(Reading time: 22 - 44 minutes)

முதலில் இதை உணரதவள் மீண்டும் குனிந்து உணவை எடுக்கையில் தான் அதை உணர்ந்தாள். நிமிர்ந்து பார்க்கையில் அந்த உருவம் மறைந்துப் போனது.

அமைதியாக உண்டு மூடித்தவள் அனைத்து பாத்திரங்களை கழுவு வைத்து, அவர்கள் இருவறையும் அழைத்து அறைக்கு சென்று படுத்தனர்.

விடிந்த பிறகு இதை எப்படியாவது அவர்களிடம் சொல்ல பல முறை வினிதா முயன்றாள். ஆனால் ஏதோ ஒன்று தடுத்து அவளை சொல்ல முடியாமல் ஆக்கியது.

அனிதாவிற்கு காலை ஷிப்ட் அவள் வேலை முடிந்து ஊருக்கு செல்லுவதாக் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

மதிய ஷிப்ட்க்கு சித்ரா கிளம்பும் போது வினிதா அவளுக்கு தலை வலிப்பதாக விடுப்பு எடுத்துக் கொண்டாள். சித்ரா பல முறை அவளை வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் எச்சரித்துவிட்டு சென்றாள்.

சித்ரா சென்ற முக்கால் மணி நேரத்திற்கு பிறகு, மறைத்து வைத்து இருந்த சுத்தியளை எடுத்துக் கொண்டு பூட்டி இருந்த அந்த கதவை உடைத்தாள்.

அந்த அறை மூற்றிலும் சுத்தமாக இருந்தது. சிறு துசி இல்லாமல் எல்லா பொருக்களும் அதன் இடத்தில் இருந்தது. அங்கே ஒரு காப்பட் இருந்தது. அதை வினிதா திறக்க முயன்றாள். பல முறை முயன்றும் அதை திறங்க முடியவில்லை. அந்த அறையில் பயன் மிக்க தகவல் கிடைக்குமா ஆராயும் போது யாரோ கதறி ஆழும் சத்தம் கேட்டது.  

திடுக்கிட்டு நிமர்ந்தாள் அவள். எங்கு இருந்து வருகிறது அந்த சத்தம். தெரியவில்லை அவளுக்கு. அந்த அறையை விட்டு வெளியே செல்லவும் பயமாக இருந்தது. பூனை நடையை போல் ஒவ்வோரு ஆடியும் மெல்ல எடுத்து வைத்தாள்.

அறை வாசலில் நின்றவள் தலையை மட்டும் வெளியே நிட்டி எட்டிப் பார்த்தாள். சத்தம் மட்டும் கேட்க அது எங்கே இருந்து வருகிறது தெரியவில்லை.

காதை தீட்டிக் கொண்டு கேட்டவள் சத்தம் வரும் திசையை நோக்கி நடந்தவளின் கால்கள் சித்ராவின் அறைக்கு முன் போய் நின்றது.

அந்த அறைக்குள் யாபோ கதறி அழும் சத்தம் கேட்டது. அந்த கதவின் பிடியில் கையை வைத்து

“சித்ரா நீ தான் உள்ள இருக்கிறியா? அனிதா நீயா?” உள்ளே இருப்பது யார் என்று அவளுக்கு தெரியவில்லை. முகம் முழுக்க வெர்வையில் நனைந்து இருந்தது. பயத்தில் அவளில் இத துடிப்பின் சத்தம் அவள் காதுகளுக்கு தெளிவாக கேட்டது.

கதவை திறக்க இருந்தபோது வினிதாவின் கைதொலைபேசி அலறியதில், சட்டென கேட்ட சத்ததில் அவளுக்கு தூக்கி வாரி போட, பயத்தில் காத்தியே விட்டாள். அவளின் இதயம் வாய் வழியாக் வெளிவே வந்த்தும் விடும் போல் படப் படவென துடித்து.

இதற்கு மேல் அந்கே இருப்பது நல்லது அல்ல என தோன்ற வேறு உடையை மாற்றி வீட்டிலிருந்து வெளியேறினாள்.

அபர்ட்மெண்ட் கீழே வந்தவளுக்கு எங்கெ செல்லுவது என  தெரியவில்லை. மழை நன்றாக் வெளுத்து வாங்கியது. காரில் ஊள்ள குடையை விறித்து நடக்க தோடங்கினாள்.

அவளின் மனதில் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்ல வேண்டும் மட்டும் மேலோங்கி இருந்தது.

அவள் இருக்கும் குடி இருப்பு பகுதில் இன்னும் பல அபர்ட்மெண்ட் இருக்கிறது. அங்கே சென்று வாடகைக்கு வீடு எதும் இருக்கிறதா கேட்ட போனாள். முதல் இரண்டு அப்பார்ட்மேனில் வாடகைக்கு ரூம் மட்டும் இருப்பதாக சொன்றனர்கள்.

மனதில் சலிப்பு தொன்ற அடுத்த அபர்ட்மெனை நோக்கி நடத்தாள். அவளின் நல்ல நேரம் அங்கே வாடைக்கு வீடு இப்பதாக நோட்ஸ் போர்டில் ஒட்டி இருந்தது.

அதில் இருந்த நம்பரை தொடர்புக் கொண்டும் பேசி நாளை வீட்டை பார்க்க வருவதாகவும் எல்லோருக்கும் பிடித்து இருந்தாள் விரைவில் அங்கு மாறி வருவதாக சொன்னாள்.

வினிதா போனை கட் செய்யும் போது அவளுக்கு சித்ரா அனுப்பிய குறுந்தகவல் கிடைத்தது. அதில் சித்ரா அரைநாள் லிவ் போட்டு வந்துவிட்டாதாக இருந்தது.

இவ எதுக்கு இப்போ வந்தாள், மனதில் அவளை திட்டிய படி வேகமாக வீட்டிற்கு சென்றாள்.

வினிதா அவளின் வீட்டை அடையும் போது சித்ரா காப்பி குடித்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேர்த்து விறுவிறுத்து இருந்த வினிதாவை பார்த்து

“ஏய் என்ன நீ இப்படி வந்து இருக்கிறாய்? ஜோகிங் போனியா, இல்லையே ஜீன்ஸ் ஆணிந்து எப்படி ஓட மூடியும்”

“மழை பேயும் போது யாராவது ஜோகிங் போவங்களா?”

“அப்போ எங்கேடி போன. உனக்கு எத்தனை தடவை கால் பன்னறது.”

“சித்ரா உன்னிடம் ஒன்று காட்ட வேண்டும். என்னுடன் வா.” கிட்ட தட்ட அவளின் கையை பிடித்து இழுத்து சென்றாள்.

பூட்டியா அறைக்கு மூன் நின்று “இன்றைக்கு நான் இந்த அறைக்குள் போனேன்.”

“வினி உனக்கு என்னதான் ஆகிவிட்டது.”

“சித்ரா நீ நம்பமாட்டேன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ் நீ கதவை திற”

வினிதா சொல்லுவதை போய் என்று நிறுப்பிப்பதை போல் அந்த கதவு பூட்டி இருந்தது.

சித்ரா வினிதாவை பார்க்க “இல்ல சித்து ப்ராமிஸ்சா சொல்லறேன் நா… நான் உள்ளே போனேன். ஆனா இப்போ எப்படின்னு தெரியல. சரி உன்னிடம் நான் பேசனும் ஆனா வீட்டில் வேண்டாம். வெளியே சென்று பேசலாம்.”

“இப்பொவேவா”

“ஆமா”

டென்னிஸ் கோர்ட் செல்லும் வரை இருவரும் எதும் பேசவில்லை. வினிதாவின் மனதில் எப்படி சித்ராவும் சொல்லி புரிய வைப்பது என யோசித்துக் கொண்டு இருந்தாள்.

“வினி இப்படி அமைதியாக இருக்கதான் என்னை இங்க அழைத்து வந்தியா?”

“சித்து நாம் இருக்கும் வீட்டில் ஏதோ வித்தியாசம சத்தம் கேட்குது.”

“ஆரம்பித்து விட்டியா?” அலுப்பாக

“ஏன் சித்து நான் சொல்ல வரதை நீ கேட்ட மாட்டிக்கிற, உன்னிடம் நான் எப்போவது போய் சொல்லி இருக்கிறேனா?” வலியுடனும் ஒரு வித இயாலமையுடன் அவள் சித்ராவை பார்த்து கேட்க

வினிதாவின் கண்களிலும் குரலிலும் தெரிந்த வலியும் சித்ராவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவளின் கையை மென்மையாக அலுத்தி “என்னன்னு சொல்லு வினி நான் குறுக்கே எதும் சொல்லாமல் கேட்குறேன்”.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள் இன்றுவரை வீட்டில் நடக்கும் ஓவ்வோறு நிகழ்வுகளை சொன்னாள்.

திடிர்ரென அங்கு வந்த சுந்தரம் தாத்தா “சிக்கிரம் அந்த வீட்டை வெளியே போங்க. நானும் பல முறை சொல்லிவிட்டேன் நீங்க கேட்க மாட்டுறிங்க”

“ஏன் தாத்தா இதையே சொல்லறிங்க” சித்ராவிற்கு காரணம் தெரிந்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

“அந்த வீட்டை பார்த்தியா விளக்கு எரிகிறது” 

அவர்கள் மேழே அண்ணார்ந்து பார்க்கையில் அவர்களின் கிட்சேன் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

“வினி நான் எல்லாம் விளக்கும் ஆப் செய்து வந்தேன்” 

“தெரியும் சித்ரா ஆனா இப்போ எப்படி?”

அவர்கள் பேசும் போது அது ஆப் ஆனது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.