(Reading time: 10 - 20 minutes)

"வீ ப்ளீஸ் .. நீ பீல் பண்ணாத"

"இல்லைடா நான் பீல் செய்யலை. அம் ஹாப்பி"

அனைத்தையும் சொல்லிமுடித்தாள்.

"நவீன் குரலில் அவ்வளவு வலி அஞ். எனக்கே கஷ்டமா இருந்தது."

"யாருக்கு என்ன கஷ்டம் வரும்ன்னு சொல்ல முடியலை"

"நீ என்ன முடிவு பண்ணிருக்க ஹாசி?"

"எனக்கு பிடிச்சிருக்கு சாது. கொஞ்சம் பொறுப்பு கொஞ்சம் குறும்பு கொஞ்சம் கோபம் கொஞ்சம் சோகம் கொஞ்சம் "

"கொஞ்சம் காபி கொஞ்சம் காரம்"

"அஞ் நான் சீரியசா பேசிட்டிருக்கேன்"

"கூல் ஹாசி. கோபப்படாதே."

"உனக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. என்ன ஒரு பிரகாசம் ஒரு சந்தோஷம். ஆனால் ஹாசி ஆர் யு சூர்? நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. இது உன் லைப்"

"சரி நிஷ். நீங்க என்ன நினைக்கறீங்க?"

"ஸ்போடிவ், டாக்கடிவ், டலென்டெட் கய்."

"சாது சொல்றது கரெக்ட். நல்லவர் நாலும் தெரிஞ்சவர்"

"நிஷ் நீ என்ன நினைக்கற"

"அவங்க சொல்றது சரிதான் ஹாசி. ஆனால் ஆன்டி அங்கள் அண்ணா என்ன சொல்லுவாங்க"

"லவ்க்கு அப்போஸ் பண்ணமாட்டாங்க. பட் ஹர்ஷா கால் பத்தி அவங்க யோசிக்கலாம். பேசி சரிபண்ணலாம்"

"ஓகே. எப்படியும் நாமளும் திட்டுவாங்கனும் அதுக்கு ரெடியா இருக்கனும்"

"கரெக்ட் நிஷ். அடி பலமா இல்லாமல் இருக்கனும்"

"ஹா ஹா உங்க பிரிண்ட் எனக்காக அடிவாங்கமாட்டீங்களா?"

"எல்லாம் நேரம்"

"சரி ஹாசி எப்ப ட்ரீட்"

"ஹர்ஷாகிட்டையும் சேர்த்து வாங்கிக்கலாம் சாது"

"தட்ஸ் எ குட் ஐடியா நிஷ்"

"ஹே அஞ் நீயுமா"

"சாது கிளம்பியாச்சா?"

"கிளம்பிட்டேன் ஹாசி..இந்த கல்யாணத்தை சென்னைகுள்ள வைக்ககூடாது. இப்படியா ஒதுக்குபுறமான ஏரியாவில் வைப்பாங்க. போறதுக்கே பிடிக்கலை"

"சாது வேற வழியில்லை. ஆன்டி அங்கள் வரமுடியலை. நீயாவது போகணும்"

"ஹ்ம்ம்..சரி."

"சாது அந்த ஏரியா போனதும் ஆட்டோவில் மண்டபம் போயிடு. ஆனால் வரும்போது உன் சொந்தகாரங்க கூட வந்திடு. தனியா ஆட்டோவில் வராதே"

"சரி நிஷ். நான் கால் பண்றேன். பை"

ஆட்டோவில் சிறிது தூரம் சென்றதும் ஆட்டோ நின்றுவிட்டது.

"ஆட்டோ இப்ப ஸ்டார்ட் ஆகாதுமா. 10நிமிஷம் நடந்தால் அந்த மண்டபம் வந்திடும்."

"சரி அண்ணா"

அவள் சிறிது தூரம் சென்றிருப்பால் அவள் அருகில் ஒரு வண்டி நின்றது.

"ஹேய். கண்ணு தெரியலை" தன் பயத்தை மறைத்து பேசினாள்.

"ஏன் தெரியாமல் நல்லாவே தெரியுதே"

"ஹே சர்வேஷ் நீங்களா."

"என்ன பயங்கற பிரகாசமா ஒளிருது முகம். கொஞ்சம் நேரம் முன்னாடிபயந்துட்டதானே"

"அதல்லாம் இல்லை. நீங்க எங்க இங்கே"

"பிரிண்ட் வீடு இங்க இருக்கு. நீ என்ன பண்ற இங்க. அதுவும் மேக்அப் போட"

"யாரு நான் மேக்அப் போட்டிருக்கேனா?"

"இல்லையா. உன்னை பார்த்ததும் எங்கயோ பார்த்த முகமா இருக்கேன்னு யோசிச்சேன். பிறகுதான் தெரியுது இது மேக்அப் போட்ட சாதனான்னு"

"உங்களை...நான் கிளம்பறேன். டைம் ஆகிடுச்சு"

"சில் சாது. வா நான் ட்ரோப் பண்றேன்"

"ஹ்ம்ம். ஓகே.. கிளம்புங்க. ஏன் வெயிட் பண்றீங்க"

"எங்க ட்ரோப் பண்ணனும் சொன்னால்தானே..இல்லையென்றால் உன்கூட லாங் டிரைவ் போக நான் ரெடி"

"என்னது!! அந்த கல்யாண மண்டபத்தில் விடுங்க"  "ஓகே"

மௌனம் அங்கே ஆட்சி செய்தது. மனதிற்கு பிடித்தவருடன் முதல் பயணம். என்றும் மறக்க முடியாதது.

"தேங்க்ஸ் சர்வேஷ்"

"உள்ள கூப்பிட மாடீங்களா?"

"அது வந்து.."   "பை"

அவன் சென்ற பாதையை பார்த்துகொண்டிருந்தாள். கோபமோ? தெரியலையே. அதற்குள் அவளை யாரோ அழைக்க அவள் உள்ளே சென்றாள். உணவு முடித்து வெளியே வர எப்படி போவது என்ற குழப்பம். யாரும் தன்னை பற்றி கேட்காததால் உதவி கேட்க தயக்கம். வெளியே வந்ததும் அவள் பார்த்தது பைக்குடன் இருந்த சர்வேஷை.

"ஊப்ஸ்..எப்படி போறதுன்னு பயந்துடேன் சவேஷ் . தேங்க் காட். நீங்க இருக்கீங்க"

"நான் ஒருத்தருக்கு வெயிட் பண்றேன் சாதனா"

"ஒ..இட்ஸ் ஓகே" என்று கண்ணீருடன் திரும்பினாள். அவன் அவாய்ட் செய்ததும் சாதனா என்று சொன்னதும் அவளை பாதித்தது.

"ஹே நான் வெயிட் பண்றது சாதுக்காக"

"அப்ப ஏன் பொய் சொன்னீங்க"

"சும்மா சீண்டலாம்ன்னு"

"சாரி சவேஷ். பிரிண்ட் கல்யானம்னால் கண்டிப்பா உங்களை கூப்பிடிருப்பேன். எங்க அத்தை ஏதாவது சொல்லுவாங்க"

"சே சே. பரவாயில்லை..கிளம்பலாமா"

"படிப்பெல்லாம் எப்படி போகுது சனா"

"ஹ்ம்ம் நல்லா போகுது. ஹான் இப்ப எப்படி கூப்பிடீங்க?"

"சனான்னு சொன்னேன். சொல்ல கூடாதா"

"சொல்லலாம் சவேஷ்"

"தூரல் போடுது சனா. எங்கையாவது நிற்கலாம்"

"ப்ளீஸ் போலாமே.. தூரல் தானே போடுது. மழை வந்தால் பார்த்துக்கலாம்"

அவள் சொல்லி முடிக்கவும் மழை பெய்யவும் சரியாகயிருந்தது.

"ப்ளீஸ் சவேஷ்...நிற்காதீங்க"

"நோ சனா..கொஞ்சம் விட்டதும் போகலாம்"

அங்கே இருந்த மண்டபத்தில் ஒதுங்கீனர்.

"ஹே சவேஷ்..அங்க பாருங்க..எவ்வளவு விதமா செடி இருக்கு"

"அது நற்செரி சனா... வேண்டுமென்றால் நீயும் எதாவது செடி வாங்கிக்கோ"

"நான் எங்கே அதை வைக்கறது." பலமான யோசனைக்கு பிறகு "வாங்க..பார்க்கலாம்"

"ஹே இப்பதானே வைக்க இடமில்லைன்னு சொன்ன இப்ப வாங்கலாம்ன்னு சொல்ற"

"ஏன் சவேஷ் எனக்காக அதை உங்க ரூமில் வைக்க மாட்டீங்களா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.