(Reading time: 11 - 22 minutes)

10. வானவில் - அமுதவள்ளி

" லவ் யு சனா"

"முதல்ல உன்னை பார்த்தபோது எனக்கு எதுவும் பெரிசா தோணலை. ஆனால் நீ கால் பண்ணி சந்தோஷை பற்றி விசாரிச்சதும் நல்ல பொண்ணுன்னு தோனுச்சு.  நீ கான்டீன்ல நம்ம ஆளுன்னு சொன்னதும் ஏன் நான் அவளோட ஆளா இருக்ககூடாதுன்னு யோசிச்சேன். அந்த ஸ்பார்க் போக போக அதிகமாகுச்சு. நவ் ஐ பெல்ட் யு ஆர் மை லைப். மை லைப் இஸ் மீனிங்லெஸ் வித்அவுட் யு"

"சவேஷ்"

Vanavil

"உனக்கு எப்ப லவ் வந்தது?"

அவர்களை இந்த உலகத்திற்கு அழைத்துவர சாதனாவிற்கு அழைப்பு வந்தது.

"ஹலோ"

"ஏய்..எங்க இருக்க? எப்ப வருவ? ஹாஸ்டல்ல உனக்கு கொடுத்த பெர்மிஷன் 9 வரைக்கும்தான். இப்ப 8 மணி"

"இன்னும் 30நிமிஷத்தில் வந்துடுவேன்.ஹாசி"

"ஓகே"

"சவேஷ் கிளம்பலாமா? "

"ஓகே" அவள் முகத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினான்.

"சாது டிரஸ் மாதிட்டு வா."

"நிஷ் அவள் முகமே சரியில்லை"

"நான் கால் பண்ணும்போதே அவ வாய்ஸ் சரியில்லை அஞ் "

“வரட்டும் கேட்களாம் ஹாசி”

"எப்படி இருந்தது சாது கல்யாணம்?"

"நல்லா இருந்தது அஞ்." ஒருவித தயக்கத்துடன்.

"ஆட்டோ கிடைச்சதா? போகும்போது ஒன்னும் பிரச்சனையிலையே"

"ஆட்டோ பாதியில் நின்னுடுச்சு ஹாசி."மூவரும் எதுவும் சொல்லாமல் அவளையே பார்க்க "சவேஷ் என்னை அழைச்சிட்டு போனார்"

"ஹ்ம்ம் பிறகு"

ஹாசியின் கேள்வி அவளை தொடர்ந்து சொல்லவைத்தது.

"ரீசெப்ஷன் முடிஞ்சு மண்டபத்திலிருந்து அவர்தான் என்னை இங்கு பைக்கில் அழைச்சிட்டு வந்தார்"

"நாங்க என்ன சொன்னோம்.. ரீசெப்ஷன் முடிஞ்சு உன் சொந்தகாரங்ககூட வரசொன்னோம்தானே. ஏன் நீ வரவில்லை"

"இல்லை அஞ். இது அத்தையோட சொந்தகாரங்க கல்யாணம். எங்க சொந்தகாரங்க நாளைக்கு காலையில் வருவாங்க. இப்ப வந்தயாரும் எனக்கு க்ளோஸ் இல்லை."

"அவங்க க்ளோஸ் இல்லை. உன் அத்தைகிட்ட கேட்கறதுதானே"

"நோ ஹாசி. அவங்க என்னை எப்படி வந்தேன்னுகூட கேட்கவில்லை. ஏன் அப்பா வரவில்லைன்னு ஒரே கேள்வி. பதில் தெரிஞ்சும் கேட்டா நான் என்ன சொல்ல..அதனால் நான் அவங்களை கேட்கவில்லை. ஆட்டோவில் வரலாம்ன்னு நினைத்தேன். அதற்குள் சர்வேஷ் வந்துட்டார்"

"ஆட்டோலையா? அங்க ஆட்டோ ஒழுங்காவே கிடைக்காது. சர்வேஷ் அப்ப வரவில்லைனால் என்ன செய்திருப்ப? உன்னை"

."பொறு அஞ். அவள் இன்னும் முழுதும் சொல்லிமுடிக்கலை. நீ சொல்லு சாது"

"நிஷ் நாங்க ரிடர்ன் வரும்போது நல்ல மழை. அங்கே இருந்த நற்செரியில் ஒதுங்கினோம்."  சிறு தயக்கத்துடன் "நான் உன்னை கண்டேனே முதல்முறை பாட்டு என்னையும் அறியாமல் பாடினேன். அவரும் பாடினார். முடிவில் நான் உணர்ந்துதான் பாடினேன்னு சொன்னார். நானும் நானும்"

"சாது என்ன செய்திருக்க? கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி செய்வியா?"

"இல்லை அஞ். அப்ப எனக்கு அவர்மட்டும் தான் தெரிஞ்சார். ஹாசி கால் வந்ததும்தான் நான் என்ன செய்தேனே தெரிஞ்சது"

"முடிஞ்சதை இப்ப பேசி யூஸ்இல்லை அஞ். சாது நீ இதில் தெளிவாயிருக்கியா?"

"ஹ்ம்ம் நிஷ்."

"அத்தை உங்களை பார்த்தாங்களா சாது"

"இல்லை ஹாசி. அவங்களை பற்றி தெரியுமே. அவங்க சர்வேஷை பார்க்கலை"

"அவங்க பார்க்கலை ஓகே. பட் இந்த விஷயம் இதோட முடியப்போறதில்லை சாது. அங்கள் இதுக்கு ஓகே சொல்வாரா" 

"அஞ்"

"அஞ் சொல்றது கரெக்ட் சாது. அப்பா அம்மா கண்டிப்பா  ஒத்துக்கமாட்டாங்க. அவங்க ஓகே சொன்னாலும் உன் அத்தை கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க"

"நிஷ்" என்று சாது கண் கலங்க "சரி சாது லீவ் இட். நாம இதை பிறகு பேசலாம்"

"நிஷ் எனக்கு சர்வேஷ் வேண்டும். என் அப்பா அம்மாவும் வேண்டும்"

"சாது நீ லவ் பண்ற. டுடே இஸ் யுவர் பஸ்ட் டே. சோ என்ஜாய்."

"சாது அட்லீஸ்ட் நீயாவது ட்ரீட் தா. இந்த ஹாசி ஏமாத்திட்டா"

"ஓகே. ஐ வில் கிவ் யு ட்ரீட்"

"ஹே ஹாசி.."சாது தொடங்கவும் அவள் மொபைல் சத்தம் போடவும் சரியாக இருந்தது.

"ஹலோ சனா..நீ"

"வெயிட் சர்வேஷ். நான் அஞ்சனா...எதுவும் சொல்லிடாதீங்க. நான் உங்க ஆளுகிட்ட தரேன்."

அஞ்சனா பெயரை கேட்டு  சர்வேஷ் தடமாறி மொபைலை  கிழே போட அத்து அதை பிடிக்க மொபைல் ஸ்பீக்கர் கை பட்டு ஆன் ஆகியது. 

"சாது உனக்குதான் கால்"

"வெயிட் பண்ணு. முக்கியமான கேள்வி கேட்டிருக்கேன்"

"என்ன கேள்வி? யார் கிட்ட"

"ஹாசி எப்போ ஹர்ஷாக்கு ஓகே சொல்லபோறாள்"

"நல்ல கேள்வி சாது..சீக்கரம் சொல்லு ஹாசி."

"விளையாடாம போங்கடி"

"சாது நற்செரி அட்ரெஸ் ஹாசிக்கு கொடு. ஹாசி நீ அவர்கிட்ட அங்க சொல்லிடு. பஸ் ஸ்டாண்ட் அவ்வளவு ரொமாண்டிக்கா இருக்காது"

"சே சே அப்படி சொல்லாத அஞ்" 

"நீயாவது எனக்கு சப்போர்ட் செய்தியே நிஷ்" என்று ஹாசி சொன்னதை டீலில் விட்டு

"நோ அஞ் யு ஆர் ராங். பஸ் ஸ்டாண்ட் நம்மளை பொறுத்தவரை ரொமாண்டிகில்லை ஆனால் அவளுக்கு இந்த உலகத்தில் கோயம்பேடு  பஸ் ஸ்டாண்ட்தான் ரொமாண்டிக் பிளேஸ்."

"உங்களை..எனக்கு தூக்கம் வருது..குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்"

"உனக்கும் சாதுவுக்கும் ஸ்வீட் ட்ரீம்ஸ் கரெக்ட். எனக்கும் நிஷாவுக்கும் எதற்கு?"

"அஞ்  அவங்க இரண்டு பேருக்கும் ஒரு ஆளுதான். பட் நமக்கு பிலிம் ஸ்டார்ஸ், ஸ்போட் ஸ்டார்ஸ் எவ்வளவு பேரு இருக்காங்க, யூ டோன்ட் வொர்ரி"

"யா..யு ஆர் ரைட்"

"அஞ்..கால்ன்னு சொன்ன..யாரு?"

"நம்ம சாதுவோட ஹீரோ நிஷ்"

"இதை முதலில் சொல்லவேண்டியதுதானே"

"இதை பாருடா..இப்போவே நிஷ் கேட்டதால்தான் உனக்கு ஞாபகம் வந்தது இதில் என்னை சொல்ற"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.