(Reading time: 30 - 60 minutes)

ப்ரவாயில்ல இந்த மொபைல் காலத்திலும் உங்கப்ப நம்பர்ஸ் நீட்டா மெயின்டைன் செய்றாங்க….” அவன் சொல்லியபடியே  அந்த டைரியை திறக்க அப்பா எல்லாத்திலும் டிசிப்ளிண்ட் தான் என்ற ஒரு பெருமையான எண்ணம் மனம் கடக்கிறது இவளுள்.

“இங்க 3 சௌந்தரபாண்டியன் இருக்குது…அதுல …?” அவன் எதையோ வாசிக்க, இவளுக்கு பொறுமை இன்றி போனது

“எல்லாத்தையும் கூப்பிடுங்க…”

“இல்லமா மீதி ரெண்டு பேருக்கும் உன் அப்பாவை காணோம்னு நாமளே கூப்ட்டு சொன்ன மாதிரி இருக்கும்…தேவையில்லாம…”

“அதனாலென்ன பரவாயில்ல….கூப்டுங்க ஆதிக்….” ஒரு கணம் இவளை திரும்பிப் பார்த்தவன் ஒரு எண்ணை அழைத்தான்.

அந்த எண்ணும் சுவிட்ச்ட் ஆஃப்.

அதன் அருகிலிருந்த ரெசிடண்ஸ் என்ற எண்ணை அழைத்தான்.

“அப்பா காரையார் போயிருக்காங்க….திரும்பி வர்ற வழியில மரம் விழுந்து ரோடை ப்ளாக் செய்துட்டு….வர லேட்டாகும்…..இல்லைனா காலைல தான் வருவேன்னு சொன்னாங்க…”

“ஆமா…ராஜ்குமார் அங்கிள் கூட தான் போயிருக்காங்க…எங்க ப்ராபர்டி ஒன்ன அவங்களுக்கு விக்றதா ப்ளான் அதை பார்க்க போயிருக்காங்க…”

என்ற இந்த இரண்டு வரி பதில்களில் அந்த சௌந்தரபாண்டியனின்  மகன் இவர்களுக்கு தேவையான விஷயம் சொன்னான்.

காரையார் முண்டந்துறை புலிகள்

சரணாலயத்திற்குள் இருக்கும் ஒரு மலைப் பகுதி. பாதை அடைபட்டால் இதுதான் கதி.

நிம்மதி நெஞ்சை நிறைத்தது ரேயாவுக்கு.

“ரொம்ப ரொம்ப தேங்க்‌ஸ்…”

அவன் அவளை ஒருவித இளகலற்ற முக பாவத்துடன் பார்த்தான்.

“நீங்க செய்த எல்லா ஹெல்புக்கும் ….” அவன் முகபாவத்தில் அப்படியே வாயோடு நின்று போயின வார்த்தைகள்.

“என்னாச்சு….?” புரியாமல் பார்த்தாள்.

“உனக்கு எப்டி தேங்க்ஸ் சொல்லனும்னு தெரியலை ரேயு…” அவன் முக பாவத்தில் எந்த மாறுபாடும் இன்றி உதடசைத்து சொல்ல

கதைகளில் படித்த எதேதோ ஞாபகம் வர மிரண்டு முழித்தாள் பெண்.

சிறு சிரிப்புடன் “என் பேரைவிட்டுட்டியேன்னு சொன்னேன்” என்றான். அப்பொழுதுதான் சற்று முன்பாக அவனை பெயர் சொல்லி அழைத்திருப்பதே அவளுக்கு உறைத்தது. எப்படி இவளை பயம்காட்டி விட்டான்!!

எப்படியும் இவளைவிட மூத்தவன். கண்டிப்பாக வேறு யாரையும் இவளால் இப்படி கூப்பிட முடியாது. ஆனால் இவனை வேறு எப்படியும் கூப்பிட முடியாது. புரிந்திருக்குமோ அவனுக்கு?

“அடுத்த தடவை பேர் சொல்லி கூப்டலைனா…அத்தான்னு ஆயிரம் தடவை சொல்ல சொல்லி இம்போஷிஷன் கொடுப்பேன்…” அன்ன சிறகு மென்மைக் குரலில் சொல்லிவிட்டு அவன் இவளை கடந்து போக ஆடி மாத காற்றுக் கலவரம் அவளுள்.

இத்தனைக்கும் இவள் மாமா மகன்களை அத்தான் என்று அழைப்பதுதான். அதற்கும் அண்ணன் என்ற பதத்திற்கும் இன்றுவரை வேறுபாடு தெரிந்ததில்லை. ஆனால் இவன் சொல்லிவிட்டு போக புல்லாங்குழலாகிப் போகிறது தேகம்…

மெல்ல தயங்கி தயங்கி அவனைப் பின் தொடர்ந்து படி இறங்கினாள்.

“அங்கிள் காரையார்ல ஃஸ்ட்ரக் ஆகிடாங்க போல….வந்துடுவாங்க…நீ போய் படு புனி…உனக்குத்தான் 11 மணியே கண்ணுல தெரியாதே…” அவன் புனிதாவைப் பார்த்து  சொல்லவும் தான் எல்லோரையும் கவனிக்கும் விருந்தோம்பல் வேலை என்று ஒன்று இருப்பதே ஞாபகம் வருகிறது ரேயாவிற்கு.

“இந்த ரூமை யூஸ் செய்துக்கோங்க…. ரொம்ப தேங்கஸ் மேம்…” அவசரமாக உபசரித்தாள்.

“இந்த பொண்ணை என்னடா செய்யலாம்…..வேணும்னா கட்டி பிடிச்சுட்டு அழுறா…வேலை முடிஞ்சதும் மேம்னு சொல்றா…?”

“நான் ஆயிரம் தடவை இம்போஷிஷன்னு சொல்லிருக்கேன்….நீ உன் பங்குக்கு எதாவது வச்சுக்கோ…” அவன் படு கேஷுவலாக சொல்லிவிட்டுப் போக புரையேறியது ரேயாவுக்கு. விளக்கம் கேட்டால் அத்தான் கதையை புனிதாவிடம் சொல்லவா முடியும்..?

“ஆயிரம் தடவையா….அப்டி என்னதா இருக்கும்…?” வாய்விட்டு யோசித்தபடி புனிதா சென்றுவிட இவள் ஆப்பசைத்த குரங்கின் பார்வை ஒன்றை அவன் புறமாக வீசிவிட்டு அவசரமாக புனிதாவை நோக்கி போனாள்.

“தூங்குறதுக்கு மட்டும் அவளுக்கு நீ ஒன்னும் சொல்லி தர வேண்டாம்…அவளுக்கா செய்ய தெரிஞ்ச ஒரே விஷயம் அதுதான் நீ வா…..இங்க கொஞ்சம் வேலை இருக்குது…”

அவசரமாக அவனைப் பார்த்து ஓடினாள். என்னதாயிருக்கும்? அவன் டைனிங் ஹாலை கடந்து சமையலறைக்குள் செல்ல ரேயாவுக்கு உதறலெடுத்தது. காஃபி கேட்டால் கூட போட தெரியாதே….

ஆனால் அவனோ சமையலறையை ஒரு சுத்து சுத்தி வந்தவன், ஃப்ரிட்ஜை திறந்து ஒரு பார்வை பார்த்தான்.

“சாப்ட ஃப்ரூட்ஸ் இருக்குது எடுத்து வைக்கட்டுமா..?....ஆ…திக்…” அவளால் முடிந்ததைக் கேட்டாள். அவன் விழித்த விதத்தில் வந்து ஒட்டிக் கொண்டது அந்த ஆதிக்.

“அது கடைசியா பார்த்துகிடலாம்..”

ஹான்…? அதுக்கு முன்னால என்னால தர முடிஞ்சது சுடு தண்ணி தான்

“என் பேர் சிலர்க்கு இவ்ளவு திக் திக்னு இருக்கும்னு தெரியாம போச்சே….பைதவே ரேஸ்….உனக்கு குக்கிங் தெரியாதுதான..?”

அசடு வழிய ஒரு பார்வை பார்த்தாள். “பானுக்கா கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தாங்க….பால் காய்…சீக்கிரம் பழகிடுவேன்…”

“ஹேய்….என்ன நீ……அப்டில்லாம் அவசரபட்டு எதையும் செய்துடாத… பொண்ணுங்கல்லாம் கல்யாணத்துக்கு பிறகு ஹஸ்பண்ட் கையாலதான் இதெல்லாம் கத்துகிடனும்…அப்பதான் லைஃப் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்….”

விரிந்த கற்பனைக்கு விலங்கிட வழி தெரியவில்லை அவளுக்கு…

ஓகே…ஆந்தைக்கண்ணை ஆப்பிள் சைஸுக்கு விரிக்க முடியும்னு அத்தானுக்கு புரிஞ்சிட்டுது…..அத அப்புறமா கவனிப்போம்…முதல்ல இப்டி உட்காரு….உன்ட்ட முக்கியமான விஷயம் பேசனும்…” சமயலறை மேடையில் ஒரு இடத்தை காண்பித்தான். அவள் ‘பே’ என்ற பார்வை

“ஏற எதாவது ஹெல்ப் வேணுமா?” என்ற அவனது அடுத்த கேள்வியில் காணமல் போயிருந்தது. அவசரமாக அங்கு ஏறி அமர்ந்தாள்.

இதற்குள் அவன் தேங்காயை எடுத்து உடைத்து தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்டினான். “பிடிக்குமா…? என் வீட்ல இதுக்கு சண்டை போட்டுப்போம் நானும் சிமியும்…”

எப்ப தேங்கா உடைக்காங்கஎப்ப சட்னி அரைக்காங்கன்னு எனக்கு எங்க தெரியும்

இவள் ஆ என பார்த்துக் கொண்டிருந்த இரு நிமிடத்தில் சட்னி அரைத்து தோசை வார்த்து அதை ஒரு தட்டிலிட்டு அவள் கையில் வைத்தான்.

தட்டை பிடித்துக் கொண்டாலும்,செய்வதறியாது அவனைப் பார்த்தாள். இவள் வீட்டில் வந்து இவளுக்கு இத்தனை மணிக்கு சமைத்து…….இருந்த மன நிலையில் இவள் மாலை வீட்டிற்கு வந்ததிலிருந்து எதையும் சாப்பிடவில்லை தான் இருந்தாலும்…

“சாப்ட மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா ஊட்டிதான் விடனும்….” அவன் சொல்லவும் அவசரமாக அதைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.