(Reading time: 30 - 60 minutes)

வள் சாப்பிடத் தொடங்கவும் அவள் தட்டிலிருந்து ஒரு சிறு துண்டு தானும் பிய்த்து சட்னியில் தோய்த்து வாயில் வைத்தான். அவன் அதன் ருசியை எப்படியாய் உணர்ந்தான் என இவளுக்குத் தெரியாது. ஆனால் இவள் அதை ஒரு ப்ரளயமாய் அவளுள் உணர்ந்தாள். இவள் சாப்பாட்டை அவன்….?

 “சாப்ட்ற மாதிரி தான் இருக்குது….பிறகு ஏன் இந்த பொண்னு இப்டி மாட்டிகிட்ட ரஅட் லுக் விடுது…? என தனக்கு தானே கேட்டுக்கொண்டான்.

இதுக்கு மேலயும் இவனை இதே ரீதியில் விட்டால் சரியாக வராது என தோன்ற “ எதோ முக்கிய விஷயம்னு சொன்னீங்க…”

“ அந்த சௌந்தரபாண்டியன் சன்னும் 12த் தான் படிக்கிறான்….புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்…”

“சின்னதிலிருந்தே அப்பாட்ட அஃபீஷியலா மட்டும் தான் பேசிப் பழக்கம்….இனி என்னால முடிஞ்சவரை மாத்திக்க ட்ரைப் பண்றேன்…இன்னைக்கு உண்மையிலேயே ஒரு ஐ ஓபனர்…..”

“குட்...நீங்க சிஸ்டர்ஸ் ரெண்டுபேரும் இப்டிதானா…..அங்கிள்ட்ட கேட் கண்ட ரேட் மாதிரியே பழகுறது…?”

“நானே பரவாயில்லை…அவ இன்னும் அதிகமா பயப்படுவா…” என்ன தைரியத்தில் சொன்னாள் என்று தெரியவில்லை ஷாலுவின் திருமணம் பற்றி அந்த குடிகாரன் உளறிவிட்டு போனதினால் வந்த ஞாபகமாய் இருக்கலாம்

“அவளுக்கு அலையன்ஸ் பார்க்கிறப்ப நீங்க செலக்ட் பண்ணா நல்லா இருக்கும்…..உங்கள மாதிரியே யாராவது…உங்களுக்கு தெரிஞ்சவங்க…”

அவன் பார்வையில் ஏறிக் கொண்டு போன ரசனை இப்பொழுது இவளை இம்சித்தது. குரல் தொண்டையோடு நின்று போனது. எப்படி இப்படி உளறி வைத்தாள்….?

“என்னை மாதிரியேன்னா எப்டி….?”

“………………….”

எதிரில் நின்றவன் இப்பொழுது இன்னுமாய் அருகில் வந்தான். அவள் வாய் அதுவாக தந்தி அடித்தது.

“அது வந்து…இப்டி “

“இப்டி?”

இவன் பதில் வராம விட மாட்டான் போல

“கோபபடமா….ரொம்ப நல்லா பேசி பழகுற மாதிரி…”

“இவ்ளவுதான் சர்டிஃபிகேட்டா…ஓகே இப்போதைக்கு இவ்ளவு போதும்…பைதவே நான் கோப பட மாட்டேன்னு உனக்கு யார் சொன்னா…?...அங்கிள் கொஞ்சம் ஃஸ்ட்ரிக்டா இருக்கிறதால உனக்கு கொஞ்சம் செல்லம் கொடுத்து வச்சுருக்கேன்…..இல்லைனா இன்னைக்கு ஈவ்னிங் புனி உன்னை அங்கிள்ட்ட பேச சொன்னப்ப கூட  பேசாம இப்போ 12 மணிக்கு அப்பா வேணும்னு அழுததுக்கு….”

இதை கொஞ்சல் என்பதா கோபம் என்பதா…?

அவளையும் மீறி எதோ ஜிவ் என்றாலும், மற்றொன்று அவள் விரல் நக பாகத்தை வாய்க்கு எடுத்துச் சென்றது.

“இனி நான் ப்ரி கேஜி டீச்சராக ட்ரெயினிங் போக வேண்டியதான்…” சின்ன சிரிப்புடன் அவன் திரும்பி நடக்க விஷயம் புரிந்து சட்டென  தன் நகத்தை வாயிலிருந்து எடுத்துக் கொண்டாள்.

இரண்டு தோசைகளை சாப்பிட்டு முடித்தபின்னும் இவளுக்கு குழப்பம் தீரவில்லை…அவனை சாப்பிட சொல்வதா வேண்டாமா? நீயே சமைத்து நீயே சாப்பிடு என்பது  என்ன வகை விருந்தோம்பல்? இதை அவனிடம் எப்படிச் சொல்ல?

ஆனால் அவன் முன் அமர்ந்து இவள் மட்டுமாக இப்படி சாப்பிடுவதை மட்டும் விருந்தோம்பலில் சேர்த்துவிட முடியுமா?

“ரஅட் லுக் என்ன தீஃப் லுக்காயிட்டு….?”

“அது…நீங்களும் சாப்டுங்களேன்….”

“ஹப்பா இப்பவாவது கேட்டியே…..நீ எது செய்து தந்தாலும் சாப்டுவேன்…இதெல்லாம் கோல்டன் ஆப்பர்சுனிடி…மிஸ் செய்யவே மாட்டேன்…”

“ஆனா…?”

“இப்ப பார்த்தல்ல அதை அப்டியே ட்ரை பண்னு…அவ்ட் கம் எப்டி இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துப்பேன்…”

தயங்கி தயங்கி என்றாலும் மறுப்பு சொல்லாமல் தோசை வார்த்தாள் அவன் மேற்பார்வையில்…..

திருப்பிப் போட கரண்டியை வைத்தால் இருந்த பதற்றத்தில் கை நடுங்கியது. 10த் எக்‌ஃஸாமுக்கு கூட இவள் இப்படி மனமொன்றி ஜெபித்திருப்பாளா தெரியவில்லை. கண்மூடி மானசீகமாக மன்றாடினாள்.

ஏசப்பா தோசை பிய்யாம வரணும்….இனிமே அப்பப்ப மூவி பார்க்கிறதை விட்டுடுறேன்….ஷாலு கூட சண்டை போடுறதையும் தான்மனசுக்குள்ள அப்பாவை திட்டுறதையும் தான்

பொருத்தனை லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே போனலும் கண்ணை திறந்து தோசைக்கு அடியில் கரண்டியை நீட்ட மனம் வரவே இல்லை.

அவள் கையோடு கரண்டியைப் பிடித்து தோசையை திருப்பினான். இவர்களது முதல் கூட்டு முயற்சி சொதப்பவில்லை.

“எக்ஸலண்ட்” அவன் சத்தம் இவள் காதை உரசிய விதத்தில் புரிந்தது அவன் அவளுக்கு எத்தனை அருகில் இருக்கிறான் என. முழு உடலும் வெடவெடத்தது இளையவளுக்கு.

உணர்ந்தானோ? வெகுவாய் தள்ளி போய் நின்று கொண்டான்.

தோசையை தட்டிலிட்டு அவன் செய்த சட்னியுடன் அவனிடம் அவள் நீட்டிய நேரத்தில் வீட்டில் காலிங்க் பெல் சத்தம். உயிர் போயேவிட்டது ரேயாவிற்கு. வந்திருப்பது யாரென்று நிச்சயமாக அவளுக்கு தெரியும்.

ஷாலுவின் முறைப்பை எதிர் பார்த்திருந்த சரித்ரனுக்கு இந்த அவளது கண்ணீர் எதிர்பாராத விஷயம்.

“என்னாச்சு ஷாலு…?”

அவசரமாக இவளிடம் வந்தான்.

“இன்னைக்கு என் பர்த்டே இல்ல…”

“பல்ப்பு வாங்கிட்டேனா…..அதுக்கா இவ்ளவு ஃபீல் செய்ற…கவலை படாத உன் ஒரிஜனல் பெர்த் டேயை இதவிட ஸ்பெஷலா செய்துடுவோம்…”

எதற்காகவாவது அவள் மன நிலை மாறிவிடாதா என்றிருந்தது அவனுக்கு. அழுது வைக்கிறாளே

இல்லை என்பதாக தலை அசைத்தவள் “என்னோட 6த் பெர்த் டே அன்னைக்கு தான் அம்மா இறந்தது. அதனால என் பெர்த் டேவை செலிப்ரேட் செய்றதே இல்லை. ஏதோ எரர்ல என் டேட்டா பெர்த் தை இப்டி மாத்தி என்ற்றி செய்துருக்காங்க ஸ்கூல்ல……அது அப்டியே கன்டின்யூ ஆகுது…”

“ஓ…உன் சர்டிஃபிகேட்ஸோட ஃபோட்டோ காபி அத்தை வீட்ல இருந்துது அதிலதான் பார்த்தேன்…சாரி…சந்தோஷ படுத்த நினைச்சு அழ வச்சுட்டேன்…..”

“இல்ல அம்மா ஞாபகம் கஷ்டமா இருக்குதுனாலும்…..இதுவரை எனக்கு என் பிறந்த நாள் கொண்டாடின ஞாபகம் கூட கிடையாது…இப்போ ஐ ட்ரூலி ஃபெல்ட் ஸ்பெஷல்….தேங்க்ஸ்..”

மென் வருடலாய்  ஒரு பார்வை பார்த்தான். “ஹேய் வா வா சீக்கிரம் கேண்டிலை ப்ளோ செய்..” பிறந்த நாள் கொண்டாட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது. கேக்கை கட் செய்தவள் ஒரு துண்டை எடுத்து சுற்று முற்றும் அதை வைத்து பரிமாற எதாவது இருக்கிறதா என பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என்றவுடன் அத் துண்டை தன் உள்ளங்கையில் வைத்து அவனிடம் நீட்டினாள்.

கேக்கை எடுத்து அவன் வாயில் கொடுக்க பெண்மை ஒத்துழைக்கவில்லை என்றாலும் அதன் பின் அவனிடம் மனம் திறக்க அவளுக்கு தடை தோன்றவில்லை. அவனிடம் பேச தோன்றிய அனைத்தையும் பேச தொடங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.