(Reading time: 17 - 34 minutes)

வள் எப்போதும் போல பொரிந்து தள்ளுவாள் என்று நினைத்தான். ஆனால்...

எப்போதுமே நடக்கறது தானே.... புதுசா இருந்தா கோபம் வரும்! பரவாயில்லை இட்ஸ் ஓகே!

'என்னது குழலீக்கு கோபம் வரலியா???'

நான் செய்தது தவறு தான். பெரிய தப்பு தான்... நீ அவ்வளவு சொன்ன பிறகும்... என்னோட உணர்ச்சிகள் தானே எனக்கு முக்கியமா போய்விட்டது! உன் உணர்வுகள் பற்றி எதுவுமே நினைக்கலையே.... ஐ ம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி ஃபார் தட்!

அது தப்பு னு நான் சொன்னேனா?

புலீ??!!!

சொல்லுங்க!

இல்லை... ஒன்னுமில்லை. அப்புறம் ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சேன். உங்க ஆர்யன் மாமா கொடுத்திருக்கிற ஆஃபரை அக்சேப்ட் செய்யலாம்னு பார்க்கிறேன்.

என்னது??? இது எப்போ நடந்துச்சு??? உங்களை இன்டர்வீயூ செய்தார்னு தெரியும்! பட் அதுக்குள்ளே எப்படி???

இன்டர்வீயூ செய்தாரா?? அது எப்போ? என் ப்ரோஃபைல் பிடிச்சு எடுத்தா மாதிரி தான் சொன்னார். என் ப்ரோஃபைல் நீ தான் கொடுத்திருப்பியோனு சந்தேகம்.

என்கிட்ட கேட்டிருக்கலாமே??

இன்டர்வீயூ பத்தி நீ சொல்லவேயில்லை?? உனக்கு தெரிந்தால் நீ கண்டிப்பா சொல்லுவேனு நினைச்சேன்!

சொல்ல வேண்டாம்னு இல்லை... ஆனா அது எனகே வியூகம் தான்! அதனால தான் தெரியாம சொல்லி உங்க பிளானை கெடுக்க விரும்பலை. ஒன் மினிட் ஜிஜு ஆஃபரை அக்சேப்ட் செய்தா உங்க சினிமா கேரியர் என்ன ஆகிறது??

அது பாட்டுக்கு அது... இது பாட்டுக்கு இது!

…………………………

எனவோ எனக்கு உதவி செய்யறா மாதிரியே பேசற?? எல்லாம் பேச மட்டும் தானே செய்வ! செயல்ல இல்லையே.. அப்படி இருந்தா அங்கே போய் உட்கார்ந்திருக்க மாட்டியே! எல்லா வகையிலும் இது உன்மையான திருமணம் தான் னு நினைப்பு இருந்தா பரவாயில்லை!

ஹலோ? ஹலோ? என்ன விட்டா பேசிட்டே போறீங்க? வேலையை நான் விடாம உங்களுக்காக உங்களுடைய கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் உறுதுணையாக தான் இருக்கேன். நீங்க வேலையை விட்டுட்டூ உங்க கனவை நோக்கி பயணம் செய்யுங்கனு தான் நான் செல்லறேன். நீங்க என்னடா னா இருக்குற வேலையை விட்டுட்டூ புது வேலைக்கு சேர போறேனு சொல்லறீங்க?? உங்க தேவையை பார்த்துக்க நான் இருக்கேன்... நீங்க கவலைபடாம சினிமாவுல கான்சன்ட்ரேட் செய்யுங்க! இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை!

அப்படி வா வழிக்கு! இவ்வளவு நேரம் தான் அடக்கமான பொண்ணு மாதிரி சீன் போட்ட! ஒரு வழியா புலி ஃபார்ம் க்கு வந்தாச்சு. இப்படி அடக்க ஒடுக்கமா மாறிட்டா நாங்க விட்டுவிடுவோமா! இப்படி எனக்கு சரிசமம்மா பேசறது தான் எனக்கு பிடிச்சிருக்கு!

ஹலோ! என்ன காமெடியா?

இதேல்லாம் இல்லை..நிஜம்தான்!அதை விடு. எனக்கு இந்த வேலையின் ப்ரோபைல் பிடிச்சிருக்கு! அதனால மாற போறேன். இப்போ இருக்க கம்பெனியில் மேனேஜர் தான். ஆனா ஆர்யன் கொடுத்திருக்கும் ஆஃபர் சூப்பர்! ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியின் மேனேஜிங் ஹேட்! தலைமை நிர்வாகி! கம்பெனி வளரும் போது நானும் வளருவேன்... கிட்டத்தட்ட சிஇஓ போல தான்! Founders மற்றும் directors அங்கே அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் தான். சொசைட்டிக்கு ஏதோ திருப்பி தரனும் னு முடிவு செய்து இதை தொடங்கியிருக்காங்க! அற்புதமான கான்ஸப்ட்! பட் அதுக்கு என்னை எப்படி தேர்வு செய்தார்னு தான் புரியலை?

நாம பெங்களூரு போன போது ஜிஜுவோட உட்கார்ந்து பேசிட்டு இருந்தோமே.. அது சும்மா போசிட்டு இல்ல.. என்கிட்ட உங்களை பத்தி கேட்டார். உங்க இன்ட்ரேஸ்ட் பத்தி விசாரிச்சார்! நானும் சொன்னேன். அப்புறமா தான் பேசினார். பட் இந்த வேலைக்குனு எனக்கு தெரியாது! இப்போ தான் யோசித்து பார்த்தால் உங்களை இன்டர்வீயூ தான் செய்துகிட்டு இருந்தார் போல!

………………

நானும் அவர்கிட்ட வேலை பார்த்த போது இப்படி தான் இன்டர்வீயூ வைத்தார். சும்மாதான் மீட் செய்ய ஆர்த்தியோட போனேன். அப்போ அவங்க இரண்டு பேரும் ஒன்னா தான் வேலை செய்துட்டு இருந்தாங்க. சரி அவளை பிக்அப் செய்யும் போது அவ பாஸ் ஐ பார்த்துட்டு போகலாம்னு ஒரு காப்பி ஷாப்புக்கு போனோம். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் பேசினோம்! அப்போ கூட அது வேலைக்காகனு தெரியாது. பட் அந்த வார கடைசியில் ஆஃபர் வந்த பிறகு தான் இது இன்டர்வீயூ னு தெரிய வந்தது!

ஏன் அந்த வேலையை விட்டுட்டூ வந்த புலீ?

ஹலோ! எனக்கு பசிக்குது! இந்த கதையை அப்புறமா சொல்லறேன். நான் போய் சாப்பிடனும்! இல்லைனா மயக்கம் போட்டு விழுவேன்! அப்புறமா ஏன் சாப்பிடலைனு மிரட்ட மட்டும் செய்வீங்க!! ஆனா இங்க பார்த்துக்கறத்துக்கு தான் யாரும் இல்லையே!

ஹலோ! வெயிட்! கிட்டத்தட்ட இருபது நாள் கிழித்து பேசறேன் இப்படி கட் செய்யற? நான் உன் கணவன் அது நினைப்பு இருக்கட்டும்! நீ இப்போ பேசற... அப்புறமா சாப்பிடு! 

நான் கோவிலுக்கு வேற போகனும்!

எதுக்கு?

சும்மா தான்!

எனக்காக வேண்டிக்க போறதா இருந்தா வேண்டாம். அங்க இருந்துட்டு இந்த அக்கறையேல்லாம் வேண்டாம்.

நான் உங்களுக்காக கோவிலுக்கு போகலை! அந்த நினைப்பேல்லாம் வேண்டாம். சரி ஆஃபர் லேட்டர் வந்திடுச்சா?

சரி சரி நம்பிட்டேன். பேச்சை மாத்துறது தெரியுது. இல்லை இன்னும் லேட்டர் வரலை... Founder இங்க நம்ம சென்னையை சேர்ந்தவங்க தான். அவங்களுக்கு அனுப்பி கையெழுத்திட்டு வரும். அதுவரை வெயிட் செய்யனும்.

உங்களால் மேனேஜ் செய்ய முடியுமா பிரபு? கல்யாணம் ஆகிடுச்சு மனைவியை பார்த்துக்கனும் இதுக்காக வேண்டி உங்களுடைய லட்சியத்தை தியாகம் செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுமையா யோசித்து முடிவு செய்யுங்க! ஏன்னா இதுல நிறையவே ரிஸ்க் இருக்கு சீனியர் சார். ஸ்டார்ட் அப்... நாலு வகையாகவும் யோசித்து முடிவு செய்யுங்க! பட் எந்த முடிவாய் இருந்தாலும்கூட என்னுடைய முழு சப்போர்ட் உங்களுக்கு உண்டு! கொடுத்த வாக்கு என்றைக்கும் மறக்க மாட்டாள் பூங்குழலீ!

அதற்கு பின் இரு நோடி மௌனமாய் கரைந்தது.

'குழலீ...!'

ம்ம்...'

பசிக்கலியா??

ம்ம்....'

இப்படி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாதே புலீ ப்ளீஸ்! - அவன் குரல் சற்றே குழைந்து வந்தது. 

ம்ம்.... சரி! தயங்கியவாறே.. 'கிருஷ்ணா எப்படியிருக்கான் பிரபு? நல்லா இருக்கானா? ஏன் என்கூட பேச விட மாட்றாங்க அத்தை?

ஹப்பா! இப்போவாது கேட்கனும்னு தோணுதே! அப்போ அவ்வளவு சந்தோஷப்பட்ட? ஆனா இப்போ தான் அவனை பற்றி கேட்குற?

அது வந்து... என்று தினற அன்று நடந்தது நினைவு வந்து முகம் சிவந்துவிட்டது.

என்ன வந்து... போய்... னு இழுக்குற?? நீ வந்தா தான் அவனும் இங்கே வருவான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.