"பேஷண்ட் எங்கே?"
"ஆப்ரேஷன் தியேட்டர்ல மேம்!"-விரைந்தாள்.அறுவை சிகிச்சை பிரிவின் வெளியே கலக்கத்தோடு இருந்தான் யுகேன்.
"யுகேன்!"
"நிலா!திவ்யா...."
"பயப்படாதே!நான் இருக்கேன்!"-அவள் உள்ளே சென்றாள்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு அனைவரும் வந்துவிட்டனர்.சஞ்சனாவும்,ப்ரியாவும் உட்பட!!!
அங்கு ஏதோ வேலையாக வந்த மகேஷ்வரி யுகேந்திரனை கண்டதும் அவனருகே வந்தார்.
"யுகேன் என்னாச்சு?என்ன பண்றீங்க இங்கே?"
"திவ்யாக்கு டெலிவரி ப்பையின் வந்துடுச்சு மேம்!"-அவர் என்ன நினைத்தாரோ தன் நெற்றியில் கை வைத்துக்கொண்டார்.அச்சமயம் உள்ளிருந்து ஒரு செவிலி வந்தார்.
"சிஸ்டர்!என் மனைவி?"
"ரொம்ப சீரியஸ் சார்!எதுவும் சொல்ல முடியலை!"-என்று நகர்ந்தார்.
யுகேனின் மனம் தளர ஆரம்பித்தது.
ரஞ்சித் அவனுக்கு ஆறுதல் அளித்தான்.
45 நிமிடத்திற்கு பின் நிலா வெளியே வந்தாள்.அவள் முகம் அளித்த அந்த பாவனை அது என்ன என்றே புரியவில்லை.
"நிலா!அவளுக்கு..."-யுகேனின் குரல் தடுமாறியது.
"நிலா!திவ்யாக்கு என்னாச்சு?"
"மேம்..."
"எனிதிங் சீரியஸ்?"
"இவ ஆரம்பித்தால் எது நல்லதா முடித்திருக்கு?"
-சஞ்சனாவின் குரல் மகேஷ்வரியின் செவிகளில் ஒலித்தது.
"ஊஸ் தட் நான்சென்ஸ்?"-அவர் கோபமாக பேசினார்.
"இவ இடத்துல யார் இருந்திருந்தாலும் கேஸ் சீரியஸா தான் இருந்திருந்திருக்கும்!"-அனைவர் விழியும் விரிந்தன.
"மேம்!"
"நீ பேசாதே!நான் உன்னை மாதிரி பொறுமைசாலி இல்லை!உண்மையை நான் நிச்சயம் சொல்வேன்!"
"இதோ பார் யுகேன்!திவ்யாவோட இம்யுன் சிஸ்டம் அவளோட குழந்தையையே அவ கருவில் வளர விடாம அழிக்கிற நிலையில இருந்தது!it doesn't support your baby's growth.என்னால இதை சொல்ல முடியலை.அதான் நான் நிலாக்கிட்ட உங்களை அனுப்பினேன்!அவ உங்கக்கிட்ட விவரத்தை சொல்லுவான்னு எதிர்பார்த்தேன்.ஆனா அவ இந்த கேசை எடுத்துப்பான்னு நினைக்கலை!நிலா இடத்துல எந்த டாக்டர் இருந்தாலும் இதை யோசிக்கக்கூட மாட்டாங்க!"-அனைத்தையும் கூறினார்.அனைவர் விழிகளும் அதிசயித்தன.
"என்னாச்சு நிலா?"
"பையன் பிறந்திருக்கிறான் மேம்!"
"என் திவ்யா!"
"மயக்கத்துல இருக்கா!3 மணி நேரம் கழித்து தான் தெளியும்!"
"நான் பார்க்கணும்!"
"வெயிட் பண்ணு வார்ட் மாத்தட்டும்!"-என்றோ ஓர் நாள் இதே கதையில் அபிமன்யு என்னும் ஒரு மாவீரனை குறித்து வினவி இருந்தேன்.
அவ்வீரனானவன் இறைவன் ஸ்ரீராமன்,ஈசனை காட்டிலும் பலம் வாய்ந்தவனே!அப்படி என்ன சிறப்பை பெற்றான் அவன்?
சக்ரவியூகம் சீர்த்த மாவீரர்களை தவிர எவராலும் உடைக்க இயலாத வியூகம் அது!அன்று உடைத்தெறிந்தான் அவ்வியூகத்தை தன் இளம் பிராயத்தில் அபிமன்யு என்னும் நாமம் கொண்ட அர்ஜூனன் நந்தன்!இதை ஏன் இங்கு கூறுகிறேன்...
எவராலும் அழிக்க இயலாத தன் தந்தையின் சோதரி மேல் இருந்த கலங்கத்தை தன் பிறப்பினால் உடைத்தெறிந்தான் யுகேந்திர குமாரன்!அவனது இறப்பு புது யுகத்திற்கு வழிக்காட்டியது என்றால் இவனது பிறப்பு புது மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது அல்லவா!!!
சிறிது நேரம் கழித்து புதியதாய் பிறந்த பாலகனை எடுத்து வந்தாள் ஒரு செவிலி!நிலா அவனை வாங்கினாள்.அவன் அவளை பார்த்து புன்னகை பூத்தான்.தன் இடக்கையின் ஆள்காட்டி விரலை அவள் முகத்தோடு வைத்து வருடினான்.அப்பாலகனின் நெற்றியில் முத்தமிட்டவள் "அபிமன்யு"என்று அவனை அழைத்தாள்.அபிமன்யு அழகாய் விழித்தான்.நிலா அபியை அவன் தந்தையிடம் ஒப்படைத்தாள்.யுகேனுக்கு அப்போது தான் உயிர் வந்தது.தன் தனயனுக்கு முத்தமிட்டான் அவன்.
மயக்கம் மெல்ல கலைந்தது...
மெல்ல கண் விழித்தாள் திவ்யா!கண்ணீர் தன்னிச்சையாக சேர்ந்தது.
"திவ்யா!"-யுகேந்திரனின் குரல் கேட்டதும் அவள் கண்ணீர் அதிகமானது.
"நம்ம குழந்தை?"-அவன் அவளின் அருகே தொட்டிலில் உறங்கி கொண்டிருந்த அபியை காண்பித்தாள்.
அவள் கை கால்களை குறுக்கியப்படி உறங்க கொண்டிருந்தான்.
யுகேன் அவளிடம் அனைத்தையும் கூறினான்.அவள் மனம் வருந்தியது!!
திவ்யா அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.
அவனது ஆறுதல் அவளுக்கு தேவைப்பட்டது!
"தப்பு பண்ணிட்டேன்!அவ என்னை மன்னிப்பாளா?"-அவன் ஏதோ கூற வாயெடுக்க அதற்கு அந்த அறை கதவு திறந்தது.
"அட இருங்கடா வரேன்!"-என்று கூறிவிட்டு நிலா நுழைந்தாள்.இருவரும் அவசரமாய் விலகினர்.
அவர்களை கவனித்தவள்,
"அப்பறமா வரட்டுமா?"என்றாள்.
"இல்லை...வா!"-நிலா புன்னகைத்தப்படி வந்தாள்.அவள் பின்னால் ரோஹித்தும் வந்தான்.நிலா திவ்யாவை பரிசோதிப்பதில் கவனம் செலுத்த ரோஹித் அபியை எழுப்புவதில் கவனம் செலுத்தினான்.
"ப்ச்...ரோஹித்!அவனே இப்போ தான் தூங்கினான்!நீ போய் ராஜாக்கூட விளையாடு போ!"-ரோஹித் நிலாவை முறைத்துவிட்டுஓடிவிட்டான்.
"நிலா!"-இம்முறை அழைத்தது திவ்யா.அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
"மன்னிச்சிடு நிலா!"-நிலா யுகேந்திரனை பார்த்தாள்.
"சரியான எப்.எம்.நீ!மறுபிறவி எடுத்து வந்திருக்கா!அவளை பார்ப்பியா எல்லா கதையையும் உளறி இருக்க!"-அவன் தீர்க்கமாக அவளை பார்த்தான்.சிறிதும் அலடல் இல்லாமல் பேசுகிறாள்.எவ்வளவு உத்தமமான குணம்!
"அபி எழுந்ததும் பால் கொடு!"-திவ்யாவிடம் கூறிவிட்டு நகர்ந்தாள்.உண்மையில் இது போதுமே அவளது மன்னிப்பை கூற!!!
நமது இதயம் கவர்ந்தவர்களிடம் மன்னிப்பு என்ற வார்த்தை அவசியம் தேவையில்லை.இதயத்தில் இருந்து வெளிப்படும் அக்கறை மிகுந்த வார்த்தைகளே மன்னிப்பிற்கும்,நன்றிக்கும் தூது செல்லுமே!!!
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!
{kunena_discuss:821}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.