(Reading time: 9 - 17 minutes)

21. வாராயோ வெண்ணிலவே - சகி

நிகழும் புரட்டாசி மாதம் 23 ஆம் நாள் சென்னையை சார்ந்த மீனாட்சி-மகேந்திரன் ஆகியோரின் வளர்ப்பு மகளும்,கங்கா-பிரசாத் ஆகியோரின் குமாரத்தியுமான திருநிறைச்செல்வி வெண்ணிலா என்னும் கன்னிகையை சென்னை மஹாலட்சுமி-சங்கர் ஆகியோரின் புதல்வனான திருநிறைச்செல்வன் ரஞ்சித் என்னும் வரனுக்கு கன்னிகா தானம் செய்து வைக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.சுபம்!!!

மண பத்திரிக்கையை படித்து முடித்தார் புரோகிதர்!!

நிலா நிமிர்ந்து ரஞ்சித்தை பார்த்தாள்.அவன் முகத்தில் மந்தகாச புன்னகை ஒன்று தவழ அவன் அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்.நிலாவின் முகம் சிவந்தது.அவள் தலையை தாழ்த்தி கொண்டாள்.

Vaarayo vennilave

கார்த்திக் ரஞ்சித்திற்கு வாழ்த்து கூறினான்.எத்தனை இன்னல்கள்,துன்பங்கள் இவர்களின் விவாஹத்தில் தான்!!!

அனலை கக்கும் ஆதவனின் வழி வானை அடையும் நீரானது முகிலாய் மாறி மண்ணை அடைய வேண்டும் என்பது இயற்கை வகுத்த விதி!!ஆனால்,அவ்விதியின் இடையே தான் எத்தனை தடங்கல்கள்!!!

சில நேரம் காற்று காலை வாரும்!சூழ்நிலை சதி செய்யும்!ஆகாயமே பல நேரம் மழைத்துளியை விடுவிக்க சிந்திக்கும்.ஆனால் இறைவன் வகுத்த விதி அதைமாற்ற தான் இயலுமா?இன்னாருக்கு இன்னார் என்று எழுதப்பட்ட விதி தடங்கலை கண்டு தான் ஒடுங்குமா???

"மோதிரம் மாத்திக்கோங்க!"-சாங்கியங்களின் இறுதியாக கணையாழியை அணிவிக்க அறிவுறுத்தினார் புரோகிதர்.

ரஞ்சித் நிலாவை பார்த்து புன்னகைத்தான்.அவள் முகம் சிவந்தது.

உறுதியான அவனது வல கரத்தினால் அவளின் வல கரத்தை பற்றி தன் மற்றொரு கரத்தால் மோதிரத்தை அணிவித்தான்.அவளுக்கு சிலிர்த்தது.கண்களை மூடி கொண்டாள்.

பெண்மைக்கே உண்டான நாணம் மனதின் தைரியத்தை சிதைக்க தன்னவனின் கரத்தை பற்றியவள் சிறு நடுக்கத்துடன் மோதிரத்தை அணிவித்தாள்.அவளின் நடுக்கத்தை உணர்ந்தவன் மெல்ல அவள் கரத்தை அழுத்தினான்.நிமிர்ந்தவளின் கண்களின் இருத்துளி கண்ணீர்!

அவன் என்ன என்று கண்களால் கேட்டான்.நிலா ஒன்றுமில்லை என்று சைகை  செய்தாள்.

சடங்குகள் பூர்த்தியாயின.

தனிமையில் தன்னறையில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா!இன்னும் சில தினங்களில் தன் தேடல் பூர்த்தியாக போகிறது!!என் வாழ்வு அவனாக போகிறான்!

பல கனவுகள் கன்னிகையின் கண்களில் உதித்தன.

"நிலா!"-ஆசையோடு ஓடிவந்து அவள் மடியில் அமர்ந்த ராஜா அவள் சிந்தனையை கலைத்தான்.

"என்ன செல்லம்?"

"நீ எனக்கு சித்தியா வர போறீயா?"-அவன் கேட்கவும் அவள் முகம் மலர்ந்தது.

"இல்லை...அம்மூ எனக்கு அத்தை தான்!"-சண்டைக்கு வந்தான் ரோஹித்!

இருவரும் முறைத்துக்கொண்டனர்.

"அது...நான் உனக்கு சித்தியும் இல்லை!உனக்கு அத்தையும் இல்லை!"

"என்ன?"-இருவரும் ஒரு சேர கூறினர்.

"நான் என் ராஜாக்கு எப்போதும் நிலா தான்!என் ரோஹித்துக்கு என்னிக்கும் அம்மூ தான்!"

"அப்போ எனக்கு?"-அச்சமயம் திடீரென ஒலித்த ரஞ்சித்தின் குரல்      அவளை தடுமாற செய்தது!அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

"டேய் பசங்களா!உங்களை கீழே கூப்பிடுறாங்க பார்!"-அவன் கூறவும் அவர்கள் ஒரு வகையான பார்வையை அவன் மீது வீசிட்டு  நகர்ந்தனர்.

ரஞ்சித் தன் கால்களால் அந்த அறை கதவை சாத்தினான்.நிலா எழுந்து நின்றாள்.

அவன் அந்த அறை கதவை தாழிட்டு அவள் அருகே வந்தான்.

"எனக்கு நீ யார் அம்மூ?"-அவனது கேள்விக்கு பதில் கூற இயலாதப்படி ஏதோ ஒன்று அவளை தடுத்தது.

ரஞ்சித் அவளை தன்னருகே இழுத்தான்.

அவள் நெற்றி மீதிருந்த மூடிக்கீற்றை விலக்கினான்.

அவளின் சர்வ நாடியும் ஒடுங்கியது.

"எதுக்காக உன் கண் கலங்கியது?"

"ஒண்ணுமில்லை"

"பொய் சொன்னா!அவ்வளவு தான்"-உண்மையில் அந்தக்கண்ணீருக்கான காரணம் அவன் அறிந்ததே!!!

மீண்டும் அந்த கருவிழிகளில் கண்ணீர்!

ரஞ்சித் அவளை அணைத்துக்கொண்டான்."என் காதல் ஜெயித்துவிட்டது!"-அவள் கேள்வியாக பார்த்தாள்.

"இந்த கண்ணீர் என் காதலோட வெற்றியை சொல்லிவிட்டது!"-அவளது கண்ணீரை துடைத்தான்.

அவனது கூரிய பார்வை அவளது நேத்திரம் வழியாக அவளது ஆன்மாவையே தாக்கியது.அந்தப் பார்வையின் தீக்ஷனம் தாளாது அவள் விழிகள் தாழ்ந்தன.அவனது தேடலின் முடிவாக கிடைத்த அந்த நெருக்கம் நிலாவிடம் எதையோ யாசித்தது.

அவள் தன் இமைகளை மூடிக்கொண்டாள்.

குனிந்து அவள் இதழ்களை தனதாக்கியவன் அவள் உயிர் மேல் உணர்வென தன் காதலை எழுதினான்.நீண்ட நேரம் கழித்து தூதாய் வந்த தென்றல் காற்று அவர்களை சுயநினைவிற்கு கொண்டு வந்தது.முகமெல்லாம் தயக்கத்தோடு நாணம் கலக்க அவள் அவனிடமிருந்து விலகினாள்.

"ஐ லவ் யூ!"-அவள் காதோரமாக கிசுகிசுத்தான் ரஞ்சித்!!

அவள் முகம் மலர்ந்தது!

"நான் உனக்கு ஒரு கிப்ட் வைத்திருக்கேன் அம்மூ!"

"என்ன?"-ரஞ்சித் ஒரு மெல்லிய வைர சங்கிலியை அவளிடம் காண்பித்தான்.RV என்ற இரு எழுத்துக்கள் ஒரே இதயத்தில் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு இருந்தன.அதன் பொருள் உணர்ந்தவள் விழிகள் மீண்டும் நனைந்தன.

"வேணாம்!டேமை திறக்காதே!"-அவன் எச்சரித்தான்.

"இனி என் இதயம் உன்னோடது!"-என்று கூறி அவள் கழுத்தில் அதை அணிவித்தான்.

அசைந்தாடும் ஆழியில் இதோ ஒரு அழகிய நதி கலைந்துவிட்டது!!

அகண்ட இந்த அண்டசராசரத்தில் உயிரினங்களை படைத்தவன் இறைவன் தான் என்பதன் சாட்சி என்ன?அவன் படைக்கும் போது ஏதேனும் சாசனம் எழுதி வைத்தானா?நகல் எடுத்து வைத்தானா?இல்லையே....ஒரு சாட்சி உண்டு!தனக்கே தெரியாமல் அவன் எழுதிய சாசனம் அது!அதன் பெயர் என்ன?வேறென்ன??காதல்....

ந்த இரவு நேரத்தில் தனது அடிவயிற்றில் சிறு வலி பரவுவதை உணர்ந்தாள் திவ்யா!சிறிது நேரத்தில் வலி உயிரை குடித்தது.

"அம்மா!"-அலறிவிட்டாள் அவள்.

சத்தம் கேட்டு யுகேன் ஓடி வந்தான்.

"திவ்யா!என்னாச்சும்மா?"

"வலிக்குதுங்க!என்னால...முடியலை!"-துடித்தாள் அவள்.அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டான்.

விஷயம் நிலாவிற்கு அறிவிக்கப்பட்டது.

அவள் சரியாக பத்து நிமிடத்தில் அங்கு வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.