(Reading time: 11 - 22 minutes)

"வேற யாரை இப்படி கரிச்சு கொட்டுவா சாது.. அத்வைத்தா இருக்கும்"

"அவன்தான் நிஷ். சரியான சிடுமூஞ்சி."

"நீ இன்னிக்கு முழுக்க திட்டலாம் அஞ். ஆனால் அதுக்கு முன்ன எப்படி அடிப்பட்டதுன்னு சொல்லு"

"இங்க ஒருத்தி பொலம்பிடிருக்கேன். நீ ஏன்னு கேட்கறையா ஹாசி?"

"நான் இப்ப ஏன்தானே கேட்டேன் அஞ்"

"நான் அடிப்பட்டதை சொல்லலை அத்வைத் பத்தி சொல்றேன் ஹாசி"

"சரி அஞ். உனக்கும் வேண்டாம் ஹாசிகும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லு"

"ஓகே நிஷ்.." என்று முழுவதும் சொல்ல

"ஹே அஞ்..ஹா ஹா கரெக்ட் பண்ண போறியா? ஐயோ  ஐயோ"

"நிஷ் நீ வேற கடுப்பேத்தாத"

"ஓகே ஓகே கூல் அஞ்"

"ஆனாலும் இன்னிக்கு நீங்க ரொம்ப நேரம் சண்டை போடாம பேசிருகீங்க..அதுவே உலக அதிசியம்தான்"

"ஹ்ம்ம்...தூங்கறதே 4 மணிநேரம்தான் ஹாசி. அவன் வீட்டுக்கு பினான்சியல்லா சபோர்ட் பண்ணனும் போல. பணம் அரேன்ஜ் பண்றதை பத்தி அவங்க அப்பாகிட்ட பேசினான்."

"நல்ல பையன்தான் அஞ்"

"நல்லவன்தான் சாது என் கூட சண்டைபோறதை தவிற"

"ன்னடா மச்சி செம்ம டென்ஷனா இருக்க?"

"இந்த குட்டி பிசாசை நல்லா மொத்தனும்டா நவீ "

"எந்த பிசாசு அத்து?"

"அஞ்சனாதான்..எப்ப பாத்தாலும் என்னை கடுப்பேத்தரதே அவள் வேலையாய் போச்சு"

"இன்னிக்கு என்ன சண்டை?"

"அவளுக்கு அடிப்பட்டடுச்சு. பேண்ட்எய்ட் போடறவரைக்கும் நல்லாதான் பேசினால் கடைசியில் தம்பி எங்க படிக்கறாங்கன்னு கேட்டால் தெரிஞ்சு என்ன செய்யபோறன்னு நான் அவளை கேட்டா அவனை கரெக்ட் பண்ண போறேன்னு என்கிட்டையே சொல்றாள். வந்த கோவத்துக்கு அங்கேயே நாலு கொடுத்திருக்கணும்"

"கரெக்ட் பண்ண போறாங்களா? வாவ் உன்கிட்டயே சொல்றாங்கன்னா நல்ல தைரியம்தான் மச்சி"

"டேய் நக்கலா"

"அவனை எதுக்கு கோசிக்கற? அவங்க கேட்டால் காலேஜ் பெயர் சொல்லவேண்டியது தானே"

"ஹர்ஷா அவளுக்கு சப்போர்ட் பண்ணாதே..என்கிட்டையே கரெக்ட் பண்றேன்னு சொல்றாள்"

"உனக்கு இப்ப என்ன பிரச்சனை?  அவங்க நீ சொன்னதுக்கு பதில் சொன்னாங்க. சோ டென்ஷன் ஆகாதே. தப்பு உன் மேலதான். நீ அப்படி கேட்டதுக்கு யாரா இருந்தாலும் இப்படித்தான் பதில் தந்திருப்பாங்க. "

"ஹ்ம்ம்..நீ சொல்றது சரி நவீன். பச் இதை சொல்ல மறந்துட்டேன். அப்பா கால் பண்ணங்க பணம் அரேன்ஜ் செய்யணும்"

"பண்ணிடலாம் மச்சான். டோன்ட் வொர்ரி"

அவனிடம் சொன்னாலும் மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பணம் பத்தி யோசிக்காமல் அஞ்சனாவை பத்தி யோசிக்கும் அத்வைத் அவர்களுக்கு புதிதாக தெரிந்தான்.

"ம்பி நீங்க இந்த வேலையை செய்யணுமா? நான் இதை பார்த்துக்கிறேன் தம்பி"

"பரவாயில்லை தாத்தா. நீங்களே எவ்வளவு வேலை செய்வீங்க? இரண்டு பேர் லீவ். ஒருதர் சீக்கரம் போயாச்சு"

"இந்த கான்டீன் உங்களுது தம்பி. நீங்க இந்த வேலை செய்யறதை பார்த்தால் என் மனசு தாங்கலை தம்பி. எப்படி இருக்கவேண்டிய நீங்க இங்க இப்படி கஷ்டப்பட்டுகிட்டு இருக்கீங்க. என்னால் தாங்க முடியலை தம்பி." (ஓனரா? அட்லீஸ்ட் எனக்கு முதல்ல சொல்லிருக்கலாம்)

"வேலையில் என்ன இருக்கு தாத்தா..உங்ககூட இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க கவலைப்படாதீங்க"

"என்னவோ தம்பி. என் மனசு கேட்கலை"

"சரி தாத்தா. நான் இதை செய்யலை. ஓகே"

"ஹே என்னடி நடக்குது? நவீன் இதன் ஓனரா?"

"இங்க யாருக்கும் இது தெரியாது போல அஞ். பசங்க யாரும் இதை சொல்லலையே"

"ஆமாம் சாது. ஆனால் ஹர்ஷா என்கிட்ட பேசும்போது அத்வைத் நவீன் இரண்டு பேருக்கும் வேலை அவசியம்னு சொன்னார்"

"ஆமாம் ஹாசி. அவங்க பாமிலி பத்தி கூட சொல்லலை"

"இந்த NK குரூப்க்கு  நிறைய காலேஜ்ல கான்டீன் இருக்கு. அது அவங்க முதல் தொழில். இது இல்லாமல் ஹோட்டல், ரியல் எஸ்டேட்ன்னு நிறைய தொழில் இருக்கு. நவீன் ஒரு புரியாத புதிர் சாது. சரி கிளம்பலாம்"

"ஹே அங்க உன் ஆள் இருக்கார் சாது"

"ஹர்ஷாவும் இருக்கார் அஞ். நவீன் அதற்குள் இங்க எப்போ வந்தார்?"

"எதோ  பிரச்சனை சாது. வாங்க பார்க்கலாம்"

"ஹாய். என்னாச்சு அத்வைத்"

"நவீன் பைக் காணோம் நிஷா"

"காலேஜ்ல எப்படி நடந்தது? வாங்க கம்ப்ளைன்ட் பண்ணலாம்"

"வேண்டாம் ஹாசி. எனக்கு தெரியும் இதுக்கு யார் ரீசன்னு"

"நவீன். என்ன சொல்றீங்க? தெரிஞ்சும் ஏன் இப்படி இருக்கீங்க? யார் அது?"

"அவர் என் அப்பா நிஷா. நான் எப்படி" (என்னது!!!!!)

ஹாய் பிரிண்ட்ஸ் நெக்ஸ்ட் வீக் நவீன் பாமிலிபத்தி பார்க்கலாம். பை

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.