(Reading time: 30 - 60 minutes)

ருவரும் பேசியபடி வந்து காரை அடைந்தனர்.

“எங்க வீட்ல பெர்த் டே செலிப்ரேஷன்னா ஒரு ட்ரடிஷன் உண்டு….பெர்த் டே பேபியோட எதாவது ஒரு ஸ்பெஷல் விஷ் அன்னைக்கு கண்டிப்பா நிறைவேத்தி கொடுக்கப்படும்……விஷ்ஷும் கொஞ்சம் ப்ராக்டிகலா இருக்கனும்…உனக்கு அப்டி எதாவது இருந்தா சொல்லு எஸ் எஸ்…..”

அப்டில்லாம் எதுவும் இல்லையே…சொல்லும் போதே மனதில் ஆடிப் போனது அது.

அவள் கண்ணை வைத்து கண்டு பிடித்தானோ…?

“சரி என்ட்ட சொல்ல வேண்டாம்னா விடு…”

அப்படி அவன் சொன்ன பின் எப்படி சொல்லாமல் இருப்பதாம்?

“இல்ல அது வந்து…சொன்னா சிரிக்க கூடாது…”

அவன் கண்களில் ரசனை வந்திருந்தது.

“ பார்க்ல குழந்தைங்கல்லாம் சறுக்கி விளையாடுவாங்களே அந்த ஸ்லைட் அதுல சறுக்க பிடிக்கும்….சின்ன வயசிலிருந்து அதுக்கு ஏனோ சான்ஸே கிடச்சதில்லை…அப்புறம் ரோலர் கோஸ்டர் அதை ட்ரை செய்து பார்க்கணும்னு ஒரு ஆசை…”

“இவ்ளவு தானா…டன்” என்றவன் தன் மொபைலில் யாருக்கோ அழைத்தான். எதிர் நபர் கேட்கும் தொடர்பை ஏற்கும் முன் அவசரமாக இவளிடம் கேட்டான் “தீம் பார்க் போலாமா வருவியா?”

“பிரவாயில்ல……அவசரமா ஒரு கான்ஃப்ரெண்ஸ் அட்டென் செய்யனும்னு தீம் பார்க்குக்கு கடத்திட்டு போகாம நேரடியா கேட்டுடீங்களே அதுக்கே கூட வரலாம்…”

“அப்போ நெஜமாவே மீட்டிங் இருந்துது ஷாலுமா…மீட்டிங் முடிஞ்சி எல்லோரும் போறதை நீ பார்த்த தான…” அவனது கெஞ்சலா எது பிடிக்கிறது என்று தெரியவில்லை. குறை சொன்னாலும் கோபம் கொள்ளாமல் இவளிடம் இவன்…….அப்பாவின் கோபங்களில் கொடூரமாய் பயந்து நடுங்கி வளர்ந்திருந்தவளுக்கு இவன் பாலை வனத்தில் பனிக் காற்று…..

தீம் பார்க்கை அடையும் போது அங்கு  க்ளோசிங் டைம்.

ஆனால் இவனது கார் நுழைவு வாயிலில் நின்றதுமே ஓடி வந்தார் ஒருவர்.

“சார்….விஜய் சார் சொன்னாங்க சார்….கார் பார்க்கிங் அங்க….” அதன்பின் அந்த தீம் பார்க்கின் ஊழியர் ஒருவர் இவர்களுடன் வந்து ஒவ்வொரு விளையாட்டு இயந்திரத்தையும் இயக்கிக் கொடுக்க சரித்ரன் அருகாமையில் ஷாலு இவ்வுலகத்தில் இல்லை.

முதல் விளையாட்டான அந்த ரோயிங் போட் இயல் உயரம் எழும்பி இறங்க இயல்பாய் தான் இருந்தாள் ஷாலு. ஆனால் அரை வட்டம் தாண்டிய அளவு அது உயர எழும்பி தாழ பாய தொடங்க அடிவயிற்றில் கிண்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்…… பயத்தில் வாய் மற்றும் கண்களை இறுக மூடிக் கொண்டாள் அவள். இன்னும் வேகம் கூட அலறிவிடக் கூடாதென கையை எடுத்து வாயின் மேல் வைத்துக் கொண்டாள். கண்களிலும் அவைகள் புதைந்து போகும் அளவு இறுக்கம்.

எதிரில் இருந்தவனோ….ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..என கத்தி அந்த த்ரில் கலந்த கிண்ன்ன்ன்ன்ன்ன்ன் உணர்வை கொண்டாடிக் கொண்டு இருந்தான். இவளை சற்று நேரம் கவனித்தவன்

“ ஷாலுமா கண்ண மூடிட்டன்னா என்ன த்ரில்” என்று கேட்டான். அவன் வார்த்தையில் கண் திறந்தாள். ஆனால் அவளால் சமாளிக்க முடியவில்லை.

“சத்தம் போடு ஷாலு…..ஜாலியா இருக்கும்……ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

அவனைப் பின் பற்றிப் பார்த்தாள்.

“ஆஆஆஆஆஆ”

பின் ஒவ்வொரு ஸ்விங்கிலும் ஆஆஆஆ என்ற அலறல் ஆனந்தமாகவே வந்தது அவளிடமிருந்து.

பிறர் முன் சத்தமாய் சிரித்தால் சீறிக் கொண்டு வரும் அப்பாவிடம் வளர்ந்தவளுக்கு இது விடுதலையின் வாசம். சரித்ரனை இன்னுமாய் பிடிக்கிறது.

இன்னும் சில ரைட்கள் முடிய கத்தி தொண்டை வலித்திருந்தது அவளுக்கு.

“போதும் சரன்…..ரொம்பவும் என்ஜாய் செய்துட்டேன்”

“இன்னும் ஒன்னே ஒன்னுமா…ரோலர் கோஸ்டர் சொன்னியே அது இன்னும் போகவே இல்லை அது மட்டும் முடிஞ்சதும் கிளம்பலாம்…”

முதல் முறையாக தனக்கு சிறகுகள் இருக்கின்றன என அவள் உணர்ந்த தருணம். இவள் விருப்பத்தை இவளுக்கே கெஞ்சி கெஞ்சி நிறைவேற்றிக் கொடுத்தால்……..

“என்ன ஆச்சு ஷாலுமா…? இவ்ளவு யோசிக்ற முடியலைனா வேண்டாம்…”

“இல்ல…போகலாம்…..கொஞ்சம் கிண்ன்ன்ன்ன்ன் நு இருக்கு…ஃஸ்டில் போகலாம்….”

“ஆர் யூ ஷ்யூர்…?”

“ப்ளீஸ் …போகலாம் சரன்”

ரோலர் கோஸ்ட் ரைட் ஆரம்பித்தது. இதுவரை இருந்த எல்லா ரைட்களிலும் இருவரும் தனி தனியே…பேலன்ஸ் செய்யவென….இப்பொழுதோ அருகருகே…

எப்பொழுது அவன் கை பற்றினாள் என்பது இருவருக்கும் தெரியாது…..

இறங்கும் போது சற்று தடுமாறியவள் விழுந்துவிடாதபடி அவன் இழுத்துப் பிடிக்கும் போதுதான் அவன் கையை பற்றி இருப்பதையே உணர்ந்தாள்.

மெல்ல கையை விட்டுவிட்டு அவனுடன் இணைந்து நடக்க தொடங்கினாள். எதோ சரி இல்லை.

“இங்க ரெஸ்ட் ரூம்…” அருகில் வந்தவனை திரும்பிப் பார்த்து கேட்க தொடங்கியதுதான் தெரியும். நொடியில் வயிற்றிலிருந்து வெளி நடப்பு செய்தன முந்தி சாப்பிட்ட உணவுப் பொருட்கள்.

அருகிலிருந்த அவன் மேல் அனைத்தும்.

“ஐயோ…சாரி…சர….”அடுத்த முறையும் அவனே இலக்கு.

உடலுக்கு என்ன செய்கிறது என்பதை விடவும் கூட அவனை இப்படி செய்துவிட்டேனே என்பதுதான் பெரிய தவிப்பாக இருக்கிறது அவளுக்கு.

ஆனால் அவனோ சட்டென அவள் பின் புறமாக வந்து அவள் முன் நெற்றியை தன் கையால் தாங்கியபடி..ஓரமாக இருந்த செடி புறமாக அவளை மென்மையாய் திருப்பினான்.

“ஐ’ம் ஆல்ரைட் சரன்…ஸ்டொமக் எம்டி ஆகிட்டு..இனி வாமிட் வராது…” அதன் பின் தான் அவளை விட்டு விலகினான். அருகிலிருந்த அந்த தீம் பார்க் ஊழியரிடம் உதவி கேட்டு தண்ணீர் பாட்டில் கொண்டு வர செய்து அவளுக்கு கொடுத்தான்.

மெல்ல இயல்புக்கு திரும்பினாள் ஷாலு.

“சாரி சரன்…வாமிட் ஆகிற முந்தின நிமிஷம் வரை இப்படின்னு எனக்கு தோணலை….வெரி சாரி…”அவன் உடை இருந்த கோலத்தில் இவளுக்கு அழுகையே வந்துவிடும் போல.

“எனக்கு ஒன்னும் இல்ல…பட் நீ வேண்டாம்னு சொல்லியும்…கடைசி இப்டி செய்ய வச்சுட்டேன்…ப்ச்…சாரி..எல்லோர்ட்டயும் தாமரை இலை தண்ணி மாதிரியே பழகுறியே….ஜஸ்ட் டு மேக் யூ ஃபீல் அட் ஹோம்னு பெர்த் டே செலிப்ரேஷன்னு ஆரம்பிச்சு…கடைசியில…….”

“இல்ல சரன்…ஐ டோண்ட் வாண்ட் டு ஃபீல் அட் ஹோம்…உங்கட்ட நான் ஃபீல் செய்ற ஃப்ரீடம் எனக்கு உலகத்துல எங்கயுமே தோணலை….வீட்டையும் சேர்த்துதான் சொல்றேன்….” இயல்பாக  சொல்லிவிட்டு அவள் நடக்க…..

ஏய் சில் வண்டு….நீ சொல்றதோட அர்த்தம் புரியுதா உனக்கு

அடங்காத ஆழ ஆனந்தத்தின் இரும்பு பிடிக்குள் அவன். இங்கிவளை இவனுள் இழுத்துப் புதைக்க எழுகிறது ஒரு இன்ப சுனாமி.

சீக்கிரம் அம்மாட்ட பேசனும்

அவசரமாக அவளுடன் சென்று சேர்ந்து கொண்டான்.

சற்று தள்ளி இவர்களுக்காக காத்திருந்த அந்த ஊழியர்…” சார் அங்க ஸ்விமிங் ப்ளேஸ் போய்டீங்கன்னா.. அங்க உள்ள பாத் ரூம் நீட்டா இருக்கும்…” என வழி சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.