(Reading time: 16 - 32 minutes)

ரொம்ப சிம்பிள்…டவ்ண் டு எர்த்… பந்தாவே இல்ல…பஸ்ல கூட ட்ராவல் செய்றான்…போல்ட்….ரொம்ப ஹெல்பிங் டென்டன்சி….இன்ட்ரெஸ்டிங் பெர்சன்…அப்பாவ கூட புரிஞ்சு வச்சுருக்கான்……இன்டெலிஜன்ட்…..ஸ்மார்ட்…நல்லதில் எது இல்லை அவனிடம்? அவனிடம் இல்லாத நல்லது என்று எதுவும் இல்லை…

தூங்குவதற்கு முன்னால் வழக்கம் போல் பைபிள் படிக்க எடுத்தவளுக்கு அன்றைய பகுதி யோபு புத்தகம்.

என் கண்களோடு உடன்படிக்கை செய்திருக்கிறேன்….யார் மீதும் என் ஆசைகளை வளர்த்துக் கொள்ள மாட்டேன்எனக்கானது யார் என்று கடவுள் யாரை வைத்திருக்கிறாரோ?.....யோபுவின் அந்த வாசகங்களை படித்ததும் மிரண்டு போனாள் ரேயா.

அப்பாவே சம்மதித்தால் கூட இது நடக்காமல் போகக் கூடும் தானே….

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் அவனை விட்டு முழுவதுமாய் விலகி இருக்க வேண்டும் என்று மட்டும் தீர்மானிக்க முடிகிறது. தீர்மானம் செய்தாள்.

டுத்த நாள் புனிதாவுடன் இவள் பயணம் செய்த போதும் ஆதிக்கைப் பற்றி தப்பி தவறி கூட பேச்சு வராதபடி கவனித்துக் கொண்டாள். புனிதாவும் அவனைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அடுத்த வாரம் முழுவதுமே ஆதிக் கண்களுக்கும் காதுகளுக்கும் கிடைக்கவில்லை. இயல்பில்லாத இயல் நிலையில் கடந்தன நாட்கள்.

அன்று வெள்ளிக் கிழமை. இரவு. அப்பா வழக்கம் போல் தொலைக்காட்சி செய்தியில் மூழ்கி இருக்க, இவள் மாடியிலிருந்த தன் அறைக்கு போவதற்காக வரவேற்பறையில் இருந்த படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள்.

யாரோ ஒருவர் உள்ளே வந்தார்.

கை கூப்பி வணக்கம் தெரிவித்தார் அப்பாவிற்கு. அப்பாவும் இதற்குள்  எழுந்து நின்றிருந்தார். “என்ன இருந்தாலும் உங்களுக்கு நாங்கன்னா இளப்பமாதான் தெரியுது என்னவே…”

அவர் பேச தொடங்கியதும் ரேயாவிற்கு தோன்றிவிட்டது ‘ஏதோ ஒன்று சரியாக இல்லை.’ அவசரமாக தன் அறையைப் பார்த்து போனாள். அறிமுகமில்லாதவர் முன் இவள் நிற்பது அப்பாவிற்கு பிடிக்காது.

ஆனாலும் வந்திருந்தவரின் கடாக் குரல் இவள் காதுகளை அடையத்தான் செய்கிறது.

“அண்ணன் மவனுக்கு உன் மகளை கேட்டேன்  தர மாட்டேன்னுட்ட…..சரி அது சொந்த விஷயம்…ஆனா…. உள்ள இருந்து எவனுக்குள்ளதயாவது தூக்கிட்டு என்னோட கண்டைனரை  போட்டுவிடும்னு அத்தனை சொல்லியும் ….அதையும் முடியாதுன்னுட்டிராமே..60 லட்ச ரூபா சரக்கு அழுகிப் போயிரும்..”

“மணி சார்…..இளப்பம்னு எதுவும்  நினைக்கலை…..மக படிச்சுகிட்டு இருக்கா இப்போதைக்கு மாப்பிள்ள பார்க்கலை..”

“இதெல்லாம் நாங்களும் வெளிய சொல்லிக்கிற சாக்கு தான்….கொடுக்கனும்னு நினச்சுட்டா…படிப்பு என்ன படிப்பு பொம்ளபிள்ளைக்கு? வேற எதாவது முட்டா பயட்ட போய் கதை சொல்லும்…..என் அண்ணன்ட்ட எப்டி பழகினீர் …இப்போ ஏன்..?”

“இங்க பாருங்க…பழகுறதுங்கிறது வேற சம்பந்தம் செய்றதுங்கிறது வேற….இந்த பேச்சை இதோடு விடுங்க…அதோட அந்த கண்டெய்னர் விஷயம்… கப்பல் கிளம்புறதுக்கு 3 மணி நேரம் இருக்கிறப்ப வந்து ஏத்திவிடுன்னா எப்டி முடியும்…? உங்க ஆட்கள் கொஞ்சமாவது முன்னாடி வந்திருக்கனும்….”

“யோவ்….இங்க பக்கத்துல நீ தான் அதிக சரக்கு கப்பல்ல ஏத்தி இறக்குறதுன்னு எல்லோருக்கும் தெரியும்….இதோட உன் கம்பெனி கப்பல் வேற….சும்மா நடிக்காத….என்ன இருந்தாலும் நீ அசலூர்காரன்….உள்ளூர்காரனை பகச்சுகிட்டு ஒரு நாள் கூட உயிரோட இருக்க முடியாது…..நாளைக்கு பாரு நான் யாருன்னு….”

அரண்டு போய் அறையை விட்டு ஓடி வந்தாள் ரேயா. வீட்டிற்குள் அப்பாவின் தொழிற் சம்பந்தப் பட்டவர்கள் வந்ததே இல்லை. ஆனால் இது…?

செக்யூரிடியும் பின்னால் பண்ணையில் வேலை பார்ப்பவர்களும் இதற்குள் வீட்டிற்குள் வந்திருந்தனர். வந்தவன் திரும்பிச் செல்லும் போது வீட்டின் கதவிற்கு அருகில் இருந்த இடுப்பு உயர சைனா க்ளே அலங்கார ஜாரை ஓங்கி ஒரு உதை. விழுந்த இடத்தில் இரண்டாய் பிளந்தது அது.

பயமும் திகிலுமாய் அப்பாவைப் பார்த்தாள் ரேயா. அவரோ இவளைப் பார்த்து “உன்னை யாரு வெளிய வரச் சொன்னா…..போ…போய் படு….” என்றார்.

அப்பா சேஃபா இருங்கப்பா…என்றாவது சொல்ல வேண்டும் போல் எழுந்த நினைவை செயலாக்காமலே தன் அறைக்குள் வந்து சரண் அடைந்தாள். ஆனால் மனமெல்லாம் அப்பாவை நினைத்து ஒரே தவிப்பு. அப்பா அறைக்குள் போய் படுத்துக் கொள்ளலாமா என்று கூட ஒரு எண்ணம்.

“யேசப்பா….எனக்கு என் அப்பா வேணும்….” எப்போது தூங்கினாள் என தெரியவில்லை. வெகு தாமதமாகிவிட்டது காலையில் எழும்ப. அப்பா வீட்டில் இல்லை. இது அவ்வப்பொழுது நடப்பதுதான். இருந்தாலும் இன்று வேதனையாய் தோன்றியது.

மாலையில் புனிதாவுடன் கிளம்பியவள் காரில் ஏறியதும் டிரைவரிடம் கேட்டாள் “ தாத்தா அப்பா திரும்பி வந்தாச்சா…?”

“இல்லையேமா ஐயாவை காலைல இருந்து நான் காண்கலை” அவரது பதிலில் இவள் முகம் சோர்ந்து போனது.

“நீ கால் செய்ய வேண்டியதான ரேயு…?” புனிதா கேட்டாள்

“இல்ல….அது…சும்மா சும்மால்லாம் அப்பாக்கு போன் செய்து பேசுறது கிடையாது….”

“இது சும்மாவா..? உன் ஃபேஸைப் பார்த்தாலே தெரியுது எதோ டென்ஷன்ல இருக்கன்னு…”

முந்திய நாள் நடந்ததை புனிதாவுக்கு  சொன்னாள்.

“அப்பா பயந்த மாதிரி இல்ல….ரொம்ப நார்மலாத்தான் இருந்தாங்க…ஆனா எனக்கு பயமா இருக்குது….பட் அப்பாட்ட எப்டி ……நீங்க சேஃபா இருங்கப்பா….உங்களை நினைச்சு எனக்கு கன்சர்னா இருக்குதுன்னு அப்டில்லாம் சொல்ல முடியாது….”

“ஏன்?.....சொன்னா என்ன உங்கப்பாதானே…?”

“ம்….இதுவரை இப்டி பேசிக்கிட்டது இல்லை…அதோட லூசு மாதிரி என்ன பேசுறன்னு அப்பா கோபபட்டாங்கன்னா?”

புனிதா இவளை பரிதாபமாக பார்த்தாள்.

வீடு வந்து தனியாக காத்திருக்க காத்திருக்க பயம் திகிலாகியது. துணிந்து அப்பா எண்ணை அழைத்தாள், சுவிட்ச்ட் ஆஃப்.

 நேரம் இரவு 11 ஐ நெருங்க திக் திக் ஆகி 11.45 ற்கு அழுகையுடன் புனிதா எண்ணை அழைத்திருந்தாள் ரேயா. அடுத்த 15 வது நிமிடம் ஆதிக் பின் தொடர வீட்டிற்குள் நுழைந்த புனிதாவை கட்டியபடி கதறிக் கொண்டிருந்தாள் “ எனக்கு என் அப்பா வேணும்…”

1990 ஆம் ஆண்டு

ந்திருக்கிறவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தன் அக்கா அத்தானிடமும் மலர்விழியின் பெற்றோரிடமும் ஒருவாறு ஒப்படைத்துவிட்டு மலர்விழியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் இந்த வசீகரன்.

தனியறையில் நுழைந்ததும் தாங்க மாட்டாமல் அழுது தீர்த்தாள் அவள். ஏன்? எதற்கு? என்று எதையும் கேட்டோ.....இல்லை காரணமே சொல்லாமல் அழுகிறாயே என எரிச்சல்பட்டோ அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை வசீகரன். பொறுமையாய் அதே நேரம் செய்வது அறியாது பார்த்திருந்தான்.

ஒரு நிலைக்கு மேல் அவள் வெகுவாக சோர்வுற தொடங்கவும் அவளை சற்று வற்புறுத்தி முகம் கழுவ செய்து குடிக்க பால் கொண்டு வந்து கொடுத்தான்.

அதுவரை தன்னை மாத்திரமாக எண்ணி அழுது கொண்டிருந்தவளுக்கு மெல்ல அவன் பக்க நிலையும் ஞாபகம் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.