(Reading time: 5 - 9 minutes)

மாஸா – 01 - மது கலைவாணன்

டம்: அணு ஆராய்ச்சி மையம் , புது டெல்லி

நேரம்: விடிகாலை 2:30

மிக பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த அந்த ரகசியம் திருடப்பட்டது.

Maasaதிருடியது யார்?.

காலை 10 மணி:

பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறை அதிகாரிகள்  கமிஷனர் அலுவலகத்தில் கூடினர். ப்ரவீன்குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.  பதட்டமாக காணப்பட்ட போலிஸ் கமிஷ்னர்,  தடையங்களை ஆய்வு செய்த ப்ரவீன்குமாரிடம் வினவினார்.

"ஏதாவது தடயங்கள் கிடைத்ததா?" - கமிஷ்னர்

"இல்லை." - ப்ரவீன்.

"ஆராய்ச்சி மையத்தின் Security strategy என்ன?"  என்று கேட்ட கமிஷனரிடம் விளக்க ஆரம்பித்தார் ப்ரவீன்குமார்.

காற்று கூட செல்ல முடியாத சதுர வடிவிளான கண்ணாடி அறைக்குள் மிக மிக பாதுகாப்பாக வைக்கபட்டிருந்தது அந்த ரகசியம். அந்த  ரகசியம் வைக்கபட்டிருந்த சதுர வடிவிலான அறையிணை மூடியதாக மற்றொறு அறை.அந்த அறையிணை உள்ளடக்கியதாக மற்றுமொறு அறை.ஓவ்வொறு அறைக்கும் ஒரே ஒரு வாசல்.

இவ்வாறாக அடுக்குகளாக மூன்று அறைகள்.ஒரு அறையிணை திறந்தபின்தான் அடுத்த அறைக்குள் நுழைய முடியும்.

இதன் Security strategy நான்கு Artificial intelligence robots கொண்டு இயங்குகிறது. ஒரு அறைக்கு ஒரு Robot என ,மூன்று அறைகளுக்கு மூன்று Robots. அறைகள் யாவற்றுக்கும் மேல் தளத்தில் அனைத்து திசையிலும் கண்காணிக்க மற்றுமொறு Robot (மொத்தம் நான்கு ரோபோக்கள்) . அந்த Robot'களின் பெயர்கள் drill ,dock ,doubt , destroy.

drill - மேல் தளத்தில் உள்ள ரோபோ. எல்லா திசையிலும் ஏதேனும் தாக்குதல்

அல்லது சந்தேகிக்கும் வகையில் உள்ளவற்றை அலசி ஆராயும் ஆற்றல் பெற்றது.

Dock - வெளி தளத்தில் உள்ள மூன்றாவது அறையினை கண்காணிக்கும் ரோபோ. மீதமுள்ள மூன்று ரோபோக்களின் செயல்களை இந்த ரோபோ கொண்டு கட்டுப்படுத்தலாம்.

Doubt - இரண்டாவது அடுக்கின் ரோபோ. சந்தேகிக்கும் ஆற்றல் அதிகம் கொண்டது.

Destroy - அழிக்கும் ஆற்றல் அதிகம் உடையது. எதிராலியுடன் சண்டை 30 வினாடிக்கு மேல் நீடித்தாள்  "ரகசியத்தை" அழித்து விடும். doubt ரோபோ ஏதேனும் ஒன்றை நிச்சயமாக சந்தேகிக்கும் பட்சத்தில் "ரகசியத்தை" அழித்துவிடும்.

ரகசியத்தை ஒருவர் காணப்போகும்முண்  Dock ரோபோவை வைத்து Security pin மூலம் மீதமுள்ள ரோபோக்களை செயலிழக்க செய்த பிண்பே அறைகளுக்குள செல்ல முடியும்.

இதுவே அதன் Strategy. கூறி முடித்தார் ப்ரவீன்.

"அந்த பாதுகாப்பு  ரோபோக்களின் data பதிவுகள், அந்த அறைகளிலுள்ள camera'வின் பதிவுகளை அராய்ந்து பார்த்தீர்களா?" - கமிஷ்னர்.

"Cyber intelligence குழு அதனை செய்து கொண்டிருக்கின்றது. இன்னும் 15 நிமிடத்திற்குள் அனைத்து தகவல்களும் நம்மை வந்து  சேரும்." -ப்ரவீன்.

"அது என்ன ரகசியம்?. ஏன்  இவ்வளவு பாதுகாப்பு, பிரவின்?" -  கமிஷ்ணர்.

"ராக பாவனா"  என்றார் பிரவின்

தைக்களம் இப்பொழுது அணு ஆராய்ச்சி மய்யத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நகர்கிறது.

ஆராய்ச்சி மையத்தில் அதிக அளவில் காவல்துறையின்  நடமாட்டம் கண்டு  பல பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்தனர். அந்த கூட்டத்தில் விடிவெள்ளியென தெரிந்த மித்ரா ,காத்திருந்தாள்   பல கள்விகளுடன்.       'A Perfect Mirror'  எனும் பத்திரிக்கைக்கு பத்திரிக்கையாளராக பணிபுரியும் மித்ரா ஒரு சுதந்திர பறவை.  தனது பணியை கடவுளாக கருதும் மித்ரா தைரியமானவள். இவளது  'Emotional quotient'  மிக மிக குறைவு. நடக்கும் சம்வங்களை அறிவுப்பூர்வமாக நல்லது/கெட்டது  என பிரித்து பார்க்கும் மித்ரா அந்த சம்பவங்களோடு தனது விருப்பு/வெருப்பு   உணர்வுகளை கலப்பதில்லை. இந்த குணமே இவளது பலம். இந்த குணமே இவளது பலவீணமும்.

மிக பிரம்மாண்டமாண கார் ஒன்று ஆராய்ச்சி மையத்திற்குள் நுழைவதைக்கண்டாள் மித்ரா. காரினுள் இருந்தவர் பிரபல கர்நாடக சங்கீத பாடகி பைரவி. ஆராய்ச்சி மையத்திற்குள் சென்ற பைரவி 20 நிமிடம் கழித்து வெளியே வர , ஏன் சென்னையில் இருக்கும் பைரவி டெல்லிக்கு வர வேண்டும். ஆராய்ச்சி மையத்தில் நடந்த சம்பவத்திற்கும் பைரவிக்கும் என்ன தொடர்பு?  என மித்ரா யோசிக்க

"நானும் அதயே தான் யோசிச்சிட்டு இருக்கேங்க " என்றது ஒரு குரள்.

"யார் நீங்க?." என்றால் மித்ரா.

"நான் அஷ்வின். நான் ஒரு 'Independent journalist'. எனக்கு உங்க. பத்திரிக்கைல ஒரு வேலை வேண்டும்." என்று அஷ்வின் கூறிக்கொண்டிருந்த வேளையில் பைரவியின் கார் கிளம்பியது.

அதனைக்கண்ட மித்ரா சட்டென அஷ்வினிடம் "அந்த கார்'அ. Follow. பண்ணனும். இதான் இப்போ தேவை படுகின்ற வேலை..செய்ரீங்களா?" என்றாள். பட்டென "சரி" என்று அஷ்வின் சொல்ல. ,இருவரும் பைக்கில் பைரவியை தொடர்ந்தனர்.

தைக்களம் கமிஷ்னர் அலுவலகலத்திற்கு நகர்கிறது.

"ராக பாவனா என்றால் என்ன?.அதன் உபயோகம் என்ன?."  என்று கேட்டார் கமிஷ்னர்.

"ராக பாவனா பற்றி இரு விஞ்ஞானிகளுக்கு மட்டுமே தெரியும். அவர்களின் வாக்குமூலத்தின்படி ராக பாவனா ஆராய்ச்சி நிலையில் இருப்பதாகவும், அதனைக்கொண்டு  பல நோய்களை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்கள்.மேலும் அதில் சில மர்மங்கள் புதைந்து கிடப்பதாகவும், தவறான உபயோகத்தினால் பேரழிவை  உண்டாக்கும் திறன் பெற்றதெனவும் கூறினர்."

கமிஷ்னர் மற்றும் அங்கு இருந்த அனைரும் பதற்றமடைந்தனர்.

"இதனை எங்கு கண்டெடுத்தனர்?." - கமிஷ்னர்.

"பைரவி என்பவர் இதனை ஆராய்ச்சி மையத்திடம் கொடுத்தார்.".

"Media அல்லது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எவறேனும் பைரவியை தொடர்பு கொல்லும் முன,நாம் அவருக்கு உடனடியாக பாதுகாப்பளிக்க வேண்டும். Act fast." என்றார் கமிஷ்னர்.

அதே நேரத்தில் , பைக்கில் சென்று கொண்டிருந்த அஷ்வின் மித்ராவிடம் கேட்டான் "நாம் ஏன் அவங்களை follow பண்றோம்? "

மித்ரா கூறினாள் "அவங்களை கடத்த போறோம்".

தொடரும்

Episode # 02

{kunena_discuss:888}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.