லிட்டு…ஃஸ்கூலைத் தவிர வேற எங்கயும் நான் என் ஃப்ரெண்ட்ஸை பார்க்கவே முடியாது….”

“..ஓ…சரி அதுக்கும் நீ என் கூட பஃஸ்ல வர்றதுக்கும் என்ன சம்பந்தம்….?”

“அது வந்து மேம்…அப்பா நான் யார் கூட சேர்ந்தாலும் அவங்களைப் பத்தி விசாரிச்சுட்டு வந்து குறை சொல்வாங்க….உங்களைப் பத்தியும் அதைத்தான் செய்வாங்க…..அது மனசுக்கு கஷ்டமா இருக்கும்…அதோட உங்க கூட சம்பந்தபட்ட எல்லோரை பத்தியும் விசாரிப்பாங்க….அது…அது எனக்கு…..ப்ரச்சனை ஆகிடும்…அதான் நான் வரலை….”

சுயபச்சாதாபம், பயம் , வெறுப்பு மூன்றும் வெளிப்பட்டன ரேயாவின் குரலில்.

“புனிதாட்ட இருந்து தப்பிக்க இப்டி பழிய என் மேல போடுறியா….?சூப்பர் டெக்னிக்….” சீண்டலான குரலைக் கேட்டு அதிர்ந்து திரும்பினால் அவன். ஆதிக் குறும்பு சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.

சே..இவ புலம்பினதை எல்லாம் அவன் கேட்டுடானே…..அவமானம் பயம் எல்லாம் அவளுக்குள். தவித்துப் போனாள் ரேயா.

“என்ன பதிலைக் காணோம்…?”

அதே சீண்டலுடன் இவள் முன் வந்து நின்றான். இதயம் இரண்டு மடங்காய் படபடக்க, வராத வார்த்தைகளின் இயலாமையுடன் மிரண்டு போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்கள் இவள் கண்ணில் பட்டது.

காண்போர் கொண்டிருக்கும் அன்பனைத்தையும் தனாதாக்கும் அவனது பெர்ஷிய கண்கள் என எங்கோ படித்தது மனதில் அதுவாக நினைவுக்கு வருகிறது.

ஆயிராமாயிரம் ஆண்டுகளாய் ஆதியிலிருந்து இவனைத் தெரியும் என்ற ஒரு உணர்வு ஒரு கணம். மறுகணம் ஐயோ! என்ற ஒரு அபாய சங்கு அவள் இதயக் கதவிடம்…இன்னுமாய் மிரண்டாள்.

அவள் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் இருந்த குறும்பு கனிவாய் உருமாறியது.

‘உனக்கு எவ்ளவு நல்ல அப்பா கிடச்சிருக்காங்க….”அவன் ஆரம்பிக்க அவ்வளவுதான் அதுவரை அவனை நோக்கி பாய்ந்தோடிய இதயநதி சட்டென காய்ந்து வறண்டு கோபமாக உருமாறியது…

அப்பாவைப் போல் இவனும் பெண்களை நம்பாதவன்…..மேல் சாவனிஸ்ட்

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன அவளுக்கு.

“ஹேய்…நான் உன்னை நம்பலைனோ…மொத்தத்துக்கு லேடீஸையே நம்பலைனோ கன்னா பின்னானு எதையாவது நினைச்சு வைக்காத…”

பிறகு வேற என்னவாம்…? என்ற பாவனையில் ஒரு லுக்.

“உன் சேஃப்டி மேல உள்ள அக்கறை….பாசம்னு சொல்ல வந்தேன்….பொதுவா பேரண்ட்ஸ் பண விஷயத்தில் நியாயமா இல்லைனா…அவங்கட்ட வளர்ற பிள்ளைங்கட்டையும் அதை எதிர் பார்க்கலாம்….அதனால உனக்கு எதுவும் ப்ரச்சனை ஆகிடக் கூடாதுன்னு பார்த்திருப்பாங்க உங்க அப்பா….” ஆதிக் சொல்ல

“அமலான்னா நிர்மலா மேம் டாட்டர் தான….நிர்மலா மேம் ஸ்டாஃப் ரூம்ல உன்னைப் பத்தி சும்மா சம்பந்தம் சம்பந்தம் இல்லாம எதுக்குனாலும் குறை சொல்லிட்டே தான் இருப்பாங்க ரேயு…அதுக்கு இதுதான் கரணம்னு எனக்கு இப்பதான் தெரியுது… ஆனா உன்ட்ட முகத்துக்கு நேர எதையும் காமிச்சுக்க மாட்டாங்க…..அதுக்கு உங்கப்பா பரவயில்லை….அமலா வீட்டைப் பத்தி உன்ட்ட குறை சொல்லாம..ப்ரச்சனை ஆகிடக் கூடாது விலகி இருன்னு சொல்லி இருக்காங்களே…..”

புனிதா சொல்ல ரேயாவின் மனம் வாடிப் போனது.

ஸ்வீடன் சென்று வந்த போது ரேயாவின் ஆல்வின் சித்தப்பா இவளுக்காக ஒரு க்யூட் ப்ரேஸ்லெட் வாங்கி வந்திருந்தார்கள். அவள் அதைப் பள்ளிக்கு அணிந்து வந்திருந்த போது ப்ரபா ஆசைப்பட்டு அணியக் கேட்டாள். சற்று நேரத்தில் அது தொலைந்துவிட்டதாக கூறிவிட்டாள். சில மாதம் கழித்து தற்செயலாக ப்ரபாவின் தங்கையை பார்த்தபோது அவள் அதைப் போன்ற ஒன்றை அணிந்திருந்தாள். சிங்கப்பூரிலிருந்து தன் மாமா வாங்கி வந்ததாக சொன்னாள் அவள்.

சிங்கப்பூர் மாமா பற்றி ப்ரபா எதையும் இதுவரை சொன்னதிலை. ஆனாலும் நட்பை சந்தேகிப்பது தவறென்று இவள் வேறுவிதமாக நினைக்க கூட மனதை அனுமதிக்கவில்லை….இப்பொழுது ப்ரபா தன் அம்மா அவளது அப்பாவிற்கு தெரியாமல் அவரிடம் இருந்து பணம் எடுத்து சேர்த்து வைத்து இன்ஸால்மென்ட் முறையில் பொருட்கள் வாங்குவதை குறித்து பெருமையுடன் பகிர்ந்து கொண்டதும் சேர்த்து ஞாபகம் வர…தான் முட்டாளடிக்கப் பட்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது….மனதில் ஏமாற்றத்தின் வலி. அப்பா இவ்வளவு விளக்கமாக எதையும் சொல்லவில்லை…இவளும் இதை இந்த கோணத்தில் யோசித்ததும் இல்லை.

“ரேயு இதுக்கா இவ்ளவு ஃபீல் பண்ற….நல்ல ஃப்ரெண்ட்ஸும் இருக்கதான்மா செய்றாங்க…..கேர்ஃபுல்லா சூஸ் பண்ணு…..யாருமே மத்தவங்க விஷயத்துல  எப்படி பிகேவ் பண்றாங்களோ அப்டித்தான் உன் விஷயத்துல உன் முதுகுக்கு பின்னால நடந்துப்பாங்க….அத கவனிச்சு ஃப்ரெண்ட்ஸ் சூஸ் செய் …எல்லாம் நல்லாத்தான் இருக்கும்…” ஆறுதலும் நட்புமாய் அவன் சொல்லிக் கொண்டு போக…இப்படி இதுவரை எந்த வகை உறவிற்குள்ளும் உட்படாத பெண் மனம் அவனிடம் இன்னுமாய் சலனமாய்…..

“அப்டின்னா கண்டிப்பா உங்க கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க கூடாது….அப்பா இல்லாத நேரத்துல மட்டும் ஆக்க்ஷன் பார்ட்…அப்பா வந்துட்டா….ஆள் விடு ஜூட்னு….படு கள்ளத்தனம்…” அவனை சீண்ட தோன்ற அதை செயல் படுத்தினாள்.

அவன் இதழ்களில் வந்தமர்ந்ததென்ன புன்னைகயா? நொடியில் அதில் புதையுண்டு போனாள் பெண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.