(Reading time: 10 - 20 minutes)

09. வானவில் - அமுதவள்ளி

ர்ஷா ப்ரொபோஸ் செய்ததும் ஹாசினியின் ரீயாக்ஷன் பார்க்க ஈகரா இருக்கீங்களா? வாங்க பாக்கலாம்.

"ஹே ஹாசி..ஹாசிசிசி.."

"ஹான்..எப்போடி வந்த?"

Vanavil

"இப்பதான். என்ன ஆச்சு? நான் வந்ததை கவனிக்காமல் இப்படி திகைச்சு நிற்கற?"

"அதுவந்து சாது...வந்து"

"அதான் வந்தாச்சே சொல்லு...அங்கே என்ன பார்க்கற? யார் இருக்கா?" சாது கேட்கும்போது அங்கே ஹீரோ அணியினர் இருந்தனர்.

"ஒ..ஹர்ஷாவை சைட் அடிக்கிறியா?"

"பச் ..இல்லை"

"என்னமா..சொல்லு"

"சாது ஹர்ஷா ஹர்ஷா"

"ஹர்ஷாக்கு என்ன? ப்ரொபோஸ் பண்ணிட்டாரா?"

"ஹான்..உனக்கு எப்படி தெரியும்"

"வாட்..நீ என்ன சொல்ற"

"என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னார்" அவள் குரல் தயங்கியது. சாதனாவும் அமைதியானாள்.

இவர்கள் சம்பாஷனை கேட்கவில்லை என்றாலும் இவர்களின் முகபாவங்களை பார்த்து கொண்டிருந்தனர் நால்வரும்.

"இவளை"

"எதுக்கு இப்ப தலையில் அடிச்சிக்கற சர்வீ”

"அவ ஹாசினியை சரிபண்ணுவாள்னு பார்த்த அவளும் எப்படி நிக்கிறா பாரு அத்து"

"வேற ஒண்ணுமில்லை மச்சி..நம்ம ஆளு ரொம்ப ஸ்லோன்னு உன்னை திட்டுறாங்க"

"டேய் நவீன் நீயுமா"

"ஏன் ராசா உனக்கு ப்ரொபோஸ் பண்ண வேற இடமே கிடைக்கலையா? இப்படி ஆயிரம்பேர் வந்து போற பஸ் ஸ்டாண்ட் தான் கிடைத்ததா? "

"ஹா ஹா..இல்லைடா எனக்கு அந்த செகண்ட் அவகிட்ட சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன்.. நல்ல இடம்லாம் பார்த்தால் சொல்ல தைரியம் வரலைனால் என்ன செய்யறது அத்து"

"ஹ்ம்ம்..நீ சொல்றதும் கரெக்ட்தான் ஹர்ஷ்"

"எப்படியோ இனிமேல் அவங்க இங்க வந்தால் உன் ப்ரோபோசல்தான் ஞாபகம் வரும்"

"கரெக்ட் நவீ...இந்த ஐடியாகூட நல்லா இருக்கு"

"ஒ..அப்ப நீயும் இங்க தான் சாதனாகிட்ட உன் லவ்வை சொல்ல போறியா. நாங்க வெயிட் பண்றோம். நீ சொல்லிட்டு வா"

"சே.. இப்ப எனக்கு அப்படி தோணலை ஹர்ஷ். உனக்கு வந்த ஸ்பார்க் எனக்கு வரும்போது சொல்றேன்"

"ஓகே..வாங்க நாம அங்க போகலாம். அவங்களை ஹாஸ்டல்க்கு பஸ் ஏத்திட்டு போகலாம்"

"நீ கூலா  பேசு ஹர்ஷ்..அங்க ஹாசினியை பாரு. சம்மா ஷாக் போல"

"நார்மல் ஆகிடுவா"

ஹாஸ்டலுக்கு அஞ்சனவும் நிஷாவும் சரியாக 6 மணிக்கு வந்தனர்.

"ஹாய் ஹாய்..ஹாசி உனக்கு பிடிச்ச முறுக்கு எடுத்துட்டு வந்திருக்கேன்"

"ஹேய் ஹாசி ஹாசி..உன்கிட்ட தான் அஞ் பேசறா"

"ஹான்"

"என்னடி ஆச்சு..பேய் ஏதாவது உன்னை அடிச்சிடுச்சா"

"சான்சேஇல்லை அஞ். நாம இருக்கும் போது அது எப்படி வரும்" (என்ன ஒரு தற்பெருமை)

"அப்ப ஏன் இப்படி இருக்கா நிஷ்"

"இந்த சாது எங்க"

"ஹேய் எப்படி வந்தீங்க..சாப்பிட எதாவது மீதி எனக்கு ஹாசி வெச்சிருகாளா?"

"எங்க? அவ பதிலே பேசலை. "

"அது வந்து அஞ் ஹர்ஷா ஹர்ஷா.."

"எதுக்கு இப்ப திக்குற சாது ..ஒழுங்கா பதிலை சொல்லு. ஹர்ஷவுக்கு என்ன?"

"விடு அஞ். ஹாசி சொல்லட்டும்" என்று சொல்லி நிஷா ஹாசிமேல் தண்ணீரை ஊற்றினாள்.

"ஹான்..நீங்க எப்போ வந்தீங்க?"

மூவரும் அவளை பார்க்க அவள் தயக்கத்துடன் அவர்களை பார்த்தாள். அவர்களின் பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறினாள்.

"இப்ப சொல்லு ஹாசி."

"நிஷ் ஹர்ஷா இன்னிக்கு என்னை பிடிச்சிருக்குன்னு" என்று இழுக்க

"வாரே வா..ப்ரொபோஸ் செய்துட்டாறா..எங்க? எப்போ"

"இவனிங் பஸ் ஸ்டாண்டில் அஞ்"

"வாட்..பஸ் ஸ்டாண்டிலா? நீ என்ன சொன்ன?"

"எதுவும் சொல்லலை நிஷ்"

"ஹ்ம்ம். சரி 2 டேஸ் நடந்ததை சொல்லு..உனக்கு என்ன தோணுது? "

(அப்படியே கொசுவத்தி சுருள் உங்க கண்ணுக்கு தெரியுதா..தெரிஞ்சாதான் பிளாஷ்பாக் சொல்லுவேன்.)

ஹாசி அவர்களிடம் ஊருக்கு போகும்போது பஸ்சில் நடந்தது அவர்கள் வீட்டிற்கு வந்தது  என அனைத்தையும் சொன்னாள் தொடர்ந்து இன்று அவள் சித்தப்பாவை அனுப்பிவிட்டு வரும்போது அவர்களுக்குள் நடந்த உரையாடலையும் சொன்னாள்.

"மச்சி உனக்கு ஹாசினியை பிடிச்சிருக்கு பிறகு எதுக்கு செகண்ட் தாட். அவங்ககிட்ட சொல்லிடு"

"இல்லை அத்து. எனக்கு ஒரு கால் இல்லை. அதை நான்"

"லூசா நீ..இப்ப எதுக்கு அதை பற்றி நினைக்கற"

"நோ சர்வீ. உங்களுக்கு இது பெரிய விஷயமா தெரியாமல் இருக்கலாம் பட் அவளுக்கு அவ குடும்பதுக்கு அப்படி இருக்கணும்னு இல்லையே. அவளோட அப்பா அம்மாவுக்கு எவ்வளவு கனவு இருக்கும்"

"நீ சொல்றது சரிதான் ஹர்ஷ். பட் ஹாசினியை பார்த்தால் எங்களுக்கு அப்படி தோணலை."

"இல்லை அத்து. இது சரிவராது"

"பச் ஹர்ஷ் நீ ஏன் அவங்ககிட்ட சொல்லகூடாது?ஓகேவா இல்லையான்னு அவங்க டிசைட் பண்ணிக்கட்டும்."

"இல்லைடா சர்வீ.. அவள் தப்பா நினைச்சுட்டா?"

"ஹர்ஷ் என்னை பாரு. ஏன்டா என்னை பார்த்த பிறகுகூடவா உனக்கு புத்திவரலை. சொல்லிடுடா. நீ உன் லவ்வை சொல்ல போற அவங்க எஸ் ஆர் நோ சொல்லபோறாங்க. உன்னை கண்டிப்பா தப்பா நினைக்கமாட்டாங்க.   பிறகு ஏன் நம்ம சொல்லலை சொல்லிருந்து அவள் அக்செப்ட் செய்திருந்தால் நம்ம சந்தோசமா அவள்கூட இருந்திருப்போமேன்னு நீ பீல் பண்ண கூடாது. அது உன்னைமட்டும் இல்லை உன்னை சுத்தி இருக்கும் எல்லோருக்கும் கஷ்டம் . என்னை மாதிரி யாரும்  கஷ்டபடகூடாது. ப்ளீஸ் டா"

(ஐயோ நான் இப்ப நிஷாவுக்கு என்ன பதில் சொல்றது? நீ இப்படி இருந்தால் பார்க்க சகிக்கலை. கொஞ்சம் சிரிப்பா. நல்ல வேளை நான் சொன்னதை நிஷா கேட்கலை)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.