(Reading time: 22 - 44 minutes)

ங்கே ஒரு பெண்ணின் சந்தோஷமான சிரிப்பொழி மட்டும் அந்த அறையில் எதிர் ஒலித்தது.  

“இப்போ எதுக்கு குட்டிம்மா என்னை இப்படி எழுப்பிவிட்ட”, அவன் ஒருவன் அங்கு பேச அந்த வாலி மீண்டும் அந்தரத்தில் பறந்து செல்ல, ஐயோ என அலறியவன் அவசரமாக குளியல் அறைக்குள் நுழைந்தான்.

குளித்து உடை மாற்றி அறைக்கு வெளியே வந்தவனின் கண்கள் எதையோ தேடி அலைந்தது.

அறைக்கு வெளியே  இருக்கும் சோபாவில் அன்றைய செய்தி தாள் யாரோ புரட்டிக் கொண்டிருப்தை பார்த்து “வர வர உன் அட்டகாசத்திற்கு அளவு இல்லாமல் போகிவிட்டது குட்டிம்மா, இப்பொ யார் அதை எல்லாம் சுத்தம் படுத்தறது”

அவன் தனியே பேசிக் கொண்டு இருக்க, அங்கே அவன் அழைக்கும் குட்டிம்மா காற்றில் கரைந்து போனது. “நீ எங்க போனலும் மீண்டும் இங்க வந்து தான் ஆகனும் அப்போ இருக்கு….” சொல்லிக் கொண்டு போனவனின் தலையில் வாலி வந்து வில அவனின் பேச்சு பதியில் நின்னுப் போனது.

அவனது அறையை சுத்தம் செய்த பின்னர், போனை ஒன் செய்ய வினிதா அனுப்பிய மெசேஜ் அவனுக்கு கிடைத்தது. அவனுக்கு அவள் யார் என்று தெரியவில்லை.

அவனை அவசரமாக தொடர்பு கொள்ளும் வினிதா மட்டும் இருந்தது. அவனுக்கு அவள் யார் என்று தெரியாதலால் முதலில் அவள் அனுப்பிய நேரத்தை பார்த்தான்.

அதிகாலை நேரத்தில் அவள் அவனை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் என்ன? சற்று நேரம் யோசித்தவன் மதிய வேளையில் அவளை அழைப்பதாக மெசேஜ் அனுப்பினான்.

ட பட கதவு தட்டும் சத்ததில் வினிதா திடுக்கேட்டு எழுந்தாள். மனதினில் பயம் சூழ அசையாமல் அங்கேயே அமர்ந்தாள். அவளின் கண்கள் அந்த கதவையே வெறிக்க, சிற்று நேரத்தில் கதவை தட்டுவது நின்றும் போனது.

வினிதா மேத்தையின் மேல் கையை வைக்க அதில் ஈரம் இல்லாமல் இருந்தது. அவரமாக மேஜையை பார்க்கையில் இரவில் வைக்கப்பட்ட பாட்டாலும் குவளையும் அதே இடத்தில் இருந்தது.

ஒரு வேலை இரவில் நடந்தது எல்லாம் கனவோ அவள் நினைக்கையில் அவளில் கை தொலைபேசி ஆலரியதில் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. 

பயத்துடனே அவள் அதை எடுத்து பார்க்கயில் சித்ராவின் பெயர் மின்னிக் கொண்டிருந்தது. ஒரு நிம்மதி பெருமூச்சையை விட்டு அதை எடுத்து காதுக்கு குடுத்தாள்.

“ஏய் தூங்க முஞ்சி நாங்க கடைக்கு போறோம் நீ வரியா?”

“பிசாசு யார்டி தூங்க முஞ்சி” கேட்டுக் கொண்டு கதவை திறக்க, அங்கே வெளியே  செல்லுவதற்கு  சித்ராவும் அனிதாவும் தயறாக இருந்தனர்.

“ஹெ என்னை தனியா விட்டு நீங்க இரண்டும் பேரும் எங்க போறிங்க”

“ஆமா இவை சின்னப் பாப்பா எங்க போனலும் கூட கூட்டி போக.”

“எங்க போறிங்கன்னு கேட்டேன், அதற்கு பதில் சொல்லாமல், ஏதுக்கு தேவை இல்லததை பேசற” கடுப்புடன் அவள் கேட்க

“வினி இன்னைக்கு நாங்க சமைக்க போறோம். அதற்கு சில திங்ச் வாங்க தான் போகிறோம்” 

“அதுக்கு ஏன்டி என்னை எழுப்பி விட்டாய்" சந்தேகத்துடன் சித்ராவை பார்த்தாள்.

“வினி செல்லம் நீ கிட்ச்சன் கிலின் பண்ணி வை. அப்பறம் முக்கியமான விஷயம் இன்னைக்கு எங்களுக்கு நீ தான் டெஸ்டிங் மௌஸ் சோ எங்கேயும் போகாத முக்கியாம இதை சொல்ல தான் உன்னை நான் எழுப்பி விட்டேனே” சித்ரா சிறு பிள்ளை போல் சொல்லுவதை கேட்டு வினிதா முறைத்தாள்.

“நோ கோவம் பேபி, சின்ன பிள்ளையை பார்த்து முறைக்க எல்லாம் கூடாது.”

“தெய்வமே உன் காதில் வேனும்ன்னா விழுவறேன், தயவு செய்து நீ மட்டும் சமைக்காதே!” வினிதா பயத்துடன் சொல்லுவதை அனிதா மிக சுவரிசியமாக கேட்டாள்.

“பயப்படுபட வேண்டாம் வினி நான் நல்ல சமைப்பனா”

“அது தான் என் பயமே! நீ சமைத்தை உன்னை நம்பி சாப்பிட்டு மூன்று நாட்கள் ஹோச்பிட்டலில் இருந்தேனே.” பாவமாக வினிதா சொன்னாள்.

அவ்வளவு நேரம் இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு கொண்டுருந்த அனிதா  சத்தமாக சிரித்தாள்.

“வினி உனக்கு ஃபோட் பைசான், அதும் வெளியே உணவு வாங்கி சாப்பிட்டதால்ன்னு நினைசேன்...  இப்பொ தான் தெரியுது  இது எல்லாம் உள்நாட்டு சதின்னு.”

“என் நிலையை பார்த்த உனக்கு சிரிப்ப இருக்கா” என்றாள் கடுப்புடன்

“டொன்ட் வொர்ரி வினி இன்னைக்கு நான் தான் சமைக்க போறேன்.”

“அப்பாடா, இதை முன்னவே சொல்லறது இல்ல..” என்றவள் ஒரு நிம்மதி பெருமூச்சுவுடன்  அனிதாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“பிசாசுங்களா, என் சமையலியா கிண்டல் பண்ணறிங்க, அன்றைக்கு ஏதோ போர்மிலா கொஞ்சம் தாப்பா போச்சி”

“என்னது போர்மிலா, அடியே சமையலுக்கு எதுக்கு போர்மிலா.. இல்ல ரெசிபியைதான் போர்மிலா மாற்றி சொல்லறியா? ” வினிதா அதிர்ச்சியுடன் சித்ராவிடம் கேட்க

அனிதாவோ “சித்து இந்த பேய் பிசாசு எல்லாம் விரட்ட மாத்திரவதி தேவையே  இல்ல. உன் சமையலை மட்டும் அதுங்க சாப்பிட்டா போதும். அடுத்து அவை எல்லாம் நீ இருக்கிற பக்கமே தலை வைத்து கூட படுக்காது”.

வினிதா அவளுக்கு ஹிபை கொடுக்க, இருவரும் சத்தமாக சிரித்தனர்.

“ஏதோ அன்றைக்கு நீ பசியில் இருக்கும் போது எனக்கு தெரிந்ததை சமைத்து கொடுத்தேன். அதையை நீ கின்டல் பண்ணத… இப்போ நீங்க இருவரும் சிரிக்கறதை நிப்பட்டுறிங்களா.” சித்ரா கோவமகாக சொன்னாள்.

“உன் சமையல் பெருமையை தானே பேசறோம், அதுக்கு ஏன் நீ கோவப் படுகிறாய்” அனிதாவின் கேள்விக்கு

“ஒரு நாளைக்கு சமைக்கறதை நீங்க இரண்டு பேரும் ரசித்து ருசித்து சாப்பிடதான் போறிங்க” சாவல் விடும் தோரனையில் அவள் சொல்ல.

“அதுக்குள்ள நாங்க கல்யானமும் பண்ணி பேற குழந்தையே எடுத்திடுவோம்” அனிதா சிரிப்புடன் சொல்லி மீண்டும் ஒரு முறை ஹிபை கொடுத்துக் கொண்டனர்.

சித்ரா சிறுபிள்ளை போல் காலை தரையில் உதைத்து, அவர்களுக்கு எதிறில் உள்ள சோபாவில்  சென்று  அமர்ந்து அவர்களை பார்த்து முறைத்தாள்.

“வினி இதுக்கு மேல் இங்க இருந்தால் இந்த மாரியாத்தா மலை ஏறிவிடுவாள்.  நாங்க கிளம்புகிறோம்.. ஹன் சொல்ல மறந்துடேன் நான் கிட்சன் கிலின் பண்ணிடேன்” என்றவள் வலுகட்டயாமாக சித்ராவின் கையைப் பிடித்து இலுத்து சென்றாள்.

அவர்கள் சென்றதும் கதவை அடைத்து கிட்ச்சனுக்கு சென்று பார்க்க அது பளிச்சுன்னு சுத்தமாக இருந்தது.

குளித்து வேறு உடை மாற்றி வந்தவள் அவளின் லாப்டாப் ஒன் செய்து அவளுக்கு பிடித்தாமான ஹொவ் டு நேம் இட் ப்ளே இசையை லிஸ்ட் ஒலிக்க விட்டு அவளின் அறையை சுத்தம் செய்ய தொடங்கினாள்.

“பாத்ரூம் மட்டும் கழுவி விட்டால் எல்லாம் வேலையும் முடிந்தது விடும். இப்போ ஒரு குட்டி ப்ரேக் எடுத்துக்கலாம்” தனக்கு தானே சொல்லியவள். காப்பி கலக்க கிட்சென்னுக்கு சென்றாள்.

அவளுக்கு பிடித்த ப்ளாக் காப்பியை கலந்து ஓர் மக்கிலும் பிளஸ்சிலும் ஊற்றியவள் மெல்ல உறுஞ்சி அதை ரசித்து குடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.