(Reading time: 48 - 95 minutes)

ம்புசெட்டில் குளித்துவிட்டு ஈரத்துடன் வெளிவந்த மஞ்சரியைப் பின் தொடர்ந்த விழியன், ஒருமரத்தின் அருகே வைத்து அவளை வழி மறிக்க,

“என்னங்க… இது… யாராச்சும் பார்த்துடப் போறாங்க… வழி விடுங்க…” என சொல்ல

“அதெல்லாம் விட முடியாது… முடிஞ்சா என்னை விலக்கிவிட்டுட்டு போடீ மைனா….” என அவனும் வீம்பாக சொல்ல…

“சரி…” என்று அவனை விலக்க முயற்சித்தவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, நிற்க…

“மைனா… என்னாச்சு?... என்னைப் பாரு?...” என அவன் சொல்ல சொல்ல அவள் நிமிரவே இல்லை கொஞ்சமும்…

வலுக்கட்டாயமாக அவள் முகத்தினை நிமிர்த்தியவன் அவள் கண்களில் தெரிந்த காதலில் தன்னையும் மறந்து சுற்றத்தையும் மறந்தான்…

“மை டியர் மஞ்சக்காட்டு மைனா…………………..” என ராகம் பாடியவன், அவளை அணைத்து இதழோடு இதழ் சேர்த்தான் மெதுவாக….

மாற்றுடை எடுக்கச் சென்ற பாலா, உடையை எடுத்து விட்டு திரும்புகையில், துணா அவளை பின்னிருந்து அணைத்ததும்

“அய்யோ விடுங்க… யாராவது பார்த்துடப்போறாங்க… நான் போகணும்….” என கெஞ்ச

“ஹ்ம்ம்… எங்கே போறடீ திரபா?...” என அவனும் விடாமல் கேட்க

“இது என்ன விதுன் கேள்வி… டிரெஸ் சேஞ்ச் பண்ண வேண்டாமா?... அதுக்குத்தான்…” என அவளும் விளக்கம் சொல்ல

“வேண்டாம்டீ… இப்படியே இருக்கலாம்….” என்றான் அவன்…

“விதுன்….” என்றபடி அவனை விலக்கிவிட்டு அவள் முறைக்க…

அவனின் குழந்தை முகத்தையும், அதில் தெரிந்த காதலையும் கண்டவளுக்கு தன்னை மீறி சிரிப்பு வர,

அவன் கண்களால் வா என அழைத்ததும், மறுக்காமல் அவனுடன் ஒன்றி போனாள் அவள்…

தன்னுடன் ஒன்றி நின்றவளை இறுக அணைத்துக்கொண்டவன், முத்தங்களை வழங்கவும் தவறவில்லை…

ன்னங்க… எங்க யாரையும் காணோம்?... எங்க போயிட்டாங்க எல்லாரும்?...” என வள்ளி வேலனிடம் கேட்க…

“தெரியலையேடா…” என்றவனுக்கும் அப்போதுதான் சில விஷயம் புரிய, தன்னை மறந்து சட்டென்று சிரித்துக்கொண்டான்…

“எதுக்குங்க இப்போ சிரிக்குறீங்க?... சொன்னா நானும் சிரிப்பேன் தான?...” என அவள் கேட்க

“புதுசா கல்யாணம் முடிஞ்சவங்க தனியா இருக்க விரும்புவாங்க தான…. அதை தான் துணாவும் விழியனும் செஞ்சிருக்காங்கன்னு நினைச்சேன்…. சிரிப்பு வந்துட்டு….” என அவன் சிரித்துக்கொண்டே சொல்ல

இம்முறை அவளுக்கு வெட்கம் வந்தது அழகாய்….

அவளின் வெட்கத்தினை அருகே வந்து இருகைகளாலும் முகத்தினை ஏந்தி ரசித்தவன்,

“இப்போவாச்சும் சொல்லுவியா?....” என கேட்க….

அவள் சரி என்றாள்….

“இங்கிருந்து போன பிறகு உங்களை ஒருநாள் கூட மறந்ததில்லை… மறக்க நினைத்ததும் இல்லை…. சில நிமிட சந்திப்பு தான்… முகம் கூட பார்த்ததில்லை தான்… ஆனாலும் என் மனம் முழுவதும் உங்களின் பெயர் கூச்சல் தான்… ஒரு பெண் ஆணிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பும் அரவணைப்பும் தான்… அந்த இரண்டையுமே அந்த சில நிமிட நேரத்தில் நான் உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்… இதைத் தவிர வேறு என்ன வேண்டும் எனக்கு?... என் மனதில் நான் உங்களை வைத்து கொண்டாட…?...”

“பாலா ஒரு காரணம் தான் நான் திருமணத்தை தள்ளிப் போட, ஆனால் முழு காரணம் நீங்க தான்… உங்களை மறக்க முடியலை… நிஜமாவே…. உங்களைப் பார்க்குற வரை தினமும் நம்ம சந்திச்ச நிமிஷத்தை தான் கண் முன்னாடி கொண்டு வந்துப்பேன்… ஆனா, எப்போ உங்களைப் பார்த்தேனோ அப்பவே நான் என்னை முழுசா உங்ககிட்ட இழந்துட்டேன்… உங்க பார்வையிலேயும் என்னை பார்க்குறப்போ எல்லாம் ஒரு தடுமாற்றம் தெரிஞ்சது… அது எதனாலன்னு என்னால யூகிக்கவும் முடியலை… நீங்க தான் ப்ரத்யுஷ் அப்படிங்கிற என் எண்ணத்தையும் என்னால மாத்திக்க முடியலை… அப்பதான் நம்மளுக்கு நிச்சயம் முடிஞ்சது… அதுக்கு மறுநாள், துணா அண்ணன் கிட்ட ஒரு ஃபைலில் சைன் வாங்க போனப்போ, அவர் நீங்க எல்லாரும் எடுத்துக்கிட்ட சின்ன வயசு போட்டோவை பார்த்துட்டு இருந்தார்… எங்கிட்ட காட்டி இது தான் யுவி… நல்லா இருக்கான்ல… ஹ்ம்ம்… சின்ன வயசில மட்டும் இல்ல இப்பவும் த்யூஷ் ரொம்ப அழகா இருப்பான்… தோற்றத்துல மட்டும் இல்ல… விட்டுக்கொடுக்குறதுல ஆகட்டும், படிப்புல ஆகட்டும், செய்யுற செயலில் ஆகட்டும், பேசுற பேச்சுல ஆகட்டும், நடந்துக்குற விதத்துல ஆகட்டும், பாசத்துல ஆகட்டும், எல்லாத்துலயும் த்யூஷ் ரொம்ப அழகு வள்ளி…. ன்னு சொன்னார், நான் த்யூஷ் யாருன்னு கேட்டப்போ தான் அவருக்கே புரிஞ்சது…. உங்க பெயரை வீட்டில யாரும் சொல்லுறது இல்லன்னும் இப்போ தான் தான் உளறிட்டேன்னும்…

அவன் பேரு அழகா இருக்கும் வள்ளி…. என்னன்னு யோசிக்கிறியா?... என துணா அண்ணா என்னைப் பார்த்துக் கேட்டுட்டே “ப்ரத்யுஷ் வேலன்… இதுதான் யுவியோட முழுப் பெயர்….” அப்படின்னு சொன்னப்போ நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை தெரியுமா ப்ரத்யூ….?... என வேலனிடம் உற்சாகமாக ஆர்ப்பரித்தவள்,

அப்புறம், நான் யாருன்னு உங்களுக்கு இன்னும் தெரியலையேன்னு வருத்தப்பட்டேன்…. சரி… காத்திருக்கலாம் அதுவரைன்னு முடிவுபண்ணி காத்திருந்தேன்….

“உங்க கையால தாலி வாங்கிகிட்ட போது எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா???.”

உங்க கிட்ட எப்படி நான் தான் நீங்க காப்பாத்தின பொண்ணுன்னு சொல்ல?... உங்களுக்கு என்னை நினைவிருக்குமா?... அந்த பொண்ணு நான் தான்னு சொன்னா நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சு யோசிச்சு ஒரு முடிவோட கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு ராத்திரியே உங்ககிட்ட சொல்லிடலாம்னு வந்தப்போ தான், அத்தை எங்கிட்ட உங்களோட பழைய காதலை பத்தி சொன்னாங்க….

நான் உங்களை விரும்ப நீங்க யாரோ ஒரு பொண்ணை அந்த திருவிழாவில் பார்த்துட்டு இன்னமும் அவளையே நினைச்சு வாழுறதா அத்தை சொன்னப்போ என்னால எதுவுமே பேச முடியலை… அவங்களுக்கு சமாதானம் சொல்லிட்டு வந்து அறைக்கு வெளியே நின்னு அழுதேன்… ஏன் கடவுளே இப்படி ஒரு கஷ்டம்னு?....

அந்த பொண்ணு யாரு என்னன்னு  உங்ககிட்ட அன்னைக்கு கேட்க தான் வந்தேன்… ஆனா என்னால கேட்க முடியலை உங்க பார்வையை பார்த்ததும்…

அதுக்கு அப்புறம் அத்தைக்கு வாக்கு கொடுத்த மாதிரி உங்ககூட சந்தோஷமா இருக்குற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்…. அப்பதான் நீங்களும் எனக்கு உதவி பண்ணுறேன்னு சொன்னீங்க….

‘சில விஷயம் சொல்லிப் புரிய வைக்க முடியாது… தானாவே உணரனும்னு…” நீங்க சொன்னப்போ, என் காதலையும் நீங்க எப்போ உணருவீங்கன்னு என் மனசு எங்கிட்டயே கேட்டுச்சு…

அப்புறம் நாம ஹனிமூனுக்காக வெளிநாடு போனது, அப்புறம் உடனே இந்தியா திரும்பி வந்தது, ஒருநாள் போனில் சாப்பிட்டியான்னு கேட்டது, இப்படி எல்லா நேரத்துலயும் நான் வள்ளியாதான் இருந்தேன்… ஒரு மனைவியா உங்க மனசை மாத்தனும்னு நினைச்சேன்…

வள்ளியா உங்களை காதலிச்சேன் மூச்சு முட்ட….

அப்புறம் நேரம் கழிச்சு ஒருநாள் வருவேன்னு சொன்னீங்களே…. அன்னைக்கு ராத்திரி இடி, மழை, மின்னல்னு ஓரே பயம்…. கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி நான் பயப்படும்போதெல்லாம், நீங்க எனக்கு கொடுத்த டீசர்ட்டை எடுத்து போட்டு படுத்துப்பேன்… அன்னைக்கும் அதை எடுத்து போடப்போனேன்…. அப்புறம் மனசு மாறி, நம்ம அறையில் இருந்த நீங்க அடிக்கடி போடக்கூடிய ஒரு டீசர்ட்டை எடுத்து போட்டுக்கிட்டேன்…. பயம் இருந்தாலும் கண்ணை மூடி நீங்க என் பக்கத்துல இருக்குறது போல நினைச்சிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சேன்…. தூங்கிட்டேன்…

விடிஞ்ச பின்னாடி தான் பார்க்குறேன்…. நீங்களும் நானும் ஒரே பெட்டில் படுத்திருக்கிறோம்னு… எனக்கு நல்லா நினைவு இருக்கு… நான் அன்னைக்கு சோபாவில் தான் படுத்திருந்தேன்… இப்பொ பெட்டில் படுத்திருக்கேன்னா,, கண்டிப்பா நீங்க தான் என்னை தூக்கிட்டு வந்து இங்க படுக்க வைச்சிருக்கணும்னு நினைச்சிகிட்டேன்….

அப்புறம் தான் உங்ககிட்ட வந்து உங்க ட்ரெஸ் போட்டு தூங்கினதுக்கு மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்… ஒருவேளை நீங்க திட்டிடுவீங்களோன்னு பயத்துல….

ஆனா, நீங்க எதுவுமே சொல்லலை… அது எனக்கு இன்னும் வசதியா இருக்க டெய்லி உங்க ட்ரெஸ் போட்டுகிட்டே தூங்க ஆரம்பிச்சேன்… அது உங்களுக்கு தெரியும்னும் எனக்கு தெரியும்… ஆனாலும் நான் கண்டுக்கலை…

அப்புறம் ஒருநாள் வளையல் வாங்கி கொடுத்தீங்க நியாபகம் இருக்கா?... நான் கூட சொன்னேனே சின்ன வயசில இது போட பிடிக்கும்… அப்புறம் இத போடுறது இல்லைன்னு…. அது ஏன்னு தெரியுமா?... உங்களை சந்திச்ச அந்த நாளுக்கு பிறகு ஏனோ தாவணியும் சரி, புடவையும் சரி நான் உடுத்தினது இல்லை… கல்யாணத்துக்கு பின்னாடி தான் இந்த புடவைகள் கூட உடுத்துறேன்… ஆனா அதிலேயும், கண்ணாடி வளையல் போடக்கூடாதுன்னு வீம்புல இருந்தேன்….

நீங்களே வாங்கிட்டு வந்து கொடுத்தப்போ வளையல் போட்டுகிட்டேன்…. அப்படியே வருஷக்கணக்கா எந்த நிறத்துல புடவை உடுத்தாம இருந்தேனோ அந்த நிறத்தில், புடவையும் உடுத்தி உங்க முன்னாடி வந்து நின்னேன்….

நீங்க தடுமாறினீங்க… த்வனின்னு சொல்லி கூப்பிட்டீங்க…. எனக்கு வலிக்கத்தான் செஞ்சது…. ஆனாலும் நான் நெருங்கி வந்தேன்…. அப்பதான் நீங்க என் கையைப் பிடிச்சு என்னை ஏண்டி கொல்லுற… எனக்கு வலிக்குது…. என்னை புரிஞ்சிக்கோன்னு சொன்னீங்க… அப்பதான் நம்பினேன்… ஏதோ ஒரு வகையில நான் உங்க மனசை பாதிச்சிருக்கேன்னு…. சந்தோஷமா இருந்துச்சு…. சீக்கிரம் வள்ளியா உங்க மனசுல இடம் பிடிப்பேன்னு…

அப்புறம் உங்க விலகல் என்னை கொல்லாமல் கொன்னுச்சு… ஒரு முடிவு எடுத்தே தீரணும்னு தான் இதே இடத்துல நீங்க என் கையைப் பிடிச்சும் உங்க கிட்ட அந்த கேள்வியை கேட்டேன்… த்வனியை தேடி வந்தீங்களான்னு?....

ஆனா, எனக்கே அத்தைகிட்ட நீங்க பேசின பின்னாடி தான் தெரிஞ்சது அந்த த்வனி நாந்தான்னு….

அத்தை கேட்டாங்கல்ல, அந்த த்வனி என்னடா செஞ்சா உனக்குன்னு?... அப்போ நீங்க சொன்ன பதில் தான் த்வனியா உங்க மனசுல நான் எவ்வளவு நிறைஞ்சிருக்கேன்னு எனக்கு சொல்லுச்சு….

அதே போல வள்ளி யாருன்னு நானே உங்ககிட்ட கேட்டப்போ உங்க மனைவி வள்ளி நான் யாருன்னு சொன்னீங்களே அப்ப தான் புரிஞ்சிகிட்டேன் இந்த வேலனும் இந்த வள்ளியை விரும்புறார்னு…” என்றவள்

அவன் கண்ணைப் பார்த்து, “சொல்லு சொல்லுன்னு சொன்னீங்க… எல்லாம் சொல்லிட்டேன்…”

“இப்போ இன்னொன்னும் சொல்லவா?...” எனக்கேட்டவள், அவன் பதிலுக்கு காத்திருக்காமலே

“நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன்ங்க….” என்றாள்….

நீங்க எதும் சொல்லமாட்டீங்களா என அவன் அமைதியாய் இருப்பதை பார்த்து கேட்டதற்கு

அவன் தனக்கு ஒன்று வேண்டும் என்றான்…

என்ன என்று அவள் கேட்டதற்கு, “வரம் வேண்டும்…..” என்றான்….

அவள் புரியாமல் அவனைப் பார்க்க

அவளைக் கை காட்டி, “இந்த வரம் எப்போதும் என்னை பிரியாதிருக்க வரம் வேண்டும்…. தருவாயா???...” என இரு கை நீட்டி அவன் கேட்ட மாத்திரத்தில் அவன் கைகளுக்குள் தன்னை வைத்துக்கொண்டவள், அவன் மார்போடு புதைந்து போனவளாய் சரி என்றாள் அவள் விரும்பிய வரம் கைசேர்ந்த நிறைவுடன்….

தன் நெஞ்சில் முகம் புதைத்தவளை ஆசையோடு கட்டிக்கொண்டவன், காதலுடன் அவள் உச்சியில் இதழ் பதித்தான் வரத்தை பெற்ற மகிழ்ச்சியோடு….

ஹாய் ப்ரெண்ட்ஸ்…

பிரியாத வரம் வேண்டும் தொடர்கதை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீக்கும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து தோழிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்….

அடுத்தவாரம் மீண்டும் புதிய தொடர்கதையில் சந்திக்கலாம்…

முற்றும்…

Episode # 18

Table of Contents

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.