(Reading time: 22 - 44 minutes)

கையில் மக்கை எடுத்துக் கொண்டு பாடியும் மெல்ல ஆடியும் அவளின் அறைக்கு செல்ல அங்கு லாப்டாப்பில் ஒளியேறின இசை நிறுத்தப் பட்டு இருந்தது.

“ஐ நான் ரிப்ளே தானே வைத்தேன் ஹ்ம்ம்”. அதை மீண்டும் ப்லே பட்டன் தட்டி விட்டு அவள் திரும்பும் போது அந்த ஆடியோ சுயமாக நின்றது.

வினிதா குழப்பத்துடன் அருகே சென்று மீண்டும் ப்லே பட்டன் தட்டி விட்டு அவள் திரும்ப அவளின் கப்பிள் இருந்த காப்பி மேஜையில் கொட்டியது.

லாப்டாப் எடுத்து கட்டில் மேல் வைத்து அந்த இடத்தை சுத்த்ம் செய்தவளுக்கு பின்னால் யாரோ அவளை உற்று பார்ப்பது போல் தோன்றியது.

கதவு திறந்த சத்தம் கூட கேட்டவில்லையே யோசனையின் பின்னால் பார்க்கையில், அவளின் அறை வாசலில் எரிந்து கருகி போன நிலையில் உடலும், கலுத்தில் இருந்து இரத்தம் வெளியேரின நிலையில் இருந்த உருவத்தை கண்டு திகைத்தாள். 

எவ்வளவு நேரம் அசையமால் அதே இடத்தில் நின்றாள் என அவளுக்கு தெரியாது.

சித்ரா வந்து உழுக்கவும் திடுக்கிட்டு கத்த போனவளை

“வினி நாங்க தான். கத்தி ஊரை கூட்டாதே!” என எச்சரித்தாள்.

“நீ… நீ” அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. மாறாக அவளின் உடல் பயத்தில் நடுங்கியது. அதே இடத்தில் அப்படியே உற்காந்து விட்டாள்.

“eh வினி என்ன”

“ஐ அம் ஒகே. நீ எப்போ வந்தேன்னு சொல்லு”

“நாங்க வந்து ஒரு ஐந்து நிமிடம் இருக்கும். நீ தான் சிலை மாதிரி அசையாமல் இருந்த. உனக்கு என்ன தான் ஆகிவிட்டது.”

“ஒன்னும் இல்லே அனிதா. நான் நல்ல இருக்கேன்” பெயர் மாற்றி சொன்னவளை ஊற்றுப் பார்த்து

“அதான் தெரியுதே. நீ எவ்வளவு நல்ல இருக்கன்னு. நைட்லே பயத்துலே கத்தற.. என்னன்னு கேட்டு கதவை தட்டினா இப்பொ சொன்னியே ஒன்னும் இல்லன்னு அதையேதான் சொல்லற. முதலில் உனக்கு வேப்பில்லை அடிக்கனும்.” சித்ரா வினிதாவின் முக மாற்றத்தை கவனிக்காமல் அனிதாவிற்கு உதவி செய்ய கிட்சனுக்கு சென்று விட்டாள்.

இவ சொல்லறதை பார்த்த இரவில் நடந்த அனைத்தும் அது கனவு இல்லையா. எப்படி? தண்ணி பாட்டாலில் தண்ணீர் அப்படியே தானே இருந்தது.

வினிதா அவளின் கைதொலை பேசியை எடுத்து பார்க்கையில் அவள் மகேனுக்கு அனுப்பிய மெசேஜ் இருந்தது.

அதை பார்தவள் தலையில் கை வைத்து அப்படியே கட்டிலில் உற்காந்து விட்டாள். காலையில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்தது போல் இருந்தது.

நாட்கள் அதன் போக்கில் வேகமாய் நகர்ந்து சென்றன. வினிதாவின் வீட்டில் நடக்கும் மர்ம நிகழ்வுகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்தது.  அதே சமயம் அனிதாவும் சித்ராவும் அதை உணர்ந்து இருந்தனர்.

இவர்கள் யாராவது ஒருவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் போது பல தொல்லைகள் மற்றும் வித்தியாசமான சத்தங்கள் மட்டும் கேட்கும். முக்கியமாக வினிதாவின் அறையில்!

ஒருமுறை அனிதா சமைக்க காய்களை நறுக்கி கொண்டிருந்த போது காலிங் பெல் சத்தம் கேட்டு வாசல் கதவை திறந்தப் பார்த்தாள். அங்கே யாரும் இல்லாமல் இருக்க, கதவை அடைத்து கிட்சென்க்கு சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவள் நறுக்கியா காய்கள் அனைத்தும் அங்கு இல்லை. மேலும் பிரிட்ஜின் கதவு திறந்து இருந்தது. எட்டிப் பார்க்கையில் அனைத்து காய்களும் பிரிட்ஜில் வேட்டப் படாமல் இருந்தது.

அதே போல் சித்ராவிற்கும் ஒரு சம்பவம் நடந்தது. தண்ணீர் குழாய்யை சாத்திய பிறகே அவள் துவைத்த துணிகளை காயப் போட சென்றாள். மீண்டும் வரும் போது குளியல் அறையில் தண்ணீர் போகும் சத்தம் கேட்டது.

கதவை திறந்து பார்க்கையில் வாலியில் தண்ணீர் நிறைத்து வழிந்துக் கொண்டிருந்தது.

சில தொல்லைகளுக்கு பிறகு அவர்கள் மூவரும் வீட்டில் தனியா இருப்பதை தவித்தனர். மூவரும் இதை மற்றவர்களிடம் சொல்லவில்லை.

இதற்கு இடையில் ஒரு முறை வினிதா மகேனை நேரில் சந்தித்து அவர்கள் வீட்டில் நடக்கும் விசித்திரமாக நிகழ்வுகளை பற்றி சொல்லி அவர்கள் இருக்கும் வீட்டை பற்றி விசாரிக்க சொன்னாள்.

அன்று அவர்கள் மூவருக்கும் மதிய ஷிப்ட் என்பதால் இரவு 11க்கு அவர்களின் வேளை முடிந்தது வீட்டிற்கு நடந்து போகையில் அவர்களுக்கு பின்னால் யாரோ வருவது போல் தோன்றியது. ஆனால் அவர்கள் யாரும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை.

வீட்டிற்கு வந்தவர்கள் கலைப்பாக இருப்பதால் உறங்க சென்று விட்டனர். கடந்த சில நாட்களாக இவர்கள் அனைவரும் ஓரே அறையில் தான் உறங்குகின்றனர்.

அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டு வினிதா கண்விழித்து பார்க்கையில் அவளின் பக்கத்தில் யாரும் இல்லை. அவர்களின் இருவரின் பேச்சி குரல் அறைக்கு வெளியே கேட்டது.

வினிதா கைகடிகரத்தை எடுத்து பார்க்கையில் அதிகாலை மணி 4. இந்த நேரத்தில் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் நினைத்தவள், பயத்துடன் மேதுவாக எழுத்து சென்றாள்.

கிட்சன்னில் அவர்கள் இருவரும் மும்பரமாக ஏதோ செய்துக் கொண்டு இருந்தனர்.

“என்னடீ பண்ணறீங்க” திடிர்ரென வினிதாவின் குரலை கேட்ட இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. சித்ரா கையில்லிருந்த காப் கீழே விழுந்து சிதறியது.

“பிசாசு இப்படியா வந்து பயம் முறுத்தறது… சொல்லிட்டு வர தெரியாதா உனக்கு.. உன்னலே என் காப் உடைந்து விட்டது”

“கையில் இருந்த பொருளை ஒழுங்க பிடிக்க தெரியலே, என்கிட்ட சண்டைக்கு வர”

“சண்டையை நிப்பட்டுறிங்கில, வினி உன் குரலையை கேட்டு நானே பயந்துடேன்.. சரி நீ ப்ரிஎட் ரைஸ் (fried rice) சாப்படுரியா வினி”

“இவ்வளவு காலையில் ப்ரிஎட் ரைஸ் சமைக்கிரியா?” அதிர்ச்சியுடன் கேட்க

“ஆமாம். அதுக்கு நீ ஏன் ஷொக் ஆகற”

“பசிக்குது வினி… நைட் ஷிப்ட்லே இந்த நேரத்துக்கு சாப்பிட்டு பழகிவிட்டது”

“இப்படியே நீங்க இரண்டு பேரும் சண்டை போடுங்க, நான் என் வேலையை பார்க்குறேன் அன்ட் டோன்ட் டிச்டப் மீ” தட்டில் உணவை வைத்து பிளஸ்சில் இருந்த காப்பியை காப்பில் ஊற்றி வைத்து உண்ண தொடங்கினாள்”

அவளை போலவும் சித்ராவும் “பசிக்குது வினி.. நாம்ப சண்டையை காலையில் போட்டுக்குவோம்.. நான் சப்பிட்டு தூங்க போறேன்..”

“எனக்கும் பசிக்குது” அவளும் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினாள்”

“நீங்க தூங்க போகும் போது என்னை எழுப்பி விடுங்க, நான் சோபாவில் படுத்து இருக்கேன்”

“சரி அனிதா… வினி எங்களை எழுப்பி விடு” சித்ராவும் இன்னொரு சோபாவில் படுத்து உறங்கினாள்.

டைனிங் அறையில் உள்ள வெளிச்சம் மற்ற இடத்திலும் வெளிச்சமாக இருந்தது. மூன்று பேர் அமரும் இருக்கையில் அனிதா கால்களை மடக்கி படுத்து உறங்க. எதிரே உள்ள சோபாவில் சித்ராவும் படுத்து உறங்கினாள்.

குனிந்து உணவை ரசித்து சாப்பிட்டு இருந்த வினிதா எதற்கோ நிமிர்ந்தவளின் பார்வையில் அனிதாவின் தலைக்கு பக்கத்தில் ஒரு உருவம் நேரகாக அமர்ந்த்து இருந்தது. அது இருகைகளையும் அதன் மூட்டியில் மேல் வைத்து தலை குனிந்து அமர்ந்து இருந்த்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.