(Reading time: 13 - 25 minutes)

20. வாராயோ வெண்ணிலவே - சகி

வீட்டிற்கு வந்துவிட்டாள்!!!

கடலைவிட்டு நீங்கிய கங்கை நதி மீண்டும் ஆழ்கடலையே தஞ்சம் புகுந்தது!!

ரஞ்சித் அவளை அழைத்து வந்ததும், 

Vaarayo vennilave

"நிலா!"-என்று அவள் அணைப்பில் சேர்ந்தவன் விஷ்வா தான்!!ஒரு யுகப்பிரிவாய் தகித்த ஒரு மாத இடைவெளி தவத்தின் பயனை அவனிடத்தில் சேர்த்தது!!

இயற்கையாக இறைவன் அளித்த கண்ணீர் ஆனந்தமாய் வெளி வந்தது!!

அவளது ஞாபகமாய் அவன் கையில் தவழ்ந்த காப்பு மீண்டும் அவளையே ஞாபகமாய் கொணர்ந்தது!!!

"திரும்பி வந்துட்டேன் விஷ்வா!"இந்த வார்த்தைகள் அந்த இறைவன் அளித்த அசரீரியாய் ஒலித்தது.

அங்கே அவன் ஒருவனால் மட்டுமே அவள் முன் தலைகுனியாது நிற்க முடிந்தது!!!

விஷ்வாவின் விழிகள் ரஞ்சித்தை பார்த்தன..அவன் பார்வை மாறியது!!ரஞ்சித்தை அவனுக்கு பிடிக்கவில்லை என்று தெளிவானது!!ரஞ்சித் கூர்மையாக அவனை பார்த்தான்.

நிலா தன்னுடைய அடுத்த கவனத்தை மீனாட்சி மகேந்திரனிடம் திருப்பி அங்கு சென்றாள்.விஷ்வா ரஞ்சித்தின் அருகே போனான்.

"நம்ம முதல் சந்திப்பே விபத்துல தான் ஆரம்பித்ததுன்னு நினைக்கிறேன்!"-அவனோ!வாயையே திறவவில்லை.

"எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை!"-(இதுவேறயா!அடேய்!உங்கக்காவை காதலிக்க வைக்க நான் பட்ட அவஸ்தை எனக்கு தான்டா தெரியும்!நீ என்னன்னா பிடிக்கலைன்னு கூலா சொல்ற!)அவன் மனம் எண்ணிக்கொண்டது.அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

"நீ அவளை மூணு வருஷமா அழ வைத்திருக்கிற!"-அவன் பதில் பேசவில்லை.

"அதே சமயத்துல,நீ என் நிலாவுக்கு நல்ல துணையா இருந்திருக்கிற!அவளுக்காக உன் வாழ்க்கையை விட்டு கொடுத்திருக்கிற!இன்னிக்கு அவளை என்கிட்ட திருப்பி கொடுத்திருக்க!உன்னை வெறுக்கவும் முடியலை!"

"அவளுக்கு பிடித்துவிட்டது...போ!ஆனா,ஒரு விஷயம் தயவுசெய்து அடுத்த ஜென்மம்னு ஒண்ணு எடுத்தா என் நிலா கண்ணுல மட்டும் பட்டுவிடாதே!"

"ஏன்?"

"ஏன்னா எனக்கு அடுத்த ஜென்மம் இருந்தா அவ எனக்கு அம்மாவா வரணும்னு வேண்டிட்டு இருக்கேன்!"-ரஞ்சித் பெருமூச்சுவிட்டான்.

"கவலைப்படாதே மச்சான்!நான் உண்மையிலே உனக்கு நல்ல அப்பாவா இருப்பேன்!"-அவன் சிரித்தப்படி பதில் கூறினான்.

"அந்த ஆசை வேற உனக்கு இருக்கா!"

"என்ன மச்சான் நீ?நானா வேண்டிக்கிட்டேன்??நீ தான் என் பையனா வரணும்னு வேண்டிக்கிற!"-அங்கே அவர்களின் உரிமை போராட்டம் ஆரம்பமானது!!

மனம் அன்பினை விழைந்த வகையில் நிலா மகேந்திரனிடத்தில் சரணடைந்தாள்.மீண்டும் அவளது அப்பா என்ற அழைப்பினை அவர் எதிர்நோக்கவில்லை.செய்த தவறுக்கு அவள் தண்டனை அளிப்பாள் என்றே அவர் எண்ணி இருந்த நிலை தன்னில் அவளின் இனிமையான அழைப்பு அவரின் கர்வத்தை தரைமட்டமாக்கியது.

"நீ கோபமா இல்லையா நிலா?"

"நான் ஏன் கோபப்படணும்?"

"நான் பண்ண தப்புக்கு..."

"நீங்க அந்த தப்பை பண்ணலைன்னா நீங்க எனக்கு கிடைத்திருக்க முடியாதே!"-எவ்வளவு முதிர்ச்சி அடைந்திருக்கிறாள்??

"நான் என்னிக்கும் மகேந்திரனோட வாரிசு தான்!மாற்றம் இல்லை!"

"ஆனா நிலா..."

"நான் நிச்சயம் அவங்க அங்கீகாரத்தையும் தருவேன்பா!ஆனா,நான் மாற மாட்டேன்!"

"நிலா..."-மகேந்திரன் அவளை அணைத்துக்கொண்டார்.அவர் நேத்திரம் சிந்திய இருத்துளி கண்ணீர் தனது வளர்ப்பினை அதிகாரப்பூர்வமாய் அங்கீகரித்தது.

என்றோ கூறி இருந்தேன்...ஆரவாரத்தோடு ஆகாயம் தீண்டும் விருட்சமானது மண்ணினை சார்ந்திருப்பது அவசியம்!!ஆனால்,நிலமானது மரத்தினை தாங்கேன் என்று சபதம் ஏற்றால்??உயிரினங்களின் வாழ்வாதாரம் என்னவென்று வினவி இருந்தேன்!!

பாய்ந்து வரும் நதிநீரானது எவ்வாறு பர்வதங்களிலிருந்து பிறக்கிறதோ!அதுபோல,விருட்சத்தின் விதையானது நிலத்தின் கருவிலே சுமக்கப்படுகிறது!பிளந்துவரும் அந்த விதையானது!மண்ணின் மகத்துவங்களை பெற்று அவதரித்திருக்கும்!அதனால் தான் மனிதனின் பல தீங்குகளை அது பொறுத்தருள்கிறது!!!அதே போல் தான்,இங்கு தந்தைக்கும்,மகளுக்கும் இருந்த பிரிவினை தந்தை அவளை இருதயத்தில் சுமக்க கற்று தந்த இயல்புகளால் நொறுங்கி தரைமட்டமாகி உள்ளது.இதற்கு காரணம் நிச்சயம் ஒழுக்கமிகு வளர்ப்பே அன்றி,செழுமைமிகு பிறப்பல்ல!!மனிதனின் கர்ம பலன்கள் முதலில் அவனது வளர்ப்பில் இருந்தே உதிக்கின்றன...

அவள் போய்விட்டாள்..

எனது மகள் என்னை தியாகித்து போய்விட்டாள்..

தாய்மனம் உடைந்து சுக்கலானது!

ஆற்றிய அன்பில் தான் அவளுக்கு சந்தேகம் எழுந்ததா?

என்னோடு இருக்க விரும்பவில்லையா அவள் மனம்??எந்த விதத்தில் என் பாசத்தில் குறை கண்டாள்??அவளை தானே என் வாழ்வில் உதயசூரியனாய் கண்டேன்!ஆனால் அது இன்று அஸ்தமித்து போனதன் காரணம் என்ன??தவித்துப்போனது தாய் மனம்.உணவை ஏற்கவில்லை...உறக்கத்தை துறந்து சர்வ நொடியும் தன் புதல்வியை எண்ணி மருகினார்.

"கங்கா...இப்படி சாப்பிடாம இருந்தா என்ன அர்த்தம்?"-அவரை சமாதானம் செய்ய முடியாமல் தோற்று போனார் பிரசாத்!!

"மா!கொஞ்சம் சாப்பிடும்மா!"-யுகேனின் யுக்தியும் பலிப்பதாய் இல்லை.

"என்னை அவளுக்கு பிடிக்கலையாங்க?"-குரல் தழுதழுக்க கேட்டார்.

"பிடிக்கலைன்னு நான் என்னிக்கும் சொன்னதில்லையேம்மா!"-தேடிவந்த தவத்தின் பயன் அசரீரியாய் ஒலிக்க அனைவரும் திரும்பினர்.உண்மையில் இக்கதாநாயகி தவத்தின் பயன் தான்!(என்னை பொருத்தவரை)மீண்டும் முகத்தில் முதல் அத்தியாயத்தில் பார்த்த அதே தேஜஸ்!!

இம்முறை அவள் வருகை பரமேஷ்வரியும் ஆனந்தம் கொள்ள செய்தது.அவள் நிகழ்த்திய மாற்றங்கள் அப்படி!ம்ஹூம்...ஒரு உத்தமமான வளர்ப்பு நிகழ்த்திய மாற்றங்கள் அப்படி!!

உலகில் மாற்றங்கள் மட்டும் தான் மாறுவதற்கில்லையாம்!சிலரும் பிறக்கிறார்கள்...மாற்றத்தையே மாற்றும் சக்தியாய்!

முகத்தில் தவழ்ந்த புன்னகை உண்மையில் அது போன்ற சக்தியாய் தான் அவளை காண்பித்தது.

கங்காவின் அருகே கன்னத்தில் கை வைத்தப்படி அமர்ந்தாள்.

"சாப்பிடுங்க!"-அவர் முகத்தை தாழ்த்தி கொண்டார்.

"அப்பா!இப்போ அம்மா சாப்பிடலைன்னா!நான் கிளம்பிடுவேன்!"-நிலாவின் வார்த்தைகள் அனைத்தும் இதெல்லாம் கனவா என்று யோசிக்க வைத்தது.இருவரும் அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றனர்.

"அப்போ நான் கிளம்புறேன்!"-என்று எழுந்தவளை தடுத்தது.

"வேணாம்"என்ற கங்காவின் குரல்.

"அப்போ சாப்பிடுங்க!"-மனதின் கவலைகள் மறைந்தன.கவலைகள் இன்றி நிறைவோடு உணவை ஏற்றார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.