(Reading time: 12 - 24 minutes)

மூங்கில் குழலானதே – 06 - புவனேஸ்வரி

றவுகள்.. ! உலகத்தை படைத்தவன் யார் ? கடவுள்தானா ? நமது பால்வீதியில் 9 கிரகங்கள் இருப்பதுபோலவே வான்வெளியில் பல நூறு பூமிகள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறதே ! உண்மைதானா ? உண்மைதான் என்றால் , அதை எல்லாம் உருவாகியது எப்படி ? கடவுள்தான் படைத்தார் என்றால் , தனித்தனி கிரகங்களை படைத்த இறைவன் , மனிதனையும் தனித்தனியாய் படைத்திருக்கலாமே ? ஏன் நாம் ஒரு குழுவாகவே வாழ்ந்து மாண்டுவிடுகிறோம்

ஒரு சின்ன கற்பனைதான் .. ஒரு நாள் கண்விழித்து பார்க்கும்போது நாம் கண்ட கனவுகளும் இலட்சியங்களும் நிறைவேற்றபட்டு நாம் சொகுசான வாழ்வோடு இருக்கிறோம் என்று நினைத்து கொள்வோம் ..உலகின் மிக பிரசத்தி பெற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமான வீட்டில் நாம் மட்டும் தனியாய் இருந்தால் எப்படி இருக்கும் ?

நான் வென்று விட்டேன் என்று யாரிடம் சொல்லி கொள்வது ? எனக்கு பசிக்கிறது என்று யாரிடம் உணவை கேட்பது ? நம்மை சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அமைதியை எப்படி கிழித்து எறிவது ? அமைதி , ஒரு ஏகாந்த நிலைதான் .. ஆனால் அமைதி அளவுக்கு மீறி அதிகரித்து , சூன்யமானால் என்னாகிவிடும் ? கேட்டது எல்லாம் பெற்றுவிட்டப்பின் அதை அனுபவிக்க  அருகில் உறவில்லை என்றால் அத்தனையும் பெற்று பலன்தான் என்ன ? சிந்திக்கிறேன் சகிதீபன்.

Moongil kuzhalanathe

த்தையின் பேச்சு பின் வாசல் வரை தொடர்ந்தது .. அத்தனை கணீர்  குரல் நாச்சியார் அத்தைக்கு .. தாய்வீடு என்றாலே பெண்களுக்கு தனி சந்தோஷம்தான் தான் .. அதுவும் நாச்சியார் அத்தை ஒரு காலத்தில் அந்த வீட்டின் இளவரசியாய்  வளம் வந்தவர் தானே ? அவர் வந்த நோக்கம் எதுவென்று தெரியாத போதும்கூட , வீட்டிற்கு உறவினர்கள் வந்திருக்கிருக்கிரார்கள் என்பதே மைத்ரேயிக்கு சந்தோஷமாய் இருந்தது.. முகத்தை மென்னகையை தவ்சா விட்டவளாய் அவள் முகத்தை குளிர்ந்த நீரால் துடைத்து கொண்டிருந்த நேரம் அவள் முன்பு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தான் அவன்.. ஒரு நொடியில் சுவாசமே நின்று விடும் போல இருந்தது அவளுக்கு .. காரணம் எதிரில் நின்றிருந்தவனின் தோற்றம் தான் ..

கனவில் பார்த்தவனை போலவே இவனது தோற்றம் இருக்கவும் அவள் இதயம் எகிறித் துடிக்க தொடங்கியது .. அதேநேரம் அவளது கண்ணாடி வளையலின் ஓசை கேட்டு புன்னகையுடன் திரும்பினான் கதிரோவியன்.. மைத்ரேயியின் அத்தை மகன் .. கரியநிறத்தான்  தான் ஆனால் பார்த்ததுமே அசந்துவிடும் அழகு .. சகிதீபனுக்கு சொன்ன அத்தனை அழகும் இவனுக்கும் இருந்தது .. ஒருவேளை இருவரையும் அருகருகில் நிற்க வைத்திருந்தால்  நிச்சயம் அண்ணன் தம்பி என்று கூறி இருப்பார்கள் .. அவன் திரும்பி சிரிக்க்கவும்தான் அவளது மூச்சு சீரானது .. காரணம் கனவில் வந்தவனின் முகம் இவனது முகமில்லை ..

" அப்பாடா " என்று மனதிற்குள் கூறி கொண்டாள் .. ஏனோ அவள் மனதில் கொஞ்சமும் ஏமாற்றம் இல்லை .. தன்னவன் தன்னை நெருங்கி வந்துவிட்ட உணர்வு அவளுக்கு இல்லை ..அதனால் இவனை பார்த்ததும் மிக இயல்பாகவே இருந்தாள்  மைத்ரேயி ..

" யாரு நீங்க ?" என்று அவள்  கேட்டதுமே அங்கு பதிலுடன் ஆஜர் ஆகினாள்  கயல்விழி ..

" இவர்தான் நம்ம மாமா அக்கா .. " என்றவள் நம்ம மாமா என்று உற்சாகமாய் சொன்ன விதத்தில் இருவரின் பார்வையையுமே  பரிசாய் பெற்று கொண்டாள்  .. குறிப்பாய் கதிரோவியனின் பார்வை அவள்மீது கொஞ்சம் ரசனையாகவே படிந்தது .. " என்ன மாமா ன்னு சொல்லுறதில் உனக்கென்ன சந்தோஷம் ?" என்று மனதிற்குள் நினைத்தான் போலும் ..

" ஏன் அக்கா இப்படி விழிக்கிற ?  நாச்சியார் அத்தை , அவர் மகன் கூடத்தான் வந்தாங்க .. இவங்க தான் அவர் மகன் " என்று நீளமாய் விளக்கம் அளிக்க தொடங்கவும் தங்கையை பார்வையாலேயே அடக்கினாள்  மைத்ரேயி .. மேலும் கதிரிடம் திரும்பியவள் ,

" வாங்க அத்தான் .. காபி ஏதாவது கொடுத்தாங்களா ?" என்றாள்  நிமிர்வுடனேயே .. அவளையே ஊடுருவி பார்த்தான் கதிரோவியன் .. அவன் பார்வையில் என்னத்தான் இருக்கிறது என்று அவளால் கணிக்க முடியவில்லை .. ஆனால் நிச்சயம் மையல் இல்லை .. அதுவே அவளுக்கும் போதுமானதாய் இருந்தது ..

" ம்ம்ம் .. ஆச்சு " என்று பதில் அளித்தான் கணீர் குரலில் .. அடுத்து என்ன பேசுவது என்று அவளுக்குமே தெரியவில்லை .. ஆனால் கயல்விழி அப்படி இல்லை .. எப்போதடா அவனிடன் ஏதாவது பேசலாம் என்று காத்திருந்தாள்  .. அவளும் பருவப்பெண் தானே .. அத்தைமகனை பார்க்கும்போது ஒரு பெண்ணுக்குள் தோன்றும் அத்தனை மாற்றங்களும் அவளுள் எழவில்லை என்றாலும் கூட, கதாநாயகன் போல தோரணையாய்  இருப்பவனிடம் ஏதாவது பேசவேண்டும் போல இருந்தது .. இரு தங்கைகளின் முகத்தை பார்த்தப்படியே அங்கு வந்து சேர்ந்தான் ஸ்ரீராம் .. ஏனென்று தெரியாமலே கண்களால் அவனுக்கு நன்றி சொன்னாள்  மைத்ரேயி .. அவனும்

" மையு, அம்மா தேடுறாங்க ..என்னனு  கேளுடா " என்றபடி சிறியவளை பார்த்து

" இந்தா , இந்த சின்ன கழுதையையும் கூட்டிட்டு போ " என்றான் .. உறவினன் முன்பு தங்கையை வைவதில் அவனுக்கு இஸ்டம் இல்லைதான் .. ஆனால் அவள் அனைவரின் கண்ணுக்கும் , குறிப்பாய் கதிரின் கண்களுக்கு சிறுமியை போல தெரிவதே நல்லது என்று தோன்றியதால் தான் ஏதோ சின்ன பெண்ணை   சீண்டுவது போல  தங்கையை சீண்டினான் ..கயல்விழியும் வழக்கம் போல

" ச்சி  போ அண்ணா " என்று சிணுங்க , அவள் நிஜம்மாகவே சிறு பெண்ணாய் தான் கண்களில் தெரிந்தாள்  .. ஒரு  சிநேகமான புன்னகையை வீசினான்  ஸ்ரீராம் .. ஸ்ரீராமின் தோளை  தட்டி புன்னகைத்த கதிரோவியன் , வேறேதும் பேசினான் இல்லை.. அவன் எப்படி பட்டவன் என்று கணிக்கவே முடியவில்லை .. கதிரோ நின்றது போதும் என்றதுபோல தன் அம்மாவை தேடி சென்றான் ..

கதிரோவியன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வருவதற்கும் , அப்பத்தா தனது கணீர் குரலில் நாச்சியாரை கேள்வி கேட்கவும் சரியாய் இருந்தது ...

" அதெல்லாம் சரிதான் .. இவ்வளவு நாளா பெத்தவளை பார்க்க வராதவளுக்கு இப்போ என்ன திடீர்ன்னு பாசம் ?" என்று கேட்டிருந்தார் அவர் .. அதே கேள்வியை தான் காலையில் கதிரோவியனும் அவன் அம்மாவிடம் கேட்டு இருந்தான் .. இப்போது பாட்டியின் கேள்வி அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பொறுமையாய் அவனும் கை கட்டியபடி கூர்ந்து நோக்கினான் ..தன்னை பெற்றவரை கூட சமாளிக்க தெரிந்த நாச்சியாருக்கு , தான் பெற்றவனை சமாளிப்பது கஷ்டம் என்று நன்றாகவே தெரியும் .. அதனால் வந்தவேலையை பற்றி இப்போதே பேச வேண்டாம் என்று முடிவெடுத்தார் .. மேலும் 

" என்னம்மா நீங்க , நீர் அடிச்சு நீர் விலகுமா ? இன்னும் எத்தனை வருஷம் தான் அம்மா இப்படி பிரிஞ்சு இருக்குறது ? எந்த குடும்பத்தில் தான் பிரச்சனை  இல்லை .. நாளைக்கு நம்ம ரெண்டு வீட்டிலும் நல்லது கெட்டது  நடந்தா நீங்க கலந்துக்க மாட்டிங்களா ? மனசுல பாசத்தை வெச்சுக்கிட்டு வெளில ஏன் நடிக்கணும் .. சரி நாம்தான் ஏதோ மனஸ்தாபம்னு விலகிட்டோம். நம்ம பிள்ளைகளுக்கு நாளைக்கு உறவுன்னு சொல்லிக்க நாலு மனுஷாமக்கள் வேணாமா ?  நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாத, நிலையில்லாத வாழ்க்கையம்மா இது .. அப்படி இருக்கும்போது எம்புட்டு நாளுதான் இப்படி சண்டைன்னு சொல்லி பிரிஞ்சு இருக்கிறது " என்றார் .. நாச்சியார் அடிப்படையில் நல்லவர்தான் .. என்னத்தான் தனது அண்ணன் மகளை மருமகள் ஆக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவர் வந்திருந்தாலும் , அவர் ஒப்பித்த ஒவ்வொரு வார்த்தையிலும் நிச்சயம் பொய் இல்லை ..சொல்லபோனால் தனது பிறந்த வீட்டு படியேற இதை ஒரு சாக்கு என்றும் கூட கூறலாம் .. என்னத்தான் பெண்கள் குடும்பத்தின் அஸ்திவாரம்  என்று காலம் காலமாய் வசனம் பேசினாலும் , குடும்பத்தில் ஆண்களினால் கொஞ்சம் விரிசல் வந்துவிட்டால் அதில் பெண்ணும் தானே முதலில் பாதிக்க படுகிறாள் ..எனக்கும்  அவனுக்கும்தான் மனவருத்தம் , நீ உன் குடும்பத்தோடு உறவு வைத்து கொள்ளலாம் என்று பெருந்தன்மையாய் கூறும் கணவன் எங்கிருக்கிறாள் ? பெரும்பாலோரான பெண்கள் திருமணத்திற்கு பின் , கணவனின்  பிரதிநிதியாய் இருக்கிறார்களே தவிர , தனிப்பட சுயத்துடன் நடமாட முடிவதில்லையே .. எத்தனை பெண்களின் மனதில் இந்த ஆதங்கத்தீ பற்றி எரிகிறதோ ?

அவரது கண்கள் உண்மையான பிரிவின் வலியையே  பறைசாற்ற ,நம்ம மீனாட்சி அப்பத்தாவும்  அமைதியானார் .. வாசுகியும் கூட , கணவரின் தங்கையின் பேச்சில் நெகிழ்ந்துதான் போனார் ..

" அட எதுக்கு மதனி , விடிஞ்சும் விடியாததுமா கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க  ? இது உங்க வீடுதான் .. உங்களுக்கு இங்க வர்றதுக்கு எப்பவும்  உரிமை இருக்கு .. அத்தை தான் ஏதோ ஏக்கத்தில் கேட்டுபுட்டாங்கன்னா  , நீங்களும் அதுக்கு கலங்கி நிக்கனுமா ?" என்று சுமூகமாக பேச , பார்வையாளராய் அங்கு நின்றிருந்த மைத்ரேயியின்   கண்களிலும் புன்னகைதான் .. இதுதானா அவள் தாய் .. அவள் தாயால் எந்த ஒரு கோப உணர்வையும்  மனதில் அதிக நேரம் வைத்து கொள்ள முடியாது ..சொல்ல போனால் , தன்னை சுற்றி உள்ள சூழல் எப்போதுமே  சுமூகமாய் இருக்க வேண்டும் என்பது வாசுகியின் நோக்கம் .. மகளின் பார்வை அறிந்தவராய்  வாசுகியும் இரு மகள்களையும் கண்ணாலேயே அருகில் அழைத்து நாச்சியாரிடம்  பேச கூறினார் .. அதற்காகவே காத்திருந்தது போல அவரோடு ஒட்டி கொண்டாள்   இளையவள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.