Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 48 - 95 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

19. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

நிலம் நோக்கி சரியத்துவங்கியவள் தரை எட்டும் முன் அவளை இரு கரம் கொண்டு தாங்கினான் ப்ரத்யுஷ் தன் நெஞ்சோடு சேர்த்து….

எப்போது மூடப்போகிறோம் என்று தெரியாமல் அவளின் அழகிய கண்கள் கலங்கி நீரை தன் கன்னங்களில் வழிய விட, உதடுகள் ப்ரத்யூ…. ப்ரத்யூ… ப்ரத்யூ… என்றது…

“உன் ப்ரத்யூன்னு இப்போவாச்சும் நம்புவியாடீ த்வனி???....” என அவன் கேட்டதும்,

Piriyatha varam vendum

கோடி வார்த்தை பேச எண்ணியவள், கண்ணீர் மல்க “ஹ்ம்ம்… ஆம்….” என்ற பாவனையில் தலை அசைத்து “என் ப்ரத்யூ….” என்றவாறு அவனை அணைத்துக்கொண்டு தன் நினைவை இழந்தாள் புன்னகையோடு…

“த்வனி….” என்றவனுக்கும் அதற்கு பிறகு வார்த்தை வராமல் போக… அவளை அப்படியே கைகளில் எந்திக்கொண்டு சென்றான்…

அவன் பின்னாடியே தேவியும் என்ன நடக்கிறது இங்கே என்ற அதிர்ச்சியோடு சென்றார்…

அவளை கீழே பாயில் படுக்க வைத்தவன், அவளருகில் அமர்ந்து அவள் தலை கோதி விட்டான்…

“என்னப்பா?... வேலா… வள்ளிக்கு என்னாச்சு?...”

“ஒன்னுமில்ல தேவிம்மா… லேசான மயக்கம் தான்… இப்போ எழுந்துடுவா… பயப்படாத தேவிம்மா…”

“என்னடா… இப்படி சொல்லுற?... அவ முகத்தில தண்ணீராவது தெளி…. எனக்கு பயமா இருக்கு….”

“நான் தான் சொல்லுறேன்ல தேவிம்மா… அவளுக்கு எதுவும் இல்லை… சந்தோஷத்துல மயங்கிட்டா… அவ்வளவுதான்….” என அவன் இலகுவாக சொல்ல… அவர் புரியாமல் பார்த்தார்…

“உங்கிட்ட இதை சொல்லணும்னு தவியா தவிச்சேன் தேவிம்மா… ஆனா சொல்ல முடியலை… இப்போ சொல்லுறேன் தேவிம்மா… நீ கேட்பீயா?...” என அவன் அவரின் கைப்பிடித்துக்கொண்டு கேட்க…

சரி என்ற வண்ணம் அவர் தலை அசைத்தார்…

“உன் மருமக வள்ளி வேற யாரும் இல்ல…. எட்டு வருஷமா என்னை பைத்தியமாக்குனான்னு சொன்னியே த்வனி அவ தான் இந்த வள்ளி…. இரண்டு பேரும் ஒன்னு தான்…”

“என்னது!!!!!!!!!!!!!!!!!!!!!.....” என்ற அதிர்ச்சியில் உறைந்தவராய் தேவி நிற்க…

“ஹ்ம்ம்… ஆமா தேவிம்மா… எனக்கே அது கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரிய வந்துச்சு… உங்கிட்ட சொல்லிடணும்னு நினைச்சப்ப தான், சரி சில விஷயம் தெளிவு படுத்திட்டு சொல்லலாம்னு விட்டுட்டேன்…” என அவன் கூற,

அவர் அவனை அது என்ன விஷயம் என்றவாறு பார்த்தார்…

“வா தேவிம்மா சொல்லுறேன்….” என கூறியவன், வள்ளியின் பக்கத்தில் தாயை அமரவைத்து, அவரருகில் அமர்ந்து கொண்டு நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்…

ட்டு வருடங்களுக்கு முன்பு….

“என்னடா தியூஷ்….. கோவில் பிடிச்சிருக்கா?....” என போனில் வேலனிடம் வ்ருதுணன் கேட்க

“ரொம்ப பிடிச்சிருக்குடா… இந்த இடம் ரொம்ப நல்லா இருக்குடா… ரொம்ப பசுமையா… அழகா….” என சொல்லிக்கொண்டே போனவனை

“ஹலோ… ஸ்டாப்…. ஸ்டாப்… ஸ்டாப்… அந்த இயற்கை காட்சி எல்லாம் எங்களுக்கு வேணாம்னு தான நானும் நம்ம விழியனும் இங்கேயே பீச்-ல் டைம் பாஸ் பண்ணிட்டிருக்கோம்… நீ என்னடான்னா, கோவிலுக்கு வராத எங்களை செல்போனிலேயும் வரவிடாம பண்ணிடுவ போலயே…” என்றவாறு துணா கிண்டல் செய்ய…

“அட போடா… உனக்கு குடுத்து வைக்கலை… இந்த அழகை எல்லாம் ரசிச்சுப் பார்க்க….” என்றான் வேலன்…

“நீயே பாருப்பா… அந்த பசுமை, வயல்வெளி எல்லாம்… நல்லா ரசிச்சு… ருசிச்சு… எங்களுக்கு வேண்டாம்…..” என சிரித்துக்கொண்டு துணா சொல்ல…

“போடா லூசு… ஆமா, சரி நீ எதுக்கு இப்போ போன் பண்ணுன?... அதை சொல்லு முதலில்….” என்ற வேலனிடம்

“விழியன் உங்கிட்ட பேசணும்னு சொன்னான்… அதான்… இரு குடுக்குறேன்…” என்றவாறு மைவிழியனிடம் போனை கொடுத்தான் துணா…

“என்னடா விழியா… எதோ பேசணும்னு சொன்னியாமே… என்னடா சொல்லு…” என வேலன் கேட்க

“ஹாய்டா… ஆமா இப்போ நீ எங்க இருக்க?...”

“;இதென்னடா லூசுத்தனாமான கேள்வி?... கோவிலில்தான்…”

“அடேய்… நான் அதை கேட்கலை… கோவிலுக்குள்ளேயா இல்ல வெளிய வயல், தோப்பு, வெட்டவெளி… இப்படி இடத்துலயா?....”

“ஓ…. நீ அதை கேட்குறீயா?.... ஹ்ம்ம்… நான் இப்போ….” என்றவன் சற்றும் முற்றும் பார்த்துவிட்டு

“தோப்புதான்… அனா, தோப்புக்குள்ளே கூட வயல் இருக்குடா… இடமே சூப்பரா இருக்குடா… நீங்களும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்… நீங்க தான் வரலை…” என்றான் சற்று வருத்தத்தோடு….

“அதான் எங்களுக்கு பதிலா நீ இருக்கியே அங்க… அப்புறம் என்னடா… சரிடா… நான் ஒருவிஷயம் சொல்லத்தான் உங்கிட்ட இப்போ பேசணும்னு சொன்னேன்… அது என்னன்னா… தோப்புன்னா கண்டிப்பா பம்புசெட் இருக்கும்… நல்லா குளியல் போடு… உனக்குத்தான் இந்த இயற்கை எல்லாம் ரொம்ப பிடிக்குமே… சோ பம்புசெட்டும் கண்டிப்பா உன்னோட ஃபேவரிட்டா தான் இருக்கும்…” என விழியன் சொல்ல….

“யெஸ்டா… நானும் அதைத்தான் தேடிட்டிருக்கேன்….” என்றான் வேலனும்….

“ஓகேடா… எஞ்சாய்….” என்றபடி போனை வைத்தபின், வேலனும் பம்புசெட்டைத் தேடி அந்த தோப்பிற்குள் சென்றான்….

சற்று நேர தேடலுக்குப் பின் அவனது கண்களில் பம்பு செட்டும், அதனை ஒட்டி அங்கே இருந்த சிறு அறையும் கண்களில் பட்டது….

உற்சாகத்துடன் பம்புசெட்டின் அருகே சென்ற போது, அவனது செல்போன் ஒலித்தது….

எடுத்து பேசுவதற்குள் அழைப்பு நின்று விட, அவனே அந்த எண்ணிற்கு அழைத்தான்….

“ஹலோ…” என்ற பெண் குரல் கேட்டது…

“ஹலோ… யாருங்க…” என அவனும் கேட்க…

“நான் உங்களை பார்த்துருக்கேன்… ரொம்ப நாளா உங்ககிட்ட சொல்லணும்னு ஆசப்படுறேன்… ஆனா முடியலை… இன்னைக்குத்தான் தைரியம் வந்துச்சு… ஹ்ம்ம்….. ஐ லவ் யூங்க….” என்று சொல்லி முடித்ததும்

“டேய்…. அங்க சுத்தி இங்க சுத்தி, கடைசியில எங்கிட்டயே உன் வேலையை காட்டுறீயா?... மகனே கையில மட்டும் இப்ப நீ சிக்கின கொன்னுடுவேண்டா….” என மிரட்டினான் வேலன்…

“அடப்பாவி…. எப்படிடா கண்டுபிடிச்ச?... பெண் குரலில் எல்லாம் பேசினேனேடா… இப்படி ஒரே செகண்ட்ல உண்மையை சொல்லிட்டியேடா?... இது உனக்கே நியாயமா?... தர்மமா? அடுக்குமா?...” என அந்த குரலுக்கு சொந்தக்காரனும் விடாமல் கேட்க

“டேய்… இது உங்களுக்கு நியாயமா படுதாடா?... நீங்களும் இங்க வரமாட்டீங்க… இங்க வந்திருக்குற என்னையும் சும்மாவிட மாட்டிக்குறீங்க…. உங்க இரண்டு பேருக்கும் இப்போ என்னதான்டா வேணும்?...”

“நீதாண்டா வேணும் தியூஷ்……………” என்று கோரசாக கத்தினர் துணாவும், விழியனும்….

அவர்கள் அப்படி சொன்னதும், விடாமல் சிரித்தான் வேலன்….

“ஏண்டா இப்படி என் மானத்தை வாங்குறீங்க?... போனை வைங்கடா…” என வேலன் சொன்னதும்,

“டேய்… எங்களை நீ இந்த விரட்டு விரட்டுறதுக்கு மகனே நீ வேணாலும் பாரு, இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஒருநாள், ஃபீல் பண்ணுவடா….” என்று அழுத்தி சொன்னான் விழியன்….

“அதுக்கு வேற ஆளை பாருங்கடா… நான் ப்ரத்யுஷ்… எங்கிட்ட உங்க வேலை எல்லாம் செல்லுபடியாகாது… இப்போ நீங்க போனை வைக்கலை… அப்புறம் ஊருக்கு வந்ததும், இரண்டு பேரையும் புரட்டி புரட்டி அடிப்பேன்…. எப்படி வசதி?...” என வேலன் கேட்டு முடித்ததுமே,

“ஒகே… ஓகே…. கூல்…. பையா…..” என்றபடி சிரித்துக்கொண்டே போனை வைத்தனர் துணாவும், விழியனும்….

அதன் பின் பம்புசெட்டின் அருகே செல்லுவதற்கு முன், அதன் அருகே இருந்த அறையை பார்த்ததும், இதனுள் என்ன இருக்கும் என்ற ஆர்வமிகுதியில் அந்த அறையின் தாழ்ப்பாள் இல்லாத கதவில் கை வைத்தான் வேலன்….

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Meera

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# Touchable storyGayathri J 2017-02-24 14:48
Superb ending..too good... :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Kannama 2017-01-16 02:21
Sama story intha storya koranjathu 20 times padchutan suupernga
Reply | Reply with quote | Quote
+1 # So many twists!Meens 2016-09-03 04:21
Meera . Semma awesome story. .Unga character naminga different ah iruku.. But all names super . Epdi irundhu kandu pudipinga.. Elam twists um Semma.. love conversation lam super.. aasaiya iruku padikum podhae.. thanku for the story:-)
Reply | Reply with quote | Quote
# RE: So many twists!Meera S 2016-09-05 12:44
Thank you meena..
very happy to see your comment... :yes:
thanks a lot for your lovely comment...
thank you meena... :)
Reply | Reply with quote | Quote
+1 # swwetKiruthika 2016-08-23 16:40
such a sweet ending
Reply | Reply with quote | Quote
# RE: swwetMeera S 2016-09-05 12:45
Thank you kiruthika
thanks for your comment
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Rekha Krishna 2016-06-09 11:57
:clap: :clap: (y)
Reply | Reply with quote | Quote
# # RE: தொடர்கதை – பிரியாத வரம் வேண்டும் – 19 – மீரா ராம்Meera S 2016-04-11 15:39
Thank you all..
Thank you so much for your lovely comments.
"Unnai Ponnena Kanda Pozhuthinile...- Uma Balakumar.."
This is my most fav novel.. ithula irunthu than Dhvani name eduthen... intha novel heroine name Hamsadhvani.. hero name - Prajendran...

Once again thank you all... :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்pooran 2016-01-02 17:33
nice story meera
Reply | Reply with quote | Quote
+1 # AwesomeSammartin 2015-12-16 18:59
:clap: :thnkx: I
Reply | Reply with quote | Quote
+1 # Piriyadha varam vendumNandhu Velu 2015-10-12 11:06
Hi Sis,

story romba romba sooooopera irunchu ! And ovvoru episode end layum neenga kudutha twist semaaa ! jus luvd it !! And Pradhyush Dhwani combo pakka !! it was delight to read the final episodes !!

Aaaga motham pakka story !!

Thanks for giving such a story !!

waiting eagerly for ur next story :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Anusha Chillzee 2015-09-26 04:52
romba sweet story Meera :)

What's the story behind this Dawani to Dhwani??? I mean epadi intha idea strike aachu??? :)

very nice series (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Keerthana Selvadurai 2015-09-14 18:01
Azhagana kathai Meera :clap:

Thaavani thwani aana idam sirikkum padi irunthalum rasikkum padiyaga irunthathu (y)

3 loveable pairs (y) and their parents (y)
Reply | Reply with quote | Quote
+1 # Piriyatha Varam VendumKayalvizhi 2015-09-09 18:48
Inaiku thaan 1stla irunthu fulla padichen
Sooper first Yaaruku yaaru pairnu oru twist vachingale sema
Yuvi - Valli ( Prathiyu - thwani )
Thuna - Bala
Viliyan - Maina
Sema pairs :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Sandiya 2015-09-08 22:07
wow so cute meera mam (y)
Ending romba romba sweeta erunthath:cl
Dhavani tha thuvaniya :P very nice
Frist na yen uv bala valli vishayathula involve agallanu but epp thalliva puriuthu ellathuku uv tha karanamnu uv sonna yosanaiyala tha bala-valli serthanganu :yes:
Uv oda love ca kadhalanagavum kanavangavum ulla feeling azhaga solli erukinga (y)
Athu polla vallioda love pathi solldrathu nice
Overall superb superb meerameera :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Amutha 2015-09-08 15:42
ரொம்ப அருமையான கதை மீரா:yes: தாவணி த்வனி ஆனது ரொம்ப அழகா இருந்தது.பிரத்யுஷ் த்வனி pair சூப்பர் மீரா.எனக்கு வள்ளியை விட த்வனி நேம் ரொம்ப புடிச்சிருக்கு :cool: :clap: Waiting for your next series eagerly :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்V.lakshmi 2015-09-08 11:13
Very nice lost episode. Loveable and sweet story. :hatsoff: (y) :clap:
:GL: for next story
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Devi 2015-09-08 07:18
Nice end Meera mam!!
Dwani-pratyush love..
Velan - valli love ... Rendume super ..
(y)
Good luck for your next story :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Thuvaraka 2015-09-08 00:33
super super super, meera akka ,alakana niraivu love that story :clap:
ana thaavani, ipadi thvaniya maariyirukkumnu ninaikkave illapa :grin:
kaadhal,paasam,natpu,sakotharathuvam, thaipasam, pirivu, sokam, vali ella unarvukkuviyal, (y) :yes:
best wishes for ur next story :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Jansi 2015-09-07 22:18
So sweet end Meera (y)

last epi varai suspensermba azhaga kondu poneenga.
Yuvi behaviour paarthu mutalla romba kobamaa irunthathu, but avarai kadaisiyil romantic herovaa supera kaaditeenga.

Nice story.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 19 - மீரா ராம்Admin 2015-09-07 21:43
very nice series Meera.
Friendship, relationship kudave love, affection ellam blend aagi iruntha very nice story.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top