(Reading time: 48 - 95 minutes)

தன் பின் ஒவ்வொரு தருணத்திலும் அவன் அவளை வள்ளியாகவே பார்த்தான்… அதனாலேயே அவளிடம் நெருங்க தயங்கினான்… தன் தாயின் மேல் அவளும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பதை திருமணம் முடிந்த மறுநாள் வீட்டில் காலையிலேயே அவன் தெரிந்து கொண்டான்…

அதனால் அவளுடன் சேர்ந்து நாடகம் நடித்தான் இருவரும் சந்தோஷமான தம்பதியர்கள் என அனைவரின் முன்னும்…

ஆனாலும் மறைமுகமாக அவளிடம் சொல்லித்தான் பார்த்தான்… ““சில விஷயங்கள் சொல்லிப் புரிய வைக்க முடியாது… தானாவே உணரனும்...” என….

அவளோ அவன் சொன்னதைக் கேட்டு அவனை விழி அகற்றாமல் பார்க்க, அவன் பேச்சை மாற்றினான்...

ஹனிமூன் செல்ல நேர்ந்த பொழுது, தான் அதுவரை குடும்பமாய் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேலனாகவே அவளின் முன் வலம் வந்தான்…

ஹனிமூனிலிருந்து உடனே திரும்பி வந்தாலும், அவளுடன் வீட்டில் அதிக நேரம் இருக்க விரும்பி சீக்கிரமே வர ஆரம்பித்த ஒரு நாளில், திடீரென அவன் வருகை தாமதமாக, அவள் பயந்து அவனுக்கு போன் செய்தது, அவள் பயத்தினை தெளிவாய் அவனுக்கு உரைத்தது…

ஊருக்கு கணவன் மனைவியாக தெரிந்தாலும், உண்மையில் இருவரும் உறவாக மாற சிறு சிறு நிகழ்வுகள் மாற்றமாய் அமையத்தான் செய்தது…

அப்படி ஒரு நாள் அவன் ஸ்டிரைக் பிரச்சினையை சரி செய்து வீட்டிற்கு நேர தாமதமாக வந்து சேர்ந்த போது தான் அவள், அவனின் டீசர்ட்டை அணிந்து உறங்கி கொண்டிருந்தாள்… அந்த நொடி அவன் மனது முழுவதும் சந்தோஷ அலைகள்… எவளிடத்தில் தனது சட்டையை இழந்தானோ அவளிடத்திலே தனது இதயத்தையும் இழந்தவன், இன்று மனைவியாக தன் கண் முன் தனது உடை அணிந்து உறங்கி கொண்டிருப்பவளை பார்த்து வேலனாக இருந்த அவனுக்குள் மகிழ்ச்சி மட்டும் மல்ல காதலும் ஒருங்கே பிறந்தது…

அந்த நொடி அவனுக்கு அவள் தன் மனைவி என்பது மட்டுமே தெரிந்தது… குனிந்து அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டவன் மனமே இல்லாமல் அவளை கட்டிலில் அவளை படுக்கவைத்து விட்டு அவனும் அவளருகிலே படுத்து காதலில் வீழ்ந்த நிம்மதியுடன் உறங்கியும் போனான்…

அதன் பின்னர், கண்ணாடி வளையலை பரிசாக கொடுத்த போது அவள் முகத்தில் சிறு வலியும், பெருகும் சந்தோஷமும் கண் முன் கண்டவன், எங்கே தன்னை அவளிடத்தில் இழந்ததை தன் மனமும், தன் கண்ணுமே காட்டிக்கொடுத்திடுமோ என்றெண்ணி “என்னைக் கொல்லாதே பெண்ணே….” என தன் மனதிடம் கை வைத்து சொல்லிக்கொண்டான்…

அவள் தயாராகி வர காத்திருந்தவன், அவள் கதவைத் திறந்து வந்ததும் தன்னையே மறந்து போனான் ஒரு நிமிடம்…

எந்த நிற உடையை எடுத்து வந்து அவன் த்வனியிடம் கொடுத்தானோ, அதே நிற உடையை வள்ளி அணிந்து வந்த போது இப்போது வேலனாக இருக்கும் அவனுக்கு திருமணம் முடிந்தும் காதலித்தும் அதை சொல்லாமல் இருக்கும் நிலை கொடியதாய் தோன்ற, வேலன் ஓய்ந்து போய் இருந்த நேரம், அவனுள் அதுநாள் வரை அமைதியாய் இருந்த ப்ரத்யுஷ் வெளிவந்தான்…

தன் கண் முன் தன் காதலி த்வனியைக் கண்டதும், அவன் மனம் அவனிடத்தில் இல்லாமல் போக, த்வனி என அழைத்தவாறு அவளின் கையைப்பிடித்துக்கொண்டான்…

“என்னங்க… என்னாச்சு….” என அவள் அழைத்த விதத்தில் ப்ரத்யுஷ் மறைந்து வேலன் வெளிவர, மனைவியின் அருகாமை, அவளின் குரல், அவளின் ஸ்பரிசம், என அனைத்தும் அவனை இன்னலுக்கு உள்ளாக்க, காதலித்தும் காதல் சொல்ல முடியவில்லையே என்ற ஏக்கமும் சேர்ந்து அவனை வாட்ட,

“ஏண்டி என்னை கொல்லுற?... நான் என்னடி பாவம் செஞ்சேன் உனக்கு?... எதுக்குடி இப்படி என்னை பைத்தியமாக்கி பார்க்குற?... வலிக்குதுடி… நிஜமா…. வலிக்குது….” என கேள்வி கேட்டான்…

அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தும் புரியாதவாறு அவள் மௌனமாய் நின்றிருக்க, அவன் அவளது இன்னொரு கரத்தையும் பற்றிய போது அவள் தன்னை மறந்து அவன் விழிகளைப் பார்க்க, “ப்ளீஸ்டீ… புரிஞ்சிக்கோ…. ப்ளீஸ்… என்னால முடியலை...” என கூறிவிட்டு விருட்டென்று அகன்றும் விட்டான்…

திருவிழாவை மையப்படுத்தி காத்திருந்தவன், அன்று தன் காதலை சொல்லலாம் என முடிவெடுத்து அவளைக் கைப்பிடித்தவன், அந்த நாளன்று தன் மனைவி தான் இழந்த அத்தனை சந்தோஷத்தையும் ஒருங்கே கொண்டிருக்க வேண்டும் என முடிவெடுத்தே, வ்ருதுணனிடம் பாலாவையும் வள்ளியையும் சேர்த்து வைக்க வேண்டும் என கூறினான்… திருமணத்திற்கு முன்னே…

உனக்கெப்படி அவர்களின் பிரச்சினை தெரியும்  என்ற துணாவின் கேள்விக்கு, மனைவியாகப் போகிறவளின் வலியை தெரிந்த பின்னும் சும்மா இருக்க என்னால் முடியவில்லை துணா… என்று சொன்னபோது, துணா அவனை அணைத்துக்கொண்டான்…

எப்படி சரி செய்ய யுவி, என துணா கேட்டபோது, அதற்கான பாதையை யுவி சொன்னான்… அவன் சொன்னது போலவே துணா பாலாவின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, இறுதியில் யுவி பேச சொன்னது போல் அனைத்து உண்மைகளையும் பேச, பாலா தன் தவறை உணர்ந்து வள்ளியின் மேல் கொண்ட வீண் கோபம் அவசியமற்றது என புரிந்து கொண்டு அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுக்கொண்டாள்…

வள்ளியின் முகத்தில் சந்தோஷத்தைக் கண்ட யுவிக்கும் திருவிழாவில் தன் காதலையும் சொல்லிட வேண்டும் என தீர்மானம் செய்து, அவளிடத்தில் சொல்ல காத்திருந்தான்…

துணா-பாலா, விழியன்-மஞ்சு, நால்வருடனும் சேர்ந்து வள்ளி செல்வதைப் பார்த்திருந்தவன், ஒரு சந்தர்ப்பத்தில் வள்ளி தனியாக பின்னே தங்கிடுவதைக் கண்டு அவளை நோக்கிச் சென்றான்…

அவள் எட்டு வருடத்திற்கு முன், அவனை சந்தித்த பம்புசெட்டின் அருகே இருந்த அறை பக்கத்தில் சென்ற போது, அவளின் முன் வந்து நின்றான் வேலன்…

அவள் விழி கலங்கி அவனை பார்த்தபோது, அவனிடத்தில் பேச்சு மட்டும் என்ன அசைவு கூட இல்லை…

“வள்ளி….” என அவன் அழைத்த போது,

“த்வனியை தேடி வந்தீங்களா?... இந்த வருஷமும் இங்கே திருவிழாவுக்கு வந்திருக்காங்களான்னு பார்க்க?...” என்று அவள் கேட்டதும் அவன் தூக்கிவாரிப்போட்டவனாய் அவளைப் பார்க்க…

“அத்தை எல்லாம் சொன்னாங்க கல்யாணம் முடிந்த அன்னைக்கே…. இந்த வருஷமும் தேடுறீங்களா?...” என கேட்டவள் அவன் பதில் சொல்லும் முன் அங்கிருந்து நகர,

அவன் அவளின் கைப்பிடித்தான்…

“விடுங்க… ப்ளீஸ்… யாரோ ஒரு த்வனியை தேடுற நீங்க, இதே திருவிழாவில் நடந்த இன்னொரு விஷயத்தை மட்டும் மறந்துட்டீங்களா இல்லை நினைக்குற அளவுக்கு அது மனசுல பதியலையா?...” என கேட்க அவன் குழம்பி போனான்…

“இந்த இடம், இந்த அறை, எதுவும் உங்களுக்கு நினைவு இல்லையா கொஞ்சமும்?... யாரோ ஒருத்தியை இந்த திருவிழாவில் எங்கேயோ சந்திச்சது மட்டும் நினைவிருக்கு அப்படித்தானே?...” எனக் கேட்க…

அவனுக்கு அப்போது தான் புரிந்தது, அவள், தன்னைப் பற்றித்தான் கேட்கிறாள், கூடவே த்வனி என அவன் சொல்லிக்கொண்டிருப்பது அவள் தான் என்ற உண்மை அறியாமல் அது வேறு யாரோ என்ற முடிவுக்கு வந்து விட்டாள் என்பதும் தெளிவாக புரிய, அவன் சிரித்துக்கொண்டே

“த்வனி… நான்…” என சொல்ல முனைய

அவளுக்கு கோபம் வந்து அவன் பிடித்தக் கையை உதறிக்கொண்டு விருவிருவென்று சென்றுவிட்டாள்…

அவள் சென்ற திசையேயே பார்த்துக்கொண்டிருந்தவன், வள்ளியைத் தேடிக்கொண்டு கோவிலின் அருகே வர, அங்கே வந்த ஒரு வட இந்திய பெண்மணியைக் கண்டவனுக்குள் சிறிய திட்டம் பிறக்க, அதை அமல்படுத்த தயாராகினான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.