(Reading time: 22 - 44 minutes)

னிதா வீட்டிற்கு வந்து இருக்கலாம் வினி”

“வீட்டில் யாரும் இல்லை.. சிக்கிரம் அந்த வீட்டை காலி பண்ணி போங்க” அவரின் கோவமாக பேச்சு அந்த இருபெண்களை சிந்திக்க வைத்தது.

“உங்களுக்கு எப்படி தெரியும் தாத்தா” வினிதா கேட்க

“எனக்கு தெரியும். அது ஒரு மர்மங்கள் நிறைந்த பேய் வீடு.” 

அவர் சொன்னதை கேட்ட சித்ராவிற்கு சற்று முன் வினிதா சொன்னது அனைத்தும் நினைவில் வந்தது. இவ்வளவு நாள் இது வெரும் கற்பனை மட்டும் நினைத்து இருந்து எல்லாம் இல்லை என அவரின் பேச்சில் உறுதியானது. நா வரன்டு அவளால் மற்றவர்களிடம் பேச முடியாமல் போனது. பயத்தில் வினிதாவின் கையை இருக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“அந்த வீட்டில் ஒரு பொண்ணு இறந்து போச்சி. உங்களுக்கு எந்த ஆபத்தும் வர கூடாதுன்ன உடனே வெளியே போங்க” அவர்களை எச்சரித்து அவர் சென்று விட்டார்.

“வினி வா வா” பயத்துடன் அழைத்தை சித்ராவை அமைதியாக பார்த்து 

“எங்கே” 

“அமுதா அக்கா வீட்டுக்கு” சித்ராவின் முகம் பயத்தினால் வெளுத்துப் போனது. 

“அக்கா அவுங்க மாமியார்  வீட்டுக்கு போய் இருக்காங்க. சித்து இரு. நாம் கொஞ்சம் யோசித்து பார்க்கலாம்.” 

“வினி கிட்சன் லைட் மீண்டும் எரியுது. வா நாம் இங்கு இருந்து போலாம். அக்காக்கு போன் பண்ணு” சித்ரா வினிதாவின் கையை பிடித்து காருக்கு சென்றாள். பயத்தில் அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

அந்த இரவு நேரத்தில் கொட்டும் மழையில் வினிதாவின் கார் அதி வேகமாக சென்றது.

வினிதாவிற்கு  கார்  ஒட்டி  பழக்கம்  என்பதால்  கையும்  காலும்  அதன் வேலையை  சரியாக  செய்தது.  

அவர்களின் மனதில் பல கேள்விகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் அமைதியாக பயணித்தனர். அவர்களிக்கு அந்த இடத்தை விட்டு சென்றால் போதும் எனற மனநிலையில் இருந்தனர். 

இருவரின் மனதிலும் சுந்தரம் தாத்தா சொன்னதும் மட்டும் அசைப் கேட்டுக் கொண்டு இருந்தது.

அதி வேகமாக சென்ற அந்த கார் மெல்ல தனது வேகத்தை குறைத்தது. சித்ராவிற்கு ரோட்டை பார்க்க பயமாக இருந்தாலால் அது வரை கண்களை இருக்க முடி அமர்ந்து இருந்தாள்.

காரின் வேகம் குறைவதை உணர்ந்து கண்களை திறந்தாள். சித்ரா வினிதாவை திரும்பி கேள்வியாக வினிதாவை பார்க்க. வினிதா எதையோ ஊற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்ரா பல முறை அழைத்தும் வினிதாவிடம் பதில் இல்லை. கார் வேகம் எடுப்பதிலும் குறைப்பதும் இருந்தது. 

சித்ராவிற்கு யாரோ அவர்களை ஊற்று பார்ப்பது போல் தோன்ற அவளும் அந்த சாலையை பார்த்தாள். 

தூரத்தில் ஒரு ஒருவம் தெரிந்தது ஆனால் அதன் உடலில் தலை இல்லை!

ஒருவேளை அது முண்டாமோ சித்ரா மனதில் நினைக்கையில் அவர்களின் காருக்கு ஒரு ஐம்பது மீட்டர் முன்னே அந்த ஒருவம் தோன்றி அதன் இருகைகளும் எதையோ பிடித்து இருந்தது. சித்ரா அதை உன்னிப்பாக பார்க்க அதன் கையில் அந்த உருவத்தின் தலை இருந்தது! 

“வினிதா நிப்ப்ப்ப்ப்பாட்டுடுடு” அவள் கத்த  

வினிதா பிரேக் போட்டதில் அந்த கார் பல முறை சுற்றி சாலை ஒரத்தில் இருந்த மதிசுவரையும் மோதி, நிற்கமால் சாலை ஒரத்தில் இருந்த மரத்தில் மேல் மோதி நின்றது.

வினிதாவின் தலை ஸ்டீரிங் மேல் மோதி இருக்க, சித்ரா பக்கவாட்டு கண்ணாடி உடைந்து அவள் தலை அதில் சாய்த்து இருந்தது. இருவரின் தலையிலும் முதத்தில் ரத்தம் வழிந்தது.

தொடரும்

Go to episode # 04

Go to episode # 06

{kunena_discuss:753}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.