(Reading time: 9 - 18 minutes)

04. காதல் உறவே - தேவி

வள் முகத்தைப் பார்த்த ராம் சிரித்து விட்டு , அவள் கண் முன்னால் சொடக்கு போட்டான். சுதாரித்த மைதிலி , எவ்வளவோ யோசித்தோம். இப்படிக் கேட்பானென்று எண்ணவில்லையே என்று யோசித்தாள்.

ராம் “ஹேய்… நான் திருமணத்தைப் பற்றித் தானே பேசினான். நீயென்னவோ செவ்வாய் கிரகத்துக்குப் போற மாதிரி முழிக்கிறாயே? “ என்றான்.

மைதிலி “ ஏன் ?” என்றாள்.

Kathal urave

“எனக்கு நீ மனைவியாக வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.”

“நான் யோசிக்க வேண்டும் “என்றாள்.

ராமின் முகம் சின்னதாகி விட்டது. “உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று எண்ணினே?” என்றான்.

மைதிலி “பிடித்திருக்கிறது. ஆனால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்று சொன்னேனே” என்றாள்.

“என்னைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றால், உன் சேர்மனிடம் இப்போதே பேசேன்”

“அப்படியெல்லாமில்லை. பார்த்தவுடன் உங்களைப் பற்றி நல்ல விதமாகத் தோன்றியது. குடும்பத்தினரிடம் உங்கள் அன்பும் தெரிந்தது, அதுவே உங்களை நல்ல வழியில் கொண்டு சென்றிருக்கும் என்று புரிந்தது”

“அதான் இவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறதே. பிறகு என்ன தயக்கம்?”

“உங்கள் பொருளாதார நிலை?”

“அதைப் பற்றி உனக்கென்ன கவலை. என்னைப் பொருத்தவரை மனம் தான் முக்கியம்”

உங்களுக்கு சரி. உங்கள் குடும்பத்தினருக்கு? மேலும் என் குடும்பப் பிண்ணணி தெரியுமல்லவா? உங்கள் குடும்பத்தில் ஒத்துக் கொள்வார்களா?

ஹேய் … அதெல்லாம் அய்யா சம்மதம் வாங்கி விட்டேன். உன்னை நேரில் பார்த்து விட்டால் இந்த மாதமே திருமணம் தான்.

“ராம் நீங்கள் அவசரப்படுகிறீர்கள”; என்றாள்

“இல்லை. என்னைப் பொறுத்தவரை முடிவெடுத்துவிட்டேன். அதற்குப் பின் என்ன? எனக்கு 28 வயதாகிறது. உனக்கும் 23 வயது இருக்கும். வேறு என்ன தடை?”

“அப்படியில்லை… ஆனால் ஏனோ ஒரு தயக்கம் இருக்கிறது”

“தயக்கம் எதற்கு … ஹே .. உனக்குச் சம்மதம் என்பதைத் தான் இப்படி சுற்றி வளைக்கிறாயா? நான் ஒரு டியூப் லைட். இது புரியாமல் வள வளக்கிறேன்.” என்று சந்தோஷப்பட்டான். மைதிலி திகைத்தாள். ஆனால் ஏனோ அவளால் மறுக்க இயலவில்லை.

பிறகு “வா போகலாம்.” என்றான். “எங்கே?” “நம் வீட்டிற்கு. இன்றைக்கே உன்னை என் வீட்டில் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன்.” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான். மைதிலியால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை.

ராம் போகும் வழியில் அனைவரையும் வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டு, அவளை அழைத்துப் போனான். அவர்கள் வீட்டை வெளியே பார்த்ததிலேயே மைதிலி அரண்டு போனாள். பிரமித்து நின்றவளை ராம் அழைத்துப் போனான். வீட்டில் எல்லோரும் ஹாலில் வெயிட் செய்தனர்.

ராம் நேராக தாத்தாவிடம் சென்று “தாத்தா இவள் தான் மைதிலி. இவளை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றான். அவர்கள் உள்ளே வரும்போதே கவனித்ததில், எல்லோருக்கும் அவர்களின் தோற்றப் பொறுத்தத்தில் மிகவும் திருப்தி.

எனவே ராம் கேட்டவுடன், சூர்ய நாராயணன் “என்னமமா உனக்குச் சம்மதமா என்றார்”. ராம் ஏதோ கூறவருவதைத் தடுத்து விட்டு, மைதிலியின் முகம் பார்த்தார்;. மைதிலி எல்லோரையும் ஒருமுறை பார்த்து சற்றுத் தயங்கி விட்டு “உங்கள் எல்லோருக்கும் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம்” என்று கூறினாள்.

தாத்தா “உன்னைப் பற்றிச் சொல்லம்மா” என்றார். ராம் நான்தான் காலையிலேயே சொன்னேனே தாத்தா என்றான். “நான் அவளிடம் கேட்கிறேன்” என்று கூறவும், மைதிலி தன்னைப் பற்றிக் கூறினாள்.

ராம் தவிப்புடன் எல்லோரையும் பார்க்க, தாத்தா சம்மதம் என்று கூறிய நிமிடம் எல்லோரும் ஒட்டு மொத்தக் குரலில் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக் கூறினர். ஒரு நிமிடம் திகைத்து விட்டு , இருவரும் நன்றி கூறினர். மைதிலி தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதாம் வாங்கினாள். பாட்டி அவளை அணைத்து ஆசி கூறினார்.

அப்போது அங்கே வந்த ராமின் அம்மாவும் அத்தையும் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கினர். எல்லோரும் மகிழ்ச்சியோடு பேசும்போது, அடுத்த வாரம் வரும் முகூர்த்தத்திலேயே திருமணத்திற்கு நாள் குறித்தனர். திருமணத்தை சிம்பிளாக வீட்டில் நெருங்கிய உறவினர்களுடன் முடித்து விட்டு, ரிசப்ஷனை அடுத்த இரண்டு நாளில் பெரிய ஹோட்டலில் நடத்தலாம் என முடிவு செய்தனர். அப்போதே ராம் மைதிலி நிறுவனத்துச் சேர்மனுடன் திருமணத்தைப் பற்றி பேசிவிட்டு, மைதிலியை ரிலீவ் செய்வது பற்றியும் பேசினான். அவர் இரண்டு நாளில் ரிலீவ் ஆக ஒப்புக் கொண்டார்.

இதையெல்லாம் மைதிலி கவனிக்கவில்லை. பெண்கள் எல்லோரும் இரவு உணவைப் பார்க்கப் போகவும,; மைதிலியும் அவர்களோடு சென்றாள். அவளிடம் சாதாரணமாக அந்த வீட்டினரின் விருப்பு வெறுப்பைப் பற்றி பேசினர். இரவு உணவு முடிந்ததும் ராம் அவளைக் கொண்டு விட கிளம்பினான். சிறியவர்கள் எல்லோரும் அவர்கள் இருவரையும் சேர்த்து கலாட்டா செய்தனர். இருவரும் சிரிப்போடு அவாகளிடம் விடைபெற்று கிளம்பினார்கள். எல்லோரும் வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள்.

சந்தோஷ் மைதிலியிடம் “மைதிலி, ராமிற்கு பெஸ்ட் ப்ரெண்டு என்றால் நான்தான். எனக்கும் அவனே. ராமைப் போல் ஒருவன் வாழ்க்கைத் துணையாக கிடைக்க பெற்ற நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவன் பெயருக்கேற்றார் போல் எல்லா விதத்திலும் ராமனே” என்று கூற மைதிலியும் ஒத்துக் கொண்டாள். ராம் அதற்கு “நானும் லக்கி தான் சந்தோஷ்” என்று கூறிவிட்டு இருவரும் கிளம்பினர். கார் சற்று தூரம் சென்றதும், மைதிலி தனக்குள் சிரித்துக் கொள்வதைப் பார்த்து ராம் வண்டியை நிறுத்தினான்.

மைதிலி திரும்பிப் பார்க்கவும், ஒற்றைப் புருவம் ஏற்றினான். ராம் “ம்…” எனவும் மைதிலியின் முகம் சிவந்தது. ராம் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், அவளைப் பற்றி இழுத்து இறுக்கி அணைத்தவன், மென்மையாக முகமெங்கும் முத்தமிட்டான். கடைசியில் இதழோடு இதழ் சேர்த்தான். இருவரும் எவ்வளவு நேரம் தங்களை மறந்து இருந்தனரோ, எங்கோ போகும் வண்டி சத்தத்தில் இருவரும் சுயநினைவு அடைந்தனர். மைதிலி முகம் ரத்தமெனச் சிவக்க, ராமோ உல்லாசமாக விசிலடித்தபடி காரைக் கிளப்பினான். ராம் அவளைச் சமனப்படுத்த சாதாரணமாக பேச ஆரம்பித்தான்.

“மைதிலி, கல்யாணத்திற்கு நீ யார் யாரையெல்லாம் அழைக்க வேண்டும்”?

“ராம், அலுவலகத்தில் அழைக்கவேண்டும். எனக்கு பிரெண்டஸ் அதிகமில்லை. ஹாஸ்டலில் ஒரு ஐந்து பேர் அவ்வளவுதான்”

“அப்படியானால் எல்லோரையும் ரிசப்ஷனுக்குக் கூப்பிட்டு விடு”

“சரி. சேர்மனை மட்டும் திருமணத்திற்கு அழைக்கலாமா”?

“நாம் இருவருமே சென்று அழைக்கலாம்”

“நான் ஒரு மாத நோட்டிஸ் கொடுக்க வேண்டுமே ராம்”

“அதெல்லாம் தேவையில்லை. நான் சேர்மனிடம் பேசி விட்டேன். இன்னும் இரண்டு நாளில் உன் வேiயை ஒப்படைத்து விடலாம்” என்றான்

“இது எப்பொழுது நடந்தது, “ என்றாள்

“நீ அம்மா, அத்தையுடன் அரட்டையடிக்கச் சென்றாNயு, அப்பொழுதுதான்”

“நீங்கள் பெரிய ஆள்தான்” என்றாள். ராம் பெரிதாகச் சிரித்தான். ஹாஸ்டல் வாசலில் கார் நின்றது. அவள் குட்நைட் சொல்லி இறங்க முயற்சிக்கவும், அவளைத் தடுத்து, அவள் கையில் முத்தமிடடவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு ஸ்வீட் ட்ரீம்ஸ் என்றான். அவள் முகம் சிவக்க இறங்கியவள் அவனிடம் விடைபெற்றாள். அவன் சொன்னது போல் இரவு முழுவதும் ராமோடு தன் வாழ்க்கையைப் பற்றி வண்ணக் கனவுகள் கண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.