(Reading time: 30 - 60 minutes)

05. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி

னக்கு என் அப்பா வேணும்….எனக்கு பயமா இருக்குது……அப்பா….” ரேயாவின் நிலைகண்ட உணர்ச்சி வேகத்தில் புனிதாவிற்கும் கண்கள் கலங்கியது. அம்மா இல்லாத பெண்ணிற்கு தந்தையாவது வேண்டுமே….

புனிதாவின் தலையை லேசாக தட்டினான் ஆதிக். அவ கூட சேர்ந்து நீயும் அழுதால் என்ன அர்த்தம்? என்பது போல் ஒரு பார்வை…சோஃபாவை கண்களால் காண்பித்தான். இன்னும் அழுது கொண்டிருந்த ரேயாவை அணைப்பாய் கூட்டிப் போய் அதில் அமர்த்தினாள் புனிதா.

“ரேயுமா நீ கொஞ்சம் ஹெல்ப் செய்தன்னா உங்கப்பாவ சீக்கிரம் கான்டாக்ட் செய்யலாம்…..” ஆதிக் சொல்ல சட்டென அழுகையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் ரேயா.

Eppadi solven vennilaveஇவன் உண்மையாக சொல்கிறானா இல்லை வெறும் ஆறுதலுக்காகவா? அவன் விழிகளை படிக்க முயன்றாள். இதற்குள் ஒரு க்ளாஸ் தண்ணீரை நீட்டினான்.

“குடி….” கட கடவென குடித்துவிட்டு மீண்டுமாக அவசரமாக அவனைப் பார்த்துக் கேட்டாள் “என்ன செய்யனும் நான்..?”

“முதல்ல பயப்படாம நிதானத்துக்கு வா…அப்பதான் அடுத்து என்னன்னு யோசிக்க முடியும்…”

“பயமா இருக்குதே…அந்த ஆள் கூட நிறையா ஆள் இருந்தாங்க…அப்பா தனியா போயிருப்பாங்களே….தான் விஷயத்தில அப்பா கொஞ்சம் கூட பய படவே மாட்டாங்க….எல்லா பயமும் எங்க விஷயத்துல மட்டும் தான்…” மீண்டுமாய் பயத்தில் நிறைந்து குரல் கேவ தொடங்கியது அவளுக்கு…

“உங்க அப்பா பயப்படலைனாலே விஷயம் பெருசு இல்லைனுதான அர்த்தம்…?” அவனின் வார்த்தையில் அப்படித்தானோ என்ற ஒரு எண்ணம் இவளிடம் உதயம்.

“புனி நீ சித்திக்கு போன் செய்து சொல்லிடு…..நாம வர லேட்டாகும்னு…இல்லனா அவங்களும் இங்க வாராங்களான்னு கேளு…” ரேயாவின் கவனம் அவன் பேசிய திசையில் திரும்பியது.

இத்தனை மணிக்கு இந்த மலைப் பாதையில் இவர்கள் இருவருமாய் வந்திருக்கிறார்களே….

இதற்குள் புனிதா தன் தாயாருக்கு அழைத்திருந்தாள்….

அவரோ ரேயாவின் அப்பா திரும்பி வந்துவிட்டாலும் கூட காலை வரை ஆதிக்கும் புனிதவும் அங்கு திரும்பி வர வேண்டாம் என்றவர், தான் தனியாக வீட்டிலே இருந்து கொள்வேன் என்றும் சொன்னார். இல்லையெனில் அவரை அழைத்து வர இப்பொழுது மீண்டுமாக ஆதிக் தானே அலைய வேண்டும் என இங்கு வருவதை தவிர்த்தார்.

அதோடு ரேயாவிடமும் இரு நிமிடங்கள் ஆறுதலாக பேசினார்.

“உன் அப்பாக்கெல்லாம் ஒன்னும் ஆகாது….எல்லாத்தையும் யேசாப்பாட்ட கொடுத்துடு….அவர்ட்ட உன் ப்ரச்சனைய சொல்லி உதவிகேட்ட பிறகும் அழுதுகிட்டு இருந்தன்னா அவர் பார்த்துப்பார்னு நீ நம்பலைனு தானே அர்த்தம்….அன்னா குழந்தை வேண்டி ஒரு நாள் முழுக்க அழுது ஜெபம் செய்தாளாம்…ஆனா அதுக்கு பிறகு அவ சோகமா இல்லைனு சொல்லிருக்கும் பைபிள்ள…ஒரு விஷயத்தை கடவுள்ட்ட கொடுத்துட்டா அடுத்து அது அவரோட ப்ரச்சனைங்கிற மாதிரி விட்டுடனும்….அதுக்கு பிறகு ஆண்டவர் அவளுக்கு குழந்தையை கொடுத்தார் தானே,….அது மாதிரிதான்….உன் விசுவாசத்தின் படி தான் உனக்கு நடக்கும்…..அப்பா வந்துடுவார்னு நம்பி நிம்மதியா இருக்கனும்….….அப்பா வந்துடுவாங்க…நானும் இங்க ஜெபிச்சுகிட்டு தான் இருக்கேன்…”

“தேங்க்ஸ் ஆண்டி…” ஒருவித உறுதிக்கு வந்திருந்தாள் ரேயா….அழமாட்டேன்….நம்பிக்கையோட இருப்பேன்.

நிமிர்ந்து ஆதிக்கைப் பார்த்தாள். “நான் எதோ செய்யனும்னு சொன்னீங்களே….” அவள் முகத்தில் வந்திருந்த தெளிவு அவனுக்குமே புரிந்தது. அவன் முகத்தில் ஒரு சிறு முறுவல்.

கண்களால் அவளது வீட்டை நின்ற இடத்திலிருந்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தான். புனிதாவும் இப்பொழுது அதைத்தான் செய்தாள்.  இருவரும் முதல் முறை இவள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்பதே இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது ரேயாவுக்கு.

“இங்க ஒரு ஆஃபீஸ் ரூம் இருக்கனுமே…இதுவா…?” அப்பாவின் ஆஃபீஸ் ரூமைப் பார்த்து கை காட்டினான்…

“ஆமா..வாங்க..” சொல்லியபடி முன் சென்று அவனுக்கு கதைவை திறந்து கொடுத்தாள்.

“அப்பா இங்க கொஞ்ச நேரம் தான் இருப்பாங்க… பெரும்பாலும் தூத்துகுடி போயிருவாங்க…”

அறையிலிருந்த மேஜை மீதிருந்த புத்தகங்களை நோக்கி சென்றவன்…

“பார்க்கலாம் தானே…அங்கிள்க்கு யார் கூடெல்லாம் அப்பாயிண்ட்மென்ட் இருந்துதுன்னு பார்த்தால்…”

அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதெ இவளுக்கு சட்டென உறைத்தது “அப்பாக்கு ஒரு பி ஏ உண்டுன்னு நினைக்கேன்…பேர் கூட சாமுவேலோ…இம்மனுவேலோ….?”

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

“இல்ல நிஜமாவே ஆஃபீஸ் விஷயம் எதுவுமே எனக்கு தெரியாது…என்ன பிஸினஸ்னு கூட சரியா தெரியாது…”

ஒன்றும் சொல்லாமல் இவளது அப்பாவின் மேஜையை குடைந்தான்.’

“ம்…இந்தா இருக்குது அங்கிள் மீட்டிங் டீடெய்ல்ஸ் …..இதுல இன்னைக்கு ஈவ்னிங் எதோ சௌந்தரபாண்டியனை பார்க்கப் போறதா இருக்குது…இப்ப உங்கப்பா பி ஏ நம்பர் வேணும்….இல்லைனா இந்த சௌந்தர பாண்டியன் நம்பரே கிடச்சாலும் சரி…”

“மாடில அப்பா பெட் ரூம் இருக்குது…”

‘ம்…ஆஃபீஸ் ரூம்ல இல்லாத இன்ஃபர்மேஷன் அங்க இருக்குமான்னு தெரியலை..ஸ்டில் வா…”

மேலே சென்றனர் இருவரும். “அப்டியே எங்க வீட்டு ப்ளான்தான் உங்க வீடும்….அங்கிள்க்கும் என் அப்பாவுக்கும் நிறைய டேஸ்ட் ஒன்னு போல தான் இருக்குது…..பட்….மத்த விஷயங்களை அங்கிள்ட்ட பேசனும்…”

அப்பா வரப்போவது உறுதி என்ற ரீதியிலேயே அவனது சொல்லும் செயலும் அமைந்திருக்க அவளுள் வந்திருந்த நிம்மதி வளர்ந்துகொண்டு போனது.

சொல்லிக் கொண்டே மாடியின் முதல் அறைவாசலை அடைந்தவன் “இதுதான் எங்க வீட்ல என் பேரண்ட்ஸ் ரூம்” என்று கை காட்டினான்.

“இது தான் அப்பா ரூம்…போய் பாருங்க…”

கதவை திறந்து நுழைந்தவனை தயங்கியபடி பின்பற்றினாள். அங்கு ஒரு முழு சுவர் அளவிலாக இவளது அம்மாவின் புகைப்படம் வால்பேப்பராக….பியானோ வாசிப்பது போல்…புடவை கட்டும், அம்மாவின் கொண்டையும்…..அம்மா பேரழகு

அவன் பார்வையும் அதில் தான் நின்றிருந்தது.

“உங்க அம்மா அப்பாவுக்கு லவ் மேரேஜா ரேயு…?”

இப்படி இதைப் பத்தியெல்லாம் இவள் இதுவரை யோசித்ததும் கிடையாது…..இவளது அத்தைமார்களும் இதைப் பற்றி எதுவும் சொன்னதும் கிடையாது…. அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ…? ஒருவேளை மாமாக்களுக்கு தெரிந்திருக்கலாம்….

இவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அவனும் அடுத்து எதுவும் கேட்கவில்லை.

அங்கிருந்த செல்ஃப்ஃபை அவன் குடைய, தன் பங்குக்கு  ட்ரெஸிங் டேபிளை குடைந்தாள் இவள்.

அம்மாவின் பொருட்கள் போலும்….டேபிளே அம்மாவுடையதோ….? அப்பாவின் இந்த பக்கத்தை இதுவரை இவள் யோசித்ததே இல்லை. அப்பா எப்பொழுதும் ஒரு கடின முகக்காரராகவே இதுவரை தென்பட்டிருக்கிறார்.

இந்த இவன் அருகில் உலகில் உள்ள அன்பெல்லாம் கண்ணுக்கு தெரியுமோ?

“ரேயு ட்ரஸிங் டேபிள்ள என்ன இருக்க போகுது…..?” என்றவன் திரும்பி இவள் முகத்தைப் பார்த்து என்ன கண்டானோ? ஒன்றுமே சொல்லாமல் பெட்டுடன் இணைந்திருந்த அந்த ட்ராவை திறந்தவன், டெலிஃபோன் டைரின்னு தான் போட்டுருக்குது….எதுக்கும் நீ பார்த்து சொல்லேன்…பெர்சனலா இருந்தா….நான் பார்க்கிறதைவிட நீ பார்த்தா பிரவாயில்லை…”

“தயங்கியபடியே வாங்கி திறந்து அவனிடம் நீட்டினாள்…..டெலிபோன் நம்பர்ஸ்தான் இருக்குது…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.