(Reading time: 18 - 35 minutes)

“அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசில்லையா…3ர்ட் 4த் படிச்சிருப்பேன்…”

“ம்…அதுக்குபிறகு நீ இங்க வரவே இல்லை…..பட் நான் வருஷம் வருஷம் ஆனுவல் லீவில் வருவேன்….இப்பயும் அம்மா அப்பாலாம் பாம்பேலதான் செட்டில்டு…பட் எனக்கு சென்னைதான் பிடிச்சிருக்குது…இங்க உள்ள எங்க ஆஃபீஃஸைப் பார்த்துகிறேன்….வீக் எண்ட் என் அத்தை அதான் உங்க சித்தி கையாலதான் சாப்பாடு…”

அவனுடன் பேசிக் கொண்டே அந்த இரண்டு தோசைகளை காலி செய்திருந்தாள் ஷாலு. ஏனோ அவளுக்கு விபரம் தெரிந்து அவள் சாப்பிட்ட உணவுகளில் இன்றுதான் ஒரு திருப்தியை உணர்ந்தாள்.

“இந்த ஹோட்டல் சாப்பாடு உண்மையிலேயே நல்லா இருக்குது….தேங்ஸ்…” அவன் சின்னதாய் சிரித்துக் கொண்டான்.

நேரம் செல்வதே தெரியாமல் சென்றது பேச்சு.

ஒரு கட்டத்தில் அவன் மொபைல் சிணுங்க…எடுத்துப் பேசியவன்..” மாமா அத்தைலாம் வீட்டுக்கு வந்துட்டாங்களாம்….லேட் ஆகிட்டுது கிளம்புவோமா…?” என்றபடி எழுந்து நின்று இவள் எழுவதற்காக கை நீட்டினான்.

அவன் உதவியை ஏற்காமல் தரையில் கை ஊன்றி எழுந்து கொண்டாள் ஷாலு.

இருவருமாக காரை நோக்கிச் சென்றனர்.

1990ம் ஆண்டு….

அதிர்ச்சியில் ஏமாற்றத்தில் என்ன செய்வதென்றே மலர்விழிக்கு புரியவில்லை. இவள் உயிராகியிருக்கும் வசீகரன் இவனில்லை. இவள் மனதிற்குள் யாரை எண்ணி திருமண உடன்படிக்கை செய்தாளோ அது இவனில்லை.

இவன் யார்? எங்கே போனான் இவளது அவன்?

மணமகன் கோலத்தில் அருகில் நின்றவனை நோக்கிக் கேட்டாள். “நீங்க யாரு?”

“ என்னமா…? என்னாச்சு…? ஏன் இப்டி கேட்கிற..? நான் வசீகரன்….எதுனாலும் வீட்டுக்கு போனதும் பேசிப்போமே….எல்லார் முன்னாடியும் நாம பேசிகிட்டாலே ஊர் காரங்க ஒரு மாதிரி பேசுவாங்க…மேடையில வச்சே பொண்ணு மாப்ளைட்ட பேசுதுனு  எதாவது குறையா சொல்லுவாங்க….”

தவிப்பிலும் வலியிலுமாக அவள் கண்களில் நீர் கோர்க்கிறது. அவள் வலி அவன் முகத்தில் ப்ரதிபலிக்கிறது.

அவசரமாக ரகசியமாக தன்  அக்காவை அழைத்தான். கல்யாண பரபரப்பில் இருந்த அவனது அக்கா ஜெயாவோ பதறிக் கொண்டு வந்து சேர்ந்தாள். “என்னடா…?”

“என்னமோ தெரியலைக்கா மையூ வோட முகமே சரியில்லை…..அவளுக்கு முடியலை போல…ரிஷ்ப்ஷனை வேணா கேன்சல் செய்துட்டு  வந்துருக்கவங்களை நீயும் அத்தானும் எப்டியாவது சமாளிங்களேன்…..நான் இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்….ப்ளீஸ்கா….”

“என்னடா இது….?சொந்தகாரங்களை கூட சமாளிக்கலாம்….உன் பிஸினஸ் சைட் ஆட்களை…அவங்களை கவனிக்க நீ இருக்கனுமே…மலரை அவங்க அம்மா கூட நம்ம வீட்டுக்கு அனுப்பிடலாம்….நீ எல்லோ…”

“இல்லக்கா….முத நாளே…அவ கஷ்டத்தை அவளையே சமாளிக்க சொல்லிட்டு…அப்டில்லாம் தனியா அனுப்ப முடியாதுக்கா…வாழ்விலும் தாழ்விலும் மரணம் பிரிக்கும் வரையிலும் உன் கூட இருப்பேன்னு இப்போ தான் நான் அவளுக்கு ப்ராமிஃஸ் செய்தேன்…நான் அவ கூட கிளம்புறேன்கா….”

மலர்விழிக்கு இந்த வசீகரனின் அக்கா ஜெயா முன்பு சொன்னது ஏனோ ஞாபகம் வருகிறது. “என் தம்பி உன் மேல உயிரையே வச்சிருக்கான்…” இன்னுமாய் வலித்தது பெண் மனது.

Friends, தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த எபிசோட் மிகச்சிறியதாக அமைந்துவிட்டது. அடுத்த வாரம் மீண்டுமாய் ஒரு பெரிய எபிசோடில் சந்திப்போம். நன்றிகள்

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.