(Reading time: 48 - 95 minutes)

வன் விரல் பற்றியதும், அவள் வெட்கத்துடன் நிலம் பார்த்தாள்…

“என்னைப் பாருடி….” என அவன் சொல்ல, அவள் நிமிரவில்லை…

“சீக்கிரம் சொல்லுடி… இப்போ எல்லாரும் வந்துடுவாங்க… ப்ளீஸ்….” என அவன் சொன்னதும் தான், மற்றவர்களின் நினைவு வர, அவள் அவனை விட்டு விலகினாள்…

“என்ன வள்ளி….???....” என அவன் கேட்க

“எல்லாரும் நம்மளைத் தேடப்போறாங்க… நான் அப்புறம் சொல்லுறேன் எல்லாத்தையும்… இப்போ வாங்க போகலாம்… ப்ளீஸ்….” என அவள் கெஞ்ச… அவனும் புன்னகையோடு சரி என்றான்…

இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்து மற்றவர்களைத் தேடி கோவிலுக்குள் சென்றனர்…

அங்கே தேவியைக் கண்டதும் அவர் காலில் விழுந்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள, அவரும் மனமார வாழ்த்தினார் இருவரையும்….

அதன் பின்னர், கோவிலில் மற்றவர்களுடன் சேர்ந்து சாமி கும்பிடும்பொழுது, தட்டை எடுத்துக்கொடுக்க வேண்டிய நிலை வர,

கஸ்தூரியும் உமாவும் கைகளை பிசைந்து கொள்ள, சிவநாதனும், இந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….

வேலனின் கண்களுக்கு அவை தப்பாமல் இல்லை…

சட்டென்று சிவநாதன்-உமா அவர்களின் அருகே சென்று நின்று கொண்டவன், துணாவிடமும், விழியனிடமும் சைகையில் கண் காட்ட

கஸ்தூரி-இந்திரன் தம்பதியரின் அருகே சென்று துணாவும், நீலகண்டன்-விஜயா தம்பதியரின் அருகே சென்று விழியனும் நின்று கொண்டனர்…

“இவங்க பொண்ணு இதோ என் எதிரே நிற்கிற என் அம்மாவுக்கு மருமகளா ஆகிட்டா… அதனால மூத்த மகனா இப்போ இந்த குடும்பத்தின் சார்பில் நான் தட்டை எடுத்து கொடுக்குறேன்….” என சொல்லி சட்டென்று தட்டை எடுத்து ஐயரிடம் கொடுக்க

துணாவும் விழியனும், அதையே பின்பற்றி, “எங்க அத்தை மாமாவுக்கும் நாங்க தான் மூத்த மகன்கள்… அதனால இந்த தடவை நாங்க தான் தட்டை எடுத்து கொடுப்போம்…” என்றபடி தட்டை எடுத்து கொடுக்க

பெண்களை பெற்றவர்களுக்கு மனம் குளிர்ந்து போனது… தங்களுக்கு கிடைத்த (மரு)மகன் களின் செயலில்…

சிவநாதனுக்கும் இந்திரனுக்கும் கண்கள் கலங்கிவிட, உமாவும், கஸ்தூரியும் அழுதே விட்டனர் வேலனின் துரித செயலைக் கண்டு…

கண் அசைவில் வேண்டாம் என வேலன் சொல்ல, அவர்களும் புரிந்து கொண்டு அழுகையை மறந்துவிட்டு புன்னகைத்தனர் மன நிறைவோடு…

சிரித்த வண்ணம் வேலன் தாயினைப் பார்க்க, அவரும் புரிந்து கொண்டு தலைஅசைத்துவிட்டு, அம்பிகாவிடம் எதுவோ பேச,

அவர் சட்டென்று முன் வந்து, “இதோடா… உங்க மாமனார் குடும்பத்துக்கு தட்டு எடுத்து குடுக்க நீங்க இருந்தா எங்க வீட்டு மருமகளுங்க எங்க வீட்டின் சார்பா தட்டை எடுத்து குடுப்பாங்கடா… பாருங்க….” என்று சொல்லி பாலாவை அழைக்க

அவள் “என்ன அத்தை…” என்றாள்…

“எடும்மா அந்த தட்டை… எடுத்து ஐயரிடம் கொடு…” என்று சொல்ல, அவள் கேள்வியுடன் அதிர்ச்சியும் கலந்து அவரை ஏறிட,

“என்னம்மா பார்க்குற?... என் ஒரே மருமக நீ…. நீ என் சார்பா என் வீட்டு சார்பா தட்டை எடுத்துக்கொடுக்காம வேற யாரு எடுத்து கொடுப்பா?... எடுத்துகொடுடாம்மா….” என சொல்ல

பாலாவின் விழிகளில் நீர் சூழ்ந்தது சட்டென…

‘அடடா… என்னம்மா நீ?... தட்டை எடுத்துக்கொடும்மா… எல்லாரோட முன்னாடியும் நம்ம குடும்ப மானத்தை இப்போ நீதான் காப்பாத்தணும்… இந்த அத்தையை சந்தோஷப்படுத்த மாட்டீயா மருமகளே?... என் பையனும் இப்போ உன் அம்மா-அப்பாவோட சேர்ந்துட்டான்… இப்போ எனக்கு இருக்குற துணை நீ தானம்மா… உன் அம்மா கேட்டா செய்ய மாட்டீயா?.... நான் அப்போ அத்தை தானா உனக்கு?... அம்மா இல்லையா?... என் பொண்ணு கிடையாதா நீ?....” என்று கேட்டு முடிக்கும்போது

பாலா தட்டை எடுத்து ஐயரிடம் கொடுத்தேவிட,

“இது போதும்டா தங்கமே எனக்கு…..” என பாலாவை பாசத்துடன் அம்பிகா அணைத்துக்கொள்ள,

வள்ளியின் வேலனிடம் விழிகளில் நீர் ததும்ப கைகூப்பி நன்றி சொல்ல, அவனுக்கும் கண்கலங்கி விட, “வேண்டாம்டா….” என தலை அசைத்தான்….

“அம்மாடி வள்ளி, மஞ்சரி… இப்போ என் மானம் உங்க இரண்டு பேர் கையிலேயும் தான் இருக்கு…” என சொல்லவும்,

“சொல்லுங்க அத்தை இப்போ என்ன செய்யணும் நாங்க?...” என மஞ்சரி கேட்க

“வள்ளியோட சேர்ந்து இந்த தட்டை எடுத்து கொடும்மா… அது போதும்…” என சொல்ல…

வள்ளியின் கரம் பிடித்து இழுத்து வந்த மஞ்சரி அவளுடன் சேர்ந்து தட்டை எடுத்து கொடுக்க அங்கிருந்த அனைவரின் மனமும் நிறைந்து போனது…

அதன் பின்னர், பெரியவர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து பேசிக்கொள்ள, சிறியவர்கள் அனைவரும் ஒன்றாய் சென்றனர்…

“டேய்…. யுவி…. இங்க பம்புசெட் இருக்குன்னு கொஞ்ச வருஷம் முன்னாடி நீ வந்தப்போ சொன்னல்லடா… அங்கே போய் எல்லாரும் குளிச்சிட்டு வரலாம்டா… நீ என்ன சொல்லுற?...” என விழியன் கேட்க

“ஆமாடா.. லாஸ்ட் டைம் நீ மட்டும் வந்த… அப்போ கூட உன்னை குளிக்க விடாம நாங்க இரண்டு பேரும் போன் போட்டு தொந்தரவு கூட செய்தோமே… இப்போ எல்லாரும் சேர்ந்து குளிக்கலாம்டா விழியன் சொல்லுற மாதிரி… நீ என்ன சொல்லுற?...” என துணாவும் தன் பங்கிற்கு கேட்க

யுவி வள்ளியைப் பார்த்தான்…

அவள் முகத்தில் வெட்கத்துடன் சேர்த்து காதலும் மலர, அவள் அமைதியாகவே இருந்தாள்…

“அட என்ன யுவிண்ணா… நீங்க அவகிட்ட பார்வையாலே கேட்டாலும் அவளுக்கு இப்போ வாய் பேச வராது… வெறும் காத்துதான் வரும்… என்ன வள்ளி…?...” எனக் கேட்க…

“போடி….” என்றபடி வள்ளி முறைக்க…

“இதோ பாருடா… மேடம் முறைக்க எல்லாம் செய்யுறாங்க… ஏண்டி பாலா இதை பத்தி நீ என்ன நினைக்குற?....” என மஞ்சரி கேட்க

“ஹ்ம்ம்… நான் நினைக்குறது தான… இதோ இப்போ சொல்லுறேன் பாரு…” என்றவள்,

“வள்ளி நீ ரெடியா…?...” எனக் கேட்க

“ரெடி இந்து…” என்றாள் வள்ளியும்…

“ஆஹா.. இரண்டு பேரும் ப்ளான் பண்ணிட்டாங்க போலேயே….” என நினைத்தவள்,

“நான் இல்லப்பா…. ஆளைவிடுங்கடி என்னை…” என பின் நகர்ந்தாள் மஞ்சரி…

“அப்படி எல்லாம் உன்னை சும்மா விட்டுட்டா நாளைக்கு உலகம் எங்களை தப்பா பேசாது?... என்ன வள்ளி நான் சொல்லுறது சரிதானே?...” என பாலா கேட்க…

“ரொம்ப சரி இந்து….” என்றாள் வள்ளி…

“அடியே… என்னடி பண்ண போறீங்க?...” என்றபடி மஞ்சு ஒட தயாராக…

“அது உனக்கு இப்போ தெரியும் பாரு….” என்ற பாலா, வள்ளியிடம் சைகை காட்ட, அவள் ஒரு குச்சியை எடுத்து கொடுக்க,

“அய்ய்ய்யோ…..” என்றபடி மஞ்சு அலறிக்கொண்டே ஓட,

“ஏய்… நில்லுடி…. உன்னை….” என துரத்திக்கொண்டே பாலா செல்ல, அவளின் பின்னே வள்ளியும் ஓட,

“முடிஞ்சா என்னை பிடிங்க பாலவள்ளி….” என சிரித்துக்கொண்டே ஓடினாள் மஞ்சரியும்….

அதைப் பார்த்து சிரித்துக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தனர் மூவரும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.