(Reading time: 22 - 44 minutes)

05. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

தினமும் இரவில் உறங்குவதற்கு முன்பு வினிதா ஒரு தண்ணீர் பாட்டலும் அதன் அருகே கண்ணாடி குவளையும் வைப்பதை வழக்கமாகிக் கொண்டாள்.

அதை அவளில் கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள மேஜையில் வைத்து விடுவாள். முடிந்த வரையில் இரவு நேரத்தில் அவள் தனது அறையை விட்டு அனாவசியமாக வெளியே செல்லுவது இல்லை. ஆனால் இன்று?

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வினிதா. எப்போதும் அறையில் தனியாக உறங்குவும் அவளுக்காகவே காத்திருந்தது அந்த நள்ளிரவு. இமைக்கும் நொடியில் அவள் அறைக்குள் ஏதோ நுழைந்தது போல சூன்யமாய் இருந்தது.

Nizhalaai unnai thodarum

கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளின் மிக அருகில் சென்றது அந்த உருவம். 

கண்ணாடி குவளை, தரையில் கீழே விழுந்து சிதறும் சத்தத்தில் பதட்டமாய் வினிதா கண் விழிக்கும் முன் அவள் முகத்தில் சில்லென்ற நீரை யாரோ ஊற்றினார்கள்.

உறக்கத்தில் எழுப்புவது யார் என கோபம் அடைந்து அவள் முகத்தை கை கொண்டு துடைத்து இமையை திறந்தாள் வினிதா.

அவள் முகத்திற்கு வெகு அருகே கருகிய கோவமான முகத்தை கண்டு உறைந்தே போனாள்.

கைகள் இரண்டையும் அசைக்க கூட முடியாமல் திணறியவள், "ஆ" என்று அலற சட்டென அவளால் அலறவும் இயலாமல் போனது.

யாரோ அவளின் கழுத்தை பிடித்து நேருக்குவதை போல் ஒர் உணர்வு.

அவள் இனி கத்தமாட்டாள் என்பதை உறுதி செய்வது போல் அந்த உருவம் கொஞ்சம் நகர்ந்தது.

இமைக்கவும் மறந்தவள் அந்த கோவமான முகத்தையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கண்கள் அந்த கோரமான முகத்தை விட்டு அகல வில்லை. வினாடிக்கும் குறைவான நேரத்தில் அந்த உருவம் மறைந்தும் போனது. அசையாமல் இருந்தவளின் முகத்தில் நீர்த்திவலைகள் நனைத்திருப்பதை கூட உணரமல் இருந்தாள் வினிதா..

வினிதாவின் அலறல் சத்தம் கேட்டு சித்ரா அவளின் அறை கதவை பட பட வென தட்டும் சத்ததில் திடுக்கெட்டு எழுந்து அமர்ந்தாள் அவள்.

"யா… யா… யாரு?" பயத்தினால் அவளின் குரல் நடுங்கியது.

"வினி நான் தான் சித்ரா"

"யாரு?" அது சித்ராவின் குரலாய் இருந்தும் கூட, அவளால் அதை நம்ப முடியாமல் மீண்டும் கேட்டாள்.

"வினிதா நாங்க தான்" இப்போது அனிதாவின் குரலும் தெளிவாக கேட்க, அவளால் கட்டிலை விட்டு நகர முடியவில்லை.

பயத்தில் இரண்டு கால்களும் நடுங்க, அறைக்கு வெளியே இருப்பது சித்ராவும் அனிதாவும் இருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. 

"என்…. என்ன, ஏன் இரண்டு பேரும் இப்படி கதவை தட்டறிங்க?" என்றாள் வினிதா சந்தேகமாய் 

"உன் ரூம்ல இருந்து அலறல் சத்தம் கேட்டது, நீ எதுக்கு கதவை திறக்கம உள்ள இருந்து பேசற?"

சற்று முன் தான் அலறியதை கூட உணராதவள் "ஒன்னும் இல்ல, எனக்கு எந்த சத்தமும் கேட்டவில்லை… நீங்க போங்க" என்றாள்.

"கதவை திற வினி… நாங்க உள்ள வாறோம்"

இன்னமும் அவளால் அறைக்கு வெளியே இருப்பது அவர்கள் என நம்பமுடியவில்லை. அதனால் "எனக்கு… எனக்கு தூக்கம் வருது… நான் தூங்க போரென்" என்று சொன்னவள் அசையாமல் அதே இடத்தில் இருந்தவள் அவர்கள் செல்லுவதற்காக காத்திருந்தாள் வினிதா.

"உன் குரலை கேட்க தூக்கத்தில் பேசது மாதிரி தெரியல வினி" சற்று நேரம் அவள் கதவு திறப்பதிற்கு காத்திருந்தனர் இருவரும் பிறகு அவர்களின் அறைக்கு சென்றனர். 

அவர்கள் செல்லுவது கதவின் அடியில் அவர்களின் நிழல்கள் வழி தெரிய, அப்போதுதான் வினிதாவிற்கு உண்மையில் அவர்கள் தான் வெளியே இருந்தது என புரிந்தது.

எழுந்து சித்ராவின் அறைக்கு செல்ல யோசித்தாள் உடனே அந்த எண்ணத்தை கைவிட்டாள். நடந்ததை சொல்லி அவர்களை பய முறுத்த அவளுக்கு விறுப்பம் இல்லை.

ஒருவேளை அவர்கள் நம்ப மறுத்தால்!, அதுவும் அனிதா பேய், பிசாசு அப்படி எதும் இல்லை. இவை எல்லாம் கற்பனை சொல்லும் ரகம். சித்ராவிற்கு பயமாக இருந்தாலும் அவள் ஒற்றுக் கொள்ளமாட்டாள். 

அடுத்து என்ன செய்வது யோசித்தவளுக்கு ருபனின் நண்பன் மகேனின் நினைவு வந்தது. ருபனை சத்திக்க அவனது அலுவழகத்திற்கு சென்ற போது மகேனுக்கும் ருபனுக்கும் ஏதோ ஒன்றை பற்றி வாக்கு வாதம் செய்தனர்.

அந்த நேரத்தில் அவளை அங்கு பார்த்ததும் அதை அப்படியே நிறுத்து விட்டனர். அதன் பிறகு மகேனுக்கு வினிதாவை அறிமுகம் செய்து வைத்தான்.  

மகேன் கோவத்தில் இருந்தால், அவளை பார்த்து ஒரு புன்னகை புரிந்தவன், அவனின் நேம் காட் அவளிம் கொடுத்து அங்கு இருந்து சென்றுவிட்டான். 

ருபனிடம் விசரித்ததில் மகேனுக்கு பேய்யை பற்றி பல ஆய்வுகளை செய்வதில் அதிக விருப்பம் ஆனால் அது ருபனுக்கு பிடிக்காதால் அவர்கள் இருவருக்கும் சிறு சிறு வாக்கு வாதங்கள் வருவது உண்டு. அதனால் தான் இன்று இருவருக்கும் சின்ன வாக்குவாதம் என கூறி முடித்துவிட்டான்.

வினிதாவிற்கும் அதில் ஆற்வம் இல்லாதால் அதனை பற்றி மேலும் கேட்கவில்லை. மகேனின் நேம் காட்டை அவளின் ஹன்ட்பாக்கில் வைத்தாள்.

அன்று எங்கோ வைத்த அந்த நேம் காட்டை அவளின் ஹன்ட்பாக்கில் உள்ள அனைத்து பொருட்களையும் கீழே கொட்டி அவனின் நம்பரை தேடி எடுத்தாள்.

அந்த விடிந்தும் விடியாத காலை பொழுதில் மகேனுக்கு அழைக்க, அது ச்வித் ஆப் (switch off)) தெரிவித்தது.

மகேனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியவள், அவனின் அழைப்பிக்காக காத்து இருந்தாள். முழுவதுமாக தூக்கம் கலைந்தால், கொஞ்ச நேரம் படுத்துக்கலாம் என நினைத்து சாய்ந்தவள் மெத்தை ஈரமாக இருப்பதை உணர்ந்தாள்.

"ச்சே இது வேற"  என சலித்துக் கொண்டவள் எழுந்தறிக்க மனம் இல்லாமல், அதன் மேல் படுத்து இருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

கதிரவன் மெல்ல தனது வெளிச்சத்தை காட்டி இன்னும் சற்று நேரத்தில் தான் வந்துவிடுவேன் என உறிதி படுத்தியது.

கேன் அவனின் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சில்லென விசும் காற்றுக்கு அவனால் எழுந்தறிக்க மனம் இல்லமால், அவனின் காதுக்கு அருகே கேட்டும் அலரத்தை நிறுத்தி மீண்டும் உறங்கினான்.

அவனின் அறைக்குள்  ஓர் வாலி அந்தரத்தில் பறந்து வந்து மகேனின் முகத்தில் தண்ணீரை ஊற்றியது.

சில்லேன தண்ணீர் மேலே பட்டு அவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.