(Reading time: 17 - 34 minutes)

17. என் உயிர்சக்தி! - நீலா

துவோ என்னை உன்னிடம் ஈர்த்தது..

அதுதான் உன்னை என்னிடம் சேர்த்தது!

தொலைந்தது நானா? கிடைத்தனுவேனா?

En Uyirsakthi

கிடைத்திடும் போதும் தொலைந்திடுவேனா!

பெண்கள் மனமொரு ஊஞ்சல் இல்லை..

ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை!

இழுப்பது நீயா... வருவது நானா!

திசையரியாது திரும்பிடுவேனா!

காதலின் பொன்னூஞ்சலில் அசைவது சுகம் சுகம்!

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே!

ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே!

சத்தமாக பாடியபடி பிலடேல்பியா பிளாட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாள் திருமதி பூங்குழலீ!

சத்தம் கேட்டு அங்கே வந்தனர் டீனா, டேவிட் மற்றும் யாழினி. புன்னகையுடன் அவளை பார்த்திருந்தான் டேவிட். யாழினியும் டீனாவும் ஏதோ கேலி செய்ய போகிறார்கள் என்றுணர்ந்து சிரித்தவாறே 'நடத்துங்க!' என்றுவிட்டு நகர்ந்துவிட்டான்.

நேற்று இல்லாத மாற்றம் என்னது?

காற்று என் காதில் ஏதோ சொன்னது!

இது தான் காதல் என்பதா?

இளமை பொங்கி விட்டதா?

இதயம் சிந்திவிட்டதா!!

சொல் மனமே...

என்று குழலீயின் காதுகளில் இருந்த இயர்பாட்ஸை எடுத்துவிட்டவாறு ஒவ்வொரு வரியையும் இருவரும் பிரித்து பாடி அவளை தன் பக்கம் திரும்பினர். டீனா அடுப்பை அணைத்துவிட்டாள்.

அச்சோ டீனா! இன்னைக்கு ஒரு நாள் நல்ல சாப்பிடு போடலாம்னு நினைச்சா இப்படி பண்றீங்களே? - குழலீ

முதல்ல நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லு!

என்ன கேட்டீங்க? என்று விழித்தாள்.

மீண்டும் அதே வரிகளை அப்படியே பாடி காட்டினர்! குழலீயின் முகம் இறுகிவிட்டது!

என்ன குழல் கேட்க கூடாத எதையாவது கேட்டோமா?

ப்ச்ச்... என்று சலித்திட நகர்ந்து வரவேற்பறைக்கு சென்றாள்.

சரி ஏதோ உற்சாகமாய் இருக்கிறாப்புல இருந்தது அதனால தான் கேட்டோம். வந்து இருபது நாளைக்கு மேல ஆகுது... ஆனா எதுவும் பிடிக்கொடுத்து பேச மாட்டேனு இருக்குற!

நான் சொல்லறேன் டீனா! ஆனா அதுக்கு முன்னே சமையலை முடிச்சிட்டு வரேன். ஒரு முக்கியமான கால் இருக்கு! இன்டியன் டைம் நைட் 11.30க்கு! ப்ளீஸ்... ரொம்பவே முக்கியமான கால்...அதை முடிச்சிட்டு கோவிலுக்கு வேற போகனும்..

அப்படி என்னடீ கால்? எதுக்கு இப்போ கோவிலுக்கு?? பொங்கலுக்காகவா?

பொங்கல் மாட்டுப்பொங்கல் ரெண்டுமே முடிஞ்சிடுச்சே! - டீனா

ஓ!!கல்யாணத்துக்கு பிறகு வந்த தலைப்பொங்கல்...- யாழினி

கல்யாணத்திற்கு பிறகு வர முதல் ஜனவரி 18...' என்று முணுமுணுத்தாள் குழலீ.

நாங்க போய் சமைக்கிறோம்.. நீ போய் வேலையை பாரு..' என்று எழுந்துவிட்டாள் யாழினி.

ன் அறைக்கு சென்று ஐ பேடை எடுத்து எழுத தொடங்கினாள். எழுதியதை படித்து பார்த்துவிட்டு மற்ற வேலைகளை செய்தாள். ஏதோ யோசித்தவாறு அமர்ந்திருந்தாள். சரி யாழினியை கூப்பிடலாம் என்று திரும்பும் போதே யாழினியும் டீனாவும் வேலைகளை முடித்துவிட்டு வந்தனர்.

யாழ் ... எனக்கு ஒரு உதவி.. உன் மொபைலை தர முடியுமா? ஒரு கால் செய்யனும்.. எனக்கு லைன் கிடைக்கல...

தாராளமா எடுத்துக்கோ... குழல் என்ன விஷயம்? ரொம்ப நர்வஸா இருக்கா மாதிரி தெரியுது??

ஒன்னுமில்லை! என்று அவளிடம் இருந்து மொபைலை வாங்கினாள். சிறிது நேரம் தயங்கி நின்றவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக நம்பர் டயல் செய்தாள்.

அதே சமயம்...

எந்த அழைப்புகளையும் ஏற்காமல் ஃபேஸ்புக் பக்கம் கூட செல்லாமல் ரேஸ்ட்லேஸாய் இருந்தான் பிரபு. பன்னிரெண்டு மணியாக இன்னும் சில விநாடிகள் மட்டுமே! மிகுந்த ஆவலுடன் ஒரு அழைப்பை எதிர் பார்த்திருந்தான். மற்றவர்கள் அனைவரிடமும் இருந்து அழைப்பு வந்தது. யாழினியிடம் இருந்து இரண்டு முறை அழைப்பு வந்துவிட்டது. இதற்கு மேல் எடுக்காமல் இருந்தால் வீட்டு எண்ணிற்கு அழைத்துவிடுவாள்.

இந்த முறை அழைப்பை ஏற்று 'ஹலோ' என்றான்.

அந்தபுறம் ஒரு நோடி அமைதி... பின்னர் 'இனிய.....' என்று தொடங்கும் போதே பிரபு தடுத்துவிட்டான்.

ஏய் யாழினி! ஒரு நிமிஷம் எதுவும் சொல்லிடாதே! நான் ஒரு முக்கியமான காலுக்காக வெயிட்டிங்... பிறகு கூப்பிடு!' என்று அணைத்துவிட்டான்.

குழலீயின் முகம் விழுந்துவிட்டது. 'முக்கியமான கால்லா??' என்று யோசித்தாள். முடிவு செய்தவளாய் திரும்பவும் அழைத்தாள்.

எடுத்தவுடன் அவன் பதிலுக்கு காத்திருக்காமல் சட்டேன்று கூறிவிட்டாள். 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பிரபு! இல்லைங்க சாரி தெரியாம பெயர் சொல்லிட்டேன்...'

புலீ!! நன்றி நன்றி! ரொம்ப தேங்க்ஸ்... என் பிறந்தநாள் கூட உனக்கு தெரியுமா??? தேங்க்ஸ் ஃபார் ரிமம்பரிங் மீ!'

இருவரிடமும் கனந்த மௌனம் இரு நோடி! பேசிய வார்த்தைகளை விட பேசாமல் போன விஷயங்களை விட இந்த மௌனம் ஆயிரம் கதை பேசியது.

மௌனம் கலைத்து இருவரிடம் இருந்தும் ஒரே கேள்வி!

'எப்படியிருக்க??'

'எப்படியிருக்கீங்க??'

சரிந்துவிட்டாள் குழலீ. மறுபடியும் ஒரே பதில் ' ஐ ம் ஃபைன்!'

பொண்ணுங்க சொல்லும் 'ஐ ம் ஃபைன்' க்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்! பட் இப்போவாது என்கிட்ட பேசனும் தோணித்தே! பரவாயில்லை...

நான் பேசாமல் எல்லாம் இல்லை.. நீங்க தான் பேசவில்லை! என் மொபைலில் இருந்து கால் செய்தால் எடுக்க மாட்டறீங்க! வீட்டு நம்பருக்கு அடிச்சாலும் அத்தை, மாமாகிட்ட தான் பேச முடியுது. உங்களை பிடிக்கவே முடியலை! சரி உங்களுக்கு முக்கியமான கால் ஏதோ இருக்குனு சொன்னீங்களே? நான் அப்புறமா பேசறேன்... பட் என் கால்லை எடுங்க!

வெயிட்! வெயிட்! எனக்கு முக்கியமான கால் இருக்குனு உனக்கு யாரு சொன்னது??? 

இரண்டு நிமிஷத்துக்கு முன்னம் யாழினி னு நினைத்து நீங்க பேசினது என்கிட்ட தான்! 

ஓ!!

என் மீது ஏதோ கோபம் இருக்குனு தெரியுது... பட் இன்னைக்கு வாழ்த்திடனும் முடிவு செய்து தான் யார் நம்பரிலிருந்து கூப்பிட்டால் எடுப்பீங்களோ அவங்க நம்பர்ல இருந்து கூப்பிட்டேன்! 

பரவாயில்லையே! நான் கோபமா இருக்கேன்னு தெரியுது.. அதற்கு காரணமும் தெரிந்திருக்கனுமே! தெரிந்ததா??

மௌனம் மட்டுமே பதில் குழலீயிடம்.

பெருமூச்சு விட்டான் பிரபு. தொடர்ந்து..'குழலீ நான் அன்னைக்கு நடந்துகிட்டது தப்பு தான். ஆனா நானும் மனிதன் தான்! நீ அதை புரிஞ்சிக்கனும்! நான் உன்னை ஹர்ட் செய்யனும்னு நினைக்கலை! பட்...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.