(Reading time: 9 - 18 minutes)

 

காலை ஆறரை மணியளவில் செல் ஒலிக்க எடுக்க ராம்தான் அழைத்தான்.

“குட்மார்னிங் மையு. ஏன் டார்லிங் இரவு முழுவதும் கனவா?” என்றான்.

“குட் மார்னிங். அதல்லாமில்லை. இப்போது எழுந்து கொண்டிருக்கிறேன்.”

“சரி சரி. அம்மா உன்னிடம் பேசனும் என்றார்கள். பேசு “ என்றான்

“சொல்லுங்கள் அத்தை. “ என்றாள் மைதிலி.

“மைதிலி, நீ இன்னும் 2 நாள் ஆபீஸ் போகணும் என்றான் ராம். ஆனால் இன்று விட்டால் முகூர்த்தப் புடவையும், திருமாங்கல்யம் எடுப்பதற்கும் நாள் அமையவில்லை. அதனால் நாங்கள் இன்று இதை முடித்துவிடலாம் என்று நினைக்கிறோம். நீ என்னம்மா சொல்கிறாய்” என்றார்.

“சரி அத்தை. அதற்கென்ன?”

“அப்படியென்றால் நாங்கள் ரிசப்ஷன் புடவையும் சேர்த்து எடுத்துவிட்டு நாளை கொடுத்து விடுகிறோம். நீ பிளவுஸ் தை;ததுக் கொள். இப்பொழுது ராமிடம் கொடுக்கிறேன். பை” என்றார்.

மைதிலியும் பை சொல்லவும், ராம் போனை கையில் வாங்கி “மைதிலி, அப்படியே அழைப்பிதழ் செலக்ட் செய்து இன்றே கொடுத்து விட்டால், நாளைக்கு வந்து விடும். உன் சேர்மனுக்கும் மற்றவர்களுக்கும் நாளைக்கே கொடுத்து விடலாம்” என்றான்.

“சரி. இந்த திருமண ஏற்பாடுகளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்களே எல்லாம் செய்து விடுங்கள். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் சொல்லுங்கள். “ என்றாள்.

“சரி மைதிலி நீ ஆபீஸ் கிளம்பு. நான் முடிந்தால் இரவுப் பார்க்கிறேன். இல்லையென்றால் நாளை பார்க்கலாம்;. என்றான். “சரி. டேக் கேர்.” என்று வைத்தாள் மைதிலி.

உற்சாகமாகக் கிளம்பிய மைதிலி, ஆபிஸீல் சொல்லவா, வேண்டாமா என்று குழம்பினாள். அப்புறம் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். பிற்பகல் வரை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள், சேர்மன் அவளை அழைப்பதாச் சொல்லவும் சென்றாள். அவர் அவளுக்கு வாழத்துச் சொல்லிவிட்டு, அவள் ரிலீவிங் ஆர்டரைக் கொடுத்தார். அவரிடம் விடை பெற்று வெளியே வந்தவள், வேலைகளை முடிக்க ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட எட்டு மணி வரை வேலைளை முடித்து விட்டு, கிளம்பினாள். செல்போன் எடுத்துப் பார்த்தவள், ராமிடம் இரண்டு அழைப்புகளைப் பார்த்தவள், ராமை அழைத்தாள்.

லோ, ராம் , கூப்பிட்டீர்களா?”; என்றாள்

“ஆம் மைதிலி, உன் வேலை எல்லாம் முடிந்ததா?”

“ம்;;… நாளை வந்து எல்லாவற்றையும் ஹேண்ட் ஓவர் செய்ய வேண்டும்.

“சரி. நாளை மாலை உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன். கோவிலில் பத்தரிகை வைத்து வழிபட்டு விட்டு, நாளை மறுநாள் கொடுக்க ஆரம்பிக்கலாம்” என்றான்.

“சரி. இன்று புடவை வேஷ்டி எடுக்கும் வேலை எல்லாம் முடிந்ததா?”

“முடிந்தது. நாளை வரும்போது வாங்கி பிளவுஸ் தைக்கக் கொடுத்து விடு. சரி வேறு எதுவும் இல்லை வைக்கட்டுமா மைதிலி”

“சரி. குட் நைட். “ “ம்…” என்று வைத்து விட்டான். காலையில் போல் ஏதாவது பேசுவானோ என்று எண்ணினாள். அதற்குப் பிறகு தோளைக் குலுக்கிவிட்டு படுத்துத் தூங்கினாள்.

மறுநாள் சொன்னபடி அவள் வேலையை முடித்து விட்டு கிளம்பினாள். ஹாஸ்டலுக்குச் சென்று சிம்பிள் பட்டுப் புடவை கட்டிக் கிளம்பினாள். ராம் சரியாக ஆறு மணிக்கு வந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏற்கனவே குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர்.

கோவிலில் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டு, சுவாமி பாதத்தில் பத்திரிகை வைத்து வழிபாடு முடித்து விட்டுக் கிளம்பினர்;. போகும் வழியில் அனைவரும் சரவண பவனில் சாப்பிட்டனர். வரும் போது இளையவர்கள் அனைவரும் ஒரு காரிலும், பெரியவர்கள் ஒரு காரிலும் சென்றார்கள்.

ராம், சந்தோஷ், சபரி, சைதன்யா நால்வருமே உடன் பிறந்தவர் போல்தான் பழகினர். அவர்களோடு இப்போழுது மைதிலியையும் இணைத்துக் கொண்டனர்.

சபரி “அண்ணி, நேற்று சீரியஸான பேச்சுக்கள் நடந்ததால் நாங்கள் அமைதியாக இருந்தோம். இன்றைக்கு உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் படித்தது, பிரெண்ட்ஸ் பற்றி சொல்லுங்கள்” என, மைதிலி “நான் படித்தது சென்னை கல்லூhயில் தான். ஆனால் பிரெண்ட்ஸ் கிடையாது. எல்லோரிடமும் பேசுவேன் அவ்வளவுதான்.” என்றாள்.

சந்தோஷ் “என்ன ஒரு ஷார்ட் அறிமுகம் . இவர்களளைக் கேட்டால் இன்று முழுதும், பிறந்த ஆஸ்பத்திரியில் இருந்து இன்று சரவணபவனில் சாப்பிட்டது வரை பேசுவார்கள். அதுவும் முதல் அறிமுகத்திலேயே” என அதற்கு சைதன்யா “ நாங்களாவது இன்று வரை தான் பேசினோம். நீயோ உன் பேரன் ஸ்கூல் வரை பேசுவாயே” என வார அங்கே சிரிப்பு கிளம்பியது. அவர்கள் ஒருவருடோருவர் கேலியும், கிணடலுமாக பேசியது மைதிலிக்கு முற்றிலும் புதியதாக இருந்தது.

பேசிக் கொண்டே வந்ததில் மைதிலியின் ஹாஸ்டல் வர, அவளை விட்டு விட்டுச் சென்றனர். இப்படி ஒரு குடும்ப அமைப்போடு வாழக் காரணமான ராமின் மீது அவளின் அன்பு பெருகியது.

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.