(Reading time: 13 - 25 minutes)

"...அம்மூ!"-ரோஹித்தின் குரல் கேட்டது.

"ரோஹித் கண்ணா!"-அவனை தூக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள் வெண்ணிலா.

"நீ என்னைவிட்டு எங்கே போன?"

"நானா...நான் எங்கே போக போறேன்?எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது கண்ணா!அதான் வீட்டில இல்லை!"

"இனி என்னைவிட்டு போக மாட்டல்ல?"

"மாட்டேன்!"

"சூப்பர் அம்மூ!"-என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

யுகேந்திரனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.என்ன அவன் மனைவிக்கு தான் சற்று கோபம் தலைதூக்கியது.

"ரஞ்சித் எப்படி இருக்கான்?"-அந்த பிஞ்சுநெஞ்சம் வெகுளியாக சத்தம் போட்டு கேட்டது.நிலா அதிர்ச்சியானாள்.திரும்பி பார்த்தாள்.பிரசாத்தின் முகம் ஏதோ புரிந்ததாய் புன்னகைத்தது.நிலா அவனை தூக்கிக்கொண்டு வெளியே சென்றாள்.

"ரஞ்சித் யாரு?"

"என் பொண்ணுக்கு எல்லாமே அவன் தான்!"-பதில் உரைத்தார் பிரசாத்.

அது உண்மை தானே!!!

சிறிது நேரம் கழித்து அவள் கிளம்பினாள்.

மீண்டும் அமானுஷ்ய அமைதி!

"திரும்பி எப்போ வருவ?"

"டோண்ட் வொரி பிரதர்!ராத்திரி பன்னிரண்டு மணிக்கு கூட வந்து கதவை தட்டுவேன்!"-அவள் குழந்தைத்தனமான திமிரோடு சொன்னாள்.

"முதல்முறை அப்போ பேய்னு பயப்படாம நான் கதவை திறப்பேன்!"

"காமெடி!எனக்கு சிரிப்பே வரலை!உங்களுக்கு யாருக்காவது வருதா?"-அவள் கேட்ட இரு நொடிகளில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

"என்னய்யா சிரிச்சிட்டீங்க?"-அவள் ஏமாற்றமாக கேட்டாள்.

"தெரிஞ்சிக்கோங்க சிஸ்டர்...நான் எப்போதும் உண்மையை மட்டும் தான் பேசுவேன்!"

"இந்த காமெடிக்கு எனக்கே சிரிப்பு வருது!பட் நான் நாளைக்கு சிரிக்கிறேன்!"-அங்கு வறண்ட பாலைநிலம் மழை வரத்தை பெற்று மருதநிலமாய் பிறப்பெடுத்தது.

கிளம்புமுன் அஸ்வினிடம்,

"ரொம்ப நாள் என் தங்கச்சியை காக்க வைக்காதீங்க!"என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

அழகான ஓடையானது தெள்ள தெளிவான நீர்த்துளிகளை கொண்டிருக்கும்.அதைச்சுற்றி பூத்திருக்கும் மலர்கள் மனதிற்கு அமைதியை நல்கும்!!இறைவனின் படைப்பினில் வேற்றுமைகள் பல!!ஆனால்,ஒவ்வொன்றையும் தன்னிலிருந்தே அவன் உருவாக்கியுள்ளான்.உண்மையான ஞானம் என்பது உண்மையை உணர்வதில் அல்ல!!மாயைகளை கண்டறிவதில் உள்ளது!!

காலையிலே போன் செய்து கோவிலுக்கு அவளை வர கூறி இருந்தான் ரஞ்சித்!!எதற்கு என்று தெரியவில்லை.

மனதில் ஏதோ உறுத்தியது.என்னவாக இருக்கும்??

கம்பீரம் பொருந்திய அந்த துர்காதேவியின் ஆலயத்தில் மனம் உருக வேண்டிக்கொண்டிருந்தாள் வெண்ணிலா.

புலியின் மேல் வீரம் பொருந்திய ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தாள் அந்த மகா காளி!!

"இந்தாம்மா அர்ச்சனை தட்டு!"-அர்ச்சனை முடித்து கூடையை நீட்டினார் பூசாரி.

நிலா அதை வாங்கி கொண்டாள்.

"சீக்கிரமே சந்தான பாக்கியம் பிரப்திரஸ்து!"என்றார் அவர்.நிலா நிமிர்ந்தாள்.

"என்னம்மா நீ அர்ச்சனை பண்ண ரஞ்சித் உன் கணவர் தானே!"-அவள் ஆம் என தலையசைத்தாள்.

"உன் பெயர் என்ன?"

"வெண்ணிலா!"

"ம்..பேர் பொருத்தம் நல்லா இருக்கு!அது என்னமோம்மா!இங்கே வர எல்லா பொண்ணுங்களுக்கு நல்லா இருன்னு தான் ஆசீர்வாதம் பண்ணுவேன்!உனக்கு தான் என்னையே அறியாம இப்படி வந்துடுச்சி!தப்பா எடுத்துக்காதே!"

"ஐயோ!அதுலாம் இல்லைங்க..."

"அந்த மகேஷ்வரி அருள் உன் கூடவே இருக்கும்!"-என்று அவர் சென்றுவிட்டார்.

ஏதோ சிந்தித்தப்படி இருந்தவள்!

"ப்பூ!"-என்று ஒருவர் பயமுறுத்த பதறியப்படி திரும்பினாள்.

"ரஞ்சு!!நீயா?...உனக்கு என்னை பயமுறுத்துறதே வேலையா?"

"ஏ...உன்னை பயமுறுத்தாம வேற யாரை பயமுறுத்துவேன்?"-அவள் கோபமாக முறைத்தாள்.

"ஓ.கே.கூல்!சரி...என்ன பண்ணிட்டு இருந்த?"

"அர்ச்சனை பண்ணேன்!"

"அவர் என்ன சொன்னாரு?"

"யாரு?"

"அவர் தான்!"-பூசாரியை சுட்டினான்.

"ஒ...ஒண்ணுமில்லையே!"

"பொய் சொல்லாதே!"-அவள் மௌனம் காத்தாள்.

"நான் கேட்டுட்டு தான் இருந்தேன்!"நிலாவின் முகத்தில் நாணம் படர்ந்தது.

"ம்...அவங்களே ஆசீர்வாதம் பண்ணிட்டாங்க!நீதான் ஒத்து வர மாட்ற!"

"ப்ச்...சும்மா இரு!கோவில்ல போய் என்ன பேச்சு இது!"

"சரி...பேசலை!என் கூட வா!"-ரஞ்சித் அவளை இழுத்துக்கொண்டு போனான்.

கோவிலின் குளக்கரையில் யாரோ ஒரு பெண்மணி முன் நிற்க வைத்தான்.

"மா!நான் சொன்ன பொண்ணு இவ தான்!"என்றான்.அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

நிலா திகைப்போடு ரஞ்சித்தை பார்த்தாள்.அவள் முகத்தில் அச்சம் தன்னிச்சையாக படர்ந்தது.ரஞ்சித்தின் தாயார் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லாமல் நிலாவை பார்த்தார்.

அன்று ரஞ்சித்தை ஈர்த்த அதே செர்ரி பழ நிற புடவை!நீளமாக வளர்ந்த கேசத்தை தழைய பின்னி,நெற்றியில் அளவாய் பொட்டிட்டு அதன் கீழே குங்குமக்கீற்றை பதித்து பூச்சூடி...தலைகுனிந்தப்படி நின்ற அவள் தோற்றம் நிச்சயம் அவரையும் ஈர்த்திருக்க தான் வேண்டும்!!

"உன் பேர் என்னம்மா?"

"வெ..வெண்ணிலா!"-மெல்லியதாய் கூறினாள்.

"கேட்கலை..."

"வெண்ணிலா!"-சற்றே உரக்க கூறினாள்.

"ரஞ்சித் எல்லாத்தையும் சொன்னான்!எனக்கு இதில் சுத்தமா இஷ்டமில்லை!"-அவர் கூறியதும் நிலாவின் கண்கள் தன்னிச்சையாக ஈரத்தை சுரந்தன.அதை அவர் கவனித்திருக்க கூடும்!!

"ஒருவேளை முதலிலே உண்மையை இவன் சொல்லிருந்தா!நானும் கடைசி காலத்தை என் பேரன் பேத்திகளோட கழித்திருப்பேன்!எனக்கு பிரஷரும் ஏறி இருக்காது!"-அவள் நிமிர்ந்தாள்.

"என்ன கண்ணு கலங்கி இருக்கு!ஏன்டா நீ அப்போ எதுவும் சொல்லலையா?"

"மா!சும்மா ஜாலிக்கும்மா!"-அவர் அவனை ஏதோ திட்ட வாயெடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.