(Reading time: 48 - 95 minutes)

விழியனுக்கு உடனே போன் செய்து பெண் வேடமிட்டு, வட இந்திய பாணியில் புடவை அணிந்து வர சொன்னான்…

அவனும் ஏன் எதற்கு என கேள்வி கேட்காமல் உடனே சம்மதித்து அவ்வாறே வரவும், அவனின் கைப்பிடித்து தேவியிடம் அழைத்து வந்தான் வேலன்…

இது தான் த்வனி என அவன் தேவியிடம் அறிமுகப்படுத்தி வைக்க, அவர் மயங்கி விழுந்துவிட்டார்…

என்னடா இது, அம்மா மயங்கிட்டாங்க… எதுக்குடா இப்படி வர சொன்ன நீ?... என்னன்னு சொல்லுடா?... என்ற விழியனின் கேள்விக்கு

“எல்லாம் அப்புறம் சொல்லுறேன்… நீ போய் எங்கிருந்தாலும் வள்ளியை உடனே வர சொல்லு…” என சொல்லிவிட,

விழியனும் வள்ளியை அழைத்து வந்து விட்டு விட்டு சென்றுவிட்டான்…

அதன் பின்னர், தேவி விழித்து வள்ளியை வைத்து கேள்வி கேட்க, வள்ளியும் த்வனியை மறக்க மாட்டீங்க அப்படிதானே?... என்று கேட்க… அவன் த்வனி வேறு வள்ளி வேறு இல்லை என தெளிவாக கூற அவள் சந்தோஷத்தில் மயங்கி சரிந்தாள்...

டந்த அனைத்தையும் தேவியிடம் கூறிவிட்டு அவன் தாயைப் பார்க்க

அவருக்கு சந்தோஷம் தாளவில்லை…

“வேலா…” என்ற சந்தோஷத்தோடு அவர் அவனை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பிக்க,

“தேவிம்மா…. அழாத தேவிம்மா… என்னை மன்னிச்சிடு தேவிம்மா… உங்கிட்ட இத்தனை நாள் இந்த உண்மையை சொல்லாம மறைச்சிட்டேன்… சாரி தேவிம்மா… வேணும்னு மறைக்கலை தேவிம்மா… நீ ஏற்படுத்தி கொடுத்த சம்பந்தத்திற்கும் உயிர் வேணும்னு நினைச்சேன்… அதான் சொல்லலை தேவிம்மா… நான் ப்ரத்யுஷ்-ஆ த்வனியை பிரிஞ்சிருந்து தான் விரும்பினேன்… ஆனா வேலன், வள்ளி கூடவே இருந்து விரும்புறேன் தேவிம்மா… அத அவளுக்கும் புரிய வைச்சிட்டு உங்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் தேவிம்மா… தப்புன்னா சாரி தேவிம்மா…” என அவன் குரல் கம்ம சொன்ன போது,

“எந்த தப்பும் நீ பண்ணலை வேலா… என் பையன் எது செய்தாலும் கண்டிப்பா அதுல ஒரு நோக்கம் இருக்கும்… அது எனக்கு தெரியும்… நீ எனக்கு புரிய வைக்கணும்னு அவசியமில்லைப்பா… அம்மாவுக்கு உன்னையும் புரியும்… உன் மனசையும் புரியும்… இத்தனை நாள் நீ அவளோட தாமரை இலை தண்ணீரா தான் வாழுறேன்னும் எனக்கும் தெரியும்… த்வனி காரணமா இருந்தாலும், வேற ஏதோ ஒன்னு என் மனசை உறுத்திட்டே இருந்துச்சு இத்தனை நாள்… இன்னைக்கு, அந்த உறுத்தலுக்கு காரணமும் புரிஞ்சது… இனி அந்த உறுத்தல் இருந்த தடம் கூட இருக்காதுன்னும் எனக்கு புரிஞ்சிட்டு…” என்று சொல்லி சிரித்தவர், மகனின் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட,

“தேவிம்மா…..” என்ற அழைப்போடு அவரை பாசத்தோடு அணைத்துக்கொண்டான் வேலனும்….

ற்று நேரத்திற்கு பிறகு வள்ளியின் கண்கள் லேசாக அசைய, அவன் அதற்காகவே காத்திருந்தது போல், அவளின் தலையில் கைவைத்து வருட, அவள் விழி திறந்து அவன் முகத்தினைப் பார்த்தாள்…

பார்த்ததுமே மனதின் உற்சாகம் அவள் முகத்தில் தெரிய, அவனும் முகம் மலர்ந்தான் அழகாக…

அவனது சிரிப்பில் ஏற்கனவே தன்னை தொலைத்தவள், இப்போது அதிக நெருக்கத்தில் அவனது புன்னகையையும் அவன் முகத்தையும் கண்டவளுக்கு, இத்தனை நாள் பிரிந்திருந்த ஏக்கம் நெஞ்சில் வர, தன்னை மீறி அழுகையும் கண்களில் உண்டானது… விழி அசையாது அவனைக் கண்டவள், தனது கண்ணீர் நிரம்பி ததும்பிய கண்களை அப்போதும் அகற்றவில்லை அவள் அவனிடத்திலிருந்து…

அவள் விழி நீர் கன்னம் தொட்டு கீழே விழும் முன் அதனை தன் இதழால் தடுத்தவன், அவள் முகத்தினை கைகளில் ஏந்திக்கொள்ள,

அவள் ப்ரத்யூ…. என்ற அழைப்போடு அவன் முகம் எங்கும் முத்தமிட்டு அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள் காதலோடு…

அவள் அணைப்பினில் நீண்ட நெடு நேரம் அடங்கி இருந்தவன், அதன் பின் அவளின் அழுகையை நிறுத்த போராடினான்…

“வள்ளி… என்ன இது… போதும்டா… அழாத… ப்ளீஸ்…”

“…..”

“சொல்லுறேன்லடா… ஒன்னுமில்லை… இங்க பாரு… வள்ளி….”

“…..”

“அழாதடி… ப்ளீஸ்…. என்னால தாங்கிக்க முடியலை… புரிஞ்சிக்கோ…..”

“……”

“இதுக்கு மேல என்னாலயும் முடியாதுடி….” என்றவன் அவள் அழும் விழி பார்த்து,

“நான் உன்னை காதலிக்கிறேன்டி…. உங்கூட நூறு வருஷம் ஒன்னா சேர்ந்து வாழணும்னு ஆசப்படுறேன்டி…  நீ த்வனியா இருந்தப்பவும் உங்கிட்ட நான் பைத்தியமானேன்… நீ வள்ளியா இருக்குறப்பவும் உங்கிட்ட நான் தொலைஞ்சு தான் போனேன்… மொத்தத்துல நீ இல்லாம இந்த ப்ரத்யுஷ் வேலன் இல்லடி…. ஐ லவ் யூ டீ கண்மணி…” என சொல்லியவன், அவள் முகத்தில் புன்னகையும் வெட்கமும் ஒருசேர வர, அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டான் காற்றுக்கூட புகாதபடி…

சில மணித்துளிகளுக்குப் பிறகு, அவனிடமிருந்து விலகியவள், “என்னை மன்னிச்சிடுங்க… நான் உங்களை…..” என்று வார்த்தைகள் வராது அவனை பார்த்தவள்,

“சொல்லுடீ… உன் மனசில இருக்குறதை எல்லாம் சொல்லு…. இப்பவாச்சும் சொல்லு…” என கெஞ்ச…

அவளும் சரி என்றாள்….

அதன் பின், “சொல்லுறேன்… ஆனா…. அதுக்கு முன்னாடி…” என அவள் இழுக்க…

அவன் அவளிடம் “என்னடா….. சொல்லு…” எனக் கேட்க…

அப்போது ஒரு நிமிடம் என்றபடி சற்றும் முற்றும் பார்த்தவள், பக்கத்தில் இருந்த சுவரின் அருகே சென்று “இங்கே உட்கார்ந்து பேசலாமா?…” என கேட்டாள்…

அவன் சரி என்றதும் இருவரும் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொள்ள…

அவள் அவனிடம் எதையோ கேட்கத் துணிந்து முடியாதவளாய் தடுமாற,

அவனுக்கு அவள் தடுமாற்றம் பிடித்திருந்தது… ஆனாலும் அவளே சொல்லட்டும், கேட்கட்டும் அதில் உண்டாகும் சுகம் கேட்டாலும் கிடைக்காதது என அவன் அமைதியாய் இருக்க…

அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “ப்ரத்யூ என் மடியில படுத்துப்பீங்களா கொஞ்ச நேரம்?....” என கேட்டு முடிக்கும் முன் அவன் அவள் மடி சாய்ந்திருந்தான்….

அவன் மடி சாய்ந்து விட்ட சந்தோஷத்தை முகத்தினில் காட்டியவள், செயலிலும் காட்டினாள்…

அவனின் நெற்றியிலும், கண்களிலும், கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு…

அவளின் முத்தத்தில் திளைத்தவன், “வள்ளி……” என சந்தோஷத்துடன் அவள் விரல்களைப் பற்றி தன் விரலோடு இணைத்துக்கொள்ள,

அவள் புன்னகை விரிந்தது மலரென அழகாய்…

“ஹ்ம்ம்… சொல்லுடீ… அதான் நீ ஆசைப்பட்டது போலவே செஞ்சிட்டேனே… இப்பவாச்சும் சொல்லுடீ…. ப்ளீஸ்….” எனக் கெஞ்ச…

“அன்னைக்கும் இப்படித்தானே அத்தை மடியில படுத்திருந்தீங்க…. தூரத்துல இருந்து நான் அதை பார்த்தேன்… எனக்கு சந்தோஷமா இருந்துச்சு… அத்தை மடியில படுத்து நீங்க இப்படி விரல் கோர்த்து விளையாடுறதை பார்த்தப்போ… மனசுல சட்டுன்னு நாளைக்கு நம்ம பையனும் இப்படி என் மடியிலேயும் படுத்துக்கவான்னு கேட்டா நல்லா இருக்கும்னு மனசு எவ்வளவு ஏங்குச்சு தெரியுமா?...” என சொல்ல…

அவன் சட்டென்று எழுந்து கொண்டு அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொள்ள,

அவள் என்னாயிற்று என்ற கேள்வியுடன் அவன் முன் சென்று மண்டியிட்டாள்…

“பின்னே என்னடி… அப்போ நம்ம பையனை மட்டும் தான் மடியில படுத்துக்க விடுவியா?... என்னை தள்ளி வைச்சிடுவியா?...” என சிறுபிள்ளையாய் அவன் வினவ,

“என் ப்ரத்யூ…..” என்றபடி அவனைக் கொஞ்சியவள், “நமக்கு பையன் பிறந்தாலும் என் முதல் குழந்தை நீங்க மட்டும் தான்…. இன்னைக்கும் மட்டும் இல்ல என்னைக்கும்…” என அவள் சொல்லி முடித்த போது,

“வள்ளி…………………” என அவன் அவள் விரல் பற்றிக்கொண்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.